ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian government seizes on Kashmir attack to ratchet up tensions with Pakistan

இந்திய அரசாங்கம் காஷ்மீர் தாக்குதலை பயன்படுத்தி பாகிஸ்தான் மீதான போர் பதட்டங்களை தூண்டிவிடுகிறது

By Deepal Jayasekera
16 February 2019

இந்திய அரசாங்கமானது கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் 40 இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இறக்க காரணமாக இருந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு கண்டனத்தையும் இரத்தம் கொதிக்கும் விதமான மிரட்டலையும் விடுத்தது மட்டுமல்லாது பாகிஸ்தான் மீதான இராணுவ தாக்குதலுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது.

இந்தியாவின் பிரதமரும், இந்து மேலாதிக்கவாத பிஜேபி இன் தலைவருமான நரேந்திர மோடி, பாகிஸ்தான் தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு என்ற வகையில் நேற்றுப் பேசினார். “தீவிரவாத இயக்கங்கள் மற்றும் அதற்கு நிதியுதவி கொடுத்து ஆதரிப்பவர்கள் இதற்கு கடுமையான விலை கொடுக்கும்படி” இந்தியா செய்யும் என்று மோடி பேசினார்.

மோடி மேலும், “இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், அதை பின் இருந்து தூண்டுபவர்கள், ஆகியோர் தண்டிக்கபடுவர்.” மேலும் இந்தியாவின் பாதுகாப்பு படைகளுக்கு இந்த அரசாங்கம் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செப்டம்பர் 16 அன்று ஜம்மு காஷ்மீர் இந்திய இராணுவத் தளத்தில் நடந்த ஒரு தீவிரவாத தாக்குதலுக்கு பதிலிறுப்பாக நடத்தப்பட்ட எல்லை தாண்டிய பாகிஸ்தான் மீதான அதிரடித் தாக்குதலுக்கு அவர் கட்டளை இட்டது குறித்து மோடி மீண்டும் மீண்டும் பெருமை பேசினார், அது இந்தியாவை “மூலோபாய கட்டுப்பாட்டில்” இருந்து விடுவித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இரத்தம் கொதிக்கிறது, நமது பக்கத்து நாடு, சர்வதேச ரீதியாக தனிமைப்பட்ட நாடு, இது போன்ற தீவிரவாத செயல்கள் நம்மை நிலைகுலைய வைக்கும் என்ற ஒரு மாயையில் இருக்கிறது ஆனால் அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை” என்று போர் உணர்வுகளை தூண்டும் வகையில் நேற்று மோடி பேசினார்.

ஜம்மு காஷ்மிரில் உள்ள புல்வாமா மாநிலத்தில் ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த CRPF பேருந்தின் மீது, SUV நிரப்பபட்ட வெடிபொருட்களை தற்கொலைப் படையை சேர்ந்தவர் வீசியதில், வியாழக்கிழமை மதியம் 40 மத்திய காவல் படையை சேர்ந்த துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயம் அடைந்து இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஒரு பெரிய நகரமான ஸ்ரீநகருக்கு, தங்கள் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் 2500 க்கும் அதிகமான இராணுவத்தினரை கொண்ட 78 வாகனங்களில் ஒன்றுதான் இந்த பேருந்து.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் உள்ள ஓட்டைகளே இந்த அதாவது கடந்த மூன்று தசாப்தங்களில் இந்திய பாதுகாப்பு படையின் மிகப்பெரிய இழப்புக்கு காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது (JeM), என்ற இஸ்லாமிய சார்பு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு இதற்கு பொறுப்பு ஏற்றதை வைத்து புது டெல்லி உடனடியாக பாகிஸ்தான் மீது பழியை போட்டது.

நேற்று, புது டெல்லி பாகிஸ்தானுக்கு கடுமையான வார்த்தைகளால் இராஜதந்திர மிரட்டலை விடுத்தது மட்டும் அல்லாது, தனது தூதரை இஸ்லாமாபாதில் இருந்து திருப்பி அழைத்தது மேலும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட தேசிய வர்த்தக அந்தஸ்தை இரத்து செய்வதாகவும் கூறியது. சமூக சீற்றத்தை திசை திருப்பும் விதமாக போர்வெறி ஊட்டும் தேசியவாதத்தை தூண்டிவிடவே, வியாழக்கிழமை அன்று நடந்த தாக்குதலை மோடி மற்றும் பிஜேபி மலையளவில் பயன்படுத்திகொள்ள எண்ணுகின்றன என்பதை அனைத்துமே சுட்டிக்காட்டுகின்றன, மற்றும் அதன் பிற்போக்கு இந்து வகுப்புவாத அடித்தளத்தை அணிதிரட்டவும் முயற்சிக்கின்றன. அனைத்து எதிர்ப்புகளும், எதிரியான பாகிஸ்தானை வீழ்த்த தேவைப்படும் “தேசிய ஒருமைப்பாட்டுக்கு” ஆபத்தானதாக முத்திரை குத்தப்படும்

சமீபத்தில் நடந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் உட்பட பத்து மில்லியன் மக்களுக்கு மேல் பங்கு பெற்ற தொழிலாளர், விவசாயிகளின் போராட்டங்களை கண்டு மோடி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது.

இதுவரை அதன் வலிமையான கோட்டையாக இருந்த மூன்று ஹிந்தி பேசும் மாநிலங்களில், கடந்த டிசம்பர் மாதம் பிஜேபி மிகப்பெரிய அளவில் தேர்தல் தோல்வியை சந்தித்தது. இது, எப்ரல், மே ஆகிய மாதங்களில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான தேர்தல்களில் பிஜேபி நீடித்து இருக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி அதற்கே எழுந்துள்ளது.

நேற்று, பாகிஸ்தான் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என பிஜேபி மற்றும் அதிதீவிர ஹிந்து அமைப்புகள், புது டெல்லி உட்பட பல நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எதிர் கட்சிகளின் பாத்திரம் தான், காஷ்மீர் சம்பவத்தை பயன்படுத்தி, பிஜேபி வகுப்புவாத பிரச்சாரத்திற்கும், பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கும் தயாராக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான புது தில்லியின் புவிசார் அரசியல் மூலோபாய நலன்களை, ஆளும் பிஜேபி உடன் எந்த விதமான தந்திரோபாய வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும், எதிர்கட்சிகள் இந்த விடயத்தில் அவர்களை ஆதரிக்கின்றனர்.

அரசாங்கம் மற்றும் இராணுவத்தை, தனது கட்சி மட்டும் அல்லாது அனைத்து எதிர் கட்சிகளும் முழுமையாக ஆதரிப்பதாக பிஜேபி தலைமையினான அரசாங்கத்துக்கு வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பேசுகையில் இது “இந்திய ஆன்மாவின் மீதான ஒரு தாக்குதல்” என்று கூறினார். அவர் மேலும் கூறினார், “நான் தெளிவு படுத்த விரும்புகிறேன், தீவிரவாத்ததின் இலக்கு இந்த நாட்டை துண்டாடுவதுதான், எவ்வளவு தான் கடுமையாக முயற்சித்தாலும் நாங்கள், ஒரு நிமிடம் கூட நாம் பிரிந்திருக்க போவதில்லை”

செப்டம்பர் 2016 அன்று “துல்லிய தாக்குதல்கள்” (“surgical strikes”) என்று அழைக்கப்படும் திடீர் தாக்குதலை நடத்தியதற்காக, காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிச CPM உட்பட இதர எதிர் கட்சிகளும் இந்திய இராணுவத்தை பாராட்டின. “துல்லிய தாக்குதல்கள்” ஐ பாராட்டும் விதமாக தென்னிந்திய மாநிலமான கேரளாவின் முதல் அமைச்சரும், CPM அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயன், மாநிலங்கள் அவையில் தீர்மானம் கொண்டுவந்தார்.

பாகிஸ்தானை ஆக்கிரமிக்க நினைப்பது, இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை உள்ள மாநிலமான காஷ்மீரில் வெகுஜன மக்கள் எதிர்ப்பை பிஜேபி கொடூரமாக நசுக்குவது போன்ற விடயங்களில் ஸ்ராலினிஸ்டுகள் மிதமான விமர்சனங்களை மட்டுமே வைக்கின்றனர்.

இன்னும் கடுமையான கூர்மையுடன், முந்தைய காங்கிரஸ் தலைமை அரசாங்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து மோடியின் பா.ஜ.க ஆட்சியும், பாகிஸ்தானின் நேசக்கரத்தை புறந்தள்ளியது, மேலும், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு பாகிஸ்தான் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதரவு தருவதை நிறுத்தும் வரை அதனுடன் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளை மறுத்து வந்துள்ளது.

CPM அரசியல் குழு உடனே, "CRPF வாகனத்தை தாக்கிய பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து" அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்திய இராணுவத்தை ஆதரித்து கூறியது, "பணியின் போது இறந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு CPM அரசியல் குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது."

வியாழனின் தற்கொலை தாக்குதல், அந்த குண்டுவெடிப்பு நடந்த தளத்திலிருந்து சிறிது தூரத்தில் வளர்ந்து வந்த 20 வயதான காஷ்மீரின் தொழிலாளியான அதில் அஹ்மத் டர் என்பவரால் நடத்தப்பட்டது. அவர்களின் பெற்றோரின் கூற்றுப்படி, டர் தீவிரமயமானது, அவர் பள்ளியில் இருந்து திரும்பி வருகையில் பொலிஸ் அவரை மற்றும் அவரது நண்பரை மூன்று வருடங்களுக்கு முன் கைது செய்து மற்றும் சித்ரவதை செய்ததுதான் காரணமாகும்.

பாகிஸ்தானின் எதிர்வினை இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு இதுவரை அடிபணிவதாய் மற்றும் புல்வாமா தற்கொலை தாக்குதலில் தனக்கு எந்த பங்கும் இருப்பதை மறுப்பதாய் உள்ளது. முந்தைய சமயங்களில், இஸ்லாமாபாத், இரத்தம்-சுண்டும் இராணுவ எதிர்த்தாக்குதல் பற்றி அச்சுறுத்தி மேலும் இந்தியா தாக்கினால், அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆயத்த நிலையை பற்றி பீற்றிக் கொள்ளும். அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்து இந்தியாவின் "பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்திற்கு" தங்கள் ஆதரவை எழுப்பியதை அடுத்து பாகிஸ்தான் ஆட்டம் கண்டுள்ளதாக தெரிகிறது.

நேற்று, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ தாக்குதலுக்கு வாஷிங்டனின் பச்சைக்கொடியை காட்டினார். போல்டன் ஊடங்களுக்குக் கூறியது, வியாழன் குண்டு வெடிப்பினை தொடர்ந்து தனது இந்திய சமதரப்பிடம் இரண்டு முறை பேசினேன் என்றும் "நான் இன்று அஜித் டோவளிடம் இந்தியாவின் தற்காப்புக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்றும் போல்டன் மேலும் வெள்ளை மாளிகையின் கோரிக்கையான பாகிஸ்தான் தனது பயங்கரவாத "பாதுகாப்பு-புகலிடங்களை" கலைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காஷ்மீர் மோதல் மற்றும் இந்திய-பாகிஸ்தான் எதிர்ப்புணர்வின் வேரானது, பிற்போக்குவாத 1947 வகுப்புவாத பிரிவினையின் மூலம் முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்து-பெரும்பான்மை இந்தியாவாக துணைக் கண்டத்தை பிரித்ததில்தான் உள்ளது, அது வெளியேறும் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கவாதிகள் மேலும் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸின் தலைமையிலான பகைமையான வகுப்புவாதத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவவாதிகளின் கூட்டு வேலையில் உள்ளது.

சுதந்திர இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடுகையில், ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலம் இந்திய அரசின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர காஷ்மீர் என்று பின்னாளில் பிரிக்கப்பட்டது. தங்களது பூகோள அரசியல் அபிலாஷைகளை தொடர்கையில், இந்திய மற்றும் பாகிஸ்தானின் ஆளும் தட்டினர் காஷ்மீரி மக்களின் உரிமைகள் மீது ஏறி மிதித்து தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

பல தசாப்தங்களாக, புது தில்லி ஜம்மு காஷ்மீரில் சரமாரியாக அரசாங்கங்களை கவிழ்த்தும், தேர்தல்களை திருடியும் உள்ளது. 1980 களின் பிற்பகுதியில் பொது ஜன அமைதியின்மையை முகம் கொடுக்கையில் கொடூரமான ஒடுக்குமுறையை கையாண்டது. தன் பங்கிற்கு, பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பினை பயன்படுத்தி, இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களை ஊக்குவித்து, எதிரி இந்தியாவை கீழ் தள்ள முயற்சிக்கின்றது.

மோடியின் அரசாங்கம் கடந்த வியாழனின் தாக்குதலுக்கு "பழி தீர்க்க" பாகிஸ்தானிடம் இரத்தக் காவு கேட்கும் இந்த வேளையில், தெற்காசியாவின் அணுஆயுத வல்லமை பெற்ற எதிரிகளின் இடையே உறவுகள் கட்டுப்பாடின்றி போகும் அபாயம் உள்ளது. செப்டம்பர் 2016 அன்று பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பேர் போன எதிர் தாக்குதலுக்கு பின் இரு நாடுகளும் பல மாதங்களுக்கு முழுமையான போருக்கு செல்ல துடித்து கொண்டிருக்கின்றன. இருபக்கமும் நாள் தவறாமல் குண்டு மழை பொழிந்தன, அவை டஜன் கணக்கான இராணுவ அதிகாரிகள் மற்றும் சாதாரண மக்களை கொன்றன.

இந்த நிலைமைகளின் வெடிப்புத் தன்மைக்கு எரியூட்டும் விதமாக சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதலில் அமெரிக்கா, இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. இதன் விளைவாக, இந்தியா-பாகிஸ்தான் மோதல், அமெரிக்கா-சீனா பதட்டங்களுடன் அதிகமாக பின்னிப் பிணைந்துள்ளது. இதில் புது தில்லி வாஷிங்டன் பக்கமும் இஸ்லாமாபாத் பக்கம் பெய்ஜிங்கும் கூட்டு சேர்ந்துள்ளன.