ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Matamoros strike set to expand as ruling class boosts unions

ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்களை ஊக்குவிக்கின்ற நிலையில், மத்தாமோரொஸ் வேலைநிறுத்தம் விரிவடைய உள்ளது

By Eric London and Andrea Lobo
24 January 2019

நகரந்தழுவிய ஒரு வேலைநிறுத்தத்திற்கான சட்டபூர்வ "சிந்திக்கும் காலகட்ட" அவகாசம் முடிவடைய இருக்கின்ற நிலையில், இதன் அர்த்தம் இன்னும் பல ஆலைகளில் வெளிநடப்பு நடக்கக்கூடும் என்கின்ற நிலையில், பத்தாயிரக் கணக்கான மத்தாமோரொஸ் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெள்ளியன்று அதிகரிக்க இருக்கிறது.

தொழிலாளர்கள் வேலைநிறுத்த அலையை விரிவாக்க உத்வேகத்துடன் இருக்கின்ற அதேவேளையில், முதலாளித்துவ வர்க்கத்தை ஆதரிக்கும் சக்திகள் அனைத்தும் அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களுக்கு இப்போது ஒரேயொரு தேர்வு தான் உள்ளது: ஒன்று அவர்களுடைய உத்வேகத்தைப் பேணி, உருவாகி வரும் அவர்களின் ஆலை கமிட்டிக்கள் மூலமாக அவர்களின் பலத்தைக் கட்டமைக்க வேண்டும் அல்லது அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் முன்னெடுப்பிற்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

நேற்று, மெக்சிகன் ஜனாதிபதி Andrés Manuel López Obrador (AMLO) தொழிற்சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அக்கறை காட்டி, அவரின் காலை பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த வேலைநிறுத்தம் குறித்து கருத்துரைக்கையில், அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தலையீடு செய்ய தொழிற்சங்கங்களை கணக்கில் வைத்திருப்பதைத் தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் அனைத்திற்கும் மேலாக மத்தாமோரொஸ் இல் நல்லிணக்க உடன்படிக்கையை எதிர்நோக்குகிறோம்,” என்றார். “அங்கே இணக்கமின்மை உள்ளது, அவர்கள் ஓர் உடன்படிக்கையை எட்டவில்லை. தொழிலாளர்கள் அவர்களின் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பதாக தெரிகிறது, விடயம் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்துள்ளது. தொழிற்சங்கங்களின் வாழ்வில் நம்மைநாமே உள்நுழைத்துக் கொள்ள அது நமது நேரடி கவனத்திற்குரிய விடயமல்ல என்றாலும், ஒரு நல்லிணக்கத் தீர்வை நாம் எதிர்நோக்குகிறோம் என்றால் நாம் மதிப்பளிக்க வேண்டும்,” என்றார்.

தொழிற்சங்கங்களும், தேசிய மறுமலர்ச்சி இயக்கமும் (Morena), பெருநிறுவனங்களும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுகள் மற்றும் மேலதிககொடுப்பனவுகளைக் (போனஸ்) கொள்ளையடித்த போது அந்த வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக செய்த அதே சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதையே AMLO இன் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நிலைமையை "கட்டுப்பாட்டுக்குள்" கொண்டு வருவதற்கும் மற்றும் "நல்லிணக்கத்தைக்" காண்பதற்குமான எல்லா அழைப்புகளும் 20 சதவீத சம்பள உயர்வையும் வாக்குறுதியளித்த கொடுப்பனவு தொகையையும் பறித்துக் கொள்வதையே அர்த்தப்படுத்துகின்றன. இதன் அர்த்தம் தொழிலாளர்களை பலவந்தமாக நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்கச் செய்வதாகும். மத்திய அரசு தலையீட்டின் அச்சுறுத்தல்கள், இந்த வேலைநிறுத்தத்தை உடைக்க அரசு வன்முறையைப் பிரயோகிக்கும் சாத்தியக்கூறை எடுத்துக் காட்டுகிறது.

இதற்கிடையே, தொழிலாளர்கள் நேற்று பெருந்திரளான கூட்டமாக மத்திய வளாகத்தில் ஒன்றுகூடினர், அதில் சிலர் "AMLO நீங்கள் எங்களைக் காட்டிக்கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள்,” என்று எழுதிய பலகைகளைத் தாங்கியிருந்தனர். நல்லிணக்கத்திற்கான AMLO இன் முறையீடுகளைத் தொழிலாளர்கள் சரியாகவே எதிர்க்கிறார்கள் என்பதோடு, AMLO அவர்களின் கூட்டாளி இல்லை என்பதில் அவர்களின் சக தொழிலாளர்களையும் தொழிலாளர்கள் உடன்பட வைக்க வேண்டும். சொல்லப்போனால், AMLO தான் மக்கில்லாடோரா பொருத்தும்ஆலைகளின் வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வெட்டினார், மோசடியான குறைந்தபட்ச கூலி சட்டமசோதாவைப் பயன்படுத்தி அவர்கள் சலுகைகளை வெட்ட அவர் தான் அனுமதித்தார்.

AMLO “நல்லிணக்கத்திற்கு" முறையிடுகின்ற அதேவேளையில், பெருநிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் உடல்ரீதியான வன்முறை நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றன. திங்களன்று வேலைநிறுத்தக்காரர் ஒருவர் அடையாளம் தெரியாத குண்டர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டார், மேலும் வேலைநிறுத்தத்திற்கு விடையிறுப்பாக பெருந்திரளானவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் அமெரிக்க மற்றும் க
னேடிய தொழிலாளர்கள் வாசிப்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி காட்டுகின்றனர்.

தொழிற்சங்கம் மற்றும் மொரெனாவுக்கு நெருக்கமானவர்கள் தொழிலாளர்களின் "நண்பர்களாக" காட்டிக் கொள்கிறார்கள், அத்துடன் ஆதரவு கோரி அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் முறையிடுமாறு அவர்களை வலியுறுத்துகிறார்கள். இது அழிவிற்கான ஓர் வழிமுறையாகும்.

தொழிலாளர் வழக்கறிஞரும் மொரெனா ஆதரவு நடவடிக்கையாளர் சுசானா ப்ரீட்டொ, 2018 Ciudad Juárez நகரசபை தேர்தலில் மக்கில்லாடோரா-ஆதரவு பெற்ற மொரெனா வேட்பாளர் கொன்ஸாலஸ் மோக்கென் இற்காக பிரச்சாரம் செய்திருந்த இவர், AMLOஅரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தி உள்ளார். ஜூன் 2018 இல் மக்கில்லாடோரா முதலாளிமார்களைச் சந்தித்த மோக்கென், அவர் “பெருநிறுவனங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள" விரும்புவதாக தெரிவித்ததோடு, “தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இருந்தால், நகரசபை அரசாங்கம் அமைப்பதன் பாகமாக என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்பதையும் தெரிவித்திருந்தார்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில், அவர் தொழிலாளர்களுக்குக் கூறுகையில், “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதில் மத்திய அரசாங்கத்திற்கு உடன்பாடின்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்றார்.

ப்ரீட்டொ மாற்றி மாற்றி பேசுகிறார். தொழிற்சங்க தலைவர்களை எதிர்க்க ப்ரீட்டொ வார்த்தையளவில் அவற்றை விற்றுத் தள்ளப்பட்டவை என்று கூறுகின்ற அதேவேளையில், அவரும் தொழிற்சங்க தலைவர் Juan Villafuerte உம் "சுமூகமான நட்புறவு கொண்டிருப்பதாகவும்,” அவர் "பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறுவதற்காக சமீபத்தில் அவரை அழைத்திருந்ததாகவும்" கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தொழிலாள வர்க்கம் என்ன விரும்புகிறதோ அதை செய்ய, Mr. Villafuerte இன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்பவர்களாக எங்களை நாங்களே மாற்றிக் கொண்டுள்ளோம்,” என்றார். கடந்த வாரம் ப்ரீட்டொ கூறினார், “சக தொழிலாளர்களே, நீங்கள் தொழிற்சங்கத்திலிருந்து தொடங்கி, அழுத்தமளிக்க வேண்டும். இப்போதைக்கு Villafuerte இல் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளக் கூடாது,” என்றார்.

தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் படித்து வரும் செய்தி கட்டுரைகளையும் ப்ரீட்டொ கண்டித்தார். தெளிவாக இது, இந்த வேலைநிறுத்தம் குறித்து எழுதியுள்ள ஒரே சர்வதேச பிரசுரமான உலக சோசலிச வலைத் தளம் மீதான தாக்குதலாகும்.

தொழிலாளர்கள் அவரின் பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடருமாறும் இதர பிற கணக்குகளைப் புறக்கணிக்குமாறும் கோரி, அவர் கூறுகையில், “சமூக ஊடகங்களில் நீங்கள் எந்தெந்த குப்பைகளை வாசிக்கிறீர்களோ அதையெல்லாம் பின்தொடராதீர்கள்,” என்றார். தொழிலாளர்கள் "கருத்துத் தெரிவிப்போரை", அதாவது தங்களின் சொந்த அரசியல் கருத்துக்களை உருவாக்குபவர்களைக் கொண்டிருப்பதாக அவர் குறைகூறினார். முன்னதாக அவர், வேலைநிறுத்தத்தில் "எந்த அரசியலும்" இருக்கக்கூடாதென முறையிட்டிருந்தார்.

பெயர் வெளியிட விரும்பாத மத்தாமோரொஸ் தொழிலாளர் ஒருவர் WSWS க்குக் கூறினார், “[ப்ரீட்டோ] உண்மையாக உதவ விரும்பவில்லையென நான் நினைக்கிறேன். இங்கே மெக்சிகோவில் எல்லோமே கொள்ளைக்கூட்டமாக இருக்கிறது. இப்போதெல்லாம் அரசியல் செய்பவர்கள் எவரொருவரையும் உண்மையாக நம்ப முடியவில்லை.” அப்பெண் தொழிலாளி WSWS செய்திகளைப் படித்து வருவதாக தெரிவித்தார்: “அது அருமையாக உள்ளது! அருமையான பணி. உண்மையை உரைப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில், ப்ரீட்டொ சோசலிசம் மற்றும் இந்த வேலைநிறுத்தத்தில் அதன் செல்வாக்கிற்கு எதிராக 15 நிமிட நேர வசைபாடலைத் தொடங்க ஓர் உள்ளூர் பிரமுகரான மரீயோ ரமொஸ் ஐ அழைத்திருந்தார்.

“சமூக ஊடகங்களில் கூறப்படுவது எதுவுமே உண்மையில்லை,” என்றார். “இந்த இயக்கம் கம்யூனிச இயக்கமோ அல்லது சோசலிச இயக்கமோ இல்லை. நீங்கள் சோசலிசவாதியாக அல்லது கம்யூனிஸ்டாக இருந்தால், உங்களுக்கு ஓர் அமைதியான இயக்கம் கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.” “நீங்கள் வெனிசூலாவைப் போலிருக்க விரும்புகிறீர்களா?” என்றவர் வினவினார்.

ராமொஸ் தெரிவித்தார், “நான் முதலாளித்துவவாதி, நான் பணத்தை விரும்புகிறேன்,” இதில் உடன்பட்ட ப்ரீட்டொ தெரிவிக்கையில், “நானும் தான்" என்றார். ரமொஸ் தொடர்ந்து கூறுகையில், “எவ்வாறு ஒழுங்கமைப்பது என்று உங்களுக்கு நான் கூறவிருக்கிறேன்" என்று கூறிய அவர், தொழிலாளர்களை அவர்களின் சிவப்பு கருப்பு வேலைநிறுத்த கொடிகளைக் கீழிறக்கி விட்டு குவாதலூப் கன்னியின் மதவாத படத்தை ஏந்துமாறு அறிவுறுத்தினார். தொழிலாளர்கள் "ஜனாதிபதி López Obrador ஐ கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுக்க வேண்டுமென" அவர் கோரினார்.

ஆகஸ்ட் 2018 இல் Ciudad Juárez நகரசபை தலைவர் பதவிக்காக மக்கில்லாடோரா ஆதரவு பெற்ற வேட்பாளர் மொரெனாவுக்காக சுசானா ப்ரீட்டொ பிரச்சாரம் செய்கிறார்


சுசானா ப்ரீட்டொவும் மரியோ ரமொஸூம் சோசலிசத்தின் தீமைகளைக் குறித்து தொழிலாளர்களுக்கு சொற்பொழிவு செய்கையில், தொழிலாளர்கள் சிரிக்கின்றனர்

வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து, ரமொஸ் கீழிறங்கு என கூச்சலிடவும், சிரிக்கவும் தொடங்கினர். அவர் முதலாளித்துவத்தின் ஆதாயங்களைக் குறித்தும், சோசலிசத்தின் தீமைகளைக் குறித்தும் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தொழிலாளர்களின் கோபமான கூச்சல்களால் அவர் கீழிறங்க வேண்டியிருந்தது. பின்னர் அவர் பேசலாமா என்று கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்ட போது, தொழிலாளர்கள் "வேண்டாம்!” என்று கத்தியதுடன், இறுதியில் அவர் பேச்சை நிறுத்தியதும் பாரிய கரவொலி அங்கு வெடித்தது.

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இந்த புரட்சிகரமான போராட்ட உத்வேகத்தைத் தான், தொழிலாளர்கள் அவர்களின் வேலைநிறுத்தத்தை வெற்றிக்குள் திருப்புவதற்கான ஆதார பலம்.

தொழிலாளர்கள் நிறுவன-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து உடைத்துக் கொண்டு, நகரந்தழுவிய ஒரு வேலைநிறுத்த குழுவை உருவாக்க ஒவ்வொரு ஆலையிலும் அவர்களின் சொந்த தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அவர்கள் வன்முறையிலிருந்து வேலைநிறுத்தக்காரர்களைப் பாதுகாக்க சுய-பாதுகாப்பு குழுக்களை ஸ்தாபித்து வருவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

“முதலாளித்துவவாதி ப்ரீட்டொவின்" அரைகுறை உண்மைகள் மற்றும் இரட்டை பேச்சைக் கேட்பதற்கு பதிலாக, தொழிலாளர்கள் அவர்களது குழுக்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த போராட வேண்டும் என்பதோடு, நிலைமையை "கட்டுப்படுத்த" AMLO மற்றும் தொழிற்சங்கங்களை அனுமதிக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறுபவர்களை நம்பக் கூடாது.

மத்தாமோரொஸ் தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தற்போது பலமான இடத்தை அடைந்துள்ளனர். அவர்களின் சக்தி வாய்ந்த சுயாதீனமான முனைவானது மலிவுழைப்பு உற்பத்தியை மூடியுள்ளதுடன், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கன் ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு நெருக்கடியையும் தூண்டியுள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த வட அமெரிக்க வாகனத்துறை நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவன தொழிலாளர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறுகையில், “நான் பிளாட் ராக் உற்பத்தி ஆலையில் பணியாற்றுகிறேன், உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை காரணமாக இந்த வாரம் நாங்கள் வெளியேற்றப்படுகிறோம் என்பது உறுதியாகி உள்ளது, அதனை பார்க்கும்போது, அது நீண்ட நாட்களுக்கு நீடிக்குமென தெரிகிறது,” என்றார்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் இந்த வேலைநிறுத்தம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் வாசித்து வருவதுடன், அவர்களின் மத்தாமோரொன்ஸ் கூட்டாளிக்கு நிறைய ஆதரவு செய்திகளையும் அனுப்பி வருகின்றனர்:

ஓஹியோ டொலெடொ ஜீப் ஆலையில் பியட் கிறிஸ்லர் ஆலை தொழிலாளரான ரோபர்ட் கூறுகையில், “நியாயமான சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற வேலைநிறுத்தம் செய்து வருகின்ற கீழே தெற்கின் எங்களது சகோதரர்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். வாழ்வதற்குரிய கூலியைப் பெறுவதற்காகவும் மற்றும் சாகும் வரையில் ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்காமல் குடும்பத்தை மேம்படுத்துவதற்காகவும் மதிப்புடைய போராட்டத்தை நடத்துவது மனித உரிமையாகும். உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் அனுபவிப்பதற்காக எல்லா நாட்டு தொழிலாளர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, எந்தவொரு தொழிலாளரும் வாரம் முழுக்க உழைத்தும் வறுமை வாழ்வில் வாழ விடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வாழ்வதற்குரிய கூலிகளுக்காக போராடுவது மதிப்புடையது தான்.”

ஆலைகளை மூடுவதற்கான ஜிஎம் நிறுவன திட்டங்களுக்கு எதிராக டெட்ராய்ட் வாகனத்துறை தொழிலாளர்கள் 851619/auto"நடத்தவிருக்கும் பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் ரோபர்ட் அழைப்புவிடுத்தார். இந்த ஆர்ப்பாட்டம் மெக்சிகன் வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கும் என்பதோடு, ஒரு பொதுவான போராட்டத்திற்காக தேசிய எல்லைகளைக் கடந்து தொடர்புகளைக் கட்டமைக்கும்: “வாகனத் தொழில்துறையின் ஒவ்வொரு அங்கத்தவரும் எழுந்து நிற்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன், அவர்களின் பேராசை இந்த உலகில் ஒரு நிமிடம் கூட நிலைக்காது என்பதை ஜிஎம் க்கு தெரியப்படுத்துவோம்,” என்றார்.

ஃபோர்ட் இன் டெட்ராய்டின் புறநகர் பகுதியிலிருக்கும் வூஹேவன் ஸ்டாம்பிங் ஆலையில் திறன்சார் வர்த்தக தொழிலாளரான டொம்மி கூறுகையில், “எல்லையின் தெற்கில் தொழிலாளர்கள் வட அமெரிக்க தொழிலாளர்களைப் போலவே அதே வர்க்க போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. உலகெங்கிலும் அனைத்து தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களின் உடந்தைத்தனத்திற்கும் பெருநிறுவன இலாபங்களுக்கும் வளைந்து கொடுக்காமல் இருப்பது தான் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி. நாம் மெக்சிக்கன் வெளிநடப்புகளுடன் இணைந்து நிற்க வேண்டும்.”

டொம்மி இதையும் சேர்த்துக் கொண்டார், “ஜிஎம் அலைமூடல்களை எதிர்த்து போராட அனைத்து தொழிலாளர்களும் பெப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.”

இண்டியானாவின் கொகொமொவில் இருந்து பியட் கிறிஸ்லர் நிறுவன தொழிலாளரும், சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான வழிகாட்டும் கூட்டுக் குழுவின் ஓர் உறுப்பினருமான ஆஞ்செலா கூறினார், “உலகெங்கிலுமான அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொன்றும் நாம் பொதுவாக கொண்டிருக்கிறோம். நாம் ஒருவருக்கு ஒருவர் தேவைப்படுகிறோம் என்பதால், ஒருங்கிணைந்தால் நம்மை தடுக்க முடியாது என்பதால் நல்லிணக்கத்துடன் உங்களுடன் நான் நிற்கிறேன்.”

ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் ஒரு மூலோபாய அவசியமாகும். ஒரு பொதுவான சர்வதேச மூலோபாயத்தை உருவாக்க விரும்பும் தொழிலாளர்கள், இத்தகைய முக்கிய படிகளை முன்னெடுக்க எங்களை autoworkers@HYPERLINK "mailto:autoworkers@wsws.org"wsws.org என்ற மின்னஞ்சலிலோ அல்லது எங்களின் பேஸ்புக் பக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம். டெட்ராய்டில் பெப்ரவரி 9 பேரணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு, wsws.org/aut பக்கத்தைப் பார்வையிடவும்.