ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Last Survivors: A testament to the Holocaust
A documentary film by Arthur Cary, first shown on BBC Two

கடைசியாக உயிர்தப்பியவர்கள்: யூதப் படுகொலைக்கு ஒரு சாட்சி 

ஆர்தர் கேரியின் ஒரு ஆவணப் படமான இது பிபிசி இரண்டில் முதலில் காட்சியிடப்பட்டது

By Margot Miller 
15 February 2019

பாசிச வலது தனது குற்றங்களைக் குறைத்துக் கொண்டு, வரலாற்றை பொய்யாக்கும் மற்றும் நாஜிசத்தை மறுபுனருத்தானம் செய்யும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியின் உதவியுடன் மீண்டும் ஒருமுறை அதன் அசிங்கமான தலையை நிமிர்த்தி வருகிறது.

ஆறு மில்லியன் யூதர்களை படுகொலை செய்த ஹோலோகோஸ்ட் நிகழ்வின் கொடூரங்களுக்கு சாட்சியாக இருக்கும், அந்நிகழ்வில் உயிர்தப்பியவர்கள் விரைவில் முடிந்து போக இருக்கிறார்கள். முகாம்களில் அப்போது குழந்தைகளாக இருந்த கடைசி தலைமுறையினரில் சிலரை திரைப்பட இயக்குநர் ஆர்தர் கேரி படம்பிடித்து வைத்துள்ளார், அவர்களில் பெரும்பாலானோர், தங்களது பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை நேரில் கண்டிருந்தனர். இந்த தனித்துவம் வாய்ந்த ஆவணப் படத்தை உருவாக்குவதற்கு உயிர்தப்பியவர்களுடன் ஓராண்டு காலத்தை கேரி செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது ஏனைய படைப்புக்களில் American Justice எனும் தொலைக்காட்சித் தொடரும் அடங்கும்.

போரின் முடிவில் முகாம்கள் விடுவிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கானவர்கள் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தாம் நேரில் கண்ட அனுபவங்களைப் பற்றி எதையும் பேச முடியாமலோ அல்லது பேச விருப்பமில்லாமலோ பல தசாப்தங்கள் மௌனமாக இருந்துவிட்டனர். தங்களது கதைகளைப் பற்றி சொல்லவிருந்த அந்த பார்வையாளர்கள் 80 முதல் 90 வயதுக்குட்ப்பட்டவர்களாகவும், சிலர் மேலும் வயதானவர்களாகவும் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். 1945 இல், டாகோ (Dachau) முகாமில் இருந்த 13 வயதான ஐவொர் பேர்ல் (Ivor Perl) என்ற சிறுவன், அவனது பெற்றோரையும் சகோதரனையும் அங்கு இழந்தான். இன்று அவர், “50 ஆண்டுகளாக அதைப் பற்றி என்னால் பேச முடியவில்லை, என்றாலும், உங்களால் கடந்த காலத்தை நிராகரிக்க முடியாது, ஏனென்றால் ஒருவரது வாழ்க்கையை வழிநடத்த அது பல வழிகளை கொண்டுள்ளது,” என்று கூறுகிறார்.

படத்தின் அனைத்து பங்கேற்பாளர்களுமே, பேரதிர்ச்சி தரும் ஒரு பயங்கரமான நிலைக்கு சாட்சியங்களாக நிற்கின்றனர்.

தற்போது 86 வயதாகும் ஐவொர், அவுஸ்விட்ச் (Auschwitz) முகாமில் நிகழ்ந்ததான அவரது 13 வயது சுய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அது அவரது யூத சட்டத்தின் கட்டளையை (mitzvah) முறிப்பதற்கான நேரமாக இருந்தது. அப்போது, முட்கம்பி வேலிக்கு ஊடாக பறவைகள் பறப்பதை பார்த்தவேளை, “கடவுளே, தயவுசெய்து இந்த நரகத்தில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று அவர் பிரார்த்தனை செய்ததை நினைவுகூருகிறார்.

ஐவொர் மீது “கிரீன்ஃபெல் (Grenfell) அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.” “அக்கட்டிடத்தின் தீப்பிழம்புகளை நான் கண்டபோது, முகாமில் என் குடும்பம் எரிந்து போனதை என்னால் காண முடிந்தது” என்று கூறுகிறார்.

60 வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர், தனது மகள் மற்றும் பேத்தியுடன் அவுஸ்ச்விட்சிற்கு முதல் முறையாக அவர் திரும்ப வருகிறார். ஒரு ஆழமான புரிதலுக்கான ஒரு முயற்சியாக, அவரது மகளின் தூண்டுதலினால் இது நடக்கிறது. அவர் தெளிவாகவே அங்கு இருப்பதற்கு விரும்பவில்லை, என்றாலும், போதுமான அனுபவங்களை அவர் கொண்டிருந்ததை தெளிவுபடுத்துவதற்கு முன்னர், அவரது அனுபவங்களைப் பற்றி பிற பார்வையாளர்களிடம் பேசுவதாகக் காட்டப்பட்டுள்ளது. பேசுவது உதவவில்லை.


நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட தனது சகோதரனின் புகைப்படத்தை ஏந்தியிருக்கும் மான்ஃபிரெட் கோல்ட்பேர்க் (நன்றி : ரிச்சார்ட் அன்செட் மின்னோவ் ஃபிலிம்ஸ் பிபிசி)

அது அவரது குழந்தைப் பருவ நிகழ்வு என்பதால், ஐவோரின் மகள், தான் வருத்தமாக இருந்த போது தனது தந்தையை அணுக முடியாமல் இருந்தது பற்றி அவர் எப்படி உணர்ந்தார் என்பதை விளக்கினார்.

93 வயதான, அனித்தா லஸ்கர்-வால்ஃபிஸ்ச் (Anita Lasker-Wallfisch) என்ற பெண்மணி வயலின் வாசிப்பாளர் (cellist) என்பதால், முகாம் இசைக்குழுவில் வயலின் இசைக்கும் பங்கேற்பாளர்களின் பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்த காரணத்தால், அவர் மட்டும்தான் எரிவாயு அறையில் இருந்து தப்பித்திருந்தார். முகாமில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களால், அவர் அசாதாரண வலுவான மன இறுக்கத்திற்கு ஆளாகியுள்ளார். எனவே, அவர், “எனது அன்பான மூத்த சகோதரிக்குப் பின்னர், அவரது பெயரை என் மகளுக்கு வைத்தேன். அதனால் ஒரு குடும்பத்தை மீண்டும் உருவாக்க நான் விரும்பினேன்” என்று புலம்பும் அளவிற்கு அவரது மகள் மாயா உடனான உறவில் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயா மற்றும் உயிர்தப்பியவர்களின் பிற குழந்தைகளுக்கும், அந்த பேரதிர்ச்சிகர நிகழ்வுக்கும் தொடர்புபடுத்த முடியாத நிலையில், தனது குழந்தையை மகிழ்விக்க என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை என்பதை அனித்தா ஒப்புக்கொண்டார். மாயாவுக்கு பெற்றோர் இருக்கின்றனர், மேலும் அவளுக்கு என்று ஒரு வீடு இருக்கிறது, அதனால் அவள், “நன்றியுடன் இருக்க வேண்டும்.” அந்த இருண்ட நாட்களில் என்ன நடந்தது என்பது பற்றி பேசுவதை அவளும் சிக்கலாக உணர்ந்தாள். அந்த குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி ஏன் இல்லை என்று நீங்கள் சொல்லும் போது, அவர்கள் ஆச்சர்யமடைவார்கள் தானே?

“எனக்கு ஏதோ தவறாக நடந்துள்ளது” என்று மாயா உணர்ந்தாள்.

பேர்லினில், ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டதற்கான நினைவகத்தில் அனித்தாவை நாம் காண்கிறோம். “நவ-நாஜிக்களுக்கு இது முற்றிலும் காணச் சகிக்காத ஒன்றாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். யூதப் படுகொலை வருடாந்திர நினைவு தினத்தன்று, பேர்லினில், Bundestag (ஜேர்மன் பாராளுமன்றம்) இல், அவர் உரையாற்றுவதை நாம் காண்கிறோம். பாசிச ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany-AfD), Bundestag இல், உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக தற்போது அமர்ந்துள்ளது. யூதப் படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதை இந்த ஆண்டில் அவமானப்படுத்தும் மூன்றாவது முயற்சியாக, சென்ற மாதத்தில், ஒரு AfD பிரதிநிதி பாராளுமன்றத்தில் யூதப் படுகொலை நினைவூட்டலை கண்டனம் செய்தார்.

87 வயதான, மான்ஃபிரெட் கோல்ட்பேர்க், அவரது இளைய சகோதரரான ஹெர்மான் (Hermann) முகாம்களில் மரணமடைந்தது தொடர்பாக அவரது வாழ்நாள் முழுவதும் போராடினார். ஹெர்மானின் ஒரு ஓவியப்படம் அவரிடம் இருக்கிறது — ஒரு புகைப்படத்திலிருந்து அந்த ஓவியத்தை வரைந்தெடுக்க ஒரு கலைஞருக்கு பணமாக ஆங்கில சிகரெட்டுகளை கொடுத்திருந்தார். முகாம்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது தாயின் முதல் பிறந்த தினத்தன்று அவருக்கு அதைக் கொடுத்தார்.

இறுதியாக, 72 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது குடும்பத்திற்காக ஒரு நினைவு தகட்டை பொருத்த அவரது சொந்த ஊரான காஸலுக்கு (Kassel) அவர் திரும்பியிருந்தார். ஆழமாக உணர்ந்து, அவரது இழப்பை பற்றி கூறுகையில், “இப்போது பகிரங்கமாகவும், உத்தியோகபூர்வமாகவும், மறுக்கமுடியாததாகவும், மேலும் விவாதத்திற்கு இடமற்றதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றாலும், எத்தனை பேர் கேள்விகள் கேட்பதை நிறுத்தி, உண்மை என்னவென்று உற்று கவனிப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.

லிடியா டிஸ்ச்லெர் (Lydia Tischler) என்பவர், தனது தாய் உயிரோடு இருப்பதாக கற்பனையில் இருக்கிறார் என்பதை எப்படி அவரிடம் விளக்குவது. இந்தப் பிரச்சினையில் அவர் ஒரு தனிப்பட்டவரல்ல. “ஒரு இரங்கத்தக்க கட்டத்தில்” சிறு கவிதை ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்:

அம்மா, நீ சாகும்போது உனது கையை யார் பிடித்திருந்தார்கள்? நீ இறந்தபோது உனது கண்களை யார் மூடினார்கள்?

பெல்செனில் (Belsen) ஒரு குழந்தை சிறைக் கைதியாக இருந்த ஃபிராங்க் பிரைட் (Frank Bright), தற்போது ஷஃப்போல்க் (Suffolk) மாகாணத்தில், மார்டெலேஷ்ஹம் ஹீத் (Martlesham Heath) எனும் பசுமை நிறைந்த கிராமத்தில் வசித்து வருகிறார். அவரிடம் ஒரு பழைய வகுப்பு புகைப்படம் உள்ளது, மேலும் அதில் ஒவ்வொருவரின் மீதும் சிவப்பு அல்லது நீல வண்ணங்களிலான சிறு ஒட்டுத்தாள் அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன. “அதில் சிவப்பு வர்ணம் இறப்பை குறித்தது,” என்று அவர் கேமரா முன்பாக கூறுகிறார்.


ஃபிராங்க் பிரைட் இன் 1942 ப்ராக் பள்ளி புகைப்படம் – சிவப்பு வண்ணத்தில் அடையாளமிடப்பட்டவர்கள் இறந்து போனவர்கள்

முகாம்களில் இறந்து போன அவரது சக வகுப்பு தோழர்களின் விதியை அவர் பதிவு செய்து வைத்திருந்ததைக் காண்பிக்க அந்த விரிதாளில் அவரது விரல் நகர்ந்ததை நாங்கள் பின்தொடர்ந்தோம் – “இல்லையென்றால், எஞ்சிய மற்ற அனைவரையும் போல இவர்களும் இடம் தெரியாமல் மறைந்து போயிருப்பார்கள்.”

ஃபிராங்க், விடுதலைக்குப் பிந்தைய அவரது உலகத்தைப் பற்றி விவரிக்கிறார். “எனக்கென்று வீடு இல்லை, சக வகுப்பு தோழர்கள் இல்லை, எல்லாம் காணாமல் போய்விட்டது. நான் முற்றிலும் எனக்காக மட்டுமே இருந்தேன்.”


ஃபிராங்க் பிரைட்

79 வயதில், மொரிஸ் ப்ளிக் (Maurice Blick), அவரது சிற்பங்களின் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். அவரது மனைவி, அவுஸ்விட்சில் இறந்து போன அவரது தந்தையை சித்தரிப்பதான அனைத்து மாதிரிகளின் முகங்கள் பற்றி எங்களிடம் கூறுகிறார். இந்த கரடுமுரடான வாழும் சிலைகளுடன் இருப்பதை விட, கருணையும் அழகும் நிறைந்த அவரது விசாலமான தோட்டத்தில் தான் பெரும்பகுதி அவர் வசித்து வந்துள்ளார். அவரது இளம் கண்கள் சாட்சியமளித்த மலைபோன்ற பிணக் குவியல்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க “அவரது தந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வருவதற்கான தேவையை அவர் உணர்வதாக” அவர் கூறுகிறார்.

படைப்பு என்பது அவ்வளவு எளிதாக வந்துவிடாது என்று மொரிஸ் கூறியதுடன், முகாமில் அவரது சகோதரியின் முதல் பிறந்த நாளன்று சகோதரிக்காக சிறிய மாதிரி ஒன்றை அவர் உருவாக்கியதான அவரது முதல் முயற்சி பற்றி விவரிக்கிறார். அன்று “சற்று வளைந்த, ஒரு கேரட்டை நான் கண்டெடுத்தேன். அதை ஒரு படகு போல நான் உருவாக்கினேன், கப்பல் பாய்மரம் செய்ய சிறு குச்சிகளையும் அதில் செருகினேன். அப்போது எனக்கு ஐந்தரை வயது. அதை அவளுக்கு என்னால் கொடுக்க முடியவில்லை.” ஏனென்றால், அவளது பிறந்த நாளுக்கு முன்னரே, ஒருநாள் காலையில், அவள் இறந்து கிடந்தாள். இரவில் இறந்து போன மற்றவர்களின் பிணக் குவியல்களுக்கு வெளியே இறந்து போன சகோதரியின் உடலை அவரது மூத்த சகோதரி வைத்தார். அவரது வேலை “எப்போதும் ஒரு போராட்டமாகவே இருந்து வந்துள்ளது, ஒருபோதும் அழகானதொரு அனுபவம் அவருக்கு நேர்ந்ததில்லை, எப்போதும் கடும் துன்பம் தான்.”

லண்டனில், ஹரோவில் (Harrow) வசித்து வரும், ஓவியரான சாம் டிரெஸ்னெர் (Sam Dresner), ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அவர் விடுவிக்கப்பட்டார் எனக் கூறுகிறார், ஏனென்றால், அவர் “முகாமில் இருந்த நாட்களில் இருந்தே அவரை தூக்கிலிடும் முயற்சி வலுவடைந்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது.” அவரது தாயும் சகோதரியும் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில், ட்ரெம்பிளிங்கா (Treblinka) எனும் அழிப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு, விஷவாயுவால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவரது தாயின் நினைவாக அங்கிருந்த ஒரு அழகான அக்ரிலிக் வரிவடிவத்தை (acrylic sketch) நாங்கள் பார்த்தோம். அவர் மிகவும் சோகமாகத் தெரிந்தார். அவரது சகோதரியை அவரால் சித்தரிக்க முடியவில்லை, ஏனென்றால் அவரது புகைப்படம் எதுவும் அவரிடம் இல்லை. அது அவருக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே, அவரது நினைவாக ஒரு அருவமான தெளிவற்ற படத்தையே அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

கன்வாஸில் அவர் மீள்உருவாக்கம் செய்த, காடுகளுடன் அவருக்கு மற்றொரு “அதீத விருப்பம்” உள்ளது. “500 மரங்கள் அளவிலான சிறிய அழிப்புக்களைக் குறிப்பதாக பெரியளவிலான, இருண்ட காட்டை சித்தரித்திருந்தமை சிறப்பாக இருந்தது,” என அவர் நினைவுகூருகிறார். அங்கு பாதிப்படைந்தவை அகற்றப்பட்டிருந்தன – “எரிந்த பின்னரும், சில இன்னும் உயிரோடு இருந்தன.”

ஷாம் கோபம் கொண்டிருக்கிறார், அவர் “பழிவாங்கும் கனவுகளையும்” கொண்டிருக்கிறார்.

கற்பனை செய்ய முடியாத கொடூரங்களை அனுபவித்து இருந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உயிர்தப்பியவரின் கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் சோகம் இன்னமும் அவர்களை விரக்தியடைந்து போகும் நிலைக்கு தள்ளவில்லை. இருப்பினும், அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் பச்சிழம் குழந்தைகளாக இருந்த போது அவர்களுக்கு ஏன் இது நேர்ந்தது என்று இன்றளவும் குழப்பமாக உள்ளனர்.

“நாங்கள் கடந்து வந்த நிகழ்வுகள் எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று மான்ஃபிரெட் கருதுகிறார்.

சிகி ஷிப்பெர் (Zigi Shipper) எதிர்காலம் பற்றி கவலையடைகிறார். “ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, என எங்கும் கொதிப்பான விடயங்கள் பரவிக் கிடக்கின்றன. என்றாலும், எவ்வித முயற்சியும் நாம் செய்யாமலே, நம்மால் அமைதியாக வாழ முடியுமா” என்கிறார்.

அனித்தா, “யார் இதை உணர முடியும்? என்ன நடந்தது என்பது பற்றி எந்தவித உணர்வும் இங்கு இல்லை. நாம் ஆயிரம் ஆண்டு பழமையான யூத-விரோதம் என்றழைக்கப்பட்ட வைரஸ் பற்றி உண்மையில் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று தன்னைத் தானே கேட்கிறார்.

கடைசியாக உயிர்தப்பியவர்களின் மனதை உருக்கும் சாட்சியங்கள், நாஜிக்கள் இழைத்த குற்றங்களின் நினைவுச்சின்னங்களின் அளவையும், பாசிசம் மற்றும் அதன் அதிகார எழுச்சி பற்றிய மிகுந்த குழப்பம் இன்னும் அங்கு நிலவும் உண்மையையும் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இருந்து நடந்த முக்கியமான இந்த நிகழ்வுகளைப் பற்றி புரிந்து கொள்வதற்கு, ஜேர்மனியில் பாசிசத்தின் இன்றைய கால மறுமலர்ச்சி பற்றிய ஒரு ஆய்வின் வெளிப்பாடான மெஹ்ரிங் பதிப்பகத்தின் கடந்த அக்டோபர் வெளியீடு அதற்கான ஒரு சக்திவாய்ந்த மைல்கல்லாக இருக்கிறது. மேலும், ஜேர்மனியில் வரலாற்றை பொய்மைப்படுத்துதல், அரசியல் சதி மற்றும் பாசிசத்திற்கு திரும்புதல் போன்றவற்றை விவரிக்கும் அவர்கள் ஏன் மீண்டும் திரும்பிவந்துள்ளனர்? (Why Are They Back?) என்ற நூல், சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei–SGP) இணைத் தலைவரான கிறிஸ்தோப் வாண்ட்ரையர் (Christoph Vandreier) ஆல் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு, லண்டனில், Foyle’s புத்தகநிலையத்தில் மார்ச் 17 அன்று வெளியிடப்படவுள்ளது. அந்நிகழ்வில், வாண்ட்ரையரும், மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் உம் உரையாற்றவிருக்கின்றனர்.

இந்த முக்கியமான வெளியீடு, பாசிசம் மற்றும் போருக்கு திரும்புவதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஏந்தி நிற்பதற்கான ஒரு முக்கியமான ஆயுதத்தை வழங்கும், அதனால், ஆர்தர் கேரியின் குறிப்பிடத்தக்க படத்தில் பாத்திரமேற்ற உயிர்தப்பியவர்களுடன் தொடர்புபட்ட துயரங்களின் ஊடாக வருங்கால தலைமுறையினர் பயணிக்க வேண்டியிராது.

BBC iPlayer  இல், பிப்ரவரி 26 வரையிலும், கடைசியாக உயிர்தப்பியவர்கள் (The Last Survivors) ஆவணப்படத்தை அணுக முடியும்.