ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP (Sri Lanka) to hold meetings on the socialist solution to the political crisis

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அரசியல் நெருக்கடிக்கு சோசலிச தீர்வு பற்றி கூட்டங்களை நடத்துகிறது

15 November 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், ஆளும் உயரடுக்கிற்குள் தீவிரமடைந்து வரும் அரசியல் மோதல்கள் பற்றி கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் இருத்தி இரண்டு வாரங்களுக்குப் பின்னர், நவம்பர் 9 அன்று பாராளுமன்றத்தை கலைத்தார். சிறிசேன நாட்டின் அரசியலமைப்பை வெளிப்படையாக மீறியுள்ளார். சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இப்போது அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

1948 இல் "சுதந்திரம்" கிடைத்ததில் இருந்தே பாராளுமன்ற ஆட்சியின் நீண்டகால சிதைவின் உச்சக்கட்டத்தையே சிறிசேனவின் நகர்வுகள் பிரதிபலிக்கின்றன. அதேவேளை, ஆழமடைந்து வரும் பூகோள பொருளாதார பிரச்சினைகள், அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவை எதிர்த்து நிற்கின்ற நிலையில், வளர்ச்சியடையும் பூகோள-அரசியல் பதட்டங்கள், மற்றும் உலகம் முழுதும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் போராட்டம் அதிகரித்து வருவதன் மத்தியிலேயே இந்த முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி வெளிப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வந்துள்ள எந்தவொரு முதலாளித்துவப் பிரிவாலோ, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஏனைய கட்சிகளாலோ உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியும் என எவரும் எந்த மாயையும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.

தொழிலாள வர்க்கம் இந்த ஆளும் வர்க்க பிரிவுகளையும், அவற்றின் சந்தர்ப்பவாத போலி இடது குழுக்களான நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்நிலை சோசலிச கட்சி போன்றவற்றையும் நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கமானது சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், கிராமப்புற ஏழைகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களை தம்பின்னால் இணைத்துக்கொண்டு, இந்த முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் ஏஜன்டுகளிடமும் இருந்து சுயாதீனமாக அணிதிரள வேண்டும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் எமது கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த முக்கிய அரசியல் பிரச்சினைகளையும், பதிலிறுப்பதற்குத் தேவையான சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் பற்றி இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படும்.

இடம், திகதி மற்றும் நேரம்:

ஞாயிறு, நவம்பர் 18, மாலை 3.00 மணிக்கு, மாத்தறை தபால் அலுவலக கேட்போர் கூடம்.

திங்கள், நவம்பர் 19, மாலை 4.00 மணிக்கு, கொழும்பு பொறளையில் கொட்டா ரோட்டில் அமைந்துள்ள என். எம். பெரேரா நிலையம்.

ஞாயிறு, நவம்பர் 25, காலை 10.00 மணிக்கு ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபம்.