ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington revives Syria chemical weapons propaganda as pretext for war

சிரிய இரசாயன ஆயுதங்கள் பிரச்சாரத்தை போருக்கான ஒரு சாக்குப்போக்காக வாஷிங்டன் புதுப்பிக்கிறது

Bill Van Auken
23 May 2019

ஜனாதிபதி பஷார் அல்–அசாத் அரசாங்கத்தால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தல் என்று கூறப்படுவதன் மீதாக சிரியாவுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலுக்கு வாஷிங்டன் மீண்டும் ஒருமுறை அச்சுறுத்துகிறது.

இது நிறைவேற்றப்பட்டால், இத்தாக்குதல் ஏப்பிரல் 2017 மற்றும் ஏப்பிரல் 2018ல் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஒரு சாக்குப்போக்காகக் கொண்டு, ட்ரம்ப் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக போரால் சீரழிந்த நாட்டின் மீது ஏவுகணைகள் மழைபொழிந்ததைப் போல இத்தாக்குதலானது மூன்றாவதாக இருக்கும்.

அண்மைய அச்சுறுத்தல் அண்மையில் நியமிக்கப்பட்ட அரசுத்துறை பேச்சாளர் Morgan Ortagus –அவரது முன்னோடியைப் போலவே ஃபாக்ஸ் நியூசில் வண்ணனையாளர்களின் நிலையான வலதுசாரியிலிருந்து பணிக்கு எடுக்கப்பட்டவர்- இடமிருந்து ஒரு அறிக்கை வடிவில் வழங்கப்பட்டது. “நாம் திரும்பத்திரும்ப எச்சரிக்கிறோம், அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் உடனடியாகவும் பொருத்தமாகவும் பதிலிறுப்பார்கள்” என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

அண்மைய சம்பவம் வடமேற்கு சிரிய மாகாணமான இட்லிப் எல்லையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது சிரியாவைச் சேர்ந்த அல்கெய்தாவின் அமைப்பான அண்மையில் முடிசூடிய அல் நுஸ்ரா முன்னணி, ஆயுத குழுவான ஹையத் தாஹிர் அல்-ஷாம் ஆல் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. அண்மைய வாரங்களில் ரஷ்ய விமானப்படை ஆதரவுடன் சிரிய துருப்புக்கள் மற்றும் அதன் கூட்டாளி ஆயுதக் குழுக்கள் இஸ்லாமிய படைகளுக்கு எதிராக போர் தொடுத்து வந்திருக்கின்றன.

வாஷிங்டனது கவலை என்னவெனில் இந்த மாகாணத்தில் டமஸ்கஸ் அரசாங்கத்தின் பிடியை மீள உறுதிப்படுத்திவிட்டால், அது அமெரிக்காவும் அதன் நேட்டோ மற்றும் பிராந்திய கூட்டாளிகளாலும் குறிப்பாக சவுதி அரேபியா, இஸ்ரேல் முதலியவற்றால் ஆதரிக்கப்பட்ட கிட்டத்தட்ட எட்டாண்டு காலப் போர் ஒரு முடிவுக்கு வருவதை சமிக்கை செய்யும்.

2014ல் அமெரிக்கா சிரியாவில் நேரடி இராணுவத் தலையீட்டை தொடங்கிய பொழுது, அழிவுகரமான விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் 2000 துருப்புக்களை அனுப்பியதும், ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசை (ISIS) எதிர்த்துப் போரிடல் மற்றும் “பயங்கரவாதத்தின் மீதன போர்” என்ற பாசாங்கின் மீதாகும். இப்பொழுது அது தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக கூறுவது சிரியாவில் எஞ்சி உள்ள அல்கொய்தாவின் மிச்சசொச்சங்களை மீட்பதற்காகும்.

வாஷிங்டன் மக்களுக்கு ஏற்படும் சேதத்தைப் பற்றிக் கவலைப்படுகிறது என்ற பாசாங்கு அதன் எடுத்த எடுப்பிலேயே அபத்தமாகிப் போனது. அமெரிக்கப் போர்விமானங்கள் மற்றும் howitzers சிரிய நகரமான ரக்காவை ஆயிரக்கணக்கான ஆடவர், பெண்டிர் குழந்தைகள் என பெரிய அளவில் கொன்ற போது, ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் முற்றுகையின் போது நடத்தப்பட்டதைப் போன்று, அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டதைப் பற்றியதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை எனும்போது, அத்தகைய மனோபாவம் ஒன்றும் வெளிப்படுத்தப்படவில்லை.

டமாஸ்கசின் பிராந்திய பிரதான கூட்டாளியான ஈரானுக்கு எதிராக பாராசீக வளைகுடாவில் அமெரிக்காவின் பெரும் இராணுவக் குவிப்பின் உள்ளடக்கத்தில், சிரியாவில் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல் வந்திருக்கிறது. பெண்டகன் ஈரான் கடற்கரையோரங்களை மூழ்கடிக்க விமானந்தாங்கி கப்பற்படை போரிடும் குழுவை அனுப்பி உள்ளது. அத்துடன் அணு ஆயுதங்களை சுமக்கவல்ல பி-52 குண்டு வீச்சு விமானங்களையும் அமெரிக்க கடற்படை நிலப்படைப் பிரிவுகளை சுமந்து செல்லும் நீரிலும் நிலத்திலும் தாக்கும் திறனுள்ள போர்க்கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளது மற்றும் பேட்ரியாட் ஏவுகணை மின்கலத்தையும் அனுப்பி வைத்துள்ளது.

நேரடி ஆக்கிரமிப்பு கொண்ட மறைவற்ற அச்சுறுத்தலில், இந்த பிராந்தியத்திற்கு 120,000 அமெரிக்க துருப்புக்களை,  2003ல் ஈராக் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அணிதிரட்டப்பட்ட அதே அளவிலான ஒரு பிரம்மாண்டமான படையை அனுப்புவதற்கான ஒரு போர்த்திட்டத்தை பெண்டகன் வரைந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒன்றில் யதார்த்தமானதாயினும் அல்லது புனையப்பட்டதாயினும் ஒரு சாக்குப்போக்கைத் தேடுவது என்பது, மத்திய கிழக்குக்கு மீண்டும் ஒருமுறை போரைக் கொண்டு வருவதாகும்.

பாக்தாதின் பெரிதும் வலிமைப்படுத்தப்பட்ட பசுமை மண்டலத்தில், அமெரிக்க தூதரகத்திலிருந்து மைலில் மூன்றில் ஒரு பங்கு தொலைவில் உள்ளே இறங்கிய தவறான ஏவுகணை வீசலின் பின்னே, ஈரானிய ஆதரவு ஈராக்கிய ஆயுதக் குழு இருப்பதான குற்றச்சாட்டு, ஐக்கிய அரபு எமிரேடுகள் கடற்கரையில் எண்ணெய்த் தொட்டிகளில் நாசவேலைக்கான ஈரானிய பொறுப்பு எனும் கூற்றுக்கள் நெருக்கமாக வந்துள்ளன. அரபு உலகின் மிகவும் ஏழ்மையான நாட்டிற்கு எதிரான ரியாத்தின் இனப்படுகொலைக்கு அருகேயான போருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி நிலைகளில் ஏமனின் ஹௌத்தி கிளர்ச்சிப்படையினரால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும் தெஹ்ரான் குற்றம் சாட்டப்படுகிறது.

நிச்சயமாக, ஈரான் அணு ஆயுதங்களைப் பின்தொடர்கிறது என்ற ஆதாரமற்ற அமெரிக்க கூற்றுக்கள் தொடர்ந்து இருப்பது, 2015 ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் கிழித்தெறிந்ததை மற்றும் ஒரு போரின் நிலைக்கு வழிவகுக்கும் மிருகத்தனமான பொருளாதாரத் தடைகளைத் திணித்ததை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் முடிவற்ற ஆத்திரமூட்டல்களுக்கு ஈரான் இராணுவ ரீதியாக பதில் தரும் வகையில் ஈரானை மாற்றுவதில் இவ்வாறு தோல்வியுற்றதில், வாஷிங்டன் சிரியாவிற்கெதிரான  போரை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் வாஷிங்டன் ஒரு புதிய முனையை தயாரித்து வருவதாகத் தோன்றுகிறது.

இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தல் என்று கூறப்படுவதன் மீதாக அமெரிக்கா திருப்பித் தாக்குதல் என்ற செவ்வாய்க் கிழமை அச்சுறுத்தலை வழங்குகையில், வெளியுறவுத்துறையானது “அசாத் ஆட்சிதாமே நடத்திய இரசாயன ஆயுதங்கள் தாக்குதல்களுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டி பொய்யான விளக்கத்தை உண்டு பண்ணுவதற்கு அசாத் ஆட்சி மற்றும் ரஷ்யாவால் செய்யப்படும் தவறான தகவல் பிரச்சசாரத்திற்கு” எதிராக எச்சரிக்கையையும் சேர்த்துக் கொண்டது.

இரசாயன ஆயுதங்கள் தடைக்கான அமைப்பு (OPCW), முன்னணி புலனாய்வாளரால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணம் கசிந்ததன் காரணமாக இந்த பகுதியானது வெளிப்படையாக பெரிய அளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டது, அது ஏப்ரல் 2018ல் அமெரிக்கா, பிரிட்டீஷ் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் தாக்குதலுக்கு சாக்குப்போக்காக பயபடுத்தப்பட்ட டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதியான டோமாவில் இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் என்பது சம்பந்தமான உத்தியோகபூர்வ கதையை கிழித்து எறிந்தது.

அந்த அறிக்கையானது 49 மக்கள் இறப்பை விளைவித்ததாக கூறப்படும் சிரிய அரசாங்க விமானத்தால் தொகுப்பு வீட்டின் அடுக்கக கூரை மீது போடப்பட்டதாக கூறப்படும் சிலிண்டர் பற்றி ஆய்வு செய்தது.

“சிலிண்டர்களின் பரிணாமங்கள், குணாம்சங்கள் மற்றும் தோற்றம் மற்றும் அச்சம்பவங்களைச் சுற்றியுள்ள காட்சி ஆகியன, ஒரு விமானத்திலிருந்து சிலிண்டர்கள் போடப்பட்டால் எதிர்பார்க்க கூடியதோடு சீரற்றமுறையில் இருந்தது” என அறிக்கை குறிப்பிட்டது. “அந்த காட்சியில் அவதானித்த நம்பகத்தன்மையான ஒரே விளக்கம்” ஆய்வாளர்கள் அங்கே கண்டறிந்த கையால் போடப்பட்ட சிலிண்டர்கள் என்று அது மேலும் சேர்த்தது. அந்தக் காட்சி அல்கொய்தா தொடர்புடைய ஆயுதக்குழு கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால், டமஸ்கஸ் அரசாங்கம் அல்ல, அவர்களே சம்பவத்திற்கும் மரணங்களுக்கும் பொறுப்புடையவர்களாக இருந்தனர் என்பது இதன் பொருளாகும்.

வெளியுறவுத்துறையால் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது பெருநிறுவன செய்தி ஊடகத்தால் கவனமாக அலட்சியம் செய்யப்பட்டன. நியூயோர்க் டைம்ஸ், எஞ்சிய பத்திரிகைகளுக்கு பாணியை வகுத்து, Ms. Ortagus இன் குற்றச்சாட்டுகளது நீளத்தை ஒழுங்குபடுத்தியது, ஆனால் இரசாயன ஆயுதங்கள் என்ற வாஷிங்டனின் கூற்றுக்கள் என்பதற்கான சான்றுகளை கடுமையாக தணிக்கை செய்தது.

இதில் புதிதாய் ஒன்றும் இல்லை. ஏப்பிரல் 2018 டோமா நிகழ்வுக்கு உடனடியாக அடுத்து, நன்கு பிரபலமான மூத்த பிரிட்டீஷ் மத்திய கிழக்கு செய்தியாளர் Robert Fisk காட்சிக் களத்தைப் பார்வை இட்டார், மருத்துவ பரிசோதனை நிலையத்தில் மருத்துவர்களை பேட்டி எடுத்தார், பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படமெடுக்கப்பட்ட வீடியோக்கள் நச்சுவாயு உட்செல்லலை கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு தண்ணீர் வீசப்பட்டதைக் காட்டியது. அவர்கள் அவரிடம் மேற்கத்திய நிதி ஊட்டப்படும் “வெள்ளை ஹெல்மெட்டுக்கள்” ஆல் அந்தக் காட்சி நடிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

டோமா சம்பவத்தை நிலைநாட்டுவதற்கான மற்ற ஆதாரங்களுடன் சேர்த்து பிஸ்க்கின் கணக்கானது, சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை நியாயப்படுத்த நடத்திக்காட்டப்பட்ட ஒரு ஜோடனை என்பது இதர பெருநிறுவன செய்தி ஊடகத்தால் அலட்சியம் செய்யப்பட்டன. அவை பெண்டகனின் பிரச்சார ஆயுதமாக தொழிற்பட்டன.

2017 இலும் மூத்த புலனாய்வு பத்திரிகையாளர் Seymour Hersh ஆல் முன்வைக்கப்பட்ட ஆதாரமான இட்லிப் மாகாணத்தில் Khan Sheikhoun கிராமத்தில் இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் என்று கூறப்படுவது, அல்கொய்தா தொடர்புள்ள உறுப்பினர்கள் ஒன்று கூடலுக்கு எதிரான மரபு வழியிலான தாக்குதலாக இருந்தது என்று ரஷ்ய இராணுவம் முன்கூட்டியே பெண்டகனுக்குத் தெளிவுபடுத்தி இருந்தது. இருப்பினும் ட்ரம்ப் நிர்வாகம் ஒன்பது குடிமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படும் சிரியாக்குள்ளான 59 Tomahawk cruise missilesக்கு ஆதரவாக கோருவதற்கு அதனை ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்தியது.

ஜனநாயகக் கட்சியானது முந்தைய ஏவுகணைத் தாக்குதல்கள் இரண்டையும் ஆதரித்தது மற்றும் புதிதான ஒன்றை கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கிறது. வெளியுறவுத்துறையின் அச்சுறுத்தலை முன்னெடுக்கும் விதத்தில், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனெட்டர்கள் இரு சட்ட அங்கங்களின் 400 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட மற்றும் “சிரியாவில் உள்ள நடவடிக்கைகள் தொடர்பானதில் ஈரான் மற்றும் ரஷ்யா மீதான அழுத்தத்தை வெள்ளை மாளிகை அதிகரிக்க” கோரும், ட்ரம்ப்புக்கான கடிதத்தை ஆதரிப்பதில் இணைந்து கொண்டனர்.

“ஈரானுக்கு உத்தியோகபூர்வ முடிவு” எனும் அச்சுறுத்தல் என்ற ட்ரம்ப்பின் டுவீட்டுரை பற்றி ஜனநாயக கட்சியினர் எந்தவிதமான தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தாலும், ஆட்சி மாற்றத்திற்கான சட்டவிரோத யுத்தத்தைத் தொடர்வதில் ஈரான் மற்றும் அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவிற்கு எதிராக சிரியாவில் அமெரிக்க துருப்புக்களை குழிபறிக்கும் வேலையை செய்யும் ஒரு கொள்கையை அவர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.

அதனால் போலி இடது —அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளிலிருந்து அண்மையில் கரைந்துபோன சர்வதேச சோசலிச அமைப்புவரை— ஜனநாயக கட்சியுடன் மற்றும் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை சாதனங்களுடன் பிணைத்துக்கொண்ட நிலையில் வேலை செய்துள்ளது. மனித உரிமைகள் பற்றிய அழைப்புக்களுடன் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான சிஐஏ போரை ஒருவித “ஜனநாயக புரட்சி” என்று விற்க முயன்ற அவர்கள் உண்மையில் நடுத்தர வர்க்கத்தின் சலுகைபெற்ற தட்டுக்களுக்கு இடையே வெளிப்படையான, ஒரு தாராளவாத தொகுதியை உருவாக்குவதை நாடுகின்றனர்.

அவர்களின் அரசியலானது, வீழ்ச்சியடைந்துவரும் அதன் உலக மேலாதிக்கத்தை இராணு வழிகளில் கடந்து வருவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடைவிடா உந்துதலின் வெளிப்பாட்டின் “இடது” ஆக இருக்கின்றது. குறிப்பாக, இது ஈரானிலிருந்து வெனிசுலாவரை உலக எண்ணெய் வயல்களில், அதன் பிரதான உலகப் போட்டியாளர் சீனாவிற்கு தேவைப்படும் வளங்களைக் கட்டுப்படுத்துவதில் தன்னையே அமர்த்திக்கொள்வதில், அதன் தடையிலா ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு வடிவத்தை எடுத்திருக்கிறது.

சிரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல் இத்துடன் சேர்ந்து ஈரானுக்கு எதிரான போரைக் கட்டி எழுப்புதல் மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தை முன்வைக்கிறது. ஆயினும், இந்த ஆபத்தை உருவாக்கி அதிகரித்து வரும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் அதே நெருக்கடியானது அதன் எதிர் மறைப்பக்கத்தையும் உருவாக்குகிறது, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகளை பக்குவமடையவும் செய்து வருகிறது. இப்போதுள்ள மிகவும் அவசரமான பணி, போருக்கும் அதன் மூலமான, முதலாளித்துவ அமைப்புக்குமான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுப்பதாகும்.