ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fascistic Vox party enters parliament in Spain elections, as social democrats gain

ஸ்பெயின் தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுகையில், பாசிச வோக்ஸ் கட்சி பாராளுமன்றத்திற்குள் நுழைகிறது

By Alex Lantier
29 April 2019

கடந்த இரவு ஸ்பெயின் பொதுத் தேர்தல்களில் எண்ணிக்கைக் கணக்கு சமன்பெறுகையில், சிக்கனப் பொருளாதாரக் கொள்கை ஆதரவு கட்சியான ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) 123 இருக்கைகளுடன் முதல் இடத்தைப் பெற்றது. அதேவேளை, எவ்வ்வாறாயினும், வோக்ஸ் கட்சி (Vox) பாராளுமன்றத்தில் நுழைந்துள்ளது - சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவால் உருவாக்கப்பட்ட பாசிச ஆட்சியின் முடிவுக்குப் பின்னர் மற்றும் 1978க்குப் பின்னர் ஸ்பெயினின் காங்கிரசில் அதி-வலது கட்சி முதல் தடவையாக அமரப் போகிறது.

2015 மற்றும் 2016ல் இதேபோன்ற முடிவுகள் வந்தபோது தொங்கு பாராளுமன்றம் மீண்டும் வந்தது. பிராங்கோயிச முடிவுக்கு பின்னான காலப்பகுதி PSOE மற்றும் வலதுசாரி ஜனரஞ்சக கட்சியான மக்கள் கட்சி (PP) ஆலான இரு-கட்சி ஆட்சி முறையால் உறுதிப்படுத்தப்பட்டது. ஸ்பெயினில் 350 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் பெரும்பான்மையை அமைக்க 176 இருக்கைகள் பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் ஒரு கட்சியும் அதைக் கொண்டிருக்கவில்லை. PSOE-ன் 123க்குப் பிறகு வலதுசாரி PP, சிட்டிசன் கட்சி மற்றும் வோக்ஸ் முறையே 66, 57, 24 வென்ற அதேவேளை பொடெமோஸ் 42 ஐ வென்றது.

75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு, கடந்த தேர்தலைவிட 9 சதவீதம் உயர்ந்தும் 1982க்குப் பின்னரான உச்ச அளவாகவும் இருந்தது. தேர்தல்கள் PP இன் பொறிவைக் காட்டின, அது 2016 தேர்தல்களில் அது வென்ற 137 இருக்கைகளில் அரைப்பகுதிக்கும் மேலாக இழந்தது, மற்றும் பொடேமோசை பொறுத்தவரை, அதன் 71 இருக்கைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேல் இழந்துள்ளது.

PSOE பிரதமர் பெட்ரோ சான்சேஸ் நேற்று இரவு, PSOE தலைமையகத்தின் வெளியே கூடியிருந்த, ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தின்போது இருந்து வந்த பாசிச எதிர்ப்பு முழக்கமான “No pasaran” (“They shall not pass” “அவர்கள் கடந்துபோக முடியாது”) என்று முழங்கிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு சுருக்கமாக வழங்கிய வெற்றிப் பேச்சில் இந்த வாக்களிப்பை “ஸ்பெயினின் கடந்தகாலம்” மீதான வெற்றி என புகழ்ந்தேற்றினார். PSOE தேர்தல் பிரச்சாரத்தின் போது, PP தலைவர் பப்லோ கசாடோவினால் முன்மொழியப்பட்ட PP- குடிமக்கள் கட்சி -வோக்ஸ் கூட்டு ஸ்பெயினில் அதி வலது அரசாங்கத்தை உருவாக்கும் என திரும்பத் திரும்ப எச்சரித்தது. சான்சேஸ் அலுவலகம் “அவர்கள் எண்ணிக்கை கூடினால், அவர்கள் ஆளுவர்” என்ற முழக்கத்தை அடிக்கடி திரும்பக் கூறியது.

பெரும் வாக்குவீதம் அதிகரித்திருப்பதாக காணப்படுவது பகுதி அளவாவது, அதி-வலது அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்கு கணிசமான வாக்காளர்கள் PSOEக்கு வாக்களிக்கச் சென்றுள்ளனர் என்பதை எதிரொலிக்கிறது. அக்டோபர் 2017 கட்டலான் சுதந்திர பொது வாக்கெடுப்புக்கு எதிரான PSOE ஆதரவுடன் PP ஒழுங்கு செய்த கொடுமை மிக்க கடும் நடவடிக்கை நடத்திய கட்டலாலோனியாவில் வாக்காளர்கள் PP அலுவலர்களை தேர்தலில் வாக்களிப்பதை தடுத்து நிறுத்தி அவர்களிடம் அவர்களைத் தாங்கள் வரவேற்கவில்லை என்று கூறினர்.

ஆயினும் கடும் எச்சரிக்கை செய்தாக வேண்டும். PSOEக்கோ, அல்லது முதலாளித்துவ ஆதரவு கட்சிகளின் ஏதோ தொடர்பான கூட்டணிக்கோ வாக்களிப்பது, அதிவலது வளர்வதை தடுத்துவிடாது அல்லது ஸ்பெயினில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக தாக்குதல்களை தடுத்து நிறுத்திவிடவும் முடியாது. PSOE ஆனது ஐரோப்பிய ஒன்றிய சிக்கனப் பொருளாதாரக் கொள்கைகளை திணிப்பதையும் ஆப்கானிஸ்தானிலும் அதற்கு அப்பாலும் ஏகாதிபத்திய போர்களை தொடுக்கும் தசாப்தகால நீண்ட சான்றைக் கொண்டிருக்கிறது.

அதிவலதானது PSOE ஆட்சியின் கீழ் குறைவின்றி தொடர்ந்து அதிகரித்து வந்தது. பிரான்சில் பாரிசில் 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் நவ பாசிஸ்டுகளை எலிசே ஜனாதிபதி அரண்மனைக்கு அழைத்ததும் பிரெஞ்சு அரசியலில் அவர்களின் பங்கை இயல்பாக்கியதும் சோசலிஸ்ட் கட்சி (PS) தான். ஜேர்மனியில், சமூக ஜனநாயக அலுவலர்கள் மாபெரும் கூட்டணி அரசாங்கத்தில் அமர, அதன் அமைச்சர்கள் நவ-நாஜிகளின் அணிவகுப்புக்களைப் புகழ, அப்போது யூத வணிகங்கள் தாக்கப்பட்டன.

ஸ்பெயினில் சமூக ஜனநாயகவாதிகளின் கொளகைகள் அதிவலதின் செல்வாக்கின் வளர்ச்சியை தடுக்கவில்லை, மாறாக மேலும் வலுப்படுத்தின. பொடேமோசின் ஆதரவை அனுபவித்த அதேவேளை, சான்செஸ் அரசாங்கம் சிக்கனப் பொருளாதார வரவு-செலவுத் திட்டங்களை அமல்படுத்தியது, இராணுவத்திற்கு மில்லியன் கணக்கான யூரோவை செலவழித்தது மற்றும் அக்டோபர் 2017 கட்டலான் சுதந்திர பொதுவாக்கெடுப்பை ஒழுங்கு செய்ததற்காக, கட்டலான் தேசியவாத தலைவர்களை கிளர்ச்சிசெய்ததாக குற்றம் சாட்டி, ஜோடனை வழக்கை மேற்பார்வை செய்தது. சாஞ்செஸ் உட்பட PSOE அலுவலர்கள், இந்த பொதுவாக்கெடுப்பின் போது அமைதியான முறையில் வாக்களித்த வாக்காளர்கள் மீது மக்கள் கட்சி பிரதமர் மரியானோ ரஹோய் இன் கொடூரமான பொலீஸ் வன்முறையை பாராட்டினர்.

PSOE கீழ், அதன் இராணுவவாதத்தையும் தேசியவாதத்தையும் முடிவற்ற வகையில் முன்னணிக்கு உயர்த்துவதுடன், கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகளை தற்போதும் நடத்திவரும் அதன் தொடர்ந்த துன்புறுத்தலுடன் சேர்த்து ஆளும் வர்க்கமானது பிற்போக்கு அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது, அது வோக்ஸை பலப்படுத்த மட்டுமே செய்தது. வோக்ஸ் 24 இருக்கைகள் மட்டுமே பெற்றிருந்தாலும் உத்தியோகபூர்வ ஸ்பானிய அரசியலில் அதன் தொனியை அமைத்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வோக்ஸ் அலுவலர்கள் சிறுஅளவிலான வெறித்தனமான பேரணியை நடத்தினர், சுதந்திர பொதுவாக்கெடுப்பை நடத்திய முன்னாள் கட்டலன் பிராந்திய முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் (Carles Puigdemont) ஐ கண்டனம் செய்து தேசியவாத முழக்கங்களை எழுப்பினர். “கார்லெஸ் புய்க்டெமொன்ட் சிறையில்!” என திரும்பத்திரும்ப முழங்கினர்.

சக்திகளின் அரசியல் வண்ணம் எதுவாயினும் PSOE இறுதியில் அரசாங்கத்திற்குள் கொண்டுவந்துவிடும், அது தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கும் மற்றும் அதிவலது மேலும் வளர்வதற்கு வளமான நிலத்தை உருவாக்கும். ஐரோப்பா முழுவதும் வோக்ஸ் மற்றும் அதேபோன்ற அதி-வலது கட்சிகள் வளர்வதற்கு எதிராகப் போராட ஒரே வழி, வரவிருக்கும் ஸ்பானிய அரசாங்கம் உட்பட, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியற் போராட்டத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும்.

மக்கள் கட்சி - குடிமக்கள் கட்சி - வோக்ஸ் கூட்டணியோடு ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான 176 வாக்கு பெரும்பான்மை குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள நிறைவேறுதற்குரிய சாத்தியமானவை PSOE - குடிமக்கள் கட்சி அல்லது ஒரு PSOE – பொடேமோஸ் - கட்டலான் தேசியவாதிகள் கூட்டணி ஆகும். வலதுசாரி குடிமக்கள் கட்சி PSOE ஐ கட்டலான் தேசியவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் துரோகிகளின் கட்சி என திரும்பத்திரும்ப கண்டித்தது, மற்றும் கடந்த இரவு குடிமக்கள் கட்சித் தலைவர் Alberto Rivera, PSOE உடன் கூட்டுச்சேர்ந்து ஒரு அரசாங்கம் அமைப்பதை நிராகரித்தார். “கெட்டசெய்தி சான்சேஸ் மற்றும் பொடேமோஸ் பொதுச்செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் ஒரு அரசாங்கத்தை நிறுவுவர்” என்று அவர் தெரிவித்தார்.

அவருக்கு முன்னே கூடிய கூட்டத்தை உற்சாகப்படுத்த, வெளிப்படையான வலதுசாரி கட்சியான குடிமக்கள் கட்சியுடன் ஒரு கூட்டை இன்னும் கருதிப்பார்ப்பதாக சான்செஸ் குறிப்பிட்டார்: “நாம் அவர்கள் போல் செயல்படமாட்டோம். அவர்கள் PSOE உடனான உறவுகளை தடுப்பதற்கு தடைகளை வைப்பர்” என சான்செஸ் குறிப்பிட்டார். “எமது இடதுசாரி கருத்துக்கள் மற்றும் எமது முற்போக்கு நிலைப்பாட்டின் அடிப்படையில், அரசியற் சட்ட அமைப்பு முறைக்குள்ளே செயற்படக்கூடிய அனைத்து சக்திகளுக்கும் எமது கரங்களை நீட்டுவோம்.”

குடிமக்கள் கட்சி சான்செஸின் ஆர்வங்களுக்கு தொடர்ந்து முண்டுகொடுக்குமா, அது தோன்றுவதுபோல, அவரது அரசாங்கத்தை அமைப்பதற்கு, சான்செஸ் காங்கிரசில் ஆதரவிற்காக கட்டலான் தேசியவாதகளை நம்பி இருக்கப் போகிறாரா — கட்டலன் தேசியவாத அலுவர்களை கிளர்ச்சி செய்தார்கள் என்ற பொய்புனைவு வழக்குகளின் பேரில் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்திருக்கும் நிலையிலும் கூட. கட்டலோனியாவின் கட்டலான் தேசியவாத குடியரசு இடது மற்றும் கட்டலோனியாவுக்கு ஒன்று சேர்வோம் (Together for Catalonia) முறையே 15 மற்றும் 7 இருக்கைகளை வென்றன; பாஸ்க் தேசிய கட்சி (PNV) 6 இருக்கைகளை வென்றது PSOE-Podemos ஒரு குறுகிய பெரும்பான்மை கூட்டரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்பானிய காங்கிரசில் அவர்களுக்குப் போதுமான பலம் இருக்கிறது.

ஆயினும் இத்தகைய வெளிப்பாடு, சான்செஸின் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பிரதான காரணங்களுள் ஒன்றான தனது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தல் என்பதை வெட்டிச் செல்கிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுப்பதற்கு பொடேமோஸ் மற்றும் கட்டலான் தேசியவாதிகளிடம் தங்கி இருந்த, சிறுபான்மை PSOE ஆல் பிப்ரவரியில் தேர்தல்கள் கோரப்பட்டன. கட்டலன் தேசியவாத கட்சிகள் தங்களின் தலைவர்கள் முன்னணி உறுப்பினர்கள் மேல் பிற்போக்கு பொய்புனைவு வழக்குகளைப் போட்டபொழுது, அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக சான்செஸின் வரவு-செலவு திட்டத்திற்கு வாக்களிக்க மறுத்துவிட்ட பொழுது சான்செஸ் அரசாங்கம் கவிழ்ந்தது. சான்செஸ் மீண்டும் அதே சக்திகள் மீது நம்பிக்கை வைப்பாரா, அவரது அரசாங்கம் மீண்டும் பெரும்பாலும் கவிழக்கூடும் எனத் தோன்றுகிறது.

பொடேமோஸை பொறுத்தவரை, தீவிர மாற்றத்திற்கான ஒரு கட்சி என என்னென்னவோ சில தப்பிப் பிழைத்திருப்பதற்கான பாசாங்குகளைக் கொண்டிருந்தாலும், தேர்தல் அவற்றை அம்பலப்படுத்தி இருக்கிறது. பதிலாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் தேர்தலுக்குப் பின்னர் நேற்றிரவு தனது நிலையை தெளிவுபடுத்தினார் — அவரது ஆற்றல்கள் பிராங்கோவிற்கு-பிந்தைய காலத்தில் ஸ்பானிய முதலாளித்துவத்தால் ஆளும் கட்சியாக விரும்பப்பட்ட PSOE க்கான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு வேலைசெய்வதை நோக்கி உள்ளது என தெளிவாக குறிப்பிட்டார்.

“ஒருவகை நல்ல முடிவைப் பெறவே விரும்புகிறோம், நாம் விரும்புவதை செய்வதற்கு அவர்கள் போதும்” என்றார் இக்லெஸியாஸ். “முற்போக்கு சக்திகள் வலதுசாரி கூட்டைவிட அதிகம் சேரும், மற்றும் கட்டலோனியாவிலும் பாஸ்க்கிலும் தேர்தல்கள் முடிவுகள் காட்டுவதுபோல ஸ்பெயின் ஐயத்திற்கிடமில்லாத வகையில் பல்தேசியம்தான்.” கட்டலான் மற்றும் பாஸ்க் தேசியவாதிகளுடன் வெளிப்படையாகப் பேசுவதற்கு சான்செஸிற்கு அழுத்தம் கொடுப்பதாக இக்லெஸியாஸ் மேலும் கூறினார். “நான் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு முன்மொழிந்திருக்கிறேன். இதுவரை பேசத் தொடங்குவதற்கான நிலையில் மட்டும் நாங்கள் விடப்பட்டிருக்கிறோம்.”