ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India police attack striking auto workers in Tamil Nadu; New Zealand bus drivers walkout
Workers Struggles: Asia, Australia and the Pacific

தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் இந்திய போலிஸ்  தாக்குதல் ; நியுசிலாந்து பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

Workers Struggles
29 September 2018

ஆசியா

இந்தியா: யமஹா மற்றும் றாயல் என்பீல்டு தொழிலாளர்கள் மீது தமிழ்நாடு போலிஸ்  தாக்குதல்

செப்டம்பர் 26 அன்று தமிழ்நாடு போலிஸ், யமஹா மற்றும் றாயல் என்பீல்டு தொழிற்சாலைகளுக்கு சென்று வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களைத் தாக்கியதுடன் அத்தொழிற்சாலையை விட்டு வெளியேற்றியுள்ளது. இவைகள் சென்னைக்கு அருகில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஓரகடத்தில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் பிரதான இருசக்கர மோட்டார் வண்டிகளை உற்பத்திசெய்கின்றன.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி செப்டம்பர் 21 ன்று 750 க்கும் அதிகமான யமஹா இந்தியத் தொழிலாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தினை தொடங்கினர் மேலும் தொழிற்சாலை உள்ளிருப்பையும் மேற்கொண்டனர். அத் தொழிலாளர்கள் யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் என்கிற புதிய தொழிற்சங்கத்தினை அமைத்திருந்தார்கள். இது இந்திய ஸ்ராலினிச கம்யூனிசக் கட்சி (மார்க்சிஸ்டு) மற்றும் அதன் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 1,300 ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் செப்டம்பர் 24 அன்று ஒரு ஊதிய உயர்வுக்காகவும், பிற கோரிக்கைகளுக்காகவும் வேலைநிறுத்தத்தினை தொடங்கியிருந்தனர். பயிற்சி பெறுபவர்கள் நேற்று வேலைக்கு  திரும்ப மறுத்ததால் அவர்களை வேலையைவிட்டு நீக்கிவிடுவிடுவதாக நிறுவனம் அச்சுறுத்தியிருக்கிறது.

இந்தியாவிலுள்ள தெலுங்கான மாநிலத்தில் நிலுவையிலிருக்கும் ஊதியத்திற்காக துப்புரவுத் தொழிலார்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தெலுங்கானவில் செகந்திராபாத் கண்டோன்ட்மன்ட் போர்டு பகுதியிலிருந்து 420 க்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்கள் செப்டம்பர் 25 அன்று கடந்த ஆகஸ்டு மாத ஊதியத்திற்காக ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை மேற்கொண்டனர். அவர்களின் தற்போதைய ஒருநாள் ஊதியம் வெறும் 553 ரூபாய் (7 அமெரிக்க டாலர்).

செகந்திராபாத் கண்டோன்ட்மன்ட் போர்டு மற்றும் துப்புரவு தொழில் ஒப்பந்ததார்கள் கொடுக்கப்படாமலிருக்கும் ஊதியத்தின் மீது ஒரு பழிபோடும் விளையாட்டினை விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். செகந்திராபாத் கண்டோன்ட்மன்ட் போர்டில் பில்களை கொடுத்துவிட்டோம் ஆனால் இன்னும் எந்த நிதியும் பெறவில்லை என்று துப்புரவுத் தொழிலார்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்துவதற்கு பணம் இல்லை என்று செகந்திராபாத் கண்டோன்ட்மன்ட் போர்டு அதிகாரிகள் ஊடக்த்திற்கு தெரிவித்துள்ளாரக்ள்.

இந்திய கார் பாகங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இந்தியாவிலுள்ள ஒரகடம் தொழிற்துறை மண்டலத்தில் உள்ள மையங் சின் ஆட்டோமோட்டிவ் இலிருந்து கிட்டத்தட்ட 140 தொழிலாளர்கள் செப்டம்பர் 5 ன்று தொடங்கிய வேலை நிறுத்தப்போராட்ட நடவடிக்கையினை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

வாகன பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனமானது 30 மாதங்களாக ஒரு ஊதிய உயர்வினையும் வழங்கவில்லை என்று இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்கங்களின் மையம் ஊடகத்திற்கு கூறியது. நிர்வாகம் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைளுக்கு ஏற்பாடுகள் செய்தன, ஆயினும் ஒரு பரஸ்பர முடிவுக்கு வரவில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் கூறினார்.