ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The CGT’s “national strike”: French unions seek to strangle the “yellow vest” protests

CGT இன் "தேசிய வேலைநிறுத்தம்": பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்களை நெரிக்கின்றன

By our reporters 
9 February 2019

பெப்ரவரி 5 அன்று, CGT தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒரு "தேசிய 24 மணி நேர வேலைநிறுத்த"த்திற்கும் "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களுடன் கூட்டு நடவடிக்கை தினத்திற்கும் அழைப்பு விடுத்தது. நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

நடவடிக்கை தினம் ஒரு முரண்பாடான தன்மையை கொண்டிருந்தது. ஒருபுறம், தொழிற்சங்கங்கள், மக்ரோன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட முனையவில்லை. பணியிடங்களில் எங்கு அவர்கள் பிரசன்னத்தை கொண்டிருந்தார்களோ அங்கு வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இது தொழிற்சங்க எந்திரத்திற்கு, அதன்மீது குரோதம் காட்டும் "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களின் இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அதன் பணியாளர்களையும் அதிகாரத்துவத்தையும் ஒன்று திரட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது.

ஆயிரக்கணக்கில் மக்கள் பல நகரங்களில் அணி திரண்டனர்: Lille (2,300 பொலிஸ் தகவல்களின் படி), Rouen (3,200), Le Havre (2,200), Caen (2,300), Nantes (2,400), Angers (1,500), Clermont-Ferrand (2,300), Strasbourg (1,500), Lyon (4,300), Avignon (2,000), Marseille (5,200), மற்றும் பாரிஸ் (18,000). பிரான்ஸ் முழுவதும் வீதி சந்திப்புக்களிலும் மற்றும் சாலை தடைகள் போடப்பட்ட இடங்களிலும் நடைபெற்ற "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் இணைந்துகொண்டனர்.

பாரிசில், CGT தலைவர் பிலிப் மார்டினேஸ், அதேபோல் அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (LFI) ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் அலெக்சி கோர்பியேர் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர். தொழிற்சங்க அமைப்புகளும் அவர்களது அரசியல் அரசியல் கூட்டாளிகளும் "மஞ்சள் சீருடை" போராட்டம் ஆரம்பித்தபோது அதை வலதுசாரி மற்றும் நவ பாசிசவாதிகள் என கண்டனம் செய்ததை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று நம்பினர். கோர்பியேர், "தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு தெரிவிக்க மஞ்சள் சீருடையாளர்களுடன் அங்கு நிற்பது தர்க்க ரீதியானது: இந்த கொள்கைகளை நிறுத்துங்கள்" என அறிவித்தார்.

"மஞ்சள் சீருடையாளர்கள்" மீதான அவரது ஆரம்ப கண்டனத்திற்கான சாக்குப்போக்குகளை மீண்டும் உறுதிப்படுத்துகையில், மார்டினேஸ் அவர்களை மேலும் நுணுக்கமான சொற்பதங்களில் வெளிப்படுத்தினார்: "இனவெறி, பாலியல் அல்லது ஓரினச்சேர்க்கை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களுடன் நாங்கள் கலக்கமாட்டோம், ஆனால் அது ஒரு சிறுபான்மை. ஒருவரையொருவர் அங்கீகரிக்க கற்றுக்கொண்டோம்."

தங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே எழுந்த எதிர்ப்பை முகங்கொடுத்த ஆரம்ப பீதிகளிலிருந்து மீண்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்பொழுது இயக்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். ஆனால் தொழிற்சங்கங்கள் மக்ரோன் உடன் சேர்ந்து சிக்கன நடவடிக்கைகள் மீது தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன, மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை அறிமுகம் செய்கிறார். அவர்களின் நோக்கம் "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது ஒரு பிற்போக்குத்தன திட்டத்தை சுமத்துவதாக மட்டுமே இருக்க முடியும். தீர்க்கமான கேள்வி, தொழிற்சங்கங்கள் மற்றும் LFI போன்ற அரசியல் சக்திகளிலிருந்து சுயாதீனமாக பிரான்சிலும், சர்வதேச அளவிலும், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணிதிரட்டுவதாகும்.

உண்மையில், பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கும் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளுக்கும் இடையே ஒரு வர்க்கப் பிளவு உள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பொலிஸ் "மஞ்சள் சீருடையாளர்களை" தாக்கிய பாரிஸில், உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டக்காரர்களை பேட்டி கண்டது.

சபீன்

சபீன் (Sabine), உதவி தேவைப்படுபவர்களுக்கான ஒரு பராமரிப்பு பணியாளர், அவர் கூறினார் "அதிக வரி மற்றும் போதுமான ஊதியம் இல்லை. வழக்கம்போல, நிலைமை இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் முன்னேற்றமில்லை, ஆனால் இன்னும் மோசமாகிவிட்டது." என்பதால் அவர் எதிர்ப்பு தெரிவிக்க வந்திருப்பதாக தெரிவித்தார். மக்ரோன் நடாத்தும் "மகத்தான தேசிய விவாதத்தை" "நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புகை மேகம்" என அவர் முத்திரையிட்டார்.

அவருடைய வேலையில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர் பேசினார்: "எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் ஒரு முதலாளியை நாங்கள் கொண்டிருக்கிறோம், வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணம் இருப்பதில்லை. நான் ஒரு மாதத்திற்கு 1250 யூரோக்களுக்கு வேலை செய்கிறேன், நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறேன். வேலைக்காக வெளியே வீடுகளுக்கு செல்லும் எனது சக ஊழியர்கள் குறைந்த ஊதியம் 1200 யூரோக்களுக்கு வேலை செய்கிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த கார்களை வைத்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு ஏற்ற பாதையில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை -எங்கள் ஒப்பந்தம் அதை தடைசெய்கிறது- அதனால் அவர்கள் நேரத்தையும் பணத்தையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர். 15 கிலோமீட்டருக்கு பயணம் செய்கிறார்கள், ஆனால் 12 க்கு மட்டுமே கட்டணம் செலுத்தப்படுகிறது.

சபீன் மேலும் கூறியதாவது: "அவர்கள் தங்களுடைய சொந்த வேலைகளை சோர்வாக  செய்கின்றனர், ஒரு நாளில் ஒன்றரை மணித்தியால பயண நேரத்தை கணக்கில் கொள்ளாது அவர்கள் 44 மணிநேர வேலையை கொண்டிருக்கிறார்கள். மிக மோசமான விஷயம் என்னவெனில்,” வேலை செய்யும் மொத்த நேரத்தின்  அடிப்படையில்  நாங்கள் ஆண்டின் இறுதியில் மேலதிக நேர வேலைக்கான பணம் செலுத்துவோம்” என்று கூறுவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன், பணம் செலுத்தாமல் விடுவதற்காக அவர்களை விடுப்பில் அனுப்பி விடுகிறார்கள். அவர்கள் ஆண்டின் இறுதியில் பணம் செலுத்தும்போது, ஒரு வாரத்தில் அவர்கள் வேலை செய்த 42 மணிநேரத்தை விட்டுவிடுவார்கள் - அனைத்தும் மறக்கப்படும்."

தொழிற்சங்கங்கள் அவருக்கு உதவியதா என்று கேட்கப்பட்டதற்கு, சபின், "இல்லை" என்று பதிலளி்த்தார். தொழிற்சங்கங்கள் "மஞ்சள் சீருடையாளர்களுடன்" "ஒற்றுமையாக இல்லை", “வாய்ப்பை தவற விட்டு விட்டது” என்று கூறினார்.

"நாங்கள் பாசிஸ்டுகள் என்று அவர்கள் நம்பியிருக்கலாம்" என்று அவர் கூறினார். "ஆனால் அவர்கள் எங்களைப் பார்க்க வந்திருந்தால், எல்லோரும் இங்கே இருப்பதை எளிதாகக் காண முடியும்: போர்த்துகீசியர்கள், கறுப்பு தோலைக் கொண்டவர்கள், அரபு மக்கள். பாசிசவாதிகள் எங்கே? அதில் எந்த அர்த்தமும் இல்லை. என் தாயின் வழியில், நாங்கள் யூதர்கள். எனவே, நாம் யூத-விரோதிகளா? அது எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நாள் யாராவது ஒரு நபர் ஒரு யூத எதிர்ப்பாளராக என்னைக் குற்றஞ்சாட்டியிருந்தால், நான் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருப்பேன்."

சபின், மக்ரோன் கொள்கைகளை விமர்சித்ததுடன், குறைந்த வரி விதிக்கப்பட வேண்டும் என்று கோரினார். "பணம் இல்லை என்று எங்களுக்கு கூறப்படுகிறது. அது முட்டாள்தனமானது.” மக்ரோனின் இராணுவ சேவையைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "அது அவருடைய சகல தன்னலக்குழுக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொலிஸ் ஆகும்."

சிப்போமரியம் மற்றும் அந்தோனி

சமத்துவமின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிப்போமரியம் மற்றும் அந்தோனி ஆகியோருடன் கூட உலக சோசலிச வலைத் தளம் பேசியது. "நாங்கள் பணக்கார நாடுகளில் ஒன்றாகும், ஆனால் நாம் கூட அந்த மாதத்தை முடிக்க முடியாதுள்ளது" என அந்தோனி குறிப்பிட்டார். "அங்கே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஏழைகள் வரி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்கள் வரி விதிக்கமுடியும். உதாரணத்திற்கு ISF ஐ வெறுமனே மீண்டும் ஸ்தாபிக்க முடியும்".

தொழிற்சங்கங்கள் பற்றி பேசிய அவர் கூறினார்: "எங்களுக்கு, அவர்களும் மற்றவர்களைப் போன்ற குடிமக்களே, எனவே நாம் பெறும் அனைத்து உதவியையும் நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம்." ஆயினும், தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இரயில் தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு அழிப்பு “மஞ்சள் சீருடையாளர்களை" பற்றிய CGT தலைவர் மார்டினேஸின் விமர்சனங்களைப் போலவே "மோசமானதாக" இருந்தது. அந்த தொழிற்சங்கங்கள் "மஞ்சள் சீருடையாளர்களை" “பின்பற்றுகின்றன”, "நான் மரியாதையாக உள்ளேன்" என்று கூறினார்.

சமீபத்தில் பொது சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வன்சன்ட் உடன் உலக சோசலிச வலைத் தளம் பேசியது, "எங்களுக்கு மக்ரோன் போதுமென்று ஆகிவிட்டது. லு பென்னுக்கு (Le Pen) எதிராக நான் அவருக்கு வாக்களித்தேன், அதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால், தன்னை வேறுபட்ட ஒரு ஜனாதிபதியாக கூறிக்கொண்டவரிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு இன்னும் வியப்படைகிறேன். அவர்கள் எங்களைப் பயன்படுத்தினர், ஆனால் இப்போது எங்களுக்கு யோசனை கிடைத்துவிட்டது".

போராட்டத்தைப் பற்றி மக்ரோன் தொடங்குவதாகக் கூறும் "பெரும் தேசிய விவாதம்" பற்றி விமர்சித்த வன்சன்ட்: நாங்கள் எதைக் குறைக்க வேண்டும்? சுகாதாரம் அல்லது கல்வி? அது முட்டாள்தனம்; இது ஒன்றும், மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அல்ல. அவர்கள் நீக்க வேண்டாம் என்று கூறவில்லை, நீங்கள் வித்தியாசமாக விஷயங்களை ஒழுங்கமைத்து நிர்வகிக்க வேண்டும் மற்றும் பிற முன்னுரிமைகள் மூலம் தேர்வுகள் செய்ய வேண்டும். வேண்டும் ... இது பொதுச் சேவைகளை குறைப்பதற்கான ஒரு கேள்வி அல்ல; நாம் பொது சேவைகளை மேம்படுத்த வேண்டும்."

வெனிசுவேலாவில் ஒரு புதிய ஜனாதிபதியைத் திணிக்கும் முயற்சியில் மக்ரோன் குறுக்கீடு பற்றிய அவரது அவநம்பிக்கையும் சுட்டிக்காட்டினார்: "நான் ஒரு பெரிய ஜனநாயகவாதியாக மதுரோவை எடுத்துக்கொள்ளவில்லை” ... நாடு முதல் எண்ணெய் உற்பத்தியாளராக இருந்ததை கருதும்போது, நாட்டின் சூழ்நிலையானது முற்றிலும் வியக்கத்தக்கதாக தோன்றுகிறது. அதனால் அவர்களிடம் பணம் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் கூறப்படுவது, சட்டமன்றத்தின் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுவதற்கான ஒரு உண்மையான குறுக்கீடு, அவர் எதிராக போட்டியிடும் நபரை விட சட்டபூர்வமானவர் இல்லை."

இறுதியாக, வன்சன்ட் "செல்வத்துக்கான வரியை மீண்டும் நிறுவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பணம் உள்ளது. நிறைய மக்கள் பணத்துடன் உள்ளனர். அதிக இலாபம் சம்பாதிக்கும் முதல் 40 இடங்களுக்குள் உள்ள நிறுவனங்கள் உள்ளன. எனவே, பணம் எதுவும் இல்லை என்று யாரும் சொல்லப்போவதில்லை. அங்கு உள்ளது; நாம் போய் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்."