ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Xi Jinping tours Europe amid growing divisions between America and EU

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பிளவுகளுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Alex Lantier
29 March 2019

செவ்வாயன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரோம், சிசிலி, மொனாக்கோ மற்றும் பாரிசுக்கு விஜயம் செய்து ஐரோப்பாவில் ஆறு நாட்களை உள்ளடக்கிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த பயணமும், சீனாவிற்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான பல வர்த்தக மற்றும் மூலோபாய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதும் அமெரிக்காவிற்கும் அதன் பெயரளவு நட்பான ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே இருக்கும் ஆழமான மோதல்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஜி இன் பயணத்திற்கு முன்னர், யூரேசியா முழுவதும் போக்குவரத்து, சக்தி மற்றும் தொழில்துறை உட்கட்டுமானங்களுக்கான சீனாவின் ஒரே  இணைப்பு, ஒரே  பாதை முன்முயற்சியை (BRI) ஏற்றுக்கொள்வதற்கு இத்தாலி திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தியை கசியவிட்டன.

இது வாஷிங்டனில் இருந்து கடுமையான எதிர்ப்பை தூண்டியது. சீனாவை இராணுவரீதியாக தனிமைப்படுத்துவதற்காக 2011 இல் தொடங்கப்பட்ட "ஆசியாவில் முன்நிலை" கொள்கையை தொடர்ந்து, அமெரிக்கா இப்போது மத்திய-தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை (INF) நிராகரித்துள்ளது, இது சீனா மற்றும் ரஷ்யாவை இலக்காக கொண்டு ஏராளமான அணுசக்தி ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை விடுத்த டுவிட்டர் செய்தியில், இது சீனாவின் "கொள்ளையடிக்கும் அணுகுமுறையை சட்டப்பூர்வமாக்குவதுடன், இத்தாலிய மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுப்பதில்லை" என இத்தாலியை எச்சரித்தது.

ஆயினும், ஐரோப்பிய ஒன்றிய (EU) சக்திகள் அமெரிக்காவின் ஆட்சேபனைகளை ஒதுக்கித் தள்ளின. 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஒரே  இணைப்பு, ஒரே  பாதை செயல்திட்டத்திற்கு நிதியளிக்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதிகளுக்கு கைச்சாத்தி்ட்ட பின்னர், இந்த வார இறுதியில் ரோம் ஒரே  இணைப்பு, ஒரே  பாதை செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

சீனாவுடனான அதன் பேச்சுவார்த்தைகளில் ரோம் அதன் ஐரோப்பிய ஒன்றிய பங்காளர்களை ஒதுக்கி வைத்திருப்பதாக பாரிஸ் கடுமையாக புகார் கூறியது. எனினும், ஜி வந்தபோது, அது அவருடன் தனது சொந்த பல பில்லியன்-யூரோ ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. இரண்டு பயங்கரமான விபத்துகளுக்குப் பின்னர் சீனா, போயிங் 737 MAX ஐ கைவிடுவதால் அதற்கு பதிலாக A320s ஜெட் விமானங்களை வாங்க பிரெஞ்சு-ஜேர்மன் நிறுவனமான Airbus உடன் 30 பில்லியன் யூரோ மதிப்புடைய மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜேர்மனியின் சான்செலர் அங்கேலா மேர்க்கெலுடன் ஜி ஐ சந்தித்தார், அங்கேலா மேர்க்கெல் ஒரே  இணைப்பு, ஒரே  பாதைக்கு ஆதரவளிக்கும் ஜி உடனான இத்தாலியின் ஒப்பந்தத்தில் "விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை" என்று கூறினார்.

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிரான கொள்கை மீது அமெரிக்காவுடனான வெடிக்கும் பதட்டங்களின் மத்தியில் இந்த கூட்டங்கள் இடம்பெற்றன. இந்த மாதம் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவேயின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அமெரிக்கா விடுத்த அழைப்புகளை மேர்க்கெல் நிராகரித்த பின்னர், ஜேர்மனிக்கான அமெரிக்க தூதர் ரிச்சார்ட் கிரென்ல் ஜேர்மனியுடனான அமெரிக்க உளவுத்துறை ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனிக்கு கொண்டுவரும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்த்திட்டத்தை அது கைவிடவில்லை என்றால் பொருளாதாரத் தடைகளை முகங்கொடுக்க நேரிடுமென வாஷிங்டன் பேர்லினை அச்சுறுத்துகிறது.

வாஷிங்டனுடனான அவர்களின் குறிப்பிடத்தக்க மோதல்கள் இருந்தபோதிலும்கூட, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கையானது, அடிப்படையில் வேறுபட்டதோ அல்லது குறைந்த பிற்போக்குத்தனமும் கொள்ளைக்காரத்தனமும் கொண்டதோ அல்ல. நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை தங்களது இராணுவ எந்திரங்களுக்குள் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன; வாஷிங்டனை இன்னும் சிறப்பாக எதிர்கொள்வதற்கான இராணுவ வலிமையை கொடுப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்ட சிக்கன நடவடிக்கைகள் ஊடாக நிதியளிக்கப்படுகிறது, வாஷிங்டனை இன்னும் சிறப்பாக எதிர்கொள்வதற்கான இராணுவ வலிமையை கொடுப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் நிதியளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை நேற்று ஒரு தலையங்கத்தில் ஒரு சுயாதீனமான ஐரோப்பியக் கொள்கையை பின்தொடரும் முயற்சிகளின் இராணுவவாத தாக்கங்களை முன்வைத்தது. "ட்ரம்ப் நிர்வாகம், பீஜிங் நோக்கி ஒரு கடினமான நடவடிக்கையை எடுக்கும்போது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நசிக்கப்பட்டு விடுவோமோ என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் அச்சமாகும். ஐரோப்பிய தலைவர்கள், இரண்டுக்கும் இடையில் ஒரு தேர்வினை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதை விரும்பவில்லை" என்று அது எழுதியது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் "சீனாவின் நேரடி முதலீட்டை எடுக்க வேண்டும் அல்லது சீனாவிற்கான  ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும்" என்று மேலும் கூறியது.

ஐரோப்பாவில் "ஒரு சுயாதீனமான வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்புத் தகமையை கட்டுவதற்காக சிலர் வாதிடுகின்றனர் என்று பைனான்சியல் டைம்ஸ் தொடர்ந்தது. ஆனால் வருடங்கள் செல்லும் போது ஐரோப்பா தனித்து நிற்க முடியாது. "இது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு "மிகவும் மூலோபாயரீதியாக சிந்திக்கவும்," முன்னணி வகிக்கவும் "அழைப்பு விடுத்தது." எளிமையான தமிழில் கூறுவதானால், அதாவது ஐரோப்பா விரைந்து ஆயுதமயமாக்க வேண்டும் என்பதாகும்.

ஐரோப்பிய அரசு தலைவர்கள் தாங்கள் கட்டியெழுப்புகின்ற ஆயுதங்கள் சீனாவிற்கு எதிரான ஒரு அமெரிக்க தாக்குதலில் பயன்படுமா, அல்லது அமெரிக்காவிற்கு எதிரான ஒரு சீனப் போரில் அல்லது வேறு மோதல்களில் பயன்படுமா என்று அவர்களுக்கே தெரியவில்லை. இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேட்டோ கூட்டணி முடிவிற்கு வருவது பற்றி ஊகித்து ஜேர்மன் கார் ஏற்றுமதிக்கு எதிரான வர்த்தக யுத்தத்தை அச்சுறுத்திய இரண்டு வருடங்களுக்கு பின்னர், உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களுக்கு கட்டமைப்பாக இருந்த நீண்டகால சர்வதேச உடன்பாடுகள் விரைவாக சிதைவடைந்து வருகின்றன.

20 ம் நூற்றாண்டின் பெரும் மார்க்சிசவாதிகள் உலகப் போர் வெடிப்பு மற்றும் அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சிக்கு காரணமான முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும் மற்றும் சமூகமயமான உற்பத்திக்கும் இலாபத்தை தனியார் கையகப்படுத்துவதற்கும் இடையேயான முரண்பாடுகள் இன்று மீண்டும் செல்தகமை கொண்டதாகின்றன.

ஒரே  இணைப்பு, ஒரே  பாதை என்பது 2013 இல் திட்டமிடப்பட்டது, இது சீனாவிலிருந்து பரந்த இரயில் மற்றும் சாலை வலையமைப்புக்கள், துறைமுகங்கள், எரிவாயு குழாய்கள் மற்றும் சீனாவிலிருந்து யூரேசிய நிலப்பகுதி முழுவதும் ஐரோப்பாவிற்கும், கிழக்கு ஆபிரிக்கா மற்றும், இந்தோனேசியாவிற்கு செல்லும் வரை பரந்த தொழில்துறை வசதிகளின்  மையத்தில் சீனாவை வைத்துள்ள ஒரு பல ட்ரில்லியன் டாலர் திட்டமாகும். நூற்றுக்கணக்கான பில்லியன்கள், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை போன்ற முன்முயற்சிகளிலும், ஈரானுக்கும் ஜேர்மனியிற்கும் ரஷ்யா ஊடாக வழமையான சீன சரக்கு இரயில் சேவை மற்றும் இந்து சமுத்திர துறைமுகங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், யூரேசியாவை தொழிற்துறைமயமாக்குதல் போன்ற மிகப்பெரிய சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

இது வாஷிங்டனுடன் நேரடி மோதலுக்கு பீஜிங்கை கொண்டு வருகிறது. அவர்கள் ஒரே  இணைப்பு, ஒரே  பாதை உடன் தங்களை இணைத்துக் கொண்டால், ஐரோப்பிய சக்திகளுடன் வாஷிங்டனுடனான ஒரு சாத்தியமான மோதல் நிலைமைகளையும் இது உருவாக்கும். ஜி இன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில், Washington Post , ஆய்வாளர் ஜேக்கப் ஷபிரோவை மேற்கோள் காட்டி, பான் யூரேசிய திட்டங்கள் "இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா ஊடுருவுவதற்கு கொண்டிருந்த அடித்தளத்திலிருந்த அதேமாதிரியான துல்லியமான சக்தியை கொடுக்கும்" என்று எச்சரித்தது. சீனாவின் மிகப்பெரிய மூலோபாய இலக்காக இருக்கலாம் என்பதால், அமெரிக்காவை எரிச்சலூட்டுவதே துல்லியமாக அதன் மூலோபாய நோக்கம் ஆகும். சீனா, இத்தாலியில் ஒரு துறைமுகத்தை உருவாக்குவது அல்லது போலந்தில் அதிவேக இரயில் உருவாக்குவது பற்றி கருத்தில் எடுக்கவில்லை, ஆனால் யூரேசியாவில் ஒரு மேலாதிக்க சக்தியின் சாத்தியமான உருவாக்கம் பற்றி அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது."

1991இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் வாஷிங்டனின் முக்கிய மூலோபாயம், யூரேசிய நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அப் பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்த மத்திய ஆசியாவை ஏகாதிபத்திய தலையீட்டிற்கு திறந்துவிடுவதாகும். இது பால்கன், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் பல தொடர்ச்சியான போர்களைத் தொடங்கியது. அமெரிக்காவுடன் பெருகிய முறையில் வர்த்தக ரீதியான போட்டிகள் இருந்தபோதிலும்கூட, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் பெரும்பாலும் இந்த போர்களில் இணைந்தன. அவர்கள் இலட்சக்கணக்கான உயிர்களை அழித்து, ஒட்டுமொத்த சமூகங்களையும் சிதைத்து, சர்வதேச அளவில் தொழிலாளர்களிடையே ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் வர்க்கங்களை மதிப்பிழக்கச் செய்தனர்.

ஆனால் இந்த நவ-காலனித்துவ தலையீடுகளின் தோல்வி தான் ரஷ்யா மற்றும் சீனாவை நேரடி இலக்காகக் கொண்ட இன்னும் பரந்த யுத்தங்களையும் ஆத்திரமூட்டல்களை தயாரிக்க வழிநடத்தியுள்ளது.

ஒரு சுயாதீனமான ஏகாதிபத்தியக் கொள்கையை உருவாக்குவதற்கான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகள் வாஷிங்டனின் போர்களுக்கு ஒரு அமைதியான மாற்றீடு அல்ல. சிக்கன நடவடிக்கைகளால் நிதியளிக்கப்படும் அவர்களின் மறுஆயுதமயமாக்கல் தீவிர வலதுசாரி மற்றும் போலிஸ் அரச ஆட்சியை நோக்கி இடைவிடாது செல்வதுடன் கைகோர்த்து செல்கிறது. வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஜேர்மன் மறுஆயுதமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கு ஹிட்லரின் குற்றங்களை நியாயப்படுத்தும் நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தானை புகழ்ந்து பாராட்டியுள்ளதோடு, சமூக சமத்துவமின்மை மற்றும் போரை எதிர்க்கும் "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இறுதியில், உலகளாவிய பூகோள அரசியலின் ஆழமாக்குகின்ற உலகளாவிய முரண்பாடுகள், இம்முறை அணுசக்திகளுடன் போராடுகின்ற ஒரு புதிய உலகப் போரின் பாரிய அபாயத்தை முன்கொண்டு வருகின்றன. ஏகாதிபத்திய யுத்த உந்துததை எதிர்க்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே.

மிகவும் அவசரமான அரசியல் பணி, வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின்போது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதாகும். அல்ஜீரியாவின் இராணுவ ஆட்சியின் வீழ்ச்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள், "மஞ்சள் சீருடை" இயக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய ஒன்றிய ஊதியம் முடக்கப்படுவதற்கு எதிரான வேலைநிறுத்தங்கள், சீனாவில் வளர்ந்துவரும் சமூக எதிர்ப்புக்கள் பற்றிய அறிக்கை மற்றும் அமெரிக்க ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான கார்த் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என்பன தொழிலாளர்களின் ஒரு மகத்தான தீவிரமயமாக்கலை சுட்டிக்காட்டுகின்றது. புறநிலை நிலைமையால் முன்வைக்கப்படும் மிகப்பெரிய பணிகளை நோக்கி எதிர்கொள்வதே முக்கியமான விடயமாகும்.

நவீன சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச உற்பத்தி சக்திகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்க, கொடூரமான யுத்தங்களால் ஒரு புதிய பின்னடைவை தடுக்க, முதலாளித்துவ வர்க்கத்தை தொழிலாள வர்க்கம் கையகப்படுத்த ஒரே வழி உலக சோசலிசப் புரட்சியின் ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடுவதே ஆகும்.