ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After US withdrawal from INF nuclear treaty with Russia
France conducts dry-run simulation of nuclear weapon strike

ரஷ்யாவுடன் மத்தியதூர அணு ஆயுத ஒப்பந்தத்தை (INF) அமெரிக்கா திரும்பப் பெற்ற பின்னர்

பிரான்ஸ் அணுவாயுத தாக்குதல் பாவனை ஒத்திகையை நடத்துகிறது

By Will Morrow 
8 February 2019

திங்கள் பிற்பகல், ரஷ்யாவுடனான மத்தியதூர அணு ஆயுத ஒப்பந்த (INF) உடன்படிக்கைக்கு இணங்குவதை இடைநிறுத்துவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த மூன்று நாட்களுக்கு பின்னர், பிரெஞ்சு இராணுவம் ஒரு அணுவாயுத தாக்குதலுக்கான ஒரு பொது ஒத்திகையை நடத்தியது.

அடுத்த நாள் பாதுகாப்பு அமைச்சின் ஒரு சுருக்கமான, மூன்று பந்திகள் அறிக்கையில் ஒத்திகை பற்றி விபரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது 11 மணி நேரம் நீடித்தது.  இதில் ஒரு உண்மையான அணு ஆயுதத் வெடிப்பதைத் தவிர, "அணுசக்தி அச்சுறுத்தல் நடவடிக்கை" என்றால் என்ன என்று குறிப்பிடக்கூடியதற்கான "அனைத்து கட்டங்களும்" உள்ளடக்கப்பட்டிருந்தது.

பாரிஸில் சுமார் 200 கிலோமீட்டர் கிழக்கில் Saint-Dizier 113 விமானத் தளத்திலிருந்து அணு ஆயுத திறன் கொண்ட ஒரு ரபேல் விமானம் புறப்பட்டது. அதிஉயரம் பறத்தல், நடுவானில் எரிபொருள் நிரப்புதல், மற்றும் குறைந்த உயரத்தில் அதிவேகமாக பறத்தல், தென்மேற்கு பிரான்சில் பிஸ்கரோஸ்ஸில் உள்ள பரிசோதனை தூரத்திலுள்ள ஒரு இலக்கை தனது ஏவுகணையால் சுடும் முன்னர் எதிர்ப்பு விமான பாதுகாப்பு முறைகளை தவிர்த்துக்கொள்ளும் முறைகள் பற்றி சோதனை முயற்சியை  நடத்தியது.

அமெரிக்க-ரஷ்ய அணுசக்தி உடன்படிக்கையின் உடைவிற்கும் இப்பயிற்சிக்குமான  தொடர்பை குறைத்துக்காட்டிய தனது அறிக்கையில் பிரெஞ்சு அரசாங்கம், இத்தகைய நடவடிக்கைகள் "முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, தொடர்ந்து நடத்தி வருகின்றது" என்று கூறுகிறது. இது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த பயிற்சியை அறிவிப்பதற்கான முடிவு, பிரெஞ்சு அரசாங்கம் அணு ஆயுதப் போரில் ஈடுபடுவதற்கு தயாராகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞை ஆகும்.

இந்த யுத்த தயாரிப்புக்கள், இராணுவத்திலும் அரச எந்திரத்திலும் மிக உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் உள்ளடங்கிய ஒரு சதி ஆகும், இது முற்றிலும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் இயக்கப்படுகின்றது.

மக்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய் கிழமை காலை மக்கள் எழும்பியபோது இராணுவம் ஒரு அணு ஆயுத தாக்குதல் பரிசோதனையை நடத்தியது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக வெளிப்படையான கேள்விகளில் எதுவும் அணுகப்படவில்லை: யாருக்கு எதிராக பிரஞ்சு இராணுவம் அணுவாயுதங்களை பயன்படுத்த போகிறது? எந்த நகரங்கள் அல்லது நாடுகளை அழிக்க திட்டமிட்டுள்ளன? எத்தனை மில்லியன்கள் அல்லது பத்தாயிரம் மில்லியன்கள் இதுபோன்ற ஒரு மோதலில் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது? இந்த கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை, ஏனென்றால் ஆளும் வர்க்கத்தி்ற்கு மக்கள் மத்தியில் போருக்கு பெரும் எதிர்ப்பு உள்ளது என்று தெரியும்.

பிரான்ஸ் ஏறக்குறைய 300 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது, இது உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி சக்தியாகவும், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் அடுத்ததாகவும் இருக்கிறது, இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 6500 மற்றும் 6800 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறன. ஜாக் சிராக்கின் கீழ் பசிபிக்கில் ஒரு அணுசக்தி சோதனை நடாத்திய போது மக்களின் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டமையால், 1996 இலிருந்து பிரெஞ்சு அரசாங்கம் ஒரு அணு ஆயுத சோதனையையும் செய்யவில்லை.

உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களின் மத்தியில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய தலைமையிலான ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் போருக்கு விரைவாக ஆயுதமயமாகின்றன. இந்த கட்டத்திற்கு, ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு நேட்டோவின் கீழ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. ஆனால் ஆளும் வர்க்கத்தின் மத்தியில் ஐரோப்பா தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்க அமெரிக்காவிற்கு எதிராகவும், அதிலிருந்து சுதந்திரமாகவும் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.

அணுசக்தி பயிற்சிக்குப் பின்னர், பிரெஞ்சு இராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லி போர்த்துகீசிய அரசாங்கத்திற்கும் லிஸ்பனில் இராணுவ உயர்தட்டினருக்கும் முன்பாக பேசுகையில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இருந்ததை போலல்லாது ஐரோப்பா போர்களில் போராட தன்னைப் ஆயுதமயப்படுத்த வேண்டும்  என்றார்.

"எங்கள் கண்டம் எழுபது ஆண்டுகளாக சமாதானமாக உள்ளது," என்று அவர் கூறினார். "ஆனால், முன்னரைப்போல் இந்த சமாதானம் ஏதோ இயல்பான ஒன்று என குறைத்து மதிப்பிடக்கூடாது. நாங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றோம்."

ரஷ்யாவை குற்றம்சாட்டிய பின்னர், அணு ஆயுத ஒப்பந்த (INF) உடன்படிக்கையை மாஸ்கோ மீறியதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுக்களை மீண்டும் மீண்டும் கூறி. "ஆசியாவின் தொலைவிலுள்ளதாக தெரியும் சவால்களையும் "சீனாவின் எழுச்சியையும்" நாம் மறந்துவிடக் கூடாது," இவை "விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கமைப்பை சவால் செய்கின்றன" என்றும் பார்லி கூறினார்.

"விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஒழுங்கமைப்பு", அமெரிக்காவினால் மேலாதிக்கம் செலுத்தப்படும் கூட்டணிகளின் அமைப்புமுறையை குறிக்கிறது. இதன் மூலம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தங்கள் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இது குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் குழப்பபட்டுள்ளது.

"நேட்டோ ஐரோப்பிய கண்டத்தின் கூட்டுப் பாதுகாப்பின் அடித்தளமாகவும் இருக்கும்போது ... இருக்கையிலும், நாம் இன்னும் கூடுதலாக செய்ய வேண்டும்" என்று பார்லி கூறினார். ஐரோப்பா "தனது சொந்த நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள, தன்னுடைய நலன்கள் ஆபத்தில் இருக்கும்போது செயல்பட தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு பங்கிடப்பட்ட மதிப்பீடும் ஒரு பொதுவான விருப்பத்தையும் கொண்ட அதற்கான திறன்களை நாங்கள் கொண்டுள்ளோம்.

இத்தகைய ஒரு "விருப்பம்" தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழமான போர் எதிர்ப்பு உணர்வுகளை மீறி வருவது என்பதை அர்த்தப்படுத்துகின்றது. அரசாங்கங்கள் "எங்களது குடிமக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை விளக்க வேண்டும்," என்று அவர் கூறினார், "ஒரு பாதுகாக்கப்பட்ட ஐரோப்பாவின்”   நன்மைகள் என்ன என்பதை நமது மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.

அமெரிக்கா உடனான "சிறந்த நட்பு நாடுகள்" என்ற கட்டமைப்பிற்குள், "ஐரோப்பாவிற்கான நம்மால் அதிகமாக செய்யவேண்டும் என்ற ஐரோப்பாவிற்கான தனது அழைப்பில் பார்லி கவனமாக இருந்தார், அவை இன்னும் சுதந்திரமான நிலைப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெளிவாக இயக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் "உண்மையான ஐரோப்பிய இராணுவத்தை" கட்டியெழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்தார். எனவே ஐரோப்பியர்கள், "சீனா, ரஷ்யாவிலிருந்து மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்தும் தங்களை பாதுகாக்க முடியும்" என அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டில் 3.9 பில்லியன் யூரோக்கள் அணு ஆயுத செலவினத்தை 2025 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 6 பில்லியன் யூரோக்களாகவும், அதன் அணுசக்தி ஆயுதங்களை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக அணு ஆயுத செலவு அதிகரிப்பு தொடர்பாக மக்ரோன் அறிவித்துள்ளார்.

அணுவாயுதப் போரை நடத்துவதற்கான பிரான்சின் தயாரிப்புகள், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அமெரிக்காவிலும் பார்க்க இன்னும் இரக்கமான, குறைந்த மிருகத்தனமானதும் குறைந்த ஆக்கிரோஷமானதுமான பதிலீட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற அனைத்து கூற்றுக்களின் மோசடியையும் நிரூபிக்கின்றன. போருக்கான தங்கள் சொந்த உந்துதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மிருகத்தனமான ஆக்ரோஷமான நடவடிக்கைகளோடு, பொலிஸ் அதிகாரங்களை கட்டமைத்தல் மற்றும் கண்டத்தில் உள்ள தீவிர வலதுசாரிகளி்ன் சக்திகளை உயர்த்தல், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றோடு கைகோர்த்து வருகிறது.

ஜேர்மனி அதன் இராணுவத்தை மீள புதுப்பித்து இராணுவச் செலவுகளை அதிகரிக்கிறது. கடந்த ஜூலையில், ஜேர்மன் தேசிய பத்திரிகையான Welt am Sonntag, ஜேர்மன் கொடியின் வண்ணங்களில் வரையப்பட்ட ஒரு அணு குண்டின் படத்தை "நமக்கு குண்டு தேவையா?" என்ற தலையங்கத்துடன் முகப்பு பக்கத்தில் (ஆம் என்ற பதிலுடன்) வெளியிட்டது:

இந்த யுத்த ஆயத்தங்கள் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கடந்த கால குற்றங்களை மறுபுனருத்தானம் செய்வதற்கான ஒரு திட்டமிட்ட கருத்தியல் பிரச்சாரத்தோடு சேர்ந்து கொண்டுள்ளன.

ஜேர்மனியில், நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி இப்பொழுது உத்தியோகபூர்வ அரசியலை தீர்மானிக்கின்றது. இது அரசு மற்றும் பாதுகாப்பு சக்திகளால் ஊக்குவிக்கப்பட்டது, மற்றும் அதன் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் அரசியல் ஸ்தாபகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன் வளர்ச்சி நாஜிக்களின் குற்றங்களை நியாயப்படுத்தவும், குறைத்துக்காட்டவும் சேவைபுரியும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி போன்ற தீவிர வலதுசாரி கல்வியாளர்களால் வசதிசெய்து கொடுக்கப்படுகின்றது.

பிரான்சில், மக்ரோன் சமீபத்தில் நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்த பாசிச விச்சி ஆட்சியின் தலைவரான மார்ஷல் பிலிப் பெத்தானை ஒரு "பெரும் வீரர்" என்று புகழ்ந்தார்.