ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan prime minister threatens increased internet and social media censorship

இலங்கை பிரதமர் இணைய மற்றும் சமூக ஊடக தணிக்கையை அதிகரிக்க அச்சுறுத்துகிறார்

By Saman Gunadasa 
10 September 2018

கடந்த மாதம் "கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு-2018" இல் உரையாற்றிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "உலகை சீர்குலைக்கும் சக்திகள்" நாடுகளை ஸ்திரமற்றதாக்க இணைய மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதோடு "தேசிய நலன்களுக்கு" அச்சுறுத்தல் விடுக்கின்றன என அறிவித்தார்.

2011 முதலே கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருவதோடு அது இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நோக்கம், "பயங்கரவாதம் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை" எதிர்த்துப் போராடுவதில் உலக இராணுவ அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாகும். இந்த நிகழ்வில் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் உட்பட 38 நாடுகளில் இருந்து இராணுவ தளபதிகள், பாதுகாப்பு தலைவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் உள்நோக்க உரையை ஆற்றிய விக்கிரமசிங்க, 21ம் நூற்றாண்டில், அரசாங்கங்கள் ஒரு "தொடர்ச்சியான பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் அல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை" எதிர்கொள்கின்றன என்று எச்சரித்தார்.

"இயற்கை அழிவுகள், காலநிலை மாற்றம், மனித வெளியேறிற்றம் மற்றும் இடம்பெயர்வு," என அவர் மேம்போக்காக பண்புமயப்படுத்தியவற்றின் சமூக மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பிரதமர் குறிப்பிட்ட போதும், அவரது பிரதான இலக்கு, அவர் சுட்டிக் காட்டிய, அதிதீவிரவாத மற்றும் “வன்முறையான அரச-சார்பற்ற செயற்பட்டாளர்களால்” இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதே ஆகும்.

"பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் உடப்ட புதிய ஊடகங்கள், உலகை சீர்குலைக்கும் சக்திகளாக ஆகி வருகின்றன," என அவர் கூறினார்.

போர் நடவடிக்கைகளின் தன்மை, "உடலில் இருந்து இணையத்திற்கு மாறியுள்ளது" என கூறிய அவர், 2011ல் துனிசியா மற்றும் எகிப்தில் வெடித்த வெகுஜன புரட்சிகர எழுச்சிகளை சுட்டிக் காட்டினார். "தேசங்களை ஸ்திரமற்றதாக்குவதிலும் துனிசியா, லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் ஒரு கடும் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கும் இந்த ஊடகம் இயலுமை கொண்டிருப்பதை நாம் கண்டோம்.”

சமூக ஊடகமும் இணையமும் "அரபு வசந்தம்" என்றழைக்கப்பட்ட வெகுஜன வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததில் பிரதான பாகம் வகித்தன. முதலில் இது டியூனீஷியாவில் ஸைன் எல் அபிடைன் பென் அலியின் ஆட்சி கவிழ்வதற்கு வழி வகுத்தது, பின்னர் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர எழுச்சிக்கும் ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரம் தூக்கியென்றியப்படுவதற்கும் வழி வகுத்தது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான புரட்சிகர மற்றும் சோசலிச கட்சி இல்லாமையால், எகிப்திய ஆளும் உயரடுக்குக்கு, அமெரிக்காவின் உதவியுடன் இந்த வெகுஜன இயக்கத்தை நசுக்கி, இராணுவ சர்வாதிகாரத்தை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது.

இந்த புரட்சிகர வெடிப்புகள் பற்றிய விக்கிரமசிங்கவின் குறிப்புகள் தெற்செயலானவை அல்ல, மாறாக, தனது சொந்த அரசாங்கத்துக்கு இலங்கை தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பு குவிந்து வருவது பற்றிய அவரது கவலையால் உந்தப்பட்டுள்ளன.

விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் "ஐக்கிய அரசாங்கம்", இந்த ஆண்டு மின்சாரம், ரயில், சுகாதாரம், எரிபொருள், துறைமுகங்கள், தபால், நீர் வழங்கல் மற்றும் தோட்ட தொழிலாளர்களது  வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும், அத்துடன் கல்வி தனியார்மயமாக்குவதை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் விவசாயிகளும் மீனவர்களும் நடத்தும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமானது ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி, ஊதிப் பெருகும் வெளிநாட்டு கடன் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிராக சிக்கன நடவடிக்கைகளை ஆழமாக்க கோரும் சர்வதேச நாணய நிதியத்தினதும் அழுத்தங்களுடன் அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் இணைய தணிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்குவிக்கப்பட்ட விக்கிரமசிங்கவின் உரையானது, சமூக ஊடகம் மற்றும் இணையத்தின் மீதான அதன் சொந்த தணிக்கையை திணிக்க கொழும்பு திட்டமிட்டுள்ளதற்கான தெளிவான அறிகுறியாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது கொழும்பு இணையத் தளங்களை திட்டமிட்டு தடுத்தது. 2009ல் யுத்தம் முடிவடைந்தது, ஆனால் தடைகள் தொடர்கின்றன.

அதன் முன்னோடி போலவே, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்களை இலக்கு வைத்துள்ளதோடு போரின் போது நிறுவப்பட்ட அதன் சிறப்பு இணைய இராணுவ புலனாய்வு பிரிவை பராமரித்து வருகிறது.

கடந்த நவம்பரில், நேரடியாக ஜனாதிபதி சிறிசேனவின் கீழ் இருக்கும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, அவரை விமர்சித்த பின்னர், லங்கா நியூஸ் (lankaenews.com) இணையத்தை தடுத்துவிட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கண்டி மாவட்டத்தில் சிங்கள-பௌத்த தீவிரவாத குழுக்களால் முஸ்லீம்-விரோத வன்முறைகளை திட்டமிடவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்ற போலி சாக்குப் போக்கில் முகநூல், வைபர், வட்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களை கொழும்பு தடை செய்தது. தனது அச்சுறுத்தல்களை நியாயப்படுத்துவதற்காக பாலியல் தொடர்பான துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இணையம் மற்றும் முகநூலை தணிக்கை செய்ய புதிய சட்டங்களை அரசாங்கம் உருவாக்கும் என இதற்கு முன்னர் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இலங்கையில் ஆறு மில்லியன் சமூக ஊடக பாவனையாளர்கள் உள்ளனர். அதாவது, மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர். உலகெங்கிலும் உள்ள அதன் சக தரப்பினர்களைப் போலவே, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெருகிய முறையில் நேர்மையான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சமூக ஊடகங்களையும் இணையங்களையும் நாடுகின்றார்கள் என்பதையிட்டு கடும் கவலையடைந்துள்ளது.

கொழும்பின் பாதுகாப்பு கருத்தரங்கில் விக்கிரமசிங்கவின் உரை, இலங்கையின் அரசியல் மேற்தட்டுக்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்கள் மீது பெரும் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவை காட்டுகிறது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

கூகுளுக்கு ஒரு பகிரங்க கடிதம்: இணைய தணிக்கையை நிறுத்து! உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்வதை நிறுத்து! [PDF]

முழு எழுத்துவடிவம்: “இணையத் தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்” [PDF]

இடதுசாரி, போர்-எதிர்ப்பு அமைப்புகள் மீது பேஸ்புக் தணிக்கையைத் தீவிரப்படுத்துகிறது
Facebook and Sri Lankan government collaborate on social media censorship
[20 March 2018]

Sri Lankan government prepares new internet restrictions
[15 February 2010]