ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP (Sri Lanka) to hold Free Assange meetings and demonstrations

(சோ.ச.க.) இலங்கை அசான்ஜை விடுதலை செய்வதற்கான கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது

6 July 2019

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கையும் விடுதலை செய்வதற்கான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.

 

 

ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான ஹட்டனிலும் நடைபெறவிருக்கிறது.

அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள அசான்ஜ், அவர் தஞ்சம் கோரியிருந்த லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து பிணை நிபந்தனைகளை மீறியதாக போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரிட்டிஷ் பொலிசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர் இப்போது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலையும், அவரை மௌனமாக்குவதற்கும் அழிப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 170 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றார்.

அசான்ஜிற்கு எதிராக சாட்சியமளிக்க தைரியமாக மறுத்ததற்காக மானிங் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஜூன் 20 அன்று அசான்ஜ் மற்றும் மானிங்கின் சுதந்திரத்தை பாதுகாக்க உலகளாவிய பாதுகாப்புக் குழு ஒன்றை அமைக்க ஒரு சக்திவாய்ந்த அழைப்பை வெளியிட்டது. இந்த அழைப்பின் அடிப்படையில் ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு, உலகம் பூராகவும் உள்ள அதன் சகோதரி கட்சிகளுடன் இணைந்து, இலங்கையில் சோ.ச.க. பிரச்சாரம் செய்கிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அசான்ஜ் மகத்தான சேவையை வழங்கியுள்ளார். போருக்கான உந்துதலுக்கு எதிராக அவர் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டு, ​​அது தொடங்கப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே அதைக் கைவிட்டதில், போருக்கான உந்துதல் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.​

அசான்ஜ் அமைதியாக இருந்திருந்தால், அது கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்க எல்லா இடங்களிலும் உள்ள அரசாங்கங்களையும் ஊக்குவித்திருக்கும். இலங்கையில், அரசாங்கம் அவசரகால சட்டங்களை சுமத்தவும், இராணுவத்தை நிலைநிறுத்தவும், கருத்து சுதந்திரத்தை பறிக்கவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலை பற்றிக் கொண்டுள்ளது.

அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிப்பதற்கான எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்கவும், ஒரு உலகளாவிய பிரச்சாரத்தின் பாகமாக இலங்கையில் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டியெழுப்பவும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன.