ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Persian Gulf tensions rise as Trump threatens “end” of Iran

ட்ரம்ப் ஈரானை “முடிக்க” அச்சுறுதுத்துகையில் பாரசீக வளைகுடா பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Bill Van Auken
21 May 2019

ஈரானுக்கு “முடிவு” கட்டல் என அச்சுறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் விடுக்கப்பட்ட டுவிட் செய்தி, பாரசீக வளைகுடாவில் ஒரு போர் நெருக்கடியை தீவிரமாக அதிகரிக்கச் செய்திருக்கிறது,  அமெரிக்க போர்க் கப்பல்கள் ஈரானிய கடற்கரைக்கு மிக அருகில்  வரிசையான ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளைக்கூட தொடங்கி இருக்கின்றன.

“ஈரான் போரிட விரும்பினால், அதுவே ஈரானின் உத்தியோகபூர்வ முடிவாக இருக்கும்” (“If Iran wants to fight, that will be the official end of Iran”) என ட்ரம்ப் டுவிட்டரில் எழுதினார். “அமெரிக்காவை மீண்டும் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது!” என்றார்.

ட்ரம்ப் அவரது எண்ணத்தில் என்னவிதமான “அச்சுறுத்தலை” வைத்திருக்கிறார் என்பது எந்தவகையிலும் தெளிவாகவில்லை. பாக்தாத்தின் பாதுகாப்பான பிராந்தியத்தில் (Green Zone) பெயர்தெரியா படைவீரன் சிலைக்கு அருகில், தோராயமாக அமெரிக்க தூதரகம் இருக்கும் இடத்திலிருந்து வடக்கே கத்யூஷா (Katyusha) ராக்கெட் விழுந்த சிலமணி நேரங்களில், இந்த டுவிட் செய்தி வந்தது. இதல் எவரும் காயமடையவில்லை.

ஈரான் மீது குண்டு வீசவும் ஆட்சி மாற்றத்திற்கும் நீண்டகலமாய் அழைப்பு விட்டுக் கொண்டிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஜனாதிபதிக்கு இந்த சம்பவத்தைப் பற்றிச் சுருங்க உரைப்பதற்கு வெள்ளை மாளிகைக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு ட்ரம்ப் பதிறுக்கவில்லை, மாறாக ஃபாக்ஸ் நியூஸ் வர்ணனைக்கே, அதாவது குடியேற்றம் பற்றிய ஒரு பிரிவுக்கு வெளிப்படையாய் பதிலிறுக்கும் வண்ணம் டுவீட்டரில் குறிப்பிட்டார் மற்றும் பின்னர்  ஈரான் மீதான ஃபாக்ஸ் நியூஸ் பிரிவை அடுத்து ஈரானுக்கு ”முடிவு” கட்டும் அச்சுறுத்தலை ட்வீட் செய்தார்.

இப்புவியில் மிகவும் வலிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றான பாதுகாப்பான பிராந்தியத்தில் ஏவுகணை வீசப்பட்டது, இந்த சம்பவத்திற்கு ஒருவர் கூட உரிமை கோராது இருந்தாலும், உடனடியாக அமெரிக்க ஊடகத்தால் ஈரான் அல்லது அதன் “பினாமிகள்” என கற்பித்துக் கூறப்பட்டது. அமெரிக்க தூதரகத்திற்கு ஏவுணையை வீச ஒவ்வொரு காரணமும் உள்ள, பல பிரிவுகளும், மக்களும் அந்த நாட்டில் உள்ளனர், அல்லது அந்த காரணத்திற்காகவே ஊழல் நிறைந்த ஈராக் முதலாளித்துவ அரசாங்கத்திலும் உள்ளனர்.

ஈரானிலிருந்து தொடக்க “அச்சுறுத்தல்கள்” நாட்டின் இஸ்லாமிக்  புரட்சிகர காவலர்கள் படையின் தலைமையிலிருந்து வெளிப்பட்டது. அது, பாரசீக வளைகுடாவில் பெருமளவில் இராணுவம் இறக்கிவிடப்படலால் அது மிரட்சியடைந்து விடப்போவதில்லை, மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் அச்சுறுத்தலைச் செய்கையில், பெரிய அளவில் அதுவே இலக்காக ஆகி இருக்கிறது என்று எச்சரித்தது.

இந்த மாத ஆரம்பத்தில் வாஷிங்டன் விமானந்தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கன் தலைமையில் ஒரு போரிடும் குழுவை விமனாந்தாங்கிக் கப்பற்படைப் பிரிவை விரைந்து அந்த பிராந்தியத்தில் துரிதமாக நிறுத்தியது மற்றும் அணு ஆயுதங்களை காவிச்செல்லும் வல்லமை கொண்ட B-52 உட்பட, ஈரானிய கடற்கரையோரப் பகுதிக்கு ஒரு குண்டு வீச்சுப் படையை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதிக்கு அமெரிக்க கடற்படையின் கடல்வழி தாக்குதல் படைப்பிரிவு, போர் விமானங்கள் மற்றும் அதேபோல பேட்ரியாட்டிக் ஏவுகணை மின்கலம் ஆகியவற்றைச் சுமந்து கொண்டு அப்பிராந்தியத்திற்கு நீரிலும் நிலத்திலும் இறங்கும் விமானங்கள் தாக்குதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெண்டகன், ஈரானுடன் முழுஅளவிலான போருக்கு வெளிப்படையான தயாரிப்பில் —எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு 120,000 அமெரிக்கத் துருப்புக்களை இப்பிராந்தியத்திற்கு அனுப்புவதற்கு அழைப்பு விடுக்கும் திட்டங்களை வரைந்தது— இதே எண்ணிக்கையிலான துருப்புக்கள் ஈராக்கை ஆக்கிரமிக்கும் முன்னர்  அனுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது.

USS ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் படைப்பிரிவு மற்றும் USS Kearsarge Amphibious Ready Group 22வது கப்பற்படை அரபிக் கடலில் பயிற்சிகளை நடத்தினர் என்று அமெரிக்க 5வது கப்பற்படை படைப் பிரிவு திங்கள் அன்று செய்தி வெளியிட்டது.

லிங்கன் தாக்குதல் குழுவின் தளபதி Rear Adm. John Wade, "சூழ்ச்சிக்கையாளல்களை எதிர்கொள்வதற்கான நமது கொல்லும்தன்மையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கம் கொண்டது, மற்றும் இந்த முக்கியமான பிராந்தியத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது" என்று கூறினார்.

உண்மையில் “இந்த முக்கிய பிராந்தியத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகள்” அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் இடைத்தலையீடு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது கால் நூற்றாண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது, பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கிய, லிபிய மற்றும் சிரிய உயிர்களைப் பலியிட்டு, முழுசமூகங்களையும் சிதறடித்திருக்கின்றது. ஈராக் போல் இரண்டு மடங்கு மக்கட்தொகை கொண்ட மற்றும் கிட்டத்தட்ட ஈராக்கை போல நான்கு மடங்கு நிலப்பகுதிகொண்ட நாடான ஈரானுக்கு எதிரானதொரு போரின் வடிவில் பெரும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் தயாரிப்புகளை, இந்த மாபெரும் போர்க்குற்றங்களை அற்பமாகச் செய்யக் கூடிய அளவுக்கு வாஷிங்டன் தயாரித்து வருகிறது என்பதற்கான ஒவ்வொரு அறிகுறிகளும் அங்கே உள்ளன.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாது சரிஃப், ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை "இனப்படுகொலை ட்வீட்" என்று கண்டனம் செய்தார் மற்றும் “ஆக்கிரமிப்பாளர்கள் சென்றுவிட்ட பின்னர் ஈரானியர்கள்  ஆயிரக் கணக்கான காலம் எழுந்து நின்றிருக்கிறார்கள்” என்று வரலாறு காட்டி இருக்கின்றது என்று எச்சரித்தார். பொருளாதாரப் பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை செயல்களால் ஈரானுக்கு முடிவு கட்டமுடியாது” என அவர் மேலும் சேர்த்தார். “மரியாதையுடன் முயற்சி செய்க- அது வேலைசெய்யும்” என்றார்.

ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள், ரஷ்யா மற்றும் சீனா இவற்றுக்கிடையே 2015ல் ஏற்படுத்தப்பட்ட விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டத்தை (JCPOA) ஒரு ஆண்டுக்கு முன்னர், அமெரிக்கா தன்னிச்சையாக இரத்துச் செய்துவிட்டது. அப்போது முதற்கொண்டு வாஷிங்டன் ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ஒரு போரின் நடவடிக்கைக்கு ஒப்பான தன்னிச்சையான பொருளாதாரத் தடைகளை, தெஹ்ரான் மீதான “உச்சபட்ச அழுத்தம்” என அது விவரிப்பதைத் திணித்து வருகிறது.

இவற்றுள், முன்னாள் அமெரிக்க கூட்டாளிகள் உட்பட மூன்றாம் நாடுகளை, அவை தெஹ்ரானுடன் வணிகத்தைத் தொடர்ந்தால் தண்டனை அச்சுறுத்தல் உட்பட, ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான ஒரு கடுமையான தடையும் உள்ளடங்கும். சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் துருக்கி ஆகியன தொடர்ந்து ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கு வழங்கியிருந்த சலுகையை இந்த மாத தொடக்கத்தில் வாஷிங்டன் இரத்துச்செய்துவிட்டது. இதனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மூன்றில் இரு பங்காக, ஒரு நாளைக்கு 2.8 மில்லியன் பீப்பாய்களில் இருந்து (BPD) ஒரு நாளைக்கு ஒரு மில்லியன்  பீப்பாய்களாக வெட்டப்பட்டுவிட்டது. அவை இந்த வாரம் ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய்களாக மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடைய நோக்கம் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளை பூச்சியமாகக் குறைப்பதே என வாஷிங்டன் கூறி இருக்கிறது.

ஈரானிய பொருளாதாரத்திற்கு எதிரான இந்த முற்றுகைக்கான விலையைக் கொடுப்பது நாட்டின் உழைக்கும் மக்களாகிய வெகுஜனங்களாகும். அவர்கள்தான் உயர்ந்து வரும் பணவீக்கம், வளர்ந்துவரும் வேலையின்மை மற்றும் நோயுற்றவர்களை பாதுகாக்கும் மருந்துப் பொருட்கள் உள்பட முக்கிய பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்த இழப்புகளால், மக்கள் எழுச்சிகளைத் தூண்டி விட்டு ஈரானிய முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசுவதை தான் ஆதரிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெளிவாக்கியுள்ளது. ஆயினும், அது அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தேசிய வெறுப்பைத் தூண்டி விடலாம், மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரின் வாய்ப்பு வளமானது ஒரு நம்பிக்கைக்குரிய பொம்மை ஆட்சியை தெஹ்ரானில் நிறுவுவது பாக்தாத், திரிப்போலி மற்றும் டமாஸ்கஸ் ஐ விடவும் சாத்தியமில்லாததாகவும் ஆகலாம். மிகவும் சாத்தியமான சூழ்நிலை முழு மத்திய கிழக்கையும் மற்றும் அணு ஆயுதபானிகளான சீனா மற்றும் ரஷ்யா உட்பட்ட வாஷிங்டனின் “பெரும் வல்லரசு” போட்டியாளர்களையும் தன்னில் இழுத்துவிடும் ஒரு போர்ச் சூழலாகவும் இருக்கலாம்.

பாக்தாதில் ஏவுகணைத் தாக்குதலுக்கான ஈரானியப் பொறுப்பு பற்றிய ஆதாரமற்ற கூற்றுக்கள், ஐக்கிய அரபு எமிரேடுகள் கடற்கரையில் எண்ணெய் கலங்களை நாசப்படுத்தியதாகக் கூறப்படுவது மற்றும் யெமனுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இனப்படுகொலைக்கு அருகிலான, சவுதி தலைமையிலான போருக்குப் பதிலடியாக ஹௌத்தி கிளர்ச்சிக்கார்களின் சவுதி எண்ணெய் நிலைகள் மீதான ட்ரோன் தாக்குதல் இவற்றோடு சேர்த்து, அமெரிக்கா ஈரானின் அணுத் திட்டத்தையும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான வாய்ப்புள்ள ஒரு சாக்குப்போக்காக கையாள்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தை வாஷிங்டன் முறித்துக் கொண்டதற்கும் அதன் வெடிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் பதிலிறுக்கும் விதமாக தெஹ்ரான், ஐரோப்பிய அரசுகளுக்கு வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ஆதரவான ஒரு கருவியாக (INSTEX), அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஈரானுடன் டாலர் அல்லது வணிகத்தை வசதிப்படுத்துவதன் மூலம் அவற்றுக்கு அழுத்தம் கொடுக்கவும், ஈரான், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தி மற்றும் கனநீர் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்ததை 60 நாட்களுக்கு தளர்த்தியது.

ஈரானுக்கான அணுசக்திக் குழுக்கான (AEOI) பேச்சாளர், நாடு அதன் உற்பத்தி வீதத்தை 3.67 சதவீதமாக நான்கு மடங்காக ஆக்கி இருக்கிறது என்று திங்கட்கிழமை தெரிவித்தார். ஈரானின் நடவடிக்கை JCPOAக்குப் பொருந்தம்படி இன்னும் விட்டு இருக்கிறது, அதிகரித்த உற்பத்தியானது விரைவில் அதன் உற்பத்தியை கையிருப்பான குறைவான செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை 300 கிலோவுக்கு மேலாகவும் விரைவில் தாண்டச் செய்யலாம். தெஹ்ரான் சர்வதேச சந்தையில் இந்த மட்டத்திற்கு மேலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒருவேளை விற்றால், அமெரிக்க பொருளாதாரத் தடை ஆட்சியாலும் இதனை உண்மையில் சாத்தியமில்லாததாக ஆக்க முடியாது.

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் போர்வெறிக் கூச்சல் பற்றிய மனக்கசப்புக்களை ஐரோப்பிய அரசுகள் வெளிப்படுத்தி இருக்கின்ற அதேவேளை, இது முற்றிலும் ஈரானிய எண்ணெயையும் சந்தைகளையும் சுரண்டுவதில் தங்களின் சொந்த சூறையாடல் நலன்களோடு கட்டுண்டிருக்கிறது. ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பொருளாதார முற்றுகையை அல்லது இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அக்கறை கொண்ட நடவடிக்கை எதையும் அவை எடுக்கவில்லை.

கடந்த வாரம் பிரித்தானிய அரசாங்கம், “ஒரு வெடிப்புடன் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கும் மோதலின் ஆபத்தானது, இருபுறமும் பொருத்தமற்றது” என கவலை தெரிவித்ததுடன், வாஷிங்டனை மீற வேண்டாம் என்று திங்கட்கிழமை அது தெஹ்ரானை எச்சரித்தது. “நான் ஈரானியருக்குச் சொல்வேன்: அமெரிக்கப் பக்கம் தீர்வு இருப்பதை குறைத்து மதிப்பிட வேண்டாம்” என பிரிட்டீஷ் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹாண்ட் திங்கட்கிழமை அன்று ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். “அவர்கள் ஈரானுடன் ஒரு போரை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்க நலன்கள் தாக்கப்பட்டால், அவர்கள் திருப்பி அடிப்பார்கள். மற்றும் மிக மிக கவனமாக ஈரானியர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று அது.”

ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்து பிரிட்டன் இரகசியமாக துருப்புக்களை பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பி வைத்திருக்கின்ற செய்திகளுக்கு மத்தியில், ஹண்ட்டின் எச்சரிக்கை வந்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க தாக்குதல் குழுவிற்கு உதவ பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. அந்த அறிக்கையானது, ஈரான் கடற்படைப் படகுகளை நிறுத்தி இருக்கும் Qeshm தீவில் இராணுவ நடவடிக்கையைக் கண்காணிக்க சிறப்புப்படகு சேவைப் பிரிவு (SBS) அனுப்பப்பட்டிருப்பது உட்பட இதில் உள்ளடங்கும் என்று குறிப்பிட்டது.

ஈரானுக்கு “முடிவு” கட்டல் என்ற ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் இதுதான் மூல முதலானது அல்ல. 2008 இல் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான முன்மொழிவில் வேட்பாளராக நின்றபொழுது, ஈரானை “நிரிமூலமாக்கல்” என்று அச்சுறுத்தியதை திரும்ப நினைவுக்கு கொண்டு வந்தாக வேண்டும். இதில் சம்பந்தப்பட்டிருப்பது வெள்ளை மாளிகையில் தற்போது வீற்றிருப்பவரின் ஈவிரக்கமற்ற மற்றும் குற்றத்தன்மை மட்டுமல்ல, மாறாக இன்னும் சொல்லப்போனால், அதன் பூகோள பொருளாதார மேலாதிக்கம் அரிக்கப்படுவதை திரும்ப சரிப்படுத்துவதற்காக அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு உறுதியாக இருக்கிறது என்பதாகும்.