ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ruling conservatives, social democrats collapse in EU elections

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் ஆளும் பழமைவாதிகளும், சமூக ஜனநாயகவாதிகளும் பாரிய தோல்வியுற்றனர்

By Alex Lantier
27 May 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளில் ஒவ்வொன்றும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையே ஒரு நாளில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான அதன் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பின்னர், நேற்று ஐரோப்பிய தேர்தல்கள் நிறைவடைந்தன. பல தசாப்தங்களாக மேற்கு ஐரோப்பாவை ஆட்சி செய்து வந்துள்ளதும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச முதலாளித்துவ மீட்டமைப்புக்குப் பின்னர் 1992 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டமைத்த கட்சிகளான, பழமைவாத மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் ஒரு கடுமையான தோல்வியாக அதன் முடிவு இருந்தது.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான பிற நாடுகளில், ஒருசமயத்தில் நாடாளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்தி இரு-கட்சி ஏகபோகத்தை உருவாக்கிய இக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக 50 சதவீத வாக்குகளைக் கூட ஜெயிக்க தவறின. பெரும்பாலான வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தனர். பழமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளை மட்டுமல்லாது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அதிகரித்து வரும் சமூக போராட்டத்தை எதிர்த்து வந்துள்ள தொழிற்சங்கங்களுடன் பிணைந்த குட்டி-முதலாளித்துவ வெகுஜனவாத கட்சிகளையும் வாக்காளர்கள் தண்டித்தனர்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடையாளம் காணப்படும் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறை கொள்கைகளை, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலை எதிர்க்கின்ற நிலையில், அந்த கட்சிகள் ஆதரவை இழந்துவருகின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு இடையே, ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட ஊதிய உயர்வின்மைக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் பேர்லினில் இருந்து ஜேர்மனி, போர்ச்சுக்கல் மற்றும் பெல்ஜியத்தின் பிற பிரதேசங்களுக்கும் முன்நகர்ந்துள்ளது. அதேநேரத்தில், கிழக்கு ஐரோப்பா எங்கிலும் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன, இத்துடன் போலாந்து ஆசிரியர்களின் தேசிய வேலைநிறுத்தம் மற்றும் சம்பளமின்றி மிகைநேர வேலையைக் கட்டாயமாக்கும் ஹங்கேரியின் "அடிமை சட்டத்திற்கு" எதிரான போராட்டங்களும் சேர்ந்துள்ளன.

ஆனால் தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் எதிர்ப்பு, அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. காலநிலை மாற்றத்திற்கு எதிராக பெருந்திரளான இளைஞர் போராட்டங்களுக்குப் பின்னர் உடனடியாக நடந்திருந்த இந்த தேர்தல்களில், சமூக ஜனநாயகவாதிகளுடன் நெருக்கமாக இணைந்துள்ள சில பசுமை கட்சிகள் அதிகரித்த ஆதரவை வென்றன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பாரம்பரிய ஆளும் கட்சிகளின் மதிப்பிழப்பிலிருந்து பிரதானமாக ஆதாயமடைந்தவை, ஐரோப்பா எங்கிலும் பெரும்பாலும், அதிவலது கட்சிகளாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஜாம்பவானாகவும் மக்கள்தொகையில் மிகப்பெரிய நாடாகவும் உள்ள ஜேர்மனியில் பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU-CSU) 28 சதவீத வாக்குகளும், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 15.5 சதவீதம் வாக்குகளும் வென்றன—இது முறையே 7 மற்றும் 11.8 சதவீதம் குறைவாகும். இப்போது CDU-CSU-SPD இன் தேசிய "மகா கூட்டணி" அரசாங்கம் வெறும் 43.8 சதவீத வாக்குகளே கொண்டுள்ளது. இடது கட்சி 2 சதவீத வாக்குகள் குறைந்து 5.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் பசுமை கட்சியும் நவ-பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு இரண்டும் முறையே 22 சதவீதம் மற்றும் 10.5 சதவீதத்திற்கு உயர்ந்தன.

ஜேர்மன் இளைஞர்கள் பாரியளவில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக திரும்பினர்: 30 வயதிற்கு கீழ் இருப்பவர்களில் 13 சதவீதத்தினர் CDU-CSU இக்கு வாக்களித்தனர், 10 சதவீதத்தினர் SPD இக்கு வாக்களித்தனர், அதேவேளையில் 33 சதவீதத்தினர் பசுமை கட்சிக்கு வாக்களித்தனர்.

மரீன் லு பென்னின் நவ-பாசிசவாத தேசிய முன்னணி (RN) 2014 தேர்தலில் மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LRM) கட்சியின் 22.1 சதவீதத்தை அதன் 23.3 சதவீத சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றதற்குப் பின்னர், ஐரோப்பிய தேர்தல்களில் மீண்டும் ஜெயித்தது. பசுமை கட்சியினர் 13.1 சதவீதத்துடன் மூன்றாம் இடம் பெற்றது. 1968 மே பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் ஆட்சியிலிருந்த பாரம்பரிய கட்சிகளான கோலிச குடியரசு கட்சியினர் (LR) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவை அவமானகரமாக முறையே 8.4 சதவீதம் மற்றும் 6.6 சதவீதத்திற்குச் சரிந்தன மற்றும் 2017 ஜனாதிபதி தேர்தலில் 20 சதவீத வாக்குகள் வென்ற ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise) வெறும் 6.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.

கடுமையாக மக்கள் செல்வாக்கிழந்துள்ள மக்ரோனுக்கு எதிரான "மஞ்சள் சீருடை" போராட்டங்களை ஆதரிக்காததற்காகவும் மற்றும் LFI அங்கத்தவர் ஆண்ட்ரியா கொட்டராக் (Andréa Kotarac) தேசிய பேரணிக்குக் கட்சி தாவியதாலும் LFI அடிவாங்கியது நிலையில், தேசிய பேரணியோ மக்ரோனுக்கு "உரிய எதிர்ப்பாளர்" என்ற கவசத்தைப் பெற முயன்றது. தேசிய பேரணி வேட்பாளர்களின் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா  (Jordan Bardella) பொருளாதார கொள்கையை "அவசரமாக மறுநோக்குநிலை" செய்யவும் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான புதிய தாக்குதல்களுக்கும் அழைப்பு விடுத்தார். பார்டெல்லாவும் லு பென்னும் புதிய பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தார்கள்.

பிரிட்டனில் எண்ணப்பட்ட ஏறத்தாழ அனைத்து முடிவுகளையும் வைத்து பார்க்கையில், பாரம்பரிய ஆளும் கட்சிகளான தொழிற் கட்சி மற்றும் பழமைவாத கட்சிகளை முறையே 14.1 மற்றும் 9.1 சதவீதத்துடன் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்திற்கு தள்ளி, நைஜல் ஃபாராஜின் அதிவலது பிரெக்சிட் கட்சி 31.6 சதவீதத்துடன் வெற்றிகரமாக மேலெழுந்தது, தாராளவாத ஜனநாயகவாதிகள் 20.3 சதவீதம் பெற்றனர். பசுமை கட்சி 12.1 சதவீத வாக்குகளுடன் டோரிக்களைப் பின்னுக்குத் தள்ளியது.

டோரி கட்சியின் 185 ஆண்டுகால வரலாற்றில் பெற்ற மோசமான வாக்குகளின் அளவுக்கு இட்டுச்சென்ற, டோரி கிராமப்புற வாக்குகளின் பெரும் பகுதிகளைப் பிரெக்ஸிட் கட்சி அள்ளிச் சென்றது என்றாலும், பிரெக்ஸிட் க்கு ஆதரவான வடக்கு இங்கிலாந்தின் நகரங்களிலும் மற்றும் கார்டிஃப்பிலும் கூட முன்னுக்கு வந்தது. ஃபாராஜ், சென்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் ஜெயித்திருந்த அவரின் முந்தைய பிரிட்டன் சுதந்திரக் கட்சியின் ஏறத்தாழ அனைத்து வாக்குகளையும் பெற்றார். தொழிற் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் வாக்குகளைத் தாராளவாத ஜனநாயகவாதிகளிடம் இழந்தது, இவர்கள் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினின் இலண்டனில் உள்ள இஸ்லிங்டன் மாவட்டதையும் கூட கைப்பற்றினர். ஒட்டுமொத்தமாக இலண்டனில், தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற் கட்சிக்கு அடுத்ததாக பிரெக்ஸிட் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஸ்காட்லாந்தில், தொழிற் கட்சி ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் பெரும் வெற்றியால் துடைத்தழிக்கப்பட்டது.

பெல்ஜியத்தில், புதிய பிளேமிஸ் கூட்டணியின் (NVA) தோல்வியும் மற்றும் பாசிசவாத பிளேமிஸ் இன்ட்ரஸ்ட் (VB) கட்சியின் உயர்ச்சியும் முறையே 13.5 சதவீதம் மற்றும் 11.5 சதவீதம் வாக்குப்பெற இட்டுச்சென்று, பிரெஞ்சு மொழி பேசும் பகுதி சோசலிஸ்ட் கட்சிக்கு (PS, 10.5 சதவீதம்) முன்னே அவ்விரு கட்சிகளையும் கொண்டு வந்தது. பசுமை கட்சியின் பிரெஞ்சு பிரிவு மற்றும் பிளேமிஸ் பிரிவு ஒட்டுமொத்தமாக 15 சதவீதம் வென்றன. ஐரோப்பிய தேர்தல்களுக்கு சமாந்தரமாக பொது தேர்தல்களும் நடந்ததால், பெல்ஜிய தேசிய அரசாங்கத்தில் VB ஐ சேர்ப்பதில்லை என்ற பிற முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையிலான "ஆரோக்கிய வளாகம்" என்றழைக்கப்படும் உடன்படிக்கை தோல்வியடையக் கூடுமென தெரிகிறது.

ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உட்பட சில நாடுகளில், ஏதோவொரு பாரம்பரிய ஆளும் கட்சி வெளியேற்றப்பட்டது. ஆஸ்திரியாவில், அதிவலது ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஆஸ்திரிய துணை சான்சிலருமான Heinz Christian Strache ரஷ்ய செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கருதியவர்களுடன் ஊழல் உடன்படிக்கைகளை ஏற்படுத்த முயன்றதை ஒரு காணொளி அம்பலப்படுத்தியதும் அக்கட்சி ஓர் ஊழலை முகங்கொடுத்திருந்த நிலையில், சான்சிலர் செபஸ்தியான் கூர்ஸ் இட் ஆஸ்திரிய மக்கள் கட்சி (ÖVP) 35 சதவீத வாக்குகளை வென்றது. சமூக ஜனநாயகக் கட்சி (SPÖ) 24 சதவீதம் வென்றது மற்றும் FPÖ சுமார் 7 சதவீதம் குறைந்து 17.5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது.

நெதர்லாந்தில், பிரதம மந்திரி மார்க் ரூட்டேயின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கட்சிக்கும் (VVD, 15 சதவீதம்) மற்றும் Thierry Baudet இன் அதிவலது ஜனநாயகத்திற்கான பேரவை (11 சதவீதம்) இடையே கடுமையான விவாதங்களுக்குப் பின்னர், தொழிற் கட்சி (PvdA) வெறும் 18 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது என்றாலும் ஓர் ஆச்சரியமான முதலிடத்தை வென்றது.

ஸ்பெயினில், ஐரோப்பிய தேர்தல் முடிவுகள் பெரிதும் சமீபத்திய பொது தேர்தல்களையே பிரதிபலித்தன, அது பாசிசவாத Vox கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியை (PSOE) நோக்கி கணிசமான வாக்குப்பதிவுகளைக் கண்டது. PSOE 30 சதவீதம் பெற்றது, வலதுசாரி மக்கள் கட்சி (PP) மற்றும் குடிமக்கள் கட்சி 19.5 சதவீதம் மற்றும் 14 சதவீதம் பெற்றன, மற்றும் பொடெமோஸ் தலைமையிலான கூட்டணி 11 சதவீதம் பெற்றது. Vox கட்சி ஆறு சதவீத வாக்குகள் பெற்றது. இது ஜேர்மன் இடது கட்சி மற்றும் அடிபணியா பிரான்சின் ஸ்பானிய கூட்டாளியான பொடேமோஸ் தலைமையிலான கூட்டணிக்கு கணிசமான வீழ்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்தது, இவற்றின் கூறுபாடுகள் கடந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் 18 சதவீதம் வென்றிருந்தது.

கிரீஸில், வலதுசாரி புதிய ஜனநாயகம் கட்சி, 27 சதவீத வாக்குகள் பெற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிசா (“தீவிர இடது கூட்டணி”) அரசாங்கத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி, 34 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

ஆனால் ஐரோப்பா எங்கிலும் பெரும்பாலும், அதிவலது கட்சிகளே முதலாளித்துவ அரசியலின் மீது அவற்றின் பிடியைப் பலப்படுத்தின. இத்தாலிய உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியின் அதிவலது லெகா கட்சி 30 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகித்தது. 22 சதவீதத்துடன் ஜனநாயகக் கட்சி (PD) சிறிய வித்தியாசத்தில் ஐந்து நட்சத்திர இயக்கத்தை (M5S, 21 சதவீதம்) ஒரங்கட்டியது, அதேவேளையில் சில்வியோ பெர்லுஸ்கோனியின் போர்ஸா இத்தாலியா (FI) வெறும் 10 சதவீதத்திற்குச் சரிந்தது. ஐந்து நட்சத்திர இயக்கத்தை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றவும் மற்றும் இத்தாலியில் ஒரே கட்சியாக லெகா அரசாங்கத்தை நிறுவவும் சல்வீனி புதிய தேர்தலுக்கு அழுத்தமளிப்பார் என்ற ஊகம் நிலவுகிறது.

பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிவலது கட்சிகள் முன்னேறின. ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பனின் ஃபிடெஸ் கட்சி (Fidesz) 56 சதவீத பெரும்பான்மை வென்று, சமூக ஜனநாயகவாதிகளை 10 சதவீதத்திற்கும் மற்றும் பாசிசவாத ஜொப்பிக் கட்சியை 9 சதவீதத்திற்கும் பின்னுக்குத் தள்ளியது. போலாந்தில், ஆளும் கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) 43 சதவீத வாக்குகள் வென்று 38.4 சதவீதம் பெற்ற ஐரோப்பிய கூட்டணியைத் தோற்கடித்தது.

சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் கோபத்தால் உந்தப்பட்டு, ஐரோப்பா எங்கிலுமான உழைக்கும் மக்கள் அதிகரித்தளவில் போராட்டத்திற்குள் நுழைந்து வருகையில், ஆளும் உயரடுக்கு சற்றும் சளைக்காமல் வலதுக்கு மாறி வருகிறது என்பதையே ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் மேற்கொண்டும் உறுதிப்படுத்துகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போல, இப்போதைக்கு, ஒரு பாரிய-பாசிசவாத இயக்கம் அபிவிருத்தி அடையவில்லை. ஆனால் அதிகரித்து வரும் சமூக கோபத்தை முகங்கொடுத்து, ஆளும் வர்க்கம் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை ஆயுதப்படைகளுக்குள் பாய்ச்சி வருவதுடன், “மஞ்சள் சீருடையாளர்கள்" மீதான மக்ரோனின் தாக்குதலைப் போல வன்முறையாக ஒடுக்குமுறைகளை நடத்தி வருவதுடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறைச்சாலைக்கு நிகரான முகாம்களின் ஒரு பரந்த வலையமைப்பைக் கட்டமைத்து வருகிறது.

ஐரோப்பிய-ஒன்றியத்தை ஆதரிக்கும் பாரம்பரிய கட்சிகளுக்கும் இத்தகைய பிரச்சினைகளில் அதிவலது கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஏறத்தாழ முற்றிலும் வெளியுறவு கொள்கை மீதான தந்திரோபாய விடயங்களில் உள்ளன, அதாவது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான ஐரோப்பிய ஆயுதப் படைகளைக் கட்டமைப்பதற்கான ஒரு நடைமுறைரீதியிலான வாகனமாக இருக்குமா என்பதில் உள்ளது. இது, பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லி "ஒரு நிராயுதபாணியான ஐரோப்பா வேண்டாம் என்றால்" மக்ரோனின் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் ஓர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கும் அழைப்புவிடுத்ததில் பூரண வெளிப்பாட்டைக் கண்டது. அனுமானித்தக்கவாறு, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் வலதை நோக்கி தீவிரமாக திரும்புவது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெகுஜனவாத எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்வதற்கு அதிவலதை அனுமதிக்கிறது.

ஐரோப்பா எங்கிலுமான முதலாளித்துவ-ஆதரவு கட்சிகளின் ஒரு கூட்டணியான பசுமைக் கட்சிகளை போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் கட்சிகளை நோக்கி திரும்புவதன் மூலமாக இதை எதிர்க்க முடியாது, இவர்கள் பல தசாப்தங்களாக பழமைவாதிகளும் சமூக ஜனநாயகவாதிகளும் பின்பற்றிய பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக பெருந்திரளான மக்களின் சமூக கோபத்திலிருந்து தகுதியின்றி ஆதாயமடைந்து வருகின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் மிகப் பெரிய பசுமை கட்சியான ஜேர்மன் பசுமை கட்சியின் முன்வரலாறு அவர்களின் ஏகாதிபத்திய அரசியலுக்குச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. 1990 களில் அவர்களின் அமைதிவாத பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு நேட்டோவின் பால்கன் போர்களை ஆதரித்த அவர்கள், மக்களால் வெறுக்கப்பட்ட ஹார்ட்ஸ் IV சிக்கன சட்டங்களை நடைமுறைப்படுத்த 2000 களில் SPD உடன் கூட்டணிக்குள் நுழைந்தனர்.

அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை நோக்குநிலை பிறழச் செய்யவோ அல்லது நசுக்கவோ அவற்றின் அதிகாரத்தில் அனைத்தையும் செய்துள்ள, ஜேர்மன் இடது கட்சி, அடிபணியா பிரான்ஸ், கோர்பின், பொடெமோஸ் அல்லது சிரிசா போன்ற அயோக்கியர்களைப் போல, இவர்களும் அதிகரித்து வரும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு விரோதமாக இருப்பதுடன் அவற்றிலிருந்து தூர விலகி இருக்கிறார்கள்.

அனைத்து சமூக போராட்டங்களுக்கும் நிதியியல் பிரபுத்துவத்தின் விட்டுக்கொடுப்பற்ற நிராகரிப்பும், மற்றும் அதன் ஈவிரக்கமற்ற பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை கொள்கையை முகங்கொடுத்து, ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இப்போது முகங்கொடுக்கும் தீர்க்கமான கேள்வி புரட்சிகர போராட்டத்திற்குத் திரும்புவதே ஆகும்.

ஒரு பொதுவான சோசலிச புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமையின் மீது ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்க போராட்டங்களை ஐக்கியப்படுத்த இப்போது தொழிலாள வர்க்க போராட்டங்களை நோக்கி திரும்புவதாகும். இந்த நோக்கத்திற்காக தான் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) வேட்பாளர்களை நிறுத்தியது என்பது உட்பட, ஐரோப்பா எங்கிலுமான நாடுகளில் ICFI ஐ கட்டமைக்கும் போராட்டத்தைத் தொடங்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகள் தேர்தல் பிரச்சாரத்தில் தலையீடு செய்தன.