ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ශ්‍රී ලංකාවේ සමාජවාදී සමානතා පක්ෂය සිය පනස් වන සංවත්සර දේශන මාලාව දියත් කරයි

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி 50வது ஆண்டு நிறைவு விரிவுரைத் தொடரை ஆரம்பித்தது

1 July 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஜூன் 22 அன்று நடத்திய வெற்றிகரமான பகிரங்க கூட்டத்தில் தனது 50வது ஆண்டுவிழா விரிவுரைத் தொடரை ஆரம்பித்தது. கொழும்பு, காலி, கண்டி உட்பட ஏனைய நகரங்களிலும் நடத்தவுள்ள ஆண்டுவிழா விரிவுரைகளில் பங்குபற்றுமாறு அது தொழிலாளரக்ள், மாணவர்கள், துறைசார் ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏனைய உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), 1968 ஜூனில் நடந்த இரண்டு நாள் மாநாட்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டதோடு, 1996ல் அது அனைத்துலக் குழுவின் ஏனைய பகுதிகளைப் போலவே சோசலிச சமத்துவக் கட்சியாக பரிணமித்தது.

உலகம் முழுதும் இலங்கையிலும் பற்றியெரிந்து வரும் வர்க்கப் போரட்டம் போலவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களதும் போராட்டத்துடன் இந்த ஆண்டு நிறைவு ஒன்றிணைகின்றது. அது மட்டுமன்றி, அந்த போராட்டங்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதற்காக சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்துக்குள் பு.க.க./சோ.ச.க. இன் அரை நூற்றாண்டு கால வரலாற்றின் படிப்பினைகள் மிகவும் தீர்க்கமானவையாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்கிய தெற்காசிய முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சி, இந்தப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, 1964ல் முதலாளித்துவ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டதால், ட்ரொட்ஸ்கிசத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைத் தோற்கடிப்பதற்காக, பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டது.

பு.க.க./சோ.ச.க. இன் அரை நூற்றாண்டுகால வரலாற்றில், அன்றும் இன்றும் சர்வதேச சோசலிச முன்நோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நீண்ட, உறுதியான, தைரியமான மற்றும் சமரசமற்ற போராட்டமே உள்ளடங்கியுள்ளது.

உலக முதலாளித்துவம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் சமூக ஜனநாயகவாதத்துக்கும், அதேபோல் உலக சோசலிச இயக்கத்துக்குள் தலை தூக்கிய ஸ்ராலினிசம், மாவோவாதம் மற்றும் பப்லோவாதம் உட்பட அனைத்து பிற்போக்கு இயக்கங்கள் மற்றும் போலி இடதுகளுக்கும் எதிரான இந்த போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள், எழுச்சிபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்காக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களை தயார் செய்வதற்கு தீர்க்கமானவையாகும்.

 

விரிவுரை தலைப்புக்கள், திகதிகள் மற்றும் இடங்கள்

 

கொழும்பு என்.எம். பெரேரா நிலையம், கொடா ரோட், பொரளை.

 

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதம்

ஜூலை 12, வியாழன், மாலை 4 மணி


இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 2, வியாழன், மாலை 4 மணி

 

முதலாளித்தவ அரசாங்கங்களுக்கு எதிராக சோசலிசக் குடியரசுக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 16, வியாழன், மாலை 4 மணி


குட்டி முதலாளித்து தேசியவாத்துக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டம்.

ஆகஸ்ட் 30, வியாழன், மாலை 4 மணி

  

காலி மாநகரசபை விளையாட்டு கூடம்

 

ஜூன் 24, ஞாயிறு, பி.ப. 3 மணி

ஜூலை 8, ஞாயிறு, பி.ப. 3 மணி

ஆகஸ்ட் 5, ஞாயிறு, பி.ப. 3 மணி

ஆகஸ்ட் 26, ஞாயிறு, பி.ப. 3 மணி

செப்டம்பர் 9, ஞாயிறு, பி.ப. 3 மணி

 

கண்டி, ஜனமெதுர மண்டபம் (குட் ஷெட் பஸ் நிலையத்துக்கு அருகில்)

 

ஜூலை 3, செவ்வாய்கிழமை, பி.ப. 4 மணி

 

கண்டியிலும் மற்ற இடங்களிலும் நடத்தபடவுள்ள ஏனைய கூட்டங்களுக்கான திகதி மற்றும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.