ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Corbyn makes his pitch to head a “caretaker government” to stop no-deal Brexit

ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்காக “காபந்து அரசாங்கத்திற்கு” தலைமை தாங்க கோர்பின் குரல் எழுப்புகிறார்

By Chris Marsden
16 August 2019

தொழிற் கட்சித் தலைவர் ஜெர்ரெமி கோர்பின் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மற்றும் பின் இருக்கை ஐரோப்பிய சார்பு கலகக்காரர்களுக்கும் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை எதிர்ப்பதற்கான போராட்டத்தை வழிநடத்த முன்வருவதாக கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.

பழமைவாத கட்சிப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் சுங்க வரி இல்லாத நுழைவு குறித்து ஒரு ஒப்பந்தமுமின்றி இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தடுக்கக்கூடிய ஒரே நபர் கோர்ப்பின் மட்டுமே எனக் கூறி, நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொனெல்ட் வலியுறுத்திய திட்டங்களைத்தான் கோர்பினுடைய கடிதம் முறைப்படுத்துகிறது.

கோர்பினின் கடிதமானது, தனது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும், சொந்த கட்சியில் உள்ள பிளேயரிசவாதிகளுக்கும் பின்னோக்கி வளைந்து மற்றும் அதேபோல் பெருவணிகர்களுக்கும் அவர் இதயத்தில் "தேசிய நலன்" மட்டுமே உள்ளதாக உறுதியளிப்பதாக பார்க்கப்படுகிறது.

"எங்கள், உங்கள் முன்னுரிமை, ஆழ்ந்த சேதத்தை உண்டாக்கும் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் நடவடிக்கை நாட்டின் மீது திணிக்கப்படுவதையும் வாக்காளர்களின் இறுதி முடிவினை மறுப்பதையும் தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் ஒன்றுகூடி செயல்பட வேண்டும்.”

“அரசாங்கத்தின் மீதான ஒரு வெற்றிகரமான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பினை” செப்டம்பர் ஆரம்பம்வரை தள்ளிவைத்துவிட்டு, “அதன் பின்னர் நான் எதிர் கட்சி தலைவராக, கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட நேரத்தில் பொது தேர்தலை அழைக்கும் நோக்கத்துடன் தற்காலிக அரசாங்கத்தை அமைக்க சபையின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முயல்வேன், அவ்வாறு செய்தால் சட்ட வரைவு 50 இன் அவசியமான நீடிப்பு பாதுகாக்கப்படும்” என கோர்பின் உறுதியளித்தார்.

அந்த பொதுத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான விதிமுறைகள் குறித்து பொது வாக்கெடுப்புக்கு தொழிற் கட்சி உறுதியளிக்கும், அதனுடன் சேர்ந்து இருப்பதற்கான விருப்பத்தேர்வும் உள்ளடங்கும் என்று கோர்பின் வாக்குறுதி அளித்தார்.

இந்த அடிப்படையில் அவர் தன் கடிதத்தைப் பெற்றவர்களான ஸ்காட்டிஷ், தேசிய கட்சியின் பொதுச்சபை தலைவர், இயன் பிளாக்போர்ட், தாராளவாத ஜனநாயக (Liberal Democrats) கட்சியின் தலைவர் ஜோ ஸ்வின்சன் (Jo Swinson), பிளேய்ட் சிம்ரு கட்சியின் லிஷ் சாவில் ராபர்ட்ஸ், பசுமைக் கட்சியின் கரோலின் லூக்காஸ் மற்றும் டோரி இணைந்த-ஐரோப்பிய ஒன்றிய சார்பு கலகக்காரர்கள் டொமினிக் கிறிவ், ஒலிவெர் லெட்வின், நிக் போல்ஸ், மற்றும் கரோலின் ஸ்பெல்மன் ஆகியவர்களுடன் கலந்துரையாடல்களைக் கேட்டார்.

எதற்கும் உத்தரவாதம் கிடையாது, ஆனால் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் மீட்பராக அவர் தேர்ந்தெடுத்த பாத்திரத்திற்காக பரிந்துரைக்கப்பட்டதில் கோர்பின் வெற்றிபெற எல்லாவித சாத்தியமும் உள்ளது.

பிளேயர்வாதிகள், தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் பலர் விரும்பிய தேர்வானது, கோர்பினை தற்காலிகமாகக்கூட எண் 10 க்குள் அனுமதித்து விடக்கூடாது என்பதாகும். இது, இந்த அரசியல் கோழைக்குப் பயந்து அல்ல, ஆனால் கோர்பினின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறக்கூடிய பாதைகளால் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களைக் கோருவதற்கான ஒரு சமிக்ஞையாக தொழிலாள வர்க்கம் இதைக் காணக்கூடும் என்று அவர்கள் எப்போதும் கவலைப்படுவதால் தான்.

ஸ்வின்சன் உடைய கட்சி பாராளுமன்றத்தில் 13 இடங்களை மட்டுமே கொண்டுள்ளதுடன், கோர்பினின் பரிந்துரைக்கு அவர் வெளிப்படையாகவே விரோதமாக இருந்தார். “போரிஸ் ஜோன்சனை தடுக்க கலகம் செய்யும் கன்சர்வேட்டிவ்களையும் சுயேட்சைகளையும் அவரால் ஒன்றிணைக்க முடியாது” என அப்பெண்மணி கூறினார். “தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து வாக்குகளையும் அவர் பாதுகாப்பார் என்பது கூட உறுதியாக தெரியவில்லை.”

துரிதமாக செயல்படவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை நீடிக்க சட்டத்தை நிறைவேற்ற முயலுதல் மற்றும் இரண்டாவது பொதுஜன வாக்கெடுப்பு நடத்தவும் நாடாளுமன்றம் பொறுப்பெடுக்க வேண்டும் என ஸ்வின்சன் விரும்பினார். இது சாத்தியமில்லை என்றால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுக்கப்படவேண்டும், “ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை நிறுத்தக் கூடியவராகவும் மற்றும் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைக் கொண்டுள்ளவராகவும் ஒரு அவசரகால அரசாங்கத்தை ஒரு மாற்று பிரதமருடன் நிறுவுதல் வேண்டும்”. மூத்த அனுபவமுள்ளவர்களான இணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டோரி பாராளுமன்ற உறுப்பினர் கென் கிளார்க் அல்லது தொழிற் கட்சியின் ஹாரியட் ஹேர்மன் ஆகிய இவர்களில் ஒருவருக்கு கோர்பின் வழிவிட்டு ஒதுங்கவேண்டும். இவர்கள் இருவரோடும் ஜோ ஸ்வின்சன் தொடர்பில் இருந்தார்.

160 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ''எதிர்கால பிரிட்டன்'' குழு, இது தொழிற் கட்சியின் 247 சட்டமன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மையானவர்கள், இக் குழுவிற்கு தலைமை தாங்கும் ரொம் வாட்சன், பிளேயரிசவாதிகளின் தலைவருமாவார். ஜோ ஸ்வின்சன் இவருடன் கலந்துரையாடி வருகிறார். ரொம் வாட்சன் பிரெக்ஸிட்டுக்கான எதிர்ப்பு அடிப்படையில் தொழிற் கட்சியை உடைத்து ஒரு புதிய கட்சியை அல்லது '’தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை '’உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

பிளேயரிசவாதிகள் மற்றும் டோரியுடன் உடைத்து வெளியேறியவர்களின் கூட்டணியால் உருவாக்கப்பட்ட மாற்றத்திற்கான சுதந்திரக் குழுவின் தலைவியான அன்னா சூப்றி, மேலும் கூறுகையில் “ஜெர்ரெமி கோர்பினின் தலைமையிலான தேசிய ஒற்றுமை கொண்ட அரசாங்கத்தை நான் ஆதரிக்கமாட்டேன்” என்றார்.

ஆனால் சில பிளேயரிசவாதிகள் கூட, கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குட்பட்டு, கோர்பினுக்கு தற்காலிக ஆதரவை வழங்குவது அவசியமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் Wes Streeting கோர்பினின் பரிந்துரையை '’நிராகரிப்பது தவறு”, இது “மிக கவனமாக கையாளப்பட வேண்டும்” என்று கூறினார்.

ஒரு கவனமான கணிப்பாக இருக்கப்போவது, அவர் பெரும்பான்மையைக் காப்பாற்ற தவறும் பட்சத்தில், கோர்பின் இன்னும் கூடுதல் தூர எல்லைக்குச் சென்று ஒரு “ஐக்கியத்துக்கான தலைவருக்கு” வழிவிட்டுக்கொடுக்க இணங்கலாம். மற்றவர்களும் Streeting போலவே அதே கணிப்பைச் செய்துள்ளனர்.

SNP தலைவி நிக்கோலா ஸ்ரேர்ஜன் தனது 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக பிரதமராக ஆகும் கோர்பினின் தனக்கான திட்டத்தை ஆதரிக்க முடியும் என்று சமிக்ஞை காட்டியதுடன், மேலும் கூறுகையில், ஸ்வின்சன், “மறுபரிசீலனை செய்ய வேண்டும்”… ஜெர்ரெமி கோர்பினின் பரிந்துரை மட்டுமே சாத்தியமான ஒரே தேர்வு இல்லை ஆனால் தரப்பட்ட சூழ்நிலைக்குள், இந்தக் கட்டத்தில் எதுவும் நிராகரிக்கப்படக் கூடாது.” என வலியுறுத்தினார்.

இன்னொரு ஸ்காட்டிஷ் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதை தொழிற் கட்சி எதிர்க்காது என்று கோர்பின் மெக்டொனெல்லை எதிரொலித்த பின்னர், SNP இன் சாதகமான பதில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

பிளைட் சிம்ரு (Plaid Cymru) கட்சிக்காக லிஸ் சவில் கூறினார் “ஒரு ஐக்கிய அரசாங்கத்துக்கான திட்டத்திற்காக நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம்”. யார் அதை வழிநடத்துகிறார்கள் என்பது முக்கியமில்லை…”

“முன்நோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதைப் பார்க்க கோர்பினுடன் சேர்ந்து செயல்ப்பட தயவு செய்து எங்களுடன் இணையுங்கள்”. என்று பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரோலின் லூக்காஸ் ஸ்வின்சனை வற்புறுத்தினார். “ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், தற்காலிக அரசாங்கத்துக்காக” சட்டசபையின் நம்பிக்கையை கோர்பின் வெல்லத் தவறினால் பின்னர் அவர் கட்டாயம்” அதை செய்யக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும்…”

டோரி கட்சியின் க்ரீவ், லெட்வின், ஸ்பெல்மன் மற்றும் சுயேட்சைசையான நிக் போல்ஸ் ஆகியோர் கோர்பினுக்கு கடிதம் எழுதினர் “ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை தடுப்பதற்கு” ஒன்றிணைந்து செயல்பட அவர்களின் “பொதுவான முன்னுரிமையை” வலியுறுத்தினார்கள். இது கோர்பின் பிரதமராக வருவதற்கு ஆதரிப்பதை உள்ளடக்காது. ஆனால் “இது அடையக்கூடிய வெவ்வேறு வழிகளைப் பற்றி விவாதிக்கிறது.

கோர்பினின் பதில் அவரது நல்ல நோக்கங்களுக்கு மேலும் உத்தரவாதங்களை பரிந்துரைப்பதாக உள்ளது. வயதான கோர்பினுக்கு முடிந்தவரை அடுத்தபடியாக “இடது”வாரிசாக வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வணிக, எரிசக்தி மற்றும் தொழில்துறை வியூகத்திற்கான நிழல் செயலாளரான ரெபேக்கா லாங் பெய்லி, ஸ்வின்சனிடம் தனது மனதை மாற்றிக்கொள்ளுமாறு கெஞ்சினார். அப்பெண்மணி பிபிசி யிடம் கூறினார், "எங்களை போலவே ஒரு ஒப்பந்தமும் இல்லாது வெளியேறும் சூழ்நிலையை தவிர்க்க ஜோவும் விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும் மற்றும் இதைச் செய்வதற்கான எளிய மற்றும் ஜனநாயக வழி இதுதான் என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஆளுமைகள் மற்றும் அரசியல் பற்றியது அல்ல. இது தொழிலாளர் கொள்கையை செயல்படுத்துவது பற்றியும் இல்லை.”

அவர் எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருந்தார் என்பதை தெளிவுபடுத்திய லாங்-பெய்லி மேலும் கூறுகையில் “தலைவர் யார் என்பது முக்கியமற்றது.... கேள்வி என்னவென்றால், ஜெர்ரெமி இல்லையென்றால் அது யாராக இருக்கும்? மற்றும் அது எவ்வாறு தீர்மானிக்கப்படும்?”

தனது அரசியல் எதிரிகளுக்கு முன்பாக தன்னை கீழ்த்தரமாக தாழ்த்திக் கொள்ள கோர்பினின் தயார் நிலை அவரது மிக முக்கியமான முன்னணி ஆதரவாளர்களான Momentum அமைப்பு, Canary  வலைத் தளம் மற்றும் Skwawkbox வலைப் பதிவு ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவை கோர்பினின் கடிதத்தை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த தந்திரோபாயமாக சித்தரித்தனர்.

“இந்த முட்டுக்கட்டையின் போது தற்காலிக பிரதமராக பணியாற்ற கோர்பினின் முன்மொழிவை நிராகரிக்கும் மற்றும் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதற்கான லிபரல் டெமோகிரட்டின் எதிர்ப்பை மீண்டும் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என்று Momentum ட்வீட் செய்தது.

“கோர்பினின் முன்மொழிவுக்கான பதில் வியக்கவைப்பதாக இருக்கிறது. இது அடிப்படையில் கட்சிகளின் முகமூடிகளை விலக்க கட்டாயப்படுத்துகிறது,” என்று Canary க்காக ட்ரேசி கீலிங் எழுதினார்.

Skwawkbox அறிவித்தது, ''கடிதத்தை அனுப்புவதில் கோர்பினின் சதுரங்க காய்நகர்த்தல் மோசமான லிபரல் டெமோகிரட் ஜோ ஸ்வின்சன் உட்பட பெரும்பாலான மத்தியவாதிகளின் மொத்த பாசாங்குத்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது —ஆனால் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை நிறுத்துவதற்கான உண்மையான கொள்கைகள் கொண்ட டோரி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றியுள்ளது. முன்னாள் டோரி நிக் போல்ஸ் ஏற்கனவே கோர்பினின் திட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்."

கோர்பினுக்கும் அவர் ஒரு “காபந்து பிரதமராக” வருவதற்கும் இடையில் பெரும் தடைகள் உள்ளது. ஆனால் தொழிற் கட்சித் தலைவராக நான்கு ஆண்டுகள் கழித்து, வேலை இழப்புகள், சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவ வாதத்திற்கு எதிராக போராட்டத்தை வழிநடத்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவரை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், கோர்பின் இப்பொழுது அவர் மிக தீவிரமாக எதிர்ப்பதாக உறுதியளித்த சக்திகளுடன் அரசியல் கூட்டணிகளுக்காக இறைஞ்சுகிறார். மிகவும் முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பார்வையில், அவர் இந்த சமீபத்திய காட்டிகொடுப்பில் இருந்து ஒருபோதும் மீளமாட்டார்.