ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Samjhauta Express bombing:
Indian Court allows violent Hindu supremacists to go scot-free

சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு:

வன்முறைமிக்க இந்து மேலாதிக்கவாதிகள் தண்டனையின்றி தப்பிக்க இந்திய நீதிமன்றம் அனுமதிக்கிறது

By Kranti Kumara
8 April 2019

முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைமிக்க இந்து மேலாதிக்கவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் வழமையாக நிலவும் ஒரு நிலையான நடைமுறையைப் போல தற்போது கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் ஒரு இந்திய சிறப்பு நீதிமன்றம், பிப்ரவரி 2007 சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நான்கு இந்து தீவிரவாதிகளை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுவித்துள்ளது.

துணைக்கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று 1947 இல் பிற்போக்கான வகுப்புவாதப் பிரிவினையினால் நிரந்தரமாக பிரிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பரஸ்பரம் விஜயம் செய்து கொள்ளும் வகையில், “சமாதான” இரயில் என்று பெயரிடப்பட்ட, சம்ஜௌதா விரைவு இரயில், இந்திய தலைநகரம் புது தில்லிக்கும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்திற்கும் இடையில் இருவாரங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது.

இரயில் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பற்றிக் கொண்ட பெரும் தீக்கனலில் இரயிலின் இரண்டு பயணிகள் பெட்டிகளில் இருந்த குழந்தைகளும் உட்பட 68 பேர் உயிருடன் எரிந்து போயினர். அதில் பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் பாகிஸ்தானியர்கள் (பாகிஸ்தான் குறிப்பிட்ட படி 44 பேர்) எனவும் பத்து பேர் இந்தியர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டனர். மேலும், கருகிப் போன பதினான்கு சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிழலுருவ இந்து பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத் உடன் தொடர்புடையவர்களாவர், இவர்களில் சுயபாணியிலான தீவிர இந்து துறவி சுவாமி அசீமானந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கமல் சவுகான், ராஜீந்தர் சௌத்ரி மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோர் அடங்குவர். அசீமானந்த், அபினவ் பாரத் பயங்கரவாத வலையமைப்பின் ஒரு முன்னணித் தலைவர் என்ற வகையில், முஸ்லீம்களுக்கு எதிரான பல குண்டு வீச்சுத் தாக்குதல்களுடன் அவர் தொடர்புபட்டிருந்தார் என்ற நிலையில், அரைகுறையாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமையால் (National Investigation Agency-NIA) அவரது பெயர் குறிப்பிடப்பட்டது.

தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், வாதித்தரப்பு வழங்கிய ஆதாரங்களில் “பெரும் ஓட்டைகள்” இருந்தன என்று தெரிவித்தார். குறிப்பாக, இரயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத குண்டுகள் பொதிந்து வைக்கப்பட்டிருந்த கைப்பெட்டியின் உறை, இந்தோரில் —மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம், இந்து தீவிரவாதிகளின் மையமாக அறியப்படுவது— தைக்கப்பட்டிருந்ததை அறிந்த பின்னரும் “மிகவும் விசித்திரமாக” NIA, அந்த தையற்காரரின் வாடிக்கையாளர்களைப் பற்றி உறுதி செய்வதற்கும் அவர்களை விசாரிப்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பதை அவர் கவனித்தார்.

“இவ்வாறாக, சரியான விசாரணை மேற்கோள்ளாமல் இவ்வழக்கு தொடர்பான மிக முக்கியமானதொரு ஆதாரத்தை புலனாய்வு முகமை [இழந்தது].”

“வன்முறைமிக்க ஒரு கொடூரமான செயலை” புரிந்தவர்களை இன்னமும் “நம்பத்தகுந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் தண்டிக்க முடியவில்லை” என்பது குறித்து தனது “ஆழ்ந்த வருத்தத்தையும் மிகுந்த வேதனையையும்” நீதிபதி வெளிப்படுத்தினார் என்றாலும், குண்டு வெடிப்பில் பலியான முகமது வக்கீல் என்பவரின் மகளான ரஹிலா வக்கீல் சமர்ப்பித்த ஒரு கடைசி நிமிட முறையீட்டை விசாரணையின்றி தாமாகவே தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தானும் மற்றும் ஏனைய பாகிஸ்தானிய சாட்சியாளர்களும் கூறுவதைக் கேட்குமாறு நீதிமன்றத்தில் அப்பெண்மணி வாதாடுகையில், இந்த நீண்ட வழக்கு குறித்தோ அல்லது அவர்களது கடவுசீட்டை இந்திய அதிகாரிகள் ஏற்க மறுத்தது குறித்தோ, தலைமை வகித்த எட்டு நீதிபதிகளில் எவரொருவர் விடுத்த முந்தைய நீதிமன்ற அழைப்பு எதையும் ஒருபோதும் அவர்கள் பெறவில்லை என்பதால் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராக முடியாத நிலை உருவானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

குற்றமற்றவர்கள் என குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை BJP கொண்டாடுகிறது

ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வழக்கு குறித்த தீர்ப்பின் மீது உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மேல்முறையீட்டையும் திட்டவட்டமாக தள்ளுபடி செய்துள்ளார். மேலும், “இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் எப்போதும் பொறுப்பாளியாக உள்ளது” என்பதே அவரது “சொந்த நிலைப்பாடு” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவரது பங்கிற்கு, “இந்து தீவிரவாதம்” என்று முத்திரைகுத்தியது குறித்து அவர் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு ஏதுவாக சம்ஜௌதா விரைவு இரயில் வழக்கிற்கு கிடைத்த தீர்ப்பை உடனடியாக சாதகமாக்கிக் கொண்டார். அவரது ஆதரவாளர்களின் முன்பு இவ்வாறு முழங்கினார்: “உலகின் முன்னே இந்துக்களை அவமதிக்கும் காங்கிரஸை எப்படி மன்னிக்க முடியும்? ‘இந்து பயங்கரவாதம்’ என்ற வார்த்தையை நீங்கள் கேட்ட போது நீங்கள் வருத்தப்பட வில்லையா? அமைதிக்கும், சகோதரத்துவத்திற்கும், மற்றும் நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற ஒரு சமூகத்தை பயங்கரவாதத்துடன் இணைத்து எப்படி பேச முடியும்?

சிங்கின் அமைச்சரவை உறுப்பினரும், கோடீஸ்வரருமான நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், முஸ்லீம்களை இலக்கு வைத்த குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட RSS —மோடியும், மற்றும் BJP இன் பிரதான தலைவர்களும் ஆர்வலர்களும் சார்ந்திருக்கும் ஒரு இந்துத்துவ அமைப்பு— உட்பட, இந்து வலதுசாரிகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் நீண்டகால உறவுகளைப் பற்றி சுட்டிக்காட்டி வரும் காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். மேலும், ஒரு இந்து-பயங்கரவாத வலையமைப்பு இருப்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்ட போது, அப்போதைய அரசாங்கத்திற்கு தலைமை வகித்த காங்கிரஸ் கட்சி, “இந்து சமுதாய”த்திடம் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

வன்முறைமிக்க இந்து வகுப்புவாத குழுக்கள் மோடி அரசாங்கத்தின் ஆதரவையும் பாதுகாப்பையும் தொடர்ந்து அனுபவித்து வருவதை மேலும் நிரூபிப்பதாகவே சம்ஜௌதா விரைவு இரயில் வழக்கு குறித்து மோடியும், BJP அரசாங்கத்தின் ஏனைய உயர் அதிகாரிகளும் விடுத்து வந்த முறையற்ற, கொண்டாட்டமிக்க அறிக்கைகள் இருந்தன. கடந்த ஐந்தாண்டு கால BJP ஆட்சியில், முஸ்லீம்களை சித்திரவதை செய்வது, தலித்துகள் மற்றும் கிறிஸ்துவர்களைத் தாக்குவது, மற்றும் இந்து மேலாதிக்கவாதத்தை விமர்சிப்பவர்களை மரணதண்டனை விதிக்கும் பாணியில் கொலை செய்வது என்பது போன்ற அனைத்தும் மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், ஒரு மகான் என்று அறியப்பட்ட (இந்துமத உயர் ஆச்சாரியார்) யோகி ஆதித்யநாத்தை மோடி முதலமைச்சராக நியமித்தார், இவர் ஸ்தாபித்த இந்து யுவ வாஹினி எனும் இந்துமத இளைஞர்கள் குடிப்படையின் உறுப்பினர்கள் மூலமாக வன்முறையை தூண்டிவிட்ட காரணங்களின் பேரில் இவர் பல குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர் கொண்டவராவார். “குற்றம்” குறித்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல விடுக்கப்பட்டிருந்த அரசாங்க உத்தரவின் கீழ் வழங்கப்பட்ட விசாரணையற்ற பொலிஸ் மரணதண்டனைகள் உட்பட, முஸ்லீம்களுக்கு எதிராக பல அட்டூழியங்கள் உத்திரப் பிரதேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ள போதிலும், தனக்கும் மற்றும் தனது கூட்டாளிகளுக்கும் எதிராக அரசு பதிவு செய்திருந்த அனைத்து புகார்களையும் திரும்பப் பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

RSS மற்றும் BJP தலைவர்கள் தூண்டிவிட்ட மற்றும் எளிதாக்கிய வகுப்புவாத கும்பல் வன்முறை தொடர்பான ஒரு நீண்ட வரலாறு உள்ளது. இந்திய வட மாநிலம் குஜராத்தில், 2002 இல், மோடி முதலமைச்சராக இருந்த போது முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு படுகொலையை தூண்டிவிட்டு அதற்கு தலைமையும் வகித்தார், அப்போதிருந்து தான் அவர் தேசிய முன்னணிக்கு முதலில் வந்தார். அவரும் தற்போது BJP தலைவராக இருக்கும் அவரது அடியாளான அமித்ஷாவும், 1,400 பேரை கொன்று குவித்த மற்றும் நூறாயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளை விட்டு ஓடச் செய்த வகையிலான ஒரு கடும் வன்முறையை மாநிலம் எங்கிலும் அனுமதிப்பதற்கு பொலிஸூக்கு உத்தரவிட்டனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருந்தாலும், அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்கான சட்டரீதியான பதில் எதையும் பாதிக்கப்பட்டவர்களில் எவரும் வழங்கவில்லை.

ஒரு இந்து மேலாதிக்கவாத பயங்கரவாத வலையமைப்பு

இருப்பினும், இந்து பயங்கரவாத குண்டுவீச்சு வலையமைப்பின் —மேலும் குறிப்பாக செயல்திறன்மிக்க ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுடன் அது தொடர்புகளைக் கொண்டிருந்த நிலையில்— 2008 வீழ்ச்சியின் வெளிப்பாடு ஏதோவொரு வகையில் புதிதாக இருந்தது. அவர்களில் சிலருடன் BJP மற்றும் RSS இன் மூத்த தலைவர்கள் சம்பந்தப்பட்டிப்பது பற்றிய ஆதாரங்கள் வெளியானபோது, இந்து வலதுசாரிகள் கடும் பதட்டத்துடன் பதிலிறுத்தனர். அச்சமயம், BJP தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள முனைந்தனர், அதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் இட்டுக்கட்டல் மற்றும் “அரசியல் சதி” என்பதாக கூறப்பட்ட “இந்து பயங்கரவாதம்” —அதாவது, இந்து மேலாதிக்கவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத அட்டூழியங்கள் என்ற வடிவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குற்றமிழைப்பது— என்ற கருத்தாக்கத்தை கண்டித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்து பயங்கரவாத வலையமைப்பு பற்றிய அனைத்து விவாதங்களையும் மூடிமறைக்க ஏதுவாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழுவினால் நடத்தப்பட்ட நவம்பர் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை BJP யும் RSS உம் சாதகமாக பிடித்துக் கொண்டன. இது குறித்து, பெரும்பாலான பெருநிறுவன ஊடகங்களும் அரசு எந்திரம் முழுவதிலுமான அவர்களது அனுதாபிகளும் அவர்களுக்கு உதவினர்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்து வலதுசாரிகளுக்கு முன்னால் தாழ்ந்து நிற்பதா மற்றும் அவர்களை மறைமுகமாக ஆதரிப்பதா என இரண்டிற்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் அது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 2002 குஜராத் படுகொலை, 1992 இல் அயோத்தியில் பாபர் மசூதி அழிப்பு, 1984 காங்கிரஸ் தலைமையிலான சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் போன்றவை உட்பட, பல வகுப்புவாத கிளர்ச்சிகளுக்கு பொறுப்பானவர்கள் மீது வழக்கு தொடுப்பதிலும் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதிலும் இந்திய காவல் துறையும் நீதிமன்றங்களும் திட்டமிட்டே தவறி வந்துள்ளன.

அபினவ் பாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகியுள்ளன. சில சந்தர்ப்பங்களில், ஆதார “பற்றாக்குறை”, “குழப்பம் நிறைந்த” விசாரணைகள் மற்றும் வாதித்தரப்பு சாட்சியாளர்கள் திடீரென விரோதமாகிப் போவது போன்ற காரணங்களால் இந்து தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டு வந்துள்ளனர். நீதிமன்றங்களில் முடங்கிக் கிடக்கும் இன்னும் பிற வழக்குகளில் —இந்திய பயங்கரவாத வழக்குகளில் ஏதோவொரு வகையில் கேட்கப்படாதவையாக— முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் போன்ற குற்றம்சாட்டப்பட்ட முக்கிய தலைவர்கள் உட்பட பல குற்றவாளிகள் தொடர்ந்து பிணையில் சுதந்திரமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலே கூறப்பட்ட சம்ஜௌதா விரைவு இரயில் குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு கூடுதலாக, பின்வரும் வழக்குகளும் அவற்றில் அடங்கும்:

2006 மாலேகான் குண்டு வெடிப்பு: செப்டம்பர் 2006 இல், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மாலேகான் நகரில் ஒரு மசூதியை அடுத்த கல்லறையை இந்து தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்கினர். இந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியாகினர், அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களாக இருந்தனர், மேலும் 125 பேர் படுகாயமடைந்தனர். ஆரம்பகட்டத்தில், சந்தேகத்திற்குரிய முஸ்லீம்கள் சுற்றி வளைக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டனர். பல வருட காவலுக்குப் பின்னர், உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக மஹாராஷ்டிரா பயங்கரவாத-எதிர்ப்பு அணியினர் அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை புனைந்துள்ளனர் என்பதை ஒரு நீதிமன்றம் முடிவு செய்த பின்னரே குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது முஸ்லீம்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில், அபினவ் பாரத்தைச் சார்ந்த இந்து தீவிரவாதிகள் தான் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படிருந்தனர் என்பது தெரியவந்தது. என்றாலும், பல வருடங்கள் சென்ற பின்னரும் விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்படவில்லை. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களை “மென்மையாக நடத்தும்படி” NIA இடமிருந்து தனக்கு உயர்மட்ட அழுத்தம் தரப்படுவதாக சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் புகார் செய்ததையடுத்து அவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு: மே 2007 இல், தென்னிந்தியாவில் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள மக்கா (Mecca) மசூதியில் முன்னாள் RSS உறுப்பினர்கள் குண்டு வெடிக்கச் செய்தனர். இது தொடர்பாக, சுவாமி அசீமானந்த் மற்றும் ஏனைய நால்வர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒரு நீதிபதி முன்னிலையில் அசீமானந்த் தாமே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், அவரும் அவரது சக பிரதிவாதிகளும் என அனைவரும் விசாரணையின் போது குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அஜ்மீர் குண்டு வெடிப்பு: அக்டோபர் 2007 இல், வட மாநிலமான இராஜஸ்தானில் அஜ்மீர் நகரில் ஒரு முஸ்லீம் புனித ஸ்தலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக, இரண்டு முன்னாள் RSS உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் சுவாமி அசீமானந்த் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஏனைய இந்து தீவிரவாதிகளால் அவர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டு மனுவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது என்ற நிலையில், தற்போது அவர்கள் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2008 மாலேகான் மற்றும் மோடசா குண்டு வெடிப்புக்கள்: செப்டம்பர் 2008 இல், மாலேகானில் இரண்டாம் முறையாகவும் மற்றும் குஜராத் மாநிலம் மோடசாவிலும் குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் இறந்து போனான். NIA, மோடசா வழக்கை மூடிவிட்டது என்பதுடன், இரண்டாவது மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து இதுவரை எந்தவித குற்றச்சாட்டையும் அது முன்வைக்கவில்லை. லெப்டினென்ட் கர்னல் புரோஹித் உட்பட, 2008 மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இந்து தீவிரவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006 மற்றும் 2008 ஆம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்த முஸ்லீம் எதிர்ப்பு குண்டு வெடிப்பு அலைகளுக்கு பொறுப்பானவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்க அதிகாரிகள் திட்டமிட்டே தவறிய அதே வேளையில், இந்து மேலாதிக்கவாத வலதுசாரிகளின் முக்கிய எதிர்ப்பாளர்களின் ஒரு தொடர்ச்சியான தீர்க்கப்படாத படுகொலைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்தன.

டாக்டர் நரேந்திர தபோல்கர், ஒரு மருத்துவரும், சுயபாணியிலான “மனித கடவுள்களுக்கு” எதிரான ஒரு அறப்போராளியுமான இவர், ஆகஸ்ட் 20, 2013 அன்று அவரது காலை நடைபயிற்சியின் போது படுகொலை செய்யப்பட்டார், “இந்து எதிர்ப்பு” வாதி என்று அவரை கண்டனம் செய்த இந்து தீவிரவாதிகளை சுட்டிக்காட்டும் அனைத்து ஆதாரங்களும் அதற்கு சாட்சியமளித்தன.

பிப்ரவரி 10, 2015 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக உறுப்பினரான கோவிந்த் பன்சாரேவும் அவரது மனைவியும் அவர்களது காலை நடைபயிற்சியை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இருவர் அவர்களை சுட்டு வீழ்த்தினர். இழிவான இந்துத்துவ சாதி முறைக்கு ஒரு கடும் எதிர்ப்பாளராக பன்சாரே இருந்தார் என்பதுடன், இந்து தீவிரவாதிகளுக்கு வணங்காமுடியாக இருந்தார்.

டாக்டர் மல்லேஷப்பா கல்பர்கி, 76 வயதானவரும், கர்நாடகா ஹம்பி பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் துணை வேந்தருமான இவரை, ஆகஸ்ட் 30, 2015 அன்று மாணவர்கள் போன்று நடித்து அவரது வீட்டுக்கு வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். பெங்களூருவில் (Bangalore) ஜூன் 2014 கருத்தரங்கின் போது உருவ வழிபாடு குறித்த அவரது எதிர்ப்பை அவர் பகிரங்கமாக அறிவித்த பின்னர், விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishwa Hindu Parishad-VHP or World Hindu Council) மற்றும் RSS போன்ற இந்து தீவிரவாதக் குழுக்களால் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டவராவர்.

செப்டம்பர் 5, 2017 அன்று, 55 வயதானவரும் Times of India பத்திரிகையாளரும் மற்றும் கௌரி லங்கேஷ் பத்திரிகே எனும் கன்னட மொழி வாரயிதழின் வெளியீட்டாளர்/ஆசிரியருமான கௌரி லங்கேஷ், பெங்களூரில் அவரது வீட்டிற்குள் நுழையும் போது இந்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். BJP மற்றும் ஆர்எஸ்எஸ் இன் ஆதரவை தற்போது கொண்டுள்ளவரான வி.டி. சாவர்க்கர் என்பவரால் வளர்க்கப்பட்ட தீங்குநிறைந்த இந்துத்துவ சித்தாந்தத்தின் மீதான தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த காரணத்தால் இவர் இலக்கு வைக்கப்பட்டார்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

Journalist who exposed Hindu right assassinated in Bangalore
[9 October 2017]

India army officers linked to Hindu supremacist terrorism
[6 November 2018]