ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The raid on Unsubmissive France and the global rise of state repression

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் மீதான திடீர் சோதனையும் அரசு ஒடுக்குமுறையின் உலக ரீதியான எழுச்சியும்

By Alex Lantier
19 October 2018

நேற்று, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியடையச் செய்த இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதன் மீதான கோரமான விவரங்கள் வெளிவந்துள்ளன.

சவூதி அரேவியாவைசேர்ந்த குழு ஒன்று பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் ஒரு எதிர்ப்பாளரான பத்திரிகையாளரை அடித்துச் சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் துண்டுதுண்டாக்கியதாகவும் தூதரகத்திலிருந்து கிடைக்கும் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன. கொலைசெய்த விவரங்கள் வெறுப்பூட்டுபவையாக உள்ளன. இது பற்றி நியூ யோர்க் டைம்ஸ், “திரு. கஷோகி அவரது விரல்கள் அகற்றப்பட்டு உடல் துண்டு துண்டாக்கப்படும் முன்னர் கொல்லப்பட்டாரா” எனத் தெளிவில்லாமல் இருக்கிறது என்று எழுதியது. அவர் இறந்த உடனே, சவூதி தடயவியல் நிபுணர், இஸ்தான்புல்லுக்கு விரைந்து அனுப்பப்பட்டு துண்டுதுண்டாக்கி எச்சத்தை மறைப்பதற்கு உதவினார் —பிணத்தை வெட்டும்பொழுது மனஇறுக்கத்தை தளர்த்துவதற்கு “இசையைக் கேட்க” அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒரு அரசியல் எதிர்ப்பாளரை அழிப்பதற்குப் படுகொலையை பயன்படுத்தும் சவூதி எண்ணெய் முடியாட்சியின் நிலை மற்றும் ஏனையவர்களை அமைதிப்படுத்த அச்சுறுத்தும் முயற்சி, சர்வதேச ரீதியாக கோபத்தையும் கடும் வெறுப்பையும் தூண்டி விட்டுள்ளன. ஆயினும், கஷோகி படுகொலையானது, வளர்ச்சியடைந்து வரும் அரசியல் எதிர்ப்பை மிரட்டுவதற்காக ஆளும் உயர் அடுக்கால் பயன்படுத்தப்படும் போலிஸ்-அரச ஒடுக்குமுறையின் மிகவும் கொடூரமான வெளிப்பாடாக உள்ளது.

இஸ்தான்புல்லிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தொலைவில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை பாரிசில், துப்பாக்கிகளோடும் குண்டுதுளைக்காத உடையணிந்தும் ஆயுதம் தரித்த போலிஸ் அணியொன்று, அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France - LFI) கட்சியின் தலைவரான ஜோன் லூக் மெலோன்சோனின் வீட்டுக்குள் நெருக்கியடித்துக் கொண்டு நுழைந்தது. இதேபோன்ற ஏனைய பதினைந்து போலிஸ் குழுக்கள் இதர LFI அலுவலர்களது வீடுகள் மற்றும் LFI கட்சியின் தலைமையகங்களில் திடுமென நுழைந்தன. அங்கே பொலீசார் பல பொருட்களைப் பறிமுதல் செய்தனர் மற்றும் LFI இன் கணினிகளில் உள்ள அனைத்துத் தரவுகளையும் தரவிறக்கம் செய்தனர், மெலோன்சோனும் ஏனைய LFI உறுப்பினர்களும் உள்ளே நுழைவதற்கு முற்பட்டபோது போலிஸார் சட்டவிரோதமான முறையில் மறுத்தனர்.

மெலோன்சோனும் LFI இன் இதர பாராளுமன்ற பிரதிநிதிகளும் கதவைத் திறக்குமாறு நிர்பந்தித்தபொழுது, அங்கே அவர்கள் போலிஸ் அணியை எதிர்கொண்டனர். அவர்களுள் ஒருவர் LFI உறுப்பினர் ஒருவரை மெலோன்சோன் எனக் கருதி நெட்டித்தள்ளி அவர்களை அங்கிருந்து அகலுமாறு கோரினர்.

அடுத்தநாள், மெலோன்சோன் ஒரு “அரசியல் தியாகி” எனத் தன்னைக் காட்டிக் கொள்வதாக Libération பத்திரிகையின் வார்த்தைகளில் கண்டனம் செய்யப்பட்டு, நீதியைத் தடுத்ததும் பொலீசை தாக்கியதும் என்ற புகாரின் பேரில் அவர் மீது நீதிமன்றம் விசாரணையை ஆரம்பித்ததாகவும் ஒரு சேர்ந்திசைக்கப்பட்ட பிரச்சாரம் ஊடகத்தில் ஆரம்பமாகியது.

இந்த மூர்க்கத்தனமான பொலிஸ்-அரச தாக்குதலை உலக சோசலிச வலைத் தளம் ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்கிறது. நூறாயிரக் கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மில்லியன் கணக்கான இடதுசாரி வாக்குகளைப் பெற்றிருக்கும் கட்சியான LFI மீதான தாக்குதல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கை மற்றும் போலிஸ் அரசு கொள்கைகளுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை அச்சுறுத்தும் நோக்கங்கொண்டதாகும். இது, “செல்வந்தர்களின் ஜனாதிபதி” என்று வெறுக்கப்பட்ட மக்ரோன், ஒரு அரசாங்கத்தை அமைக்க முயன்று தோல்வியுற்ற இருவாரங்களுக்குப் பின்னர் நடந்துள்ளது; மக்ரோனின் செல்வாக்கின்மை காரணமாக, அரசியல்வாதிகள் அவரது அமைச்சரவையில் சேர மறுக்கின்றனர், அது தங்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.

உலக சோசலிச வலைத் தளம், மெலோன்சோன் உடன் அடிப்படையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது, அது அவற்றை விரிவாக ஆவணப்படுத்தியும் இருக்கிறது. ஆயினும், அவர் இன்னமும் கணிசமான அளவு ஆதரவைக் கொண்டுள்ள ஒரு முன்னணி அரசியல்வாதியாக இருக்கிறார். அவருடைய அரசியலை நடத்துவதற்கும் அவரது தலைமையகத்தை பாதுகாப்பதற்கும் உள்ள அவரது உரிமை, அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது.

மெலோன்சோன், பொலீசாருடன் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தயாராக இருந்த ஒரு பயங்கரவாத குண்டுதாரி போல, அவரது வீட்டிற்குள் நன்கு ஆயுதம் தரித்த பொலீசை அனுபுவதற்கான உள்துறை அமைச்சகத்தின் முடிவானது, பிரான்சிலும் ஐரோப்பா முழுமையிலும் அதற்கு அப்பாலும் உள்ள மக்கட்திரளினரை அச்சுறுத்துவதற்கான ஒரு தெளிவான அச்சுறுத்தலாகும். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவிற்குப் பின்னரான ஒரு பத்தாண்டில், ஆளும் உயரடுக்கானது தங்களின் அவலட்சணமான செல்வத்திரட்சி, சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகியன மிகப்பெருமளவில் வெறுக்கப்பட்டு வருகின்றன என்பதையிட்டு விழிப்பாக உள்ளது. பலவீனமான அரசாங்கங்கள், அரசியல் எதிர்ப்புக்கு எதிராக ஆற்றொணா நடவடிக்கைகளை எடுப்பதுடன், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதன் பொழுது கட்டமைக்கப்பட்ட போலிஸ்-அரசு அதிகாரங்களை ஈவிரக்கமற்று பயன்படுத்த நோக்கங்கொண்டுள்ளனர்.

சவூதி ஆட்சியைப் போலவே, மக்ரோன் அரசாங்கமும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள அரசாங்கங்களும் பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்கையில், நம்பிக்கை இழந்த நிலையில் சாட்டையை எடுத்து விளாசுகின்றன. கடந்த ஆண்டு, ஸ்பானிய அரசாங்கம் அக்டோபர் 2017ல் கட்டலோனியா சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான அமைதியான வாக்காளர்களை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான பொலீசாரை அனுப்பியது. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலான் பிராந்திய அரசாங்கத்தை நீக்கம் செய்த பின்னர், வாக்கெடுப்பை ஒழுங்கு செய்ததற்காக அல்லது மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதியான எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்ததற்காக உயர்மட்ட கட்டலான் அரசியல்வாதிகளை சிறையில் தள்ளியது, அவர்களை அரசியல் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது.

மெலோன்சோன் மீதான திடீர் சோதனைக்குப் பின்னர், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இன் அரசாங்கத்திற்கு எதிராக பரந்த பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பேர்லினில் நடக்கையில், மேர்க்கெல் ஐரோப்பியத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், தனது அரசாங்கம் எதிர்க்கட்சிகளை கண்காணிப்பதை அதிகரிக்கும் என்று அறிவித்தார். “உள்நாட்டுப் பாதுகாப்பை” பலப்படுத்தும்பொருட்டு, “தங்களின் பிரச்சாரத்தில் தவறான தகவல்களை தீவிரமாய் பரப்பும் எதிர்க் கட்சியினருக்கு” தான் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கப் போவதாகக் கூறினார்.

இந்த தணிக்கை மற்றும் போலிஸ்-அரசு ஒடுக்குமுறையின் பிரதான இலக்கு, முதலாளித்துவதிற்கு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் உள்ள அடிப்படை அரசியல் எதிர்ப்பாகும். சவூதி ஆட்சி அதன் விமர்சகர்களைப் படுகொலை செய்ய வகைசெய்வதுபோல், “சவூதி அரேபியாவின் இளைய மற்றும் நன்கு கல்விகற்ற மக்கள் அர்த்தமுள்ள வேலைகளைக் காணமுடியாது போனால், எண்ணெய் மேலாதிக்க பொருளாதாரம் பல்கிப்பெருக வகைசெய்ய முடியாது போனால் ’அவை கேடுக்கு ஆளாகக்கூடும்’ ” என்பதை அறியும் என்று ஒரு தூதரக அதிகாரி வாஷிங்டன் போஸ்ட் இடம் குறிப்பிட்டார்.

மிக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுவது விரைவாக நடந்தேறிவருகிறது. பரந்த வேலையின்மைக்கு இடையில் 2008லிருந்து பத்தாண்டுகால ஆழமான சிக்கன நடவடிக்கை, கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் பேரில் நடத்திய ஒரு கருத்து வாக்கெடுப்பில் 35 வயதிற்கும் கீழேயான பெரும்பாலான ஐரோப்பிய இளைஞர்கள் சமூக ஒழுங்கிற்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சியில் சேருவதற்கு விருப்பும் கொள்கின்றனர் என்று கண்டுகொண்டது. அமெரிக்காவிலும், அதேபோன்ற வாக்கெடுப்பு இளந்தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை விரும்புவதாகக் கண்டறிந்தது.

LFI மீதான திடீர் சோதனைகள் ஒரு எச்சரிக்கை ஆகும்: ஒரு முன்னாள் அரசாங்க அமைச்சரும் உத்தியோகபூர்வ அரசியலில் நன்கு அறியப்பட்டவருமான மெலோன்சோனுக்கு எதிரான அத்தகைய மிருகத்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்துவதை ஆளும் தட்டுக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்வார்களானால், பின்னர் அவர்கள் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக ஈவிரக்கமற்ற வகையில் நகர முயல்வர்.

இன்று எழுகின்ற பிரதான பணியானது இராணுவ வாதத்திற்கும் போலிஸ் அரச ஒடுக்குமுறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்புவதாகும். முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் தங்களின் சலுகைகளை தக்கவைத்துக் கொள்ளும் பாகமாக மூர்க்கத்தனமாக பரந்தளவில் உளவு பார்ப்பதற்கும் போலிஸ் ஒடுக்குமுறைக்குமான ஒரு உலகத் திருப்பத்தை எதிர்கொள்கின்ற நிலையில், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழி, சோசலிசத்திற்கான போராட்டத்திலேயே உள்ளது.

பிரெஞ்சு ஊடகத்தில் உள்ள ஒருசமயம் தம்மை சோசலிஸ்டுகள் எனக் காட்டிக்கொண்ட அதன் பல தட்டுக்களின் மெலோன்சோனுக்கு எதிரான ஒருமித்த திருப்பமானது, ஒரு எச்சரிக்கை ஆகும். கடந்து சென்ற “இடது” அரசியலில் மேலாதிக்கம் செய்திருந்த 1968 மாணவர் இயக்கத்திலிருந்து இழுக்கப்பட்ட நடுத்தர வர்க்க செல்வாக்குமிக்க அடுக்குகள் அதி-வலதிற்கு நகர்ந்துள்ளதுடன், போலிஸ் அரசுடனான தங்களின் வழியைப் பிணைத்துக் கொண்டுள்ளனர். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கம் ஏனைய வர்க்க சக்திகளிலிலிருந்து தனது அரசியல் சுயாதீனத்தை பேணுவதற்கான போராட்டம் தேவைப்படுகிறது.

குறிப்பாக, உலக சோசலிச வலைத் தளமானது மக்ரோனின் ஒடுக்குமுறைக்கு எதிராக மெலோன்சோனை நிபந்தனை அற்ற வகையிலும் ஐயத்திற்கு இடமற்ற வகையிலும் பாதுகாக்கும் அதேவேளை, அவரது கொள்கைகளைப் பற்றிய அதன் விமர்சனத்தை தொடர்ந்து பராமரிக்கிறது, அக்கொள்கைகள் போலிஸ்-அரசை உருவாக்குவதில் வகித்த பாத்திரம் சற்றும் குறைந்ததல்ல. அவரது கட்சி, பிரெஞ்சு தேசியவாதத்தை இடைவிடாது ஊக்குவித்து வந்துள்ளது, 2015 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அவசரகால நிலை சட்டத்திற்கு வாக்களித்தது, அது ஜனநாயக உரிமைகளை நீக்கியதோடு போலிஸ் அதிகாரங்களை பெருமளவில் அதிகரித்தது. மக்ரோனுக்கு எதிராக பிரெஞ்சுக் குடியரசை பாதுகாப்பதற்கு வலதுடன் கூட்டு வைத்துக்கொள்வதற்கான அவரது உறுதிமொழியானது, இப்போது அவரது தலைக்கு உலைவைக்கும் போலிஸ் சக்திகளை பலப்படுத்த மட்டுமே செய்துள்ளது.

மாறாக, போலிஸ்-அரசு சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் அடிப்படைக் கோட்பாடுகளாக பின்வருபவை உள்ளன: