ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands demonstrate in Germany against far-right attacks on refugee rescue ships

அகதிகள் மீட்பு கப்பல்கள் மீதான அதிவலது தாக்குதல்களை எதிர்த்து ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

By our reporters 
7 August 2018

ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள 30 க்கும் அதிகமான நகரங்களில், சனியன்று, ஐரோப்பாவிற்கு அகதிகளை வரவேற்பதற்கு ஆதரவளித்தும் மற்றும் கடலில் அவசர மீட்பு பணியாளர்களின் செயல்பாடுகளை குற்றமாக்குவது மற்றும் ஐரோப்பிய எல்லைகளை மூடுவது ஆகியவற்றை எதிர்த்தும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், “சீலிஃப்ட் – பாதுகாப்பான துறைமுகங்களை உருவாக்குவோம் (Sealift - Create safe harbors)” என்ற கூட்டணியின் மூலமாக எண்ணற்ற உள்ளூர் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

சமீபத்திய வாரங்களில், ஒழுங்கமைப்பாளர்கள் எதிர்பார்த்ததை விட டசின் கணக்கான நகரங்களில் மிகப்பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜூலை மாத ஆரம்பத்தில் பேர்லினில் சுமார் 10,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேவேளையில், ஃபிராங்க்பேர்ட் மற்றும் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கடலில் மூழ்கி இறந்த அகதிகளை நினைவுகூரும் வகையில் பல நிமிட நேர நினைவு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


லைப்சிக் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

கடுமையான வெப்பம் நிலவிய போதும், கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்களில் நாடெங்கிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர், பெரும்பாலும் இந்த அழைப்புகள் முகநூல் வழியாக பரவியிருந்தது. கியெல் நகரத்தில் 500 பேரும் மற்றும் பிரவுன்ஸ்ச்விக் நகரத்தில் 400 பேரும் கூடியிருந்த அதே வேளையில், டோர்ட்முன்ட் நகரத்திலும் எழுநூறு பேர் கூடினர். மேலும், மூன்று வார காலத்திற்குள் நடந்த இரண்டாவது ஆர்ப்பாட்டமாக மைய்ன்ஸ் ஆர்ப்பாட்டம் இருந்த போதிலும் சுமார் 500 பேர் அதில் பங்கேற்பதற்காகவும் திரும்பிச் சென்றனர். மேலும், பிற நகரங்களில் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து ஐரோப்பாவை சென்றடைய முயலும் அகதிகள் மீதான தங்களது அடக்குமுறையை ஐரோப்பிய அரசாங்கங்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக, ஒரு இத்தாலிய வணிக கப்பல் ஜூலை 30 அன்று 100 க்கும் அதிகமானவர்களை லிபியாவிற்கு திருப்பியனுப்பியுள்ளது. லிபியாவை விட்டு வெளியேறிய நான்கு அகதிகளில் ஒருவர் மட்டுமே இத்தாலியை அடைந்துள்ளது இப்போது அறியப்படுகிறது. சுமார் 71 சதவிகிதம் பேர் லிபியாவிற்கு திருப்பிக் கொண்டுவிடப்பட்டனர். மேலும், எஞ்சியவர்களில் பெரும்பாலானவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயிருப்பார்கள் என கருதப்படுகிறது.

லைப்சிக்கில் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஒன்றில், அகதிகள் எதிர்கொள்ளும் சூழ்நிலை பற்றியும், ஆளும் வர்க்கத்திற்குள் வலதை நோக்கிய தீவிர மாற்றம் நிகழ்வது பற்றியும் பங்கேற்பாளர்களிடம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். ஒழுங்கமைப்பாளர்களின் கருத்துப்படி, சுமார் 2,000 பேர் நகரில் கூடியிருந்தனர், குறிப்பாக இளைஞர்களும் குடும்பங்களும் பெருமளவில் அதில் பங்கேற்றிருந்தனர்.

மத்திய கிழக்கை விட்டு வெளியேறிய அஜிஸ் என்பவர், கிரீஸ், துருக்கி, சேர்பியா மற்றும் ஹங்கேரி நாடுகளின் எல்லைகளில் கோடை மற்றும் குளிர் காலங்களைக் கழித்துவரும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருக்கிறார்கள் என்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்று தாம் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அவர்கள் வாழ்வதற்கோ ஒட்டிக்கொள்வதற்கோ எந்தவொரு இடமும் இல்லை. அவர்களில் சிலர் காடுகளில் வசிப்பதாக அவர் கூறினார். அவர்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது. “பல ஜேர்மனியர்களிடமிருந்து அகதிகளுக்கு கிடைக்கும் இந்த ஆதரவைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.


அஜீஸ்

உண்மையில் சிரியாவை சேர்ந்த அஜீஸ் துருக்கி ஊடாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புகுந்தவராவார். அரேபிய மொழி மட்டும் தெரிந்திருந்த நிலையில் தகவல்தொடர்பு கொள்ள முடியாமல் இழப்பை சந்தித்த அகதிகள் குழுவிற்கு அவர் உதவிகள் செய்தார்.

அகதிகள் மீதான தாக்குதல்கள் என்பது ஒரு சர்வதேச பிரச்சினையா என்று கேட்கப்பட்டபோது, அஜீஸ் “இந்த பிரச்சினைக்கு எல்லைகள் கிடையாது!” என்று விடையிறுத்தார். இது ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, மாறாக ஏதோவொரு வகையில் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பற்றியது என்று விளக்கமளித்தார். “அகதிகள் என்பவர்கள் வெறும் சாதாரண மக்களே. வேலைக்குச் செல்வது, பொருட்களை வாங்கச் செல்வது மற்றும் குடும்பத்தினரை கொண்டிருப்பது போன்ற சாதாரண வாழ்க்கை முறையை அகதிகளும் கொண்டிருக்கின்றனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் நிகழும் இராணுவத் தலையீடுகள்தான் அகதிகள் நெருக்கடிக்கு பொறுப்பாகின்றன. அரசியல் மோதல்களையும் போர்களையும் அவை அதிகரிக்கச் செய்துள்ளன. அவரது பிராந்திய வரலாற்றை பயிலும் எவரும், ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் புதிய போர் ஒன்று அங்கு தொடுக்கப்படுவதைக் காணமுடியும் என அஜீஸ் தொடர்ந்து தெரிவித்தார். ஆயுதங்களை வழங்கும் சர்வதேச ஆயுத நிறுவனங்களால் இத்தகைய போர்களுக்கு ஆதரவளிக்கப்படுகின்றன. இந்த மோதல்களை சமாளிக்க, ஏதோவொரு வகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளில் மட்டுமே ஆர்வமுள்ள பெரிய நாடுகளை புறம்தள்ள வேண்டும் என்றும் அஜீஸ் தெரிவித்தார்.

அங்கு “மூலத் தோற்றத்திலேயே பாதுகாப்பான நாடுகள்” இருப்பதாக ஜேர்மன் அரசாங்கம் குறிப்பிட்டதை அஜீஸ் நிராகரித்தார். அவரது கருத்துப்படி, போர் மண்டலங்களுக்குள் அகதிகளை திருப்பியனுப்பவது தவறானதாகும். “அகதிகள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்து அல்லது அவர்களது அரசியல் அல்லது பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து வேறுபடுகிறார்கள் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உலக சோசலிச வலைத் தளம் மிஷன் லைஃப்லைன் மீட்புக் கப்பலின் பணியாளர் குழு உறுப்பினரான நொல்ட பௌவர் உடனும் பேசியது.


நொல்ட பௌவர்

“பால்கன் வழிப்பாதையில் இன்னமும் இயக்கப்பட்டுவரும் ட்ரெஸ்டென்-பால்கன் துணை பாதுகாப்பு குழுவில் இருந்து தனிப்பட்ட முறையில் லைஃப்லைன் அபிவிருத்தியடைந்தது,” என்று அவர் கூறினார். ஒரு கப்பலை வாங்க முற்படுவது மற்றும் கடலில் அகதிகளை பாதுகாப்பதில் இன்னும் தீவிரமாக செயல்படுவது என்ற வகையில் பால்கன் வழி மூடல் குறித்து குழுவின் பதிலிறுப்பு இருந்தது.

“மக்கள் கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லிபியாவில் இருந்து அவர்கள் வந்துள்ளனர் என்பதுடன், ஒட்டுமொத்த குடும்பங்களும் அவர்கள் வைத்திருக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென மிரட்டப்பட்டு வருகின்றனர்” என்பது போன்ற அகதிகள் எதிர்நோக்கும் பயங்கரமான சூழ்நிலைகள் பற்றியும் அவர் அறிக்கை தந்தார். அவரை உயிரோடு எரித்து விடப் போவதாக அவரது குடும்பத்தை அச்சுறுத்துவதற்காக ஒரு கும்பலால் அவர் மீது எண்ணெய் ஊற்றப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது என்று ஒரு பரிச்சயப்பட்டவர் தெரிவித்தார். “அடிப்பது, மற்றும் கத்திகளையும் ஆயுதங்களையும் வைத்து மிரட்டுவதன் மூலமாக செயல்படுத்தப்படுகிறது,” என்று பௌவர் தெரிவித்தார். அவர்களை மீட்பதற்காக மட்டும் பலமுறை கடந்து செல்ல ஏனையோர் முயன்ற போதிலும், பல நாட்களாக அகதிகள் சிலர் தொலைந்து போயுள்ளனர் என்பதுடன், கடலில் மிதந்தனர்.

அகதிகளின் நிலைமை இப்போது கடுமையாக மோசமடைந்து வருகிறது. பால்கன் பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து, துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதன் மூலம் அகதிகளை நுழைய விடாமல் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் கூட ஏஜியன் கடலை மூடியுள்ளது. லிபியாவில் இருந்து இத்தாலி வரையிலான பாதை கூட நடைமுறையில் மூடப்பட்டுள்ளது என்று நொல்ட தெரிவித்தார். அட்லாண்டிக் மற்றும் அவை உருவாக்கும் அலைகளினால் கடல் மட்டம் உயர்வதன் காரணமாக இந்த பாதை இன்னும் அதிக ஆபத்தானதாக மாறக்கூடும் என்ற நிலையில், மொரோக் மற்றும் ஸ்பெயினுக்கு இந்த பாதை தற்போது மாற்றப்படும் என்று அவர் எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.

கடலில் அவசரகால மீட்பு என்பது சர்வதேச சட்டத்தின் ஒரு பாகமாகும் என்பது, அவசரகாலத்தில் எந்தவொரு கப்பலில் இருந்தும் மக்களை மீட்பதற்கு ஒவ்வொரு கப்பலும் பொறுப்பாகின்றது எனத் தெரிவிக்கிறது. லைஃப்லைன் பணியாளர் குழு சட்டத்திற்கு உட்பட்டு தான் எப்பொழுதும் செயலாற்றி வருகிறது என்றாலும், அக்கப்பல் ஒருதலைபட்சமாக இத்தாலியால் இப்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளது என்று நொல்ட தெரிவித்தார்.

வலதை நோக்கிய மாற்றம் என்பது “ஒரு புதிய நிகழ்வுப்போக்கு அல்ல” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “ஐரோப்பாவும் மற்றும் ஒட்டுமொத்த முதல் உலகமும்” ஆபிரிக்காவை நீண்டகாலமாக சுரண்டி வந்துள்ளன. மானிய சந்தைகள் ஆபிரிக்க தொழிலாளர்களை அழுத்தத்தின் கீழ் வைக்கின்றன, பணம் சம்பாதிப்பதை தடுக்கின்றன, மேலும் வேறு இடங்களில் வேலை தேடி அலையும் நிலைக்கு அவர்களை நிர்பந்திகின்றன என்பது “மட்டும் தர்க்கரீதியானது”. அத்தகைய பொருளாதார மற்றும் வர்த்தக நடைமுறைகளை வழங்கிய பல அகதிகள் அங்கு இருப்பதில் ஆச்சரியமில்லை என்பதுடன், புதிய போர்களுக்குத் தூண்டுதலையும் ஆதரவையும் அவர்கள் அழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அகதிகள் மீதான தாக்குதல்கள் குறித்த சர்வதேசத் தன்மை பற்றி கேட்டபோது, தமக்கு ஆதாயம் உண்டாகும் வகையில் மிகப்பலவீனமானவர்களுக்கு எதிராகப் பலவீனமானவர்களை சக்திவாய்ந்தவர்கள் மோதவிடுவார்கள் என்று நொல்ட தெரிவித்தார். “இதுவரை, நோபல் அமைதி பரிசு வென்ற நாடாக ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் தன்னை சித்தரித்துக் கொண்டுள்ளது, மேலும் மெக்சிகோ உடனான எல்லையில் கட்டப்படவுள்ள சுவர் பற்றி விமர்சித்துள்ளது.” ஆனால், அடுத்து, நீங்கள் பால்கன்களை பாருங்கள், முட்கம்பி வேலிகளையும் சுவர்களையும் பாருங்கள். உள்நாட்டிற்க்குள்ளும் அவர்கள் அதையே செய்கிறார்கள். “அவர்கள் தொலைவில் இருந்து விடயங்களை விமர்சிக்கிறார்கள் என்பதுடன், அவர்களது நற்பிம்பத்தை பராமரிப்பது குறித்து மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அவர்களது கடல்வழி மீட்பு முயற்சிகள் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில்லை என்று அவரது குழுவினர் அறிந்திருந்ததாக அவர் தெரவித்தார். படகுகளில் ஏறிச் செல்ல வேண்டிய அவசியம் குறித்தும், அத்தகைய ஆபத்தான வழிகளின் சந்திப்பைக் கடப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் எங்கு நீண்டகாலமாக மக்கள் உணரவில்லையோ அங்கு நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இப்போது அனைவரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசியல் செல்வாக்கு செலுத்தவும் பங்கேற்க வேண்டியதும் அவசியமாகும்.