ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China’s moon landing to exacerbate tensions with US

சந்திரனில் சீனாவின் தரையிறங்கல் அமெரிக்கா உடனான பதட்டங்களை அதிகரிக்கும்

By Peter Symonds
7 January 2019

சந்திரனுக்கு வெளிப்பக்கத்தில் கண்பார்வைக்கு எட்டாத தொலைவில் ஒரு விஞ்ஞான ஆய்விற்கான சீனாவின் தரையிறங்கல், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில், வர்த்தகம் உட்பட பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் ஆசியாவில் சீனாவிற்கு எதிரான ஒரு பாரிய அமெரிக்க இராணுவ கட்டமைப்பு போன்றவை குறித்து அவ்விரு நாடுகளுக்கு இடையிலான அதிகரித்தளவிலான பதட்டங்களுக்கு மத்தியில் உருவாகியுள்ள ஒரு புதிய சர்வதேச விண்வெளி போட்டியைக் குறித்து ஊடக ஊகங்கள் வெடிப்புறுகின்றன.

1957 மற்றும் 1961 இல், சோவியத் ஒன்றியம், ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவி ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை அடைந்தபோது வாஷிங்டன் அதிர்ச்சியுடன் எதிர்வினையாற்றியது. யூரி காகரின் (Yuri Gagarin) தனது வொஸ்டாக் விண்கலத்தில் ஒரு முழு சுற்றுப் பாதையை பூர்த்தி செய்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார். அமெரிக்கா, அதனை நாட்டின் தன்மானத்திற்கான இழுக்கு என்பதாக மட்டும் உணராமல், முக்கிய இராணுவ பயன்பாடுகளுக்கானது எனக் கருதி நாசா (NASA) விண்வெளித் திட்டத்தில் பில்லியன்களைப் பாய்ச்சியது. அதன் விளைவாக, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) மற்றும் பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) ஆகியோரை சந்திரனுக்கு அனுப்பி, சந்திரனில் மனிதனை கால்பதிக்கச் செய்த முதல் நாடானது.

சீனா முதன்முதலாக விண்வெளியில் தனக்கென ஒரு சொந்த இடத்தை இப்போது எட்டியுள்ளது. சந்திரனில் முன்னரே ஆய்வுக் கருவிகள் தரையிறக்கப்பட்டுள்ளன என்றாலும், சீனாவின் Chang’e-4 விண்கலம் தான் சந்திரனின் பக்கத்தில் —சந்திரனின் மறு பக்கம் என்றழைக்கப்படுவதில்— அதாவது பூமியில் இருந்து கண்பார்வைக்கு எட்டாத தொலைவில் மெதுவாய்த் தரை இறங்கிய முதலாவது விண்கலமாக இருந்தது. சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தின் (China National Space Administration) கருத்துப்படி, அந்த ஆய்வுக் கருவி 10.26 a.m. இற்கு தரையிறங்கியது. அது, அங்குமிங்கும் வட்டமிட்டு ஒரு பொருத்தமான இடத்தில் தளம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், பெய்ஜிங்கின் நேரம் கணிக்கப்படும். சந்திரனில் இருந்து 80,000 கிலோமீட்டர் தொலைவில் அதற்கு முன்னரே நிறுவப்பட்ட ஒளிபரப்பு செயற்கைக்கோள் மூலமாக புகைப்படம் ஒன்று —அதாவது சந்திரனின் மறுபக்கத்தின் நெருக்கமான முதல் புகைப்படம்— எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


சந்திரனின்
மறுபக்கத்தின் நெருக்கமான முதல் புகைப்படத்தை எடுத்ததற்கான புகழ்: சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தையே சாரும்

ஏற்புப்பணியின் இந்த வெற்றியானது “சந்திரன் குறித்த மனிதனின் ஆய்வில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துவிட்டுள்ளது” என்று சீன விண்வெளி நிறுவனம் அறிவித்தது. Chang’e-4 மற்றும் அதன் சந்திரனைச் சுற்றும் கருவியும், கேமரா, தரையை ஊடுருவிச் செல்லும் ரேடார் மற்றும் சந்திரனின் புவியியலை புரிந்துகொள்ள உதவும் செய்திகளை வழங்கும் நிறமாலை மானி (ஸ்பெக்ட்ரோமீட்டர்) ஆகியவை உட்பட ஆய்விற்கான கருவிகளை கொண்டுள்ளன. மேலும் இந்த தரையிறங்கிய விண்கலம், சந்திரனின் குறைந்த புவியீர்ப்பில் விதைகள் தளிர் விடுமா மற்றும் பட்டுப்புழு முட்டைகள் பொரிக்கப்படுமா என்பதை ஆராயும் உயிரியல் சோதனைக் கருவிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“விண்வெளி போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது — மேலும் சீனா அதில் முன்னணியில் உள்ளது,” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கார்டியன் பத்திரிகையாளரான மேரி தெஜெவ்ஸ்கி (Mary Dejevsky) பின்வருமாறு குறிப்பிட்டார்: “அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இது குறித்த முதல் பதிலிறுப்பு என்பது, விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானிகள் அளிப்பதாக, பெருந்தன்மை வாய்ந்ததாக இருந்தது: ‘மனிதகுலத்திற்கு முதன்மையானதையும், ஒரு அற்புதமான சாதனையையும்’ சீனா நிகழ்த்தியுள்ளது. இருப்பினும், வாஷிங்டனிலும், அதேபோல மாஸ்கோவிலும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பிரிவுகளில் நடுக்கம் நிறைந்த பிரதிபலிப்பிற்கே வாய்ப்புள்ளது.”

2003 இல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்ததாக சீனாதான் தனது சொந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக விண்வெளி வீரர்களை அனுப்பும் மூன்றாவது நாடாக உருவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இதுவரை, 11 விண்வெளி வீரர்களை அது விண்வெளிக்கு அனுப்பியுள்ளது, மேலும் 2016 இல், அவர்களில் இருவர் சீனாவின் சொந்த விண்வெளி நிலையத்தில் 30 நாட்களை செலவழித்தனர். கடந்த ஆண்டு, அமெரிக்கா விண்வெளிக்கு 30 ராக்கெட்டுக்களை அனுப்பியது உட்பட, எந்தவொரு ஏனைய நாட்டையும் விட கூடுதலாக, சீனா 36 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவின் விண்வெளி நிறுவனம் பெரும் இலக்கு கொண்ட திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு பிற்பகுதியில், Chang’s-5 எனும் இன்னுமொரு சந்திரனில் இறங்கும் திட்டத்தையும் அது வகுத்துள்ளது. இவ்வாறாக, 2022 க்குள், சீனா தனது மூன்றாவது விண்வெளி நிலையத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு வைத்துள்ளது. 2025 இல் சந்திரனில் ஒரு கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கவும், மேலும் 2030 க்குள் மனிதர்களை அங்கு கொண்டு சேர்க்கவும் அது திட்டமிடுகிறது. அத்துடன், செவ்வாய்க்கு ஆய்வுக் கருவிகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. சீன தேசிய விண்வெளி நிர்வாகத்திற்கான வரவு-செலவுத் திட்டம் இதுவரை நாசாவை விட கணிசமானளவு குறைவானதாகவே உள்ளது என்றாலும், ஏனைய நாடுகளை விட அது அதிகமானதாகும்.

சீனாவின் விண்வெளித் திட்டம் ஏற்கனவே வாஷிங்டனில் கணிசமான பதட்டத்தை தூண்டியுள்ளது. இலாபகரமான வர்த்தக வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள போதிலும், எந்தவொரு விண்வெளித் திட்டத்திலும் இயல்பாகவே அமையப்பெற்ற இராணுவ பயன்பாடுகள் மூலம் சீனா அமெரிக்காவை மங்கச் செய்துவிடக் கூடுமோ என்ற எல்லாவற்றுக்கும் மேலான கவலை அங்கு நிலவுகிறது. பெரிய பல கட்ட ராக்கெட்டுகள், துல்லியமான வழிகாட்டு அமைப்புகள் மற்றும் நிலையான தகவல் தொடர்புகள் என்பவை சாத்தியமான இராணுவ சுழற்சிகளைக் கொண்டிருக்கும் மிக வெளிப்படையான அபிவிருத்திகளாக உள்ளன.

செயற்கைக்கோள்களை சுட்டுத்தள்ளும் சீனாவின் திறமையை அமெரிக்க பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது, 2007 இல், சீனா தனது சொந்த செயற்கைக்கோள் ஒன்றை அழித்ததன் மூலமாக அது நிரூபணமாகியது. சீனா, அமெரிக்க ரஷ்ய செயல்பாட்டில் இருந்து சுயாதீனமான, ஆனால் ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட ஒத்ததாக, தெளிவான இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, பெய்டோ (BeiDou) என்ற பூகோள அளவிலான கடற்பயண அமைப்பையும் அபிவிருத்தி செய்து வருகிறது. பெய்டோவானது, சீன இராணுவத்திற்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உயர் துல்லியமான செயல்வகையைக் கொண்டுள்ளது என்பதுடன், 2020 க்குள் பூகோள அளவில் அது முழுமையான செயல்பாட்டுக்கு வரும்.

இருந்தாலும் வாஷிங்டன், விண்வெளியில் இராணுவ போட்டிக்கான பிரதான இயக்கியாக உள்ளது. செப்டம்பர் 2016 இல், “விண்வெளிப் போட்டியில் நாம் சீனாவிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோமா?” என்ற தலைப்பிட்ட ஒரு விசாரணையை காங்கிரஸ் துணைக் குழு நடத்தியது. அது, விண்வெளிப் போட்டியை வெல்வதற்கு தேவையான வழிவகைகளை ஒபாமா நிர்வாகம் முழுமையாக வழங்கவில்லை என விமர்சித்தது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கான மனிதர்களின் பயணங்கள் பற்றிய திட்டங்களை முக்கியத்துவப்படுத்தும், ஒரு புதிய விண்வெளிக் கொள்கை உத்தரவில் டிசம்பர் 2017 இல் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார். 2023 க்குள் சந்திரனை நோக்கித் திரும்ப அமெரிக்கா நோக்கம் கொண்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க விண்வெளி முயற்சி வெளிப்படையாகவே இராணுவத் திட்டங்களுடன் தொடர்புபட்டுள்ளது. சென்ற ஆண்டில், அமெரிக்க ஆயுதப் படைகளின் ஒரு புதிய கிளை 2020 க்குள் ஸ்தாபிப்பது பற்றி ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு இந்த விண்வெளி படை உருவாக்கம் தொடர்பானதுதான் என அறியப்பட வேண்டும், இதுவும், ஆயுதப்படை, கடற்படை, விமானப்படை, கடல் சார்ந்த மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை போன்ற ஏனைய கிளைகளைப் போலவே சுயாதீனமாக செயல்படும். மேலும், இது காங்கிரஸின் அங்கீகாரத்தைப் பெறும் என்பது குறித்த ஒரு தெளிவான அறிகுறியாகவே, இந்த ஆண்டில் அதன் ஸ்தாபிதத்திற்கென 12 பில்லியன் டாலர் வரையிலான தொகை ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிக்கையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், விண்வெளி படை என்பது “விண்வெளி களத்தில் தனித்துவம் வாய்ந்த போர் வீரர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவாக” இருக்கும் என்று தெரிவித்தார். ஏற்கனவே ஒரு பெரியளவிலான விண்வெளி ஆணையகம் அமெரிக்க விமானப் படைக்குள் நிறுவப்பட்டுள்ளது. 1982 இல் நிறுவப்பட்டு, கொலராடோவில் பீட்டர்சன் விமானப்படைத் தளத்தில் தலைமையிடத்தை அது கொண்டுள்ளதோடு, 30,000 பணியாளர்களை மேற்பார்வையிடுகிறது. இது, விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தை உள்ளடக்கி, பாலிஸ்டிக் ஏவுகணை நிறுவல்களை கண்காணிப்பதுடன், பாதுகாப்புத் துறையின் செயற்கைக்கோள்களையும் நிர்வகிக்கின்றன.

ஒரு உறுதியான அறிவிப்பில், பென்ஸ், “விண்வெளியில் அமெரிக்க மேலாதிக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டும், ஆகவே நாம் சாதிக்க முடியும்” என்று வலியுறுத்தினார். மனிதர் விண்வெளி விமானத்தில் பயணம் செய்யும் ரஷ்ய விண்கல நிறுவுதலை அமெரிக்காவின் விண்வெளி விண்கலத் திட்டம் சார்ந்திருந்த நிலையில், அதை ஈடுசெய்ய அது திட்டமிட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கொண்டிருந்த ஒத்துழைப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில் —2025 ம் ஆண்டிற்குள் நிதி வழங்கலை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் என்ற நிலையிலும்— கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் சீனாவின் விண்வெளி மையம் ஒன்று மட்டுமே இயக்கத்தில் இருக்க முடியும்.

அதே நேரத்தில், சீன விண்வெளித் திட்டம், அதன் அதிகமான பெரும் இலட்சியத் திட்டங்களுக்கு தேவைப்பட்ட ஒரு புதிய கனரக தூக்கி ராக்கெட்டான, அதன் Long March 5 விண்கலத்தை விண்ணில் பாய்ச்சுவதில் 2017 இல் தோல்வி கண்ட நிலையில், ஒரு பெரும் பின்னடைவை அது சந்தித்தது.

நேற்று, Financial Times பத்திரிகையில், “விண்வெளியில், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல,” என்ற தலைப்பிலான ஒரு கவலைப்படும் தலையங்கம், “அனைத்து விண்வெளி சக்திகளுக்கு இடையிலான பெரும் ஒத்துழைப்பு என்பது, ஆரம்பகட்ட அமெரிக்க-சோவியத் விண்வெளிப் போட்டியை குணாம்சப்படுத்திய இரகசிய போட்டியைப் போல மிகவும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும்” என ஆலோசனை வழங்குகிறது. விண்வெளிப் படைக்கான ட்ரம்பின் திட்டங்களை குறிப்பிடும் அதேவேளையில், சீனா, “விண்வெளி இராணுவமயமாக்கப்படுவதை பற்றிய நியாயமான கவலைகளை” தணிக்கும் வகையில் “பூகோள அளவிலான ஒத்துழைப்புக்கு அதன் அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்” என்று செய்தித்தாள் அதற்கான பொறுப்பையும் முன்வைக்கிறது.

உண்மையில், அமெரிக்க தலைமையிலான விண்வெளித் திட்டங்களில் இருந்து சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா தான் முனைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எந்தவொரு சீன விண்வெளி வீரரும் அனுப்பப்படவில்லை. 2011 இல், அமெரிக்க சட்டம், நாசாவுடன் சம்பந்தப்பட்ட சீனாவுடனான விஞ்ஞானப் பரிமாற்றங்களை குறிப்பாக ஒதுக்கிவைக்கிறது. அதன் ஆதரவாளரான, குடியரசுக் கட்சிக்காரர் ஃபிராங்க் வொல்ஃப், சீனாவை சாடுவதாக பின்வருமாறு அறிவித்தார்: “எங்களது தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பவில்லை, மேலும் அவர்கள் உடனான வர்த்தக உறவுகளினால் நாங்கள் எந்தவித இலாபத்தையும் ஈட்டவில்லை.”

வொல்ஃபின் கருத்துக்கள், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகப் போர் தற்போது ஆழமடைந்து வருவதை அடிப்படையாகக் கொண்டுள்ளன, அதில் சீனர்களின் அறிவுசார் சொத்து திருட்டு பற்றியும், மேலும் விவாதத்தின் முதுகெலும்பாகவுள்ள, “சீனத் தயாரிப்பு 2025,” என்பதன் பகுதியாக தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அதன் உந்துதல் பற்றியும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. விண்வெளித் திட்டங்களில் சீனாவுடன் ஒத்துழைப்பதற்கு மாறாக, உக்கிரமடைந்து வரும் ஆயுதப் போட்டியுடனேயே அமெரிக்க விண்வெளித் திட்டம் நெருக்கமாக பிணைந்துள்ளது. சீனாவுடன் போரிடுவதற்கே தீவிரமாக அமெரிக்கா தயாராகி வருகின்ற இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான முந்தைய போட்டியைக் காட்டிலும், தற்போதைய இந்த அறிவிக்கப்படாத “விண்வெளிப் போட்டி” இன்னும் அச்சுறுத்துவதாகவே உள்ளது.