ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Against backdrop of UN General Assembly
Trump to intensify economic war on Iran

ஐ.நா பொதுச் சபை கூடவிருப்பதன் பின்புலத்தில்

ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தவிருக்கிறார்

By Keith Jones
25 September 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன், மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில் இருக்கும் ஏனைய ஈரான் ஆட்சி-மாற்ற வல்லூறுகள் அனைவரும் இந்த வாரத்தில் தொடங்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தை ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பொருளாதாரப் போர் மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு பின்புலமாக பயன்படுத்த நோக்கம் கொண்டிருக்கின்றனர்.

ஈரானிய பொருளாதாரத்தை நொருக்க வேண்டும் என்பதுதான் வாஷிங்டனின் கூறப்பட்ட இலக்காக இருக்கிறது. ஆகஸ்டில் ஈரான் மீது அமெரிக்கா திணித்த தண்டிப்பான தடைகளை நவம்பர் 4 தொடங்கி அது ஒரேயடியாக விரிவுபடுத்த இருக்கிறது. ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீது ஒரு முழுமையான வணிகத் தடையை கொண்டுவருவதற்கும், அத்துடன் அமெரிக்க மேலாதிக்கத்திலான உலக வங்கி அமைப்புமுறையில் இருந்து ஈரானை முழுமையாக அகற்றுவதற்கும் -அதன்மூலம் மற்ற வணிகப்பொருட்கள் அனைத்திலுமான அதன் வணிகத்தை முடக்கிப் போடுவதற்காக- அது உறுதிபூண்டிருக்கிறது.

அமெரிக்க நடவடிக்கைகள் -இவை அவற்றின் நோக்கங்களில் 2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் திணித்த கொடூரமான தடைகளையும் விஞ்சியதாய் இருக்கின்றன- வெளிப்பட சட்டவிரோதமானவையாகவும் பொறுப்பற்றவையாகவும் இருக்கின்றன. சர்வதேச சட்டத்தின் கீழ், இவை ஒரு போர் நடவடிக்கைக்கு நிகரானவையாகும்.

ஐ.நா-ஆதரித்த 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தின் கீழான தனது உறுதிப்பாடுகளில் இருந்து வாஷிங்டன்தான் விலகி ஓடியிருக்கிறது. தெஹ்ரான், ஆக்கபூர்வ பயன்பாட்டு அணு உள்கட்டமைப்பை அகற்றுவது மற்றும் பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட, அதன் கடமைப்பாடுகள் அத்தனையையும் வரிக்கு வரி பூர்த்தி செய்திருக்கிறது என்பதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்ற மற்ற பெரும் நாடுகள் அனைத்தும் அத்துடன் ஈரானின் இணக்கத்தை கண்காணிப்பதில் பிரதான பாத்திரம் கொண்டிருக்கின்ற சர்வதேச அணு சக்தி முகமையும் (IAEA) பிடிவாதமான உறுதியுடன் இருக்கின்றன.

ட்ரம்ப், பொம்பியோ, போல்ட்டன் மற்றும் இவர்களது எடுபிடிகள்தான் மாபியா-பாணியில் உலகெங்குமான நாடுகளை, அவை வாஷிங்டனின் கட்டளைகளுக்கு தலைவணங்கி ஈரானுடன் வர்த்தகம் செய்வதையும் ஈரானில் முதலீடு செய்வதையும் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவற்றுக்கு எதிராக தடைகள், அபராதங்கள் மற்றும் அமெரிக்க சந்தைகளில் இருந்து விலக்கி வைத்தல் உள்ளிட்ட பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறிருந்தும் ஈரானை ஒரு “போக்கிலி அரசு” (rogue state) என புகார் செய்வதற்கும் தெஹ்ரானை உலகின் தலைமையான “பயங்கரவாதத்திற்கான ஆதரவு-அரசாக” கண்டனம் செய்வதற்குமான பின்புலமாக ஐ.நா வை ட்ரம்ப் பயன்படுத்தவிருக்கிறார். உலகின் மிக முக்கியமான எண்ணெய்-ஏற்றுமதி பிராந்தியத்தின் மீதான கடிவாளமற்ற மேலாதிக்கத்தை பின்தொடர்வதில், 1991 முதலாக, ஈராக், லிபியா மற்றும் சிரியா உள்ளிட ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியிருக்கின்ற அழிவுகரமான போர்களின் ஒரு வரிசையை நடத்தி வந்திருக்கின்ற அல்லது அவற்றுக்கு உரமிட்டு வந்திருக்கின்ற, அத்துடன் அந்த நிகழ்முறையில், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்தும் ஆயுதமளித்தும் வந்திருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதியிடம் இருந்து இந்த முன்னெடுப்பு வருகிறது.

வட கொரியா என்ற 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டை “முற்றிலுமாய் அழிப்பதற்கு” மிரட்ட ஒரு களமாக ஐ.நாவை ட்ரம்ப் பயன்படுத்திய தினத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின்னர், இன்று ட்ரம்ப் மறுபடியும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தின் முன் செல்லவிருக்கிறார். நிர்வாகத்தின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு வழங்கியிருக்கும் அவரது உரை குறித்த முன்னோட்டங்களின் படி, ட்ரம்ப் “தேசிய இறையாண்மை”யின் இன்றியமையாத முக்கியத்துவம் குறித்த ஒரு “அமெரிக்கா முதலில்” வீராவேசத்துடன் - சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வதற்கான உரிமையை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருக்கிறது என்பதே இதன் அத்தியாவசியமான உள்ளடக்கம்- ஈரான் மீதான கண்டனப்பாட்டுகளுடன் -இவற்றில் பலவும் அவரது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் பாட்டுப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்- கலந்து தரவிருக்கிறார்.

புதன்கிழமையன்று, ட்ரம்ப் 15 உறுப்பினர் ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கவிருக்கிறார், அதன் தலைவராக அமெரிக்கா கொண்டிருக்கும் உரிமைகளின் மூலமாக அது அதனை, அணுப் பரவல் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் குறித்த விவாதத்திற்காய் ஒதுக்கியிருக்கிறது. அவரது வழக்கத்தின் படி, இந்த பாசிச-மனோநிலையுடைய பில்லியனர் தனது நோக்கங்களைக் குறித்த ஒரு கொடூரமான, ஆயினும் உண்மையான விவரிப்பை தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார், அதில் அவர் அறிவித்தார், “ஈரான் தொடர்பான ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு நான் தலைமை கொடுக்க இருக்கிறேன்.”

ஈரானின் வெடிப்பு ஏவுகணை (ballistic missile) திட்டம் பிராந்தியத்திற்கு ஒரு சகிக்க முடியாத அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது என்று கூறி அதற்கு எதிராக ஆவேசக் கொந்தளிப்பைக் காட்டுவதற்கு தனது அடுத்தடுத்த ஐ.நா சந்திப்புக்களில் தனது நேரத்தின் பெரும்பகுதியைப் பயன்படுத்துவதற்கு ட்ரம்ப் வெளிப்பட நோக்கம் கொண்டிருக்கிறார். அணு ஆயுத வல்லமையுடைய இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட அதன் பிராந்தியக் கூட்டாளிகளிடம் பத்துபில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முன்னேறிய ஆயுதங்களை வாஷிங்டன் கொட்டிக் குவித்திருக்கிறது என்பது அதற்கு ஒரு பொருட்டாக இல்லை.

“மறுபேச்சுவார்த்தைக்குட்பட்ட” ஈரான் அணு ஒப்பந்தத்திற்கான வெளிப்படையான அடிப்படையாக ட்ரம்ப்பும் அவரது உதவியாளர்களும் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் பட்டியலில் ஈரானின் வெடிப்பு ஏவுகணைத் திட்டத்தை அகற்றுவதும் இடம்பிடித்திருக்கிறது. பிற கோரிக்கைகளில், ஈரான் அதன் ஆக்கபூர்வ அணுத் திட்டத்தின் மீதான நிரந்தர வரம்புகளை -இவை அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வேறெந்த நாட்டின் மீது திணிக்கப்பட்டிருப்பதை விடவும் கூடுதல் சுமைகொண்டவையாக இருக்கும்- ஏற்றுக் கொள்ள வேண்டும், அத்துடன் மத்திய கிழக்கில் தெஹ்ரானின் “துஷ்ட நடவடிக்கைகள்”, அதாவது ஹெஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் பிற பிராந்தியக் கூட்டாளிகளுக்கு அது அளிக்கும் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு முடிவுக்கு வர வேண்டும் ஆகியவை அடங்கும். 

மொத்தத்தில், இவை ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சி மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்த எதிர்ப்பையும் கைவிடுவதற்கும், அதன் திறம்பட்ட ஆயுதக்குறைப்புக்கும், ஒரு அமெரிக்க கீழ்ப்படிவு அரசின் அந்தஸ்துக்கு அது குறைக்கப்படுவதற்குமான ஒரு கோரிக்கைக்கு நிகரானவையாக இருக்கின்றன.

அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் ஈரானுக்கு எதிரான மிரட்டல்களும்

வாஷிங்டன் ஈரான் மீதான அதன் பொருளாதாரப் போருடன் சேர்த்து ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான அதிகரித்த இராணுவ நடவடிக்கைகளையும் அத்துடன் பென்டகன் மற்றும் ட்ரம்ப் உள்ளிட்ட நிர்வாக உயரதிகாரிகளிடம் இருந்தான போர் மிரட்டல்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறது. “அமெரிக்க நலன்கள்” “ஈரானிய பினாமிகளால்” தாக்குதலுக்குள்ளாகுமானால் ஈரான் மீதே தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராய் இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று பொம்பியோ தெரிவித்தார். “அந்த சம்பவங்களுக்கு ஈரானே பொறுப்பாக்கப்படும்” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் CNN இடம் தெரிவித்தார்.

ஜூலையின் பிற்பகுதியில், ட்ரம்ப் சூளுரைக்கையில், ஈரான் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மிகவும் மிரட்டிக் கொண்டிருக்குமாயின், “வரலாற்றில் வெகுசில மட்டுமே கண்டிருக்கக் கூடிய மிகப்பெரும் பாதிப்பைப் போன்ற பின்விளைவுகளின் பாதிப்புக்கு அது உள்ளாகும்” என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் பஷார் அல்-அசாத்தின் பாத்திய ஆட்சிக்கு ஆதரவாகப் போராடுகின்ற இஸ்லாமிய புரட்சிகரக் காவலர் படையின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்திருக்கின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், சிரியாவில் உள்ள அத்தனை ஈரானியப் படைகளும் அகற்றப்படுவதில் அமெரிக்கா கொண்டிருக்கும் நலன்களது வரிசையிலான ஒரு “அரசியல் ஏற்பாடு”க்கு நெருக்கும் பொருட்டு, அந்நாட்டின் முக்கியமான எண்ணெய் வயல்கள் உள்ளிட கிழக்கு சிரியாவின் பெரும்பகுதியில் அமெரிக்க இராணுவம் காலவரையின்றி ஆக்கிரமித்திருக்கும் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் அறியப்படுத்தியது.

அதன் எண்ணெய் வளத்தின் காரணத்தினாலும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா இடையிலான இணைப்பாக அதன் புவிமூலோபாய முக்கியத்துவத்தின் காரணத்தினாலும், ஈரானை அடிமைப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிசெய்வது என்ற இலக்கினை அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ-உளவு ஸ்தாபகத்தின் அத்தனை கன்னைகளும் பகிர்ந்து கொள்கின்றன.

ஆயினும் ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் உடைத்துப்போட்டமை, ஆளும் உயரடுக்கின் ஒரு கணிசமான பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது, இது அமெரிக்காவை மத்திய-கிழக்கு அளவிலான ஒரு போருக்குள் இழுத்து விடும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூடுதல் முக்கியத்துவமான எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான மிக திருப்புமுனையான இராணுவ-மூலோபாய தாக்குதல்களாக அவர்கள் கருதுவனவற்றில் பலவீனப்படுத்தி விடும் என்பது அவர்களின் அச்சமாய் இருக்கிறது.

சென்ற வாரத்தில், 50க்கும் அதிகமான ஓய்வுபெற்ற நாடாளுமன்றத் தலைவர்கள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் தளபதிகள் -தேசிய உளவு முகமையின் முன்னாள் இயக்குநரான ஜேம்ஸ் கிளாப்பர் மற்றும் முன்னாள் வெளியுறவுச் செயலரான மட்டெலென் ஆல்பிரைட் ஆகியோரும் இதில் அடக்கம்- “ஒரு ஈரானிய அணு ஆயுதத்தை தடுப்பதற்கான தேசியக் கூட்டணி” என்ற பதாகையின் கீழ் ஒரு அறிக்கை விடுத்தனர். இந்த அறிக்கை, ஈரான் மீது ட்ரம்ப் வைக்கும் கோரிக்கைகளின் பெரும்பகுதிக்கு ஆதரவுக் குரல்கொடுத்தது, ஆயினும் ”மோதலைத் தவிர்ப்பதற்கான வெளியேறு வழி” ஏதுமின்றி “பலவந்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை மிரட்டல்கள்” மீது வலியுறுத்துவதன் மூலமாக “விளிம்புக்குத் தள்ளும்” ஒரு கொள்கையை நிர்வாகம் பின்பற்றிக் கொண்டிருப்பதைக் குறித்த கவலையை அது வெளிப்படுத்தியது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் கொள்கையானது வாஷிங்டனின் பாரம்பரியமான ஐரோப்பியக் கூட்டாளிகளை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது, அதன்மூலமாய் “ஐரோப்பியர்கள், ரஷ்யா மற்றும் சீனா மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான பொதுவான நோக்கத்தை” அது ஊக்குவித்துக் கொண்டிருந்தது என்ற உண்மையைக் கூறி அந்த அறிக்கை வருந்தியது.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தவர்களில், அனைவரும் இல்லாவிடின், பலரும், சிரியாவில் இன்னும் அதிக மூர்க்கமான அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கு வக்காலத்து வாங்கி வந்திருப்பவர்களாவர்; மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டின் செல்வாக்கையும் “திரும்பியோடச் செய்வதற்கு” இதுவே மிகத் திறம்பட்ட வழியென்று அவர்கள் வாதிடுகின்றனர்.

காதிபத்திய சக்திகளிடையே பதட்டங்களின் ஒரு மேலதிக தீவிரப்படல்

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய முக்கிய ஐரோப்பிய சக்திகள் அனைத்துமே, ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகியதில் வருத்தமுற்றன, ஈரானிய சந்தைகளைக் கைப்பற்றுவதற்கும் இலாபகரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சலுகைகளுக்கு தெஹ்ரான் முன்வந்ததை அனுகூலமாக்கிக் கொள்வதற்கும் அவை கொண்டிருந்த திட்டங்களை குப்பையில் போடும்படி அது செய்துவிட்டிருந்தது.

வர்த்தகப் போர், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திலான தேய்வு, “அமெரிக்கா முதலில்” ஒருதலைப்பட்ச நிலையை நோக்கிய வாஷிங்டனின் திருப்பம் மற்றும் புதிய சக்திகளின் எழுச்சி ஆகிய நிலைமைகளின் கீழ், ஐரோப்பிய சக்திகள், உலக அரங்கில் தமது சொந்த வேட்டையாடும் நலன்களை பின்பற்றும் நோக்குடன், வெறித்தனமாக மறுஆயுதபாணியாகிக் கொண்டுவருகின்றன.

ஆயினும், வாஷிங்டனின் பொறுப்பற்ற வம்பிழுப்பின் வெடிப்பான பின்விளைவுகளைக் குறித்து ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் அச்சம் கொண்டுள்ளனர். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு இராணுவ மோதலானது மத்திய கிழக்கை பற்றியெரியச் செய்யும், மிகப்பரந்த எண்ணிக்கையியிலான அகதிகள் வெளியேற்றத்திற்கு தூண்டும், எண்ணெய் விலைகளை உச்சத்திற்கு கொண்டுசெல்லும், தீர்க்கமான செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு போதுமான இராணுவ வழிவகைகள் ஐரோப்பிய சக்திகளிடம் இன்னும் வந்துசேர்ந்திராத நிலைமைகளின் கீழ் மத்திய கிழக்கின் ஒரு மறுபிரிவினை கட்டவிழ்த்து விடப்படும்.

ஈரான் அணு ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்தமான உருக்குலைவை எவ்வாறு தடுப்பது என, நேற்று, ஜேர்மன், பிரெஞ்சு, மற்றும் பிரிட்டிஷ் தூதர்கள் ஈரானின் வெளியுறவு அமைச்சரன ஜாவேத் ஷரிஃப் உடனும் ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் பிற நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகளுடனும் விவாதித்தனர்.

ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவின் பிராந்தியம்கடந்த தடைகளுக்கு இணங்கி நடப்பதை சட்டவிரோதமாக்கும் 1990களில் முதன்முதலில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை முன்நீட்டுவது உள்ளிட அமெரிக்க தடைகளுக்கு எதிர் நெருக்குதல் அளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முனைந்திருக்கிறது. ஈரானுடன், அமெரிக்க டாலருக்குப் பதிலாக யூரோவைக் கொண்டு, அல்லது இன்னும் ஒரு பண்டமாற்று முறையின் மூலமாகவும் கூட, வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான ஒரு திட்டமுறையின் மீதும் அது செயற்பாடுகளைத் தொடக்கியிருக்கிறது.

ஆயினும் ஐரோப்பாவின் பெருவணிகங்களுக்கு, அமெரிக்க பதில் தாக்குதல்களில் இருந்து தம்மைக் காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியும் என்ற நம்பிக்கை ஏதுமில்லை, அவை விட்டோடிக் கொண்டிருக்கின்றன. Peugeot, Renault, Deutsche Telekom, Airbus, Volvo மற்றும் Total -இது ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலின் பெரும்பகுதி அளிக்கப்பட்டிருக்கின்ற பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமாகும்- உள்ளிட்ட ஏராளமான பெரும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானில் இருந்து அவை வெளியேறுவதாய் அறிவித்திருக்கின்றன.

1979 இல் ஷாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதியபத்திய ஆட்சியை கவிழ்த்த வெகுஜன தொழிலாள வர்க்க தலைமையிலான புரட்சியை அபகரித்ததன் மூலமாக அதிகாரத்திற்கு வந்திருந்த ஈரானின் மதகுரு முதலாளித்துவ ஆட்சியானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலமாக அமைதியின்மை அதிகரித்துச் செல்லும் ஒரு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தனது கரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் ஒரு பிராந்திய சக்தியாக அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்கும் நம்பிக்கை கொண்டிருந்தது.

அதற்கு மாறாய், மிகப்பெரும் சலுகைகள் அளித்து அணு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய மூன்று ஆண்டுகளின் பின்னர், முழு சரணாகதிக்கு பலவந்தம் செய்வதில் முழுமூச்சாக செயல்படும் பேராசையுடனான வாஷிங்டனுக்கும், வியாபித்திருக்கும் சமூக சமத்துவமின்மையாலும் ஆண்டுக்கணக்கான சிக்கன நடவடிக்கைகளாலும் கோபமுற்றிருக்கும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான ஒரு பெருகிச் செல்லும் சவாலுக்கும் அது முகம் கொடுத்து நிற்கிறது.

இதற்கான பதிலிறுப்பில், அது உலக அரங்கில் தந்திரஉத்திகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அதன் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த தந்திர உத்திகளில், வாஷிங்டன் ஈரானை எண்ணெய் ஏற்றுமதி செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுக்குமானால் ஈரான் சவுதி அரேபியாவையும் மற்ற அமெரிக்கக் கூட்டாளிகளையும் அவர்களது எண்ணெயை ஹோர்மஸ் நீரிணை வழியாக கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் என்பதான எச்சரிக்கைகள், மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து வேலை செய்து மத்திய கிழக்கை மறுஸ்திரப்படுத்துவதில் அவற்றுக்கு உதவுவதற்கான உறுதியளிப்புகள் ஆகியவை உள்ளிட்ட கலவையான மிரட்டல்கள் இடம்பெறுகின்றன.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றிருக்கும் ஈரான் ஜனாதிபதி ஹசான் ருஹானி, நேற்று, அணு ஒப்பந்தத்தில் ஈரான் தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்தியதோடு, ட்ரம்ப் நிர்வாகம் 2015 ஒப்பந்தத்திற்கு திரும்புமானால் அதனுடன் பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைவதற்கு தெஹ்ரான் தயாராக இருக்கும் என்றும் சமிக்கையளித்தார்.