ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Corbyn assailant jailed, but significance of his attack still minimised

கோர்பினை தாக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் அவரது தாக்குதலின் முக்கியத்துவம் இன்னும் குறைத்தே காட்டப்பட்டுள்ளது

By Chris Marsden 
27 March 2019

மார்ச் 3 தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் மீதான தாக்குதலினால் தொழிலாள வர்க்கம் எதிர்நோக்கும் தீவிர விளைவுகளை பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், "உடலியல் ரீதியான பொதுவான தாக்குதலுக்காக" ஜோன் மேர்பி சிறையில் அடைக்கப்பட்டார்.

31 வயது நிரம்பிய ஒருவரால் 69 வயதான அரசியல்வாதி மீதான தாக்குதல் "பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் செய்தி ஊடகங்கள் ஆபத்தான வலதுசாரி அரசியல் சூழலை தூண்டிவிட்டிருப்பது பற்றிய ஒரு தீவிர எச்சரிக்கையாக" எடுக்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்துள்ளது".

கோர்பின் ஃபின்ஷ்பரி பூங்கா மசூதியின் முஸ்லீம் நலன்புரி நிலையத்தில் அவரது மனைவியான லோராவுடன் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது, மேர்பி தொழிற் கட்சித் தலைவரின் தலையில் அவருடைய உள்ளங்கையினுள் வைத்திருந்த முட்டையினால் அடித்தார்.

மேர்பி ஒரு சிவப்புக் குறியை தளும்பாக விட்டுச் செல்லும் அளவிற்கே கோர்பினை குத்தினார் என்று நிழல் உள்துறை செயலர் டயான் அபோட் விளக்கியிருந்தும் கூட, ஊடகங்கள் இடைவிடாது ஒரு "முட்டையடிக்கப்பட்டார்”, அல்லது யாரோ ஒரு முட்டையை எறிந்தனர் என்று கூறிவருவதுடன், ஊடகங்கள் இந்த சம்பவத்துக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் பொதுவாக செயற்படுகிறது.

இங்கே here காணக்கூடிய வீடியோ காட்சி, அபோட் கணக்கிட்டுள்ள வன்முறை மற்றும் கடுமையான தாக்குதலினை உறுதிப்படுத்துகிறது. ஆயினும்கூட ஊடகங்கள் அதன் வழமையான கதையை மாற்றவில்லை. மேர்பியின் 28 நாள் தீர்ப்பை அறிவிக்கும் போது பிரதான செய்தி சேனல்களான பிபிசி மற்றும் ITN ஆகிய இரண்டும் "முட்டையடிக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டன. இருந்த போதிலும், மேர்பியின் செயற்பாட்டை "ஜனநாயக வழிவகைகள் மீதான ஒரு தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளதுடன், அவருக்கு 14 நாட்களுக்கு சிறைத் தண்டனையையும், ஒரு வருடத்துக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் மற்றும 115 பவுண்டுகள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி Emma Arbuthnot தீர்ப்பளித்தார்.

"ஜெர்மி கோர்பின் மீதான தாக்குதல் கவனிக்கப்பட வேண்டியது, அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார் மற்றும் ஆச்சரியப்படுகிறார் என்றும் அதற்கு முன்னர் எப்போதும் பாதுகாப்பாக உணர்ந்தார் என்றும் அவர் கூறுகிறார். திரு. கோர்பின், தான் தாக்கப்படப் போவதையோ அல்லது தாக்குதல் ஒரு அடிக்குப் பிறகு நிறுத்தப்படும் என்பதையோ ஊகித்திருக்கவில்லை. திரு. கோர்பின் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரான அவரது நிலைப்பாடு காரணமாக தாக்கப்படும் நிலைக்கு உள்ளானார்" என்று Arbuthnot  தொடர்ந்து கூறினார்.

தாக்குதல் தொடர்பான அவரது சொந்த அறிக்கையில், கோர்பின் தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பை அவருடைய மனைவி மற்றும் குடும்பம் "வலியுறுத்தியதாலும், அதிர்ச்சியடைந்ததாலும்" மறுபரிசீலனை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு முன்னோக்கின், "நீங்கள் வாக்களித்தால் நீங்கள் எதற்கு வாக்களித்தீர்களோ அதனை பெறுவீர்கள்" என்று மேர்பி கத்தியதாக விளக்கியிருந்தது, அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டனுக்கு சாத்தியமான இரண்டாவது வாக்கெடுப்பை கோர்பின் ஏற்றுக்கொண்டமையை பற்றிக் குறிப்பிடுகிறது. “பிரெக்ஸிட் உருவாக்கிய தீமையான சூழ்நிலைமைகளும் மற்றும் கோர்பினுக்கும் "இடதிற்கும்" எதிரான தீவிரமான, வெறித்தனமான அரசு பிரச்சாரம் என்பவையுமே மேர்பியின் தாக்குதலுக்கு தூண்டுதலளித்தது. இந்த தாக்குதல்களுக்கு ஒரு வஞ்சகத்தனமான மற்றும் மரணகரமான தர்க்கம் உள்ளது” என்று நாங்கள் எழுதியிருந்தோம்.

ஜூன் 19, 2017 இல், டார்ரன் ஆஸ்போர்ன், ஃபின்ஷ்பரி பூங்கா மசூதி மற்றும் முஸ்லீம் நல மையத்திற்கு வெளியே ஒரு வாடகை வண்டியை ஓட்டி வந்து தெருவில் சென்ற பக்தர்களுடன் மோதி 12 பேரை காயமடையச் செய்ததுடன் மற்றும் பலத்த காயமடைந்த மக்ரம் அலியும் கொல்லப்பட்டார். விசாரணையின்போது, ஜூன் 18 ம் தேதி மத்திய லண்டனில் அல் குட்ஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோர்பின் மற்றும் லண்டனின் தொழிற் கட்சி மேயர் சதிக் கான் ஆகியோரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்று ஆஸ்போர்ன் ஒப்புக் கொண்டார். ஆஸ்போர்ன் இன் தாக்குதலுக்கு ஒரு வருடம் முன்பு, பாசிசவாதியான தோமஸ் மையர் தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸைக் "பிரிட்டன் முதலில்! என்று கத்தியபடி கொலை செய்தார் என்று உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டிருந்தது.

மார்ச் 17 ம் திகதி லண்டனின் Foyles புத்தகக் கண்காட்சியில், ஐரோப்பாவில் பாசிசம் மீண்டும் வெளிப்படுவதைக் காட்டும் "ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்?" எனும் புத்தக வெளியீட்டில் இந்த எச்சரிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி   வலியுறுத்தியது. அவுஸ்ரேலிய பாசிசவாதி ப்ரெண்டன் டாரன்ட் இனால் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சேர்ச்சில் 50 முஸ்லீம் தொழுகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த கூட்டம் நடைபெற்றது. ஐரோப்பாவில் அவர் எவ்வாறு தீவிரவாதத்திற்கு திரும்பினார், லண்டனின் தொழிற் கட்சி மேயர் சதிக் கான் கொலை செய்ய டாரன்ட் அச்சுறுத்தியதையும், அதற்கு உடந்தையாக ஆஸ்போர்ன் இன் பெயரையும் டாரன்ட் அவரது நோக்க அறிக்கையில் விளக்குகிறார். "பாரிய குடியேற்றம், கலாச்சார இடப்பெயர்வு மற்றும் பூகோளமயமாக்கல் போன்றவற்றுக்கு எதிராக பிரித்தானிய மக்கள் செயற்படுகின்றனர் மற்றும் இது ஒரு பெரிய மற்றும் அற்புதமான விஷயம்" என்று பிரெக்ஸிட் பற்றி அவர் விளக்குகிறார்.

Daily Mirror துணை பத்திரிகை ஆசிரியர் கெவின் மாக்யூர், மர்பியின் தண்டனை மிகவும் கடுமையானது என்றும், "சரி, மக்களிடம் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த முட்டாள் முட்டையடிப்பவனை சிறையில் அடைப்பதை விட சிறந்த சமூக சேவை இல்லையா?" என்று ட்வீட் செய்தார்.

உண்மையில், மேர்பி அவரது விசாரணையின் போது வெளிப்படுத்திய விடயத்தை விடவும் மிகவும் ஆபத்தான நபராக இருந்தார், மேலும், குறிப்பாக கிறிஸ்ட்சேர்ச் சம்பவங்களின் பின்னணியில் அவருடைய தண்டனை மிகவும் தாட்சண்யம் மிக்கதாக இருந்தது.

பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மேர்பியால் பேஸ்புக்கில் வெளிவிடப்பட்ட ஒரு வெளிப்படையான மரண அச்சுறுத்தலை  கணனிதிரையில் புகைப்படமெடுத்து வெளியிடுவதன் மூலம், கோர்பின் மகனான டொமி கோர்பின், மாக்யூருக்கு பதிலளித்தார். "மக்கள் ஜனநாயகரீதியான வாக்கெடுப்பை நிராகரித்து, ஜனநாயகக் கும்பலின் கைகளில் தங்களின் சொந்த மரணங்களை தூண்டிவிடுவது ஒரு விவேகமான யோசனையாக உள்ளது என்று நம்புமளவிற்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என கனவு காண்கின்றீர்கள். நீங்கள் கேட்பீர்களானால் ஆம், இது ஒரு மரண அச்சுறுத்தல் தான் " என்று மேர்பி எழுதியிருந்தார்.

மற்றவர்களும் இதே போன்ற கருத்துக்களை பதிவிட்டிருந்தனர் மேர்பி " பெரிய வெள்ளி உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட எவரையும் கொல்லுவதாக அச்சுறுத்தினார் [வட அயர்லாந்தில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கை]; மசூதிகளில் " இஸ்லாமிய துரோகிகளை சுட வேண்டும் என்று அச்சுறுத்தினார்; பல பிரெக்ஸிட் இற்கு எதிரான உறுப்பினர்கள் மீது வன்முறையை அச்சுறுத்தினார்; பிரெக்ஸிட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர்களது உயிர்களுக்கு ஆபத்து என்று உறுப்பினர்களிடம் கூறினார் " என்று இளைஞர் தாராளவாத சமுகம் தனது பேஸ்புக் குழுவில் குறிப்பிட்டிருந்தது.

"கடந்த ஆண்டு, [ஐரோப்பிய ஒன்றிய சார்பு] அணிவகுப்பில் அவர் மக்களை கொல்வதாக வெளிப்படையாகக் கூறினார். பொது அச்சுறுத்தல்கள் அல்லாமல், நேரடியாக மக்களுக்கு” கூறினார்  என்று குழு உறுப்பினர் ஒருவர் பதிவிட்டார்.

மேர்பியின் தீர்ப்பில் இது குறித்து எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்டுவதற்கான வெகுஜன ஊடகங்களின் முயற்சிகளுக்கு இட்டுச் செல்வதுடன், நேர்மையாக கூறும் போது,  கோர்பின் மற்றும் "இடது" ஆகியவற்றைக் காட்டிக் கொடுப்பதே அவர்களி்ன் சொந்த முயற்சிகளின் முக்கிய பங்களிப்பு ஆகும்.

"அது ஒரு செங்கல்லாக இருந்தால் நன்றாயிருக்கும்", “செங்கல்லை பயன்படுத்தியிருக்க வேண்டும்”, “வெட்கம் அது ஒரு செங்கல்லாக அல்லது இரும்புக் கோலாக இருக்கவில்லையே", “வெட்கம், இது ஒரு கைக்குண்டாக இருக்கவில்லையே" மற்றும்... அவர் [கோர்பின்] ஒரு லெனிசிசத்தை ஆதரிக்கின்றவர்! எனவே அவருடைய கருத்தை எதிர்ப்பவர்கள் அனைவருக்காகவும் அவரை ஒரு முகாமில் அடையுங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள்" உதாரணத்திற்கு இதுபோன்ற பதிவுகளை டெய்லி மெயில் கருத்துரை பகுதியில் காணலாம்.

பி.பி.சி செய்தியில் இந்த ஆயுதங்களின் பட்டியலில் “ஒரு மோசமான கூரிய சுத்தியலை” இணைத்திருந்தது. "கோர்பின் மசூதியில் அவரது நண்பர்களுடன் ஒரு உணவை அனுபவித்து மகிழும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்” எனும் ஒரு இகழ்ச்சி உட்பட ITN உம் அதே மாதிரி கருத்தையே தெரிவித்தது.

பிளேயர் ஆதரவாளர்கள் மற்றும் பழமைவாதிகளின் அவதூறான மற்ற கருத்துக்கள், கோர்பின் ஒரு "யூத-வெறுப்பாளர்" மற்றும் ஒரு "தேசதுரோகி", அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. Jeremy Corbyn Watch பேஸ்புக் தளத்தில், முன்னாள் இராணுவத்தினரும் டொமி ரொபின்சனின் ஆர்வலருமான ஸ்டீவர்ட் ஸ்டெயின், "கோர்பின் வீட்டு முகவரி யாருக்காவது தெரியுமா? நான் இந்த வாரம் லண்டனுக்குத் வருகிறேன், அவரைப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரறண்ட் மற்றும் மேர்பி போன்ற அரசியல்ரீதியாக புத்திசுவாதீனமற்றவர்களுக்கு உத்தியோகபூர்வ அரசியலின் பரந்த பிரிவினரிடமிருந்து ஆதரவு கிடைக்கின்றது. அதில் குறிப்பாக பழைமைவாதிகளிடம் ஊடுருவியுள்ள முஸ்லீம் எதிர்ப்பு உணர்வுகளும் தொழிற் கட்சியின் வலதுகளையும் பழைமைவாதிகளையும் இணைக்கும் கம்யூனிச எதிர்ப்பு உணர்வும் காரணமாகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி பாசிச ஆத்திரமூட்டுபவர்களைப் பற்றிய உயர்ந்த அரசியல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பிற்கான தேவையை மீண்டும் வலியுறுத்துவதுடன், தீவிர வலதுசாரிகளுக்கு உதவுகின்ற அனைத்து சக்திகளுக்கும் எதிராக சோசலிசத்திற்கான உறுதியான அரசியல் எதிர்ப்பும் தேவையாக உள்ளது. இதில் கட்சியின் சாமானிய பிரிவினரால் அகற்றப்படுவதில் இலிருந்து கோர்பினால் பாதுகாக்கப்பட்ட தொழிற் கட்சியின் வலதுசாரிகளும் உள்ளடங்குவர்.