ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists to hold “Free Julian Assange” rallies in Chennai and Kolkata

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் “ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்” என்னும் தலைப்பில் சென்னை மற்றும் கொல்கத்தாவில் கூட்டங்களை  நடத்த உள்ளனர்

19 July 2019

ஜூலியன் அசான்ஜை விடுவிப்பதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்தின் பாகமாக, செப்டம்பர் மாதம் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் முறையே கூட்டங்களை நடத்துவார்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் குழு இரண்டு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கின்றனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் அமெரிக்க  இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங் ஆகியோர் வர்க்கப் போர் கைதிகள் ஆவார். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளை தைரியமாக அம்பலப்படுத்தியதற்காக அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

அசான்ஜ், ஏப்ரல் 11 அன்று லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, இங்கிலாந்தின் குவாண்டநாமோ என அழைக்கப்படும் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2010 இல் அமெரிக்க போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய செல்சியா மானிங், அசான்ஜிற்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைவாசம் நீதியைக் கேலிக்கூத்தாக ஆக்குவதாக உள்ளது. இது அவரது சாட்சியத்தை, அசான்ஜிற்கு எதிராக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவரை கட்டாயப்படுத்துவதாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஜூன் 20 அன்று அசான்ஜை விடுவிப்பதற்கான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உலகளாவிய பாதுகாப்புக் குழுவை அமைக்க அழைப்பு விடுத்தது. இந்த சர்வதேச முன்முயற்சி கிரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விக்கிலீக்ஸின் அதிக எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் இந்தியாவில் இருந்ததாக அசான்ஜ் 2010 ஆம் ஆண்டில் குறிப்பிட்டார், அது, ஊழல் நிறைந்த இந்திய அரசியல்வாதிகள் மற்றும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த இந்திய முதலாளிகள் குறித்த அதிர்ச்சி ஏற்படுத்தும் பதிவுகளை இந்த வலைத் தளம் வெளியிட்ட பின்னர் நிகழ்ந்ததாகும். இவை வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அசான்ஜை முக்கிய இந்திய தொலைக்காட்சி சேனல்கள் பேட்டி கண்டன.

இருப்பினும், அப்போதிருந்து, இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் குறித்து ஒரு மவுனத்தை கடைப்பிடித்து வருகின்றன. இந்த நிலைப்பாடு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு அரசியல் மாற்றத்துடனும் மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு மூலோபாய பங்காளியாக மாற்ற 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவோடும் பிணைந்துள்ளது.

அசான்ஜ் மற்றும் மானிங்கை உண்மையை அம்பலப்படுத்தியதற்காக தாக்கப்பட்ட தைரியம்மிக்கவரகளாகவே மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் சரியாக காண்கின்றார்கள். சிறைவாசம் மற்றும் அவர்களின் சட்ட உரிமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை எதிர்ப்பவர்கள் அனைவரும் அணிதிரட்டப்பட வேண்டும். அசான்ஜ் மற்றும் மானிங்கின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான ஒரே வழி, இராணுவவாதம், போர் மற்றும் அவற்றுக்கு மூலகாரணமாக இருக்கும் முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை வளர்த்தெடுப்பதாகும்..

அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிப்பதற்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் மற்றும் நடக்கவிருக்கும் இந்திய கூட்டங்களை கட்டி எழுப்ப முன்வருமாறும், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

சென்னை

தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி .

இடம்: கல்யாண மண்டபம், தான்தோன்றி அம்மன் கோயில் (ஸ்ரீபெரம்புதூர் பஸ் முனையம் அருகில்).

கொல்கத்தா

தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 15 மாலை 3 மணி

இடம்: இந்திய சங்கம், 62 பி.பி. கங்குலி தெரு, கொல்கத்தா 700012

(மத்திய மெட்ரோவுக்கு அருகில், கேட் எண் 4, வலதுபுறம் திரும்பவும்).