ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Seven Blairite MPs resign from UK Labour Party

ஏழு பிளேயர் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து தொழிற் கட்சியிலிருந்து இராஜினாமா செய்கின்றனர்

By Robert Stevens and Laura Tiernan 
19 February 2019

திங்களன்று, ஏழு வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள லண்டன் மாவட்ட மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தொழிற் கட்சியிலிருந்து இராஜினாமா செய்தனர்.

சுகா உமனா, லூசியானா பேர்கர், மைக் காபஸ், கிறிஸ் லெஸ்லி, ஆன் கோஃபி, ஏஞ்சலா ஸ்மித் மற்றும் கவின் ஷுக்கர் ஆகியோர் பாராளுமன்றத்தில் சுயேட்சை குழு (Independent Group - IG) என்று அழைக்கப்படும் சுயேட்சையான உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தனர். அவர்களுடைய வலைத் தளம் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த பிளவு, அரசியலில் ஒரு அடிப்படை மறுஅணிதிரளலை நோக்கி செல்கின்றது. இந்த மாற்றம் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிளேயர் (Blairite) சார்பான ஆளும் உயரடுக்கின் நீண்டகால பிரதிநிதிகளான அவர்களின் அரசியல் பிரகடனத்தில் ஏழு பேரும் பிரெக்ஸிட் தொடர்பாக கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பின் இன் "கடின இடது" கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பை அறிவித்து, கோர்பின் யூத-விரோத ஆதரவாளராக உள்ளார் என்ற இட்டுக்கட்டப்பட்ட கூற்றுக்களை மீண்டும் பயன்படுத்தினர்.

பேர்கர் இந்த யூத-விரோத வேட்டையாடலில் முக்கிய நபராக இருந்துள்ளார். அவர் கோர்பினை கண்டித்து சில மாதங்கள் கழித்து, கோர்பினின் கீழ் கட்சி "அமைப்புரீதியாக யூத எதிர்ப்பானதாகியுள்ளது" என்று அறிவித்தார். நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் அவர் அதை மீண்டும் வலியுறுத்தினார்.

பேர்கரால் அவர்களுடைய "கொள்கைகள் மற்றும் மதிப்புகள்" என விபரிக்கப்பட்டது என்ன என்பதை விளக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் என்ற தொழிற் கட்சியின் மரபுகளுக்கு தங்கள் அர்ப்பணிப்புக்களை வலியுறுத்திக் கூறும் ஒரு சிறிய விளக்கத்தை அளித்தனர். இவை பிளேயரிசத்திற்கு புகழ் பாடும் வகையில் அமைந்ததுடன் தனிப்பட்ட முயற்சி மற்றும் கடின உழைப்பு மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினை உயர் நடுத்தர வர்க்கத்தில் சேருவதற்கான திறனைக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது.

உமனாவையும் அநேகமாக பேர்கரையும் தவிர அவர்களின் தேர்தல் தொகுதிக்கு அப்பால் ஒருவருக்கும் இந்த விடயங்களை பற்றி தெரியாது.

Nottingham East க்கான பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் லெஸ்லி, கோர்பினின் "காலாவதியான கருத்தியல்" என்று கண்டனம் செய்தார். அது "அரசியலுக்கு  விரோதமானது ... அவர்களுக்கு உலகம் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படும் எதிரிகளுக்கும் இடையில் பிரிகின்றது."

டோனி பிளேயர் அல்லது மார்கரெட் தாட்சரின் உரை எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்ககூடிய தமது தொழிலாள வர்க்க பின்னணியைக் குறித்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வெட்கம்கெட்ட வரலாறு பற்றி உரையாற்றினர்.

ஸ்மித் கூறினார்: "என் பெற்றோர்களுக்கு," "தொழிலாள வர்க்க பெருமை என்பது வறுமை அனுபவிப்பது அல்ல, அது கௌரவிக்கும் அடையாளமாக அணிந்து கொள்ளும் ஒன்றல்ல. இது சுய மரியாதை மற்றும் நாம் இன்னும் நன்றாக செய்ய முடியும் என்று நம்பிக்கை. ... பெரும்பாலான மக்கள் எனது பெற்றோரைப் போலவே இருக்கிறார்கள், ஏழைகளும் தொழிலாள வர்க்கமும் கருணை பெற வேண்டிய நிலையில் இருப்பதாக நினைக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளால் ஆதரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

காபஸின் சொந்த கேலிக்கூத்தான உரை “சிக்வெல் எசெக்ஸில் (Chigwell Essex) ஒரு நகரசபையில்” இருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை நகர்ந்தது. ஸ்வாஸிலாந்தில் தன்னார்வ ஆசிரியராக இருந்த ஒரு சிறிய காலப்பகுதி தனக்கு, "இனவெறி, வறுமை மற்றும் அநீதி ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவத்தை" கற்பித்தாக தெரிவித்தார். "கட்சியின் தேசிய தலைமையகத்தில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு வாழ்நாள் தொழிற் கட்சி அதிகாரியான காபஸ் 1970 மற்றும் 1980 களில்" ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக போராடிய" விருப்பமான நினைவுகள் இருந்ததாக பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.

உமன்னா அடையாள அரசியலை நடாத்தினார். பத்திரிகையாளர் மாநாட்டில் தன்னுடைய "காற்பங்கு ஐரிஷ், ஒரு காற்பங்கு ஆங்கில மற்றும் ஒரு அரைப்பங்கு நைஜீரிய” இனம் என்று குறிப்பிட்டார். அவரது நைஜீரிய தந்தை பிரித்தானியா வந்தபோது அவரிடம் "பணம் இல்லை" ஆனால் ஒரு "வெற்றிகரமான தொழிலதிபராகி" "பிரிட்டனுக்கு தனது சிறந்த பக்கத்தை காட்டினார்" என்றார்.

குழுவின் "சுதந்திர அறிக்கை," வெளியுறவுக் கொள்கை மற்றும் "தேசிய பாதுகாப்பு" அக்கறைகள் என்பன முன்னணியில் உள்ளன: "தொழிற் கட்சி இப்போது நம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் கொள்கைகளை தொடர்கிறது; நம் நாட்டிற்கு விரோதமான நாடுகளின் தகவல்களை ஏற்றுக்கொள்கிறது; பழமைவாத அணுகுமுறைக்கு ஒரு வலுவான மற்றும் ஒத்திசைவான மாற்றீட்டை வழங்குவதில் மற்றும் பிரெக்ஸிட் (Brexit) சவாலை எதிர்கொள்வதிலும் முன்னணி வகிக்க தவறிவிட்டது; சர்வதேச மனிதாபிமான ஆபத்தான சூழ்நிலைகளில் செயலற்று உள்ளது; பெரிய மற்றும் சிறிய வணிகங்களுக்கு விரோதமாக உள்ளது; மற்றும் தத்துவார்த்த இலக்குகளை பின்தொடர்வதில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை ஸ்திரமற்றதாக்க அச்சுறுத்துகின்றது." என குறிப்பிடுகின்றது.

நேட்டோவில் பிரிட்டனின் முக்கிய பாத்திரம் பாதுகாக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) உறவுகள் பாதுகாக்கப்படும்: "வர்த்தகம், கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் எங்கள் நெருக்கமான ஐரோப்பிய மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் வலுவான கூட்டணியைக் கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்." என அது மேலும் குறிப்பிடுகின்றது.

பிரெக்ஸிட் சார்பான டோரி உறுப்பினர்கள் மற்றும் கோர்பினின் தலைமைத்துவம் (இந்த கட்டத்தில்) இரண்டாவது வாக்கெடுப்பு அல்லது "மக்கள் வாக்களிப்பு" என்பதற்கு ஆதரவு மறுக்கப்படுகையில், நேற்றைய பிளவு ஒரு வலதுசாரி கட்சிகள் கடந்ததும், ஐரோப்பிய ஒன்றிய சார்பானதும் மற்றும் நேட்டோவின் சார்புடைய இராணுவவாத உருவாக்கத்தின் எழுச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சுயேட்சைக்குழு அறிக்கை டோரிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு பின்தொடர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "பாராளுமன்ற உறுப்பினர்களில் சுயேட்சை குழுவினராக இருக்கும் நாங்கள், குறுகிய கால கட்சி-அரசியல் கருத்தினைக் காட்டிலும் நாட்டினுடைய நலன்களைப் பரிசீலிக்கவும், அதேபோல செய்யவும் தேர்வு செய்யவும் வேண்டும்" என சகல கட்சிகளிலிருந்தும் எங்கள் சக அங்கத்தவர்களிடம் முறையிடுகிறோம்.

நேற்றைய டெலிகிராப் பத்திரிகையின் அறிக்கையின்படி, ஒரு உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட் தொடர்ந்தால்,"ஒரு டோரி அமைச்சர் மற்றும் நான்கு பழமைவாத உறுப்பினர்கள் புதிய சுயேட்சைக் குழுவிற்குப் செல்லலாம் என தோன்றுகிறது.”  பத்திரிகையின் அரசியல் ஆசிரியர் பின்வருமாறு ட்வீட் செய்தார்: " உடன்பாடற்ற பிரெக்ஸிட் ஒப்பந்தத்தினால் 22 அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இராஜிநாமா செய்வதை எதிர்கொள்வார் என்று ஆம்பர் ரூட், டேவிட் க்யூக், கிரெக் கிளார்க் & டேவிட் முண்டெல் ஆகியோரால் பிரதமர் எச்சரிக்கை செய்யப்பட்டார். இலக்கம் 10 ஒரு கூட்டத்தில் அவர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், [Article 50] நீட்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்க அவரை வலியுறுத்தினார்கள்.

"ஸ்காட்டிஷ் தாராளவாத ஜனநாயக கட்சியின் கிறிஸ்டின் ஜார்டின் "தாராளவாத ஜனசாயகவாதிகளுக்கும் மற்றும் முன்னாள் தொழிற் கட்சி எம்.பி. க்களின் புதிய பிளவுபட்ட குழுவிற்கு இடையே ஒரு எதிர்கால கூட்டை நிராகரிக்க மறுத்துவிட்டார்" என்று கார்டியன் அறிவித்தது.

நேற்றைய வெளியேற்றங்கள் ஏனைய கொள்கை விடயங்களைப் போல் கோர்பின்  பிரெக்ஸிட் நிலைப்பாட்டில் பிளேயர்வாத வலதுகளின் கோரிக்கையை எடுக்க அதிகரிக்கச் செய்வதுடன், வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான அனைத்து பேச்சுகளையும் கைவிடுமாறு அவரது சாமானிய அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அந்த ஏழு பதவி விலகியவர்களை பின்பற்ற வேறு எந்த எம்.பி.களும் "நிர்பந்திக்கப்படவில்லை” என்று உறுதிபடுத்தவும் செய்யக்கோரும்.

கோர்பின், பிளேயரின் எதிர்ப்பாளர்களை அழிப்பதன் பின்னர், சிக்கனம், சமத்துவமின்மை மற்றும் போருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ஆதரவு கொடுத்த நூறாயிரக்கணக்கான தொழிலாளர் உறுப்பினர்களின் ஆதரவுடன் 2015 இல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 இல், பாராளுமன்ற தொழிலாளர் கட்சியில் பெரும்பான்மையினரான 172 தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோர்பின் மீது பிரெக்ஸிட் தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரித்தனர்.

கோர்பினின்  சுய-மரியாதை குறைபாட்டினால் இந்த அரசியல் விஷப்பாம்பு புற்று இப்போது புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் திரும்பி தாக்குகிறது. தொழிற் கட்சி உறுப்பினர்களால் வெளியேற்றப்படுவதற்கு பதிலாக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியே செல்ல அனுமதித்தற்கு கோர்பின் தொடர்ச்சியாக வலதுசாரிப் பிரிவினரை திருப்திப்படுத்த முனைந்ததே காரணமாகும்.

பிளேயரிச எம்.பி. லூயிஸ் எல்மன், தொழிற் கட்சி மாற்றமடைந்தால் அன்றி "நாங்கள் ஆட்சிக்கு தகுதியற்றவர்கள் அல்ல” என்று நேற்று பாராளுமன்ற தொழிற் கட்சி கூட்டத்தில் கூறியபோது கைதட்டலில் வெடித்தது. மற்றொரு பிளேயரிச எம்.பி இயன் ஆஸ்டின், "அதே நடவடிக்கை எடுக்கும் அதிகமான மக்களை நான் பார்க்க முடிகிறது" என்று எச்சரித்தார். கோர்பினின் துணைத் தலைவர் டாம் வாட்சன் அவர்கள் கட்சி அறையில், அனைவருக்கும் முன்னாக பேசினார், "நான் லூசியானாவை முழுமையாக மதிக்கிறேன், அவரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுப்பதற்கு காரணத்தை புரிந்து கொள்கின்றேன்" என்றார். தொழிற் கட்சி "எங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தது என்பதை மெதுவாக ஏற்றுக் கொண்டதுடன் அதை கையாளவதற்கு இன்னும் மெதுவாக செயற்படுகிறது என்றார்.

வாட்சன் மேலும் : "லூசியானாவைப் போல வேறுயாரும் இருந்தால், அவருக்கு தொழிற் கட்சியில் லூசியானாவுக்கு ஒரு இடம் இல்லையென்று நம்பமாட்டார்கள். பல சக நண்பர்கள் தங்களை எப்படி அங்கு இருக்கலாம் என்று தங்களைக் கேட்பார்கள்." எனக் கூறினார்.

ஆயிரக்கணக்கான தொழிற் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து, சமூக ஊடகங்களின் செய்தி தெளிவானது: மோசமான குப்பைக்கு நல்ல தீங்கு. தொழிற் கட்சியின் வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுக்கப்படுகின்றனர். ஆனால் கோர்பின் மற்றும் அவரது நிழல் சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் ஆகியோரிடமிருந்து ஒற்றுமைக்காக இன்னும் பரிதாபமான முறையீடுகள் வந்தன.

ஞாயிறன்று, அனைவருக்கும் தெரியும் ஒரு பிளவு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மெக்டொன்னெல் BBC இன் "Andrew Marr Show" இல் நேர்காணல் செய்யப்பட்டார், மேலும் பிளேயரிசவாதிகளை விட்டு செல்லக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

ஏழு பேர் முடிவுக்கு வந்தபின் அவர்களின் கூனிக்குறுகல் திங்களன்று தொடர்ந்தது. கோர்பின் பின்வருமாறு அறிவித்தார் "கடந்த பாராளுமன்ற தேர்தலில் மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவித்த தொழிற் கட்சிக் கொள்கைகளுக்காக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது எனக்கு ஏமாற்றமளிக்கிறது ..."

மெக்டொன்னெல் கூறினார், அவர்கள் வெளியேறியது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும் மற்றும் நாங்கள் இன்றுவரை ஆதரிக்கும் [2017 பொதுத் தேர்தல்] அறிக்கையை நடைமுறைப்படுத்த எங்களுடன் வேலை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். "நான் விரும்பவில்லை. நாட்டின் நீண்ட கால நலனுக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், அதனால் நான் ஏமாற்றம் அடைகிறேன்."

அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, "எமது நாட்டிற்காக, ஒன்றாக இணைவோம்" என்று இரந்து கேட்டுக்கொண்டார்.

ஜோன் லான்ஸ்மனினால் தலைமை தாங்கப்பட்ட Momentum group ஒரு அடிமட்ட அமைப்பாக தவறாக முன்வைக்கப்பட்டது. அது கட்சி ஒற்றுமைக்கான அதன் சொந்த அழைப்பை கடமைபூர்வமாக முன் வைத்தது.