ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Scandal erupts over Dutch state’s funding of Islamist terror group in Syria

சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாத குழுவிற்கான டச்சு அரசின் நிதியுதவி குறித்து ஊழல் வெடித்துள்ளது

By Kumaran Ira 
14 September 2018

பொது வழக்கறிஞர்கள் “பயங்கரவாத” அமைப்பாக முத்திரை குத்தியுள்ள சிரியாவிலுள்ள ஜிஹாதிஸ்ட் குழுவிற்கு டச்சு அரசாங்கம் நிதியளித்து வருவதாக “Nieuwsuur” (News Hour) டச்சு பொது தொலைக்காட்சி நிகழ்ச்சி திங்களன்று தெரிவித்தது.

2011ல் இருந்து சிரியாவில் வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) தூண்டிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரின் குற்றவியல் தன்மையின் பேரழிவுகர வெளிப்பாடாக இந்த விவகாரம் உள்ளது. மேலும், ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்திய ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிக் அரசு (ISIS) எனும் குடிப்படைக்கு நிதியளிப்பு செய்யும் ஃபிராங்கோ-சுவிஸ் கட்டுமான நிறுவனமான லஃபார்ஜ் சம்பந்தப்பட்ட ஊழலை அடுத்து இது வருகிறது.

மேலும், சிரிய அரசாங்கப் படைகளை எதிர்க்கும் 22 ஜிஹாதிய எதிர்தரப்புக் குழுக்களுக்கு “அபாயமற்ற உதவியை” ஆம்ஸ்டர்டாம் வழங்கியது எனவும் “Nieuwsuur” செய்தி ஊடகம் தெரிவித்தது. 2015 முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை சிரியாவில் கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவி வழங்கி வரும் இரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக, 2017ல் ஜபத் அல்-ஷாமியா (Jabbat Al-Shamiya) குடிப்படைக்கு சீருடைகள் மற்றும் சரக்கு வண்டிகள் வழங்கியதும் இதில் அடங்கும்.

இந்த விவகாரம் வெளிப்படும் வரை, சிரியாவில் “மிதவாத குழுக்களை” மட்டுமே ஆதரித்ததாக டச்சு வெளியுறவு அமைச்சகம் கூறியது. “மிதவாத குழுக்கள்” என்றழைக்கப்படும் இவை “போர் குறித்த மனிதாபிமான சட்டத்தை” மதிக்கின்றன என்பதுடன், அவை தீவிரவாதிகளுடன் ஒத்துழைப்பதில்லை, மேலும் சிரியாவிற்காக “உள்ளடக்கிய அரசியல் தீர்வையும்” பின்பற்றுகின்றன என Tweede Kamer (டச்சு மக்களவைப் பிரதிநிதிகள் சபை) க்கு இது தெரிவித்தது.

இருப்பினும், 2015ல் ஜபத் அல்-ஷாமியா குடிப்படையுடன் ஒரு டச்சு மனிதர் சேர்ந்து கொண்டது குறித்த வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஒரு ஊழல் வெடித்தது. ஜபத் அல்-ஷாமியா ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என அரசுவழக்கறிஞர்கள் முத்திரை குத்தியதுடன், அதனை “ஒரு கலிபாவை ஸ்தாபிக்க முயலும்” ஒரு “சலாஃபிஸ்ட் மற்றும் ஜிஹாதிஸ்ட்” குழு என்றும் அழைத்ததுடன், மேலும், “பயங்கரவாத நோக்கம் கொண்ட குற்றவியல் அமைப்பு” எனக் குறிப்பிடுவதைத் தவிர வேறெதுவாகவும் அது தகுதிபெற முடியாது எனவும் வலியுறுத்துகின்றனர்.

இருப்பினும், ஜபத் அல்-ஷாமியா குடிப்படைக்கு நிதியளிப்பு செய்யும் நேட்டோ சக்திகளின் கூட்டணியின் அங்கமாக நெதர்லாந்து இருந்ததை நோக்கி இது திரும்பிவிட்டது, அத்துடன் 2014ல், வடக்கு சிரியாவில் நிறுவப்பட்ட துருக்கி-ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் போராளிகளுக்கான ஒரு குடை குழுவான லெவந்த் முன்னணி (Levant Front) என்றும் இது அறியப்படுகிறது. மேலும், கூட்டு மரணதண்டனைகளை நிறைவேற்றி வரும், மற்றும் ஒரு கண்டிப்பான இஸ்லாமிய அடிப்படையிலான தண்டனைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றங்களை ஸ்தாபித்து வரும் குழு என்பதாக 2016ல், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அதனைக் குற்றம்சாட்டியது.

சிரியாவில் ஆட்சி மாற்றத்தைத் திணிக்க நேட்டோ முயலுகின்ற நிலையில் தவிர்க்கமுடியாத இராணுவத் தோல்வியை எதிர்கொள்கையில் இந்த ஊழல் வெடிக்கிறது. ரஷ்ய விமானப்படை ஆதரவிலான அசாத் ஆட்சி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்றி வருவதுடன், கடைசி இஸ்லாமிய கோட்டையைக் கைப்பற்றுவதற்காக இட்லிப் (Idlib) இல் புதியதொரு தாக்குதலையும் தொடங்கியுள்ளனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்பாக, “எதிர்பார்த்த முடிவுகளை” அது வழங்கவில்லை எனக் கூறி, சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கான தனது ஆதரவை முடிவுகட்ட அதன் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டச்சு பாராளுமன்றம் அறிவித்தது. வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கையெழுத்திட்டு செப்டம்பர் 7 அன்று பிரதிநிதிகள் சபைக்கு வழங்கப்பட்ட ஒரு கடிதம், “[சிரியாவில்] நிலைமையை விரைவாக மாற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் பலவீனமாக உள்ளது” என்று அறிவித்தது.

சிரிய எதிர்தரப்பு குடிப்படைகளை ஆதரிப்பதற்கான “நிலைப்படுத்துதல்” திட்டங்கள் என்றழைக்கப்படுவன மீது 70 மில்லியன் யூரோக்களை ஆம்ஸ்டர்டாம் செலவு செய்துள்ளதாக இது தெரிவித்தது. மேலும், ஒரு “அபாயமற்ற” உதவி நிதிக்கு 25 மில்லியன் யூரோக்களையும், White Helmets க்கு 12.5 மில்லியன் யூரோக்களையும் மற்றும் நீதி மற்றும் சமூக பாதுகாப்பை அணுகுதல் (Access to Justice and Community Security – AJACS) திட்டத்திற்கு மற்றுமொரு 15 மில்லியன் யூரோக்களையும் ஆம்ஸ்டர்டாம் வழங்கியுள்ளது. இருப்பினும், சிரிய அரசு-ஆதரவு சக்திகள் வெற்றியின் விளிம்பில் உள்ள நிலையில், செப்டம்பர் 7ம் தேதிய கடிதம் ஒப்புக்கொண்ட இந்த உறுதிப்பாடு தோல்வியுற்றது.

“லண்டனில் இருந்து ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதி ஜிஹாதிஸ்டு பிரிவினரின் கைகளுக்கு முடிவில் சென்றடைந்தது” என்று தெரிவித்த BBC ஆவணப்படத்திற்கு கருப்பொருளாக இருந்த சர்ச்சைக்குரிய Free Syrian Police திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் AJACS திட்டம் ஈடுபட்டிருந்தது என ரஷ்ய அரசின் ஊடகம் தெரிவித்தது.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் இரத்தக்களரியான யுத்தம் குறித்த “மனிதாபிமான” பாசாங்கு கதைகள் முற்றிலும் சிதைந்து போயின. நேட்டோ சக்திகள், ISIS ஐ ஒரு ஆபத்தான குடிப்படை என முத்திரை குத்தி, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” ஒரு பாகமாக அவர்கள் போராடுவதாகக் கூறினாலும், நேட்டோ அரசுகள் தமது ஏகாதிபத்திய நலன்களைப் பின்பற்றுவதற்கும் மத்திய கிழக்கில் போரை மேலும் தூண்டவும் பயங்கரவாத அமைப்புக்களை உண்மையில் தங்களின் பினாமிகளாகப் பயன்படுத்திக் கொண்டன.

இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரியிறைப்பதற்கு சவூதி அரேபியா போன்ற பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக் இராச்சியங்களுடன் செயற்பட்டு, 2011ல் லிபியாவிலும், தொடர்ந்து சிரியாவிலும் நடந்த போரில் இஸ்லாமிய குடிப்படைகளையே அவர்கள் நம்பியிருந்தனர். இவ்விரு நாடுகளிலும் துப்பாக்கிச் சூடு அல்லது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான போராளிகளை அவர்கள் ஆட்சேர்த்தனர். 2012ல், ஒரு பயங்கரவாத குழுவாக, அல் கொய்தா (Al Qaeda) உடன் இணைந்த ஒரு பினாமி குடிப்படையான அல் நுஸ்ராவை (Al Nusra) பென்டகன் அறிவித்தது, என்றபோதிலும் அது நேட்டோ ஆதரவை தொடர்ந்து பெற்று வந்தது.

நெதர்லாந்தில் வெளிப்பட்ட தகவல்கள், ஐரோப்பிய சக்திகளால் திணிக்கப்பட்ட பொலிஸ்-அரசு நடவடிக்கைகளின் —அந்தந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ISIS தாக்குதல்களுக்குப் பின்னர், பிரான்சில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டது, புரூசெல்ஸ்ஸ் ஐ கட்டுப்பாட்டில் வைத்தது அல்லது பிரிட்டனில் தெருக்களில் ஆயுதமேந்திய சட்ட அமலாக்கத்தை நிறைவேற்றியது என்பன போன்ற நடவடிக்கைகளின்— மோசடியான தன்மையை அம்பலப்படுத்துகின்றன. உண்மையில், அதே அரசாங்கங்கள்தான், தாக்குதல்களை நிகழ்த்திய பயங்கரவாத வலையமைப்புகளுக்குப் பெருமளவு பொது நிதியை பாய்ச்சி வந்துள்ளன.

இந்த பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் எதுவும் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக இயக்கப்படவில்லை, மாறாக, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து எழும் சமூக எதிர்ப்பை நசுக்குவதை நோக்கியே உள்ளன.

இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் காணப்படும் உத்தியோகபூர்வமான டச்சு உடந்தையின் வெளிப்பாடு என்பது, உலக சோசலிச வலைத் தள (WSWS) பகுப்பாய்வின் சரியான தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு தாக்குதலிலும் ஈடுபட்ட பயங்கரவாதிகள், “ஈராக், சிரியா மற்றும் ஏனைய நாடுகளில் நிகழ்ந்த யுத்தங்களில் ஈடுபட்ட தீவிரப் போராளிகளின் ஒரு பரந்த தொகுப்பில் இருந்து இழுக்கப்பட்டு” இருந்தனர் என்பதும், மேலும் இவர்கள் நேட்டோ ஆதரவிலான, மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உளவுத்துறை முகமைகளின் ஆதரவிலான நிதியைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள், “வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை – அல்லது இரண்டின் சில கலவைகளை மாற்றும் நோக்கத்திற்கு உதவிசெய்வதால் அரசின்  சிலபிரிவுகளால் அத்தகைய தாக்குதல்கள் எளிதாக நிகழக்கூடியாதாக்குகிறது”.

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் மத்திய கிழக்கில் நிகழும் ஏகாதிபத்திய குற்றங்களுக்கு அரசியல் பொறுப்பை ஏற்றுள்ள அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) போன்ற போலி இடது அமைப்புகளின் யுத்த-ஆதரவுக் கொள்கையையும் இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. நேட்டோ ஆதரவிலான சிரிய கிளர்ச்சியாளர்களை “புரட்சியாளர்கள்” என அவர்கள் ஊக்குவித்தனர் என்பதுடன், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கும், மற்றும் “ஜனநாயகம்” குறித்த ஒரு “மனிதாபிமான” போராக பயங்கரவாதக் குழுக்கள் தொடுத்த பினாமி போர்களுக்கும் அழுத்தம் கொடுத்தனர். இந்த பொய்கள் இப்போது முற்றிலும் அம்பலமாகிவிட்டன.

உலகின் முக்கிய அணுசக்திகளுக்கு இடையிலான ஒரு வன்முறை மோதலில் முழு பிராந்தியம் மற்றும் உலகையே மூழ்கடிக்க அச்சுறுத்தக்கூடிய ஒரு மோதலுக்கு இட்டுச்செல்வதாக சிரியாவில் நடந்துவரும் போர் தற்போது விரிவடைந்துள்ளது. இட்லிப்பில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீதான சிரிய ஆட்சியின் தாக்குதலுக்கு முன்னரே, 2015ல் சிரிய மோதலில் நுழைந்ததில் இருந்து மாஸ்கோவின் மிகப்பெரிய கடற்படை கட்டமைப்பில் பல பீரங்கிக் கப்பல்களை நிலைநிறுத்தி, சிரிய கடலோரப் பகுதி சார்ந்த மத்தியதரைக் கடற்பரப்பில் ரஷ்யா தனது கடற்படைகளை வலுப்படுத்தியது. சிரியா மீது தாக்குதல் நடத்தும் சாத்தியத்திற்கான தயாரிப்பில் மத்திய கிழக்கில் வாஷிங்டன் தனது சொந்தப் படைகளைக் கட்டியெழுப்புவதாக மாஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க-நேட்டோ தோல்வி ஒருபுறம் இருந்தாலும், வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் சிரியாவில் ஒரு புதிய இராணுவத் தாக்குதலை நிகழ்த்த தயாரிப்பு செய்து வருகின்றன. கடந்த வெள்ளியன்று, 100 க்கும் அதிகமான அமெரிக்க கடற்படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்த அந்நாட்டிற்குள் பறந்தமையானது, இட்லிப்பில் இஸ்லாமிய குடிப்படையினருக்கு எதிரான தாக்குதலுக்கு திட்டமிடுவதை வாஷிங்டன் பொறுத்துக்கொள்ளாது என்பதை மாஸ்கோ மற்றும் டமாஸ்கஸூக்கு சமிக்ஞை செய்கிறது.

அமெரிக்க ஆதரவிலான, அல் கொய்தா உடன் இணைந்த இஸ்லாமியவாதிகள், நேட்டோ தலையீட்டைத் தூண்டுவதற்கு ஒரு நியாயப்படுத்துதலாக மற்றுமொரு இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மாஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது. ஏப்ரல் 2017 மற்றும் ஏப்ரல் 2018 இல், ஆசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தின என்ற போலியான குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் விமானத் தாக்குதல்களைத் தொடங்கின. பல அறிக்கைகளின் படி, ஏப்ரல் 7 அன்று டாமாவில் White Helmets சம்பந்தப்பட்டு நடந்த சம்பவத்தில், சிரிய கிளர்ச்சியாளர்களால் இரசாயன ஆயுதங்களின் தாக்குதல் நடத்தப்பட்டது.

மரைன் கோர்ப்ஸ்  பணியாளர்களின் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் இது குறித்து பின்வருமாறு அறிவித்தார்: “இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் சம்பவங்களில் நாம் இராணுவத் தெரிவுகளைக் கொண்டிருக்க வேண்டுமென ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.”

நெதர்லாந்தில் எழுந்துள்ள ஊழல், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காகப் போராடும் இஸ்லாமிய பயங்கரவாத குடிப்படையினருக்கும் இடையிலான ஒரு பரந்த, குற்றவியல் ஒத்துழைப்பின் பாகமாக இந்த அச்சுறுத்தல்கள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

சிரியாவில் ISIS உடனான அமெரிக்க-பிரெஞ்சு கூட்டுச் சதியை லாஃபார்ஜ் விசாரணை அம்பலப்படுத்துகிறது

 [4 August 2018]