ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Dissolution of the USSR and the Unipolar Moment of US Imperialism

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்

By Bill Van Auken
13 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் மூத்த கட்டுரையாசிரியரான பில் வான் ஆகென், 2019 ஜூலை 25 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.

மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் திட்டமிட்டுக் கலைக்கப்பட்டும், 1991 ஜனவரியில் முதலாம் பாரசீக வளைகுடாப் போர் தொடக்கப்பட்டும் இப்போது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2003 ஈராக் ஆக்கிரமிப்புக்கு அனுப்பப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கிற்கும் அதிகமாக அரை மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்ட இந்தப் போர் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியில் தெளிவாக ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது.

அதேபோல நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் இது ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது. புறநிலை அபிவிருத்திகள், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் உருக்குலைவும், 1985 உடைவிலும் 1953 இல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதன்முறையாக மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கட்டுப்பாடு வலுப்பெறுவதிலும் உச்சமடைந்த பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான ICFI இன் நீண்டநெடிய போராட்டமும் ஒன்றோடொன்று சந்தித்தன. இது நான்காம் அகிலத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் ஒரு அடிப்படையான மாற்றத்தை சமிக்கை செய்தது.

அந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு, ICFI, சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு தலைமை கொடுக்கும் தீவிர அரசியல் பொறுப்புக்கு தோள்கொடுக்க விழைந்தது, 1991 நவம்பரில் பேர்லினில் நடந்த “போருக்கும் காலனித்துவத்திற்கும் எதிராக தொழிலாளர்களின் உலக மாநாடு” என்ற அசாதாரண முக்கியத்துவம் கொண்ட மாநாடு, (அதற்கு நாம் மீண்டும் வருவோம்) கூட்டப்படுவதில் இது ஸ்தூலமான வெளிப்பாட்டைக் கண்டது.

1991 வளைகுடாப் போரில் முழுமையடைந்த தன்னிச்சையாக செல்லல் மற்றும் இராணுவவாதத்தை நோக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூரிய திருப்பமானது அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடியுடனும் உலகப் பொருளாதாரத்தின் மீதான அதன் மேலாதிக்கம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி கண்டதனுடனும் பிணைந்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் மறைவை அடுத்து, அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் 1970கள் முதலாக வளர்ந்து வந்திருந்த ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள எதிரிகளிடம் இருந்து முகம்கொடுத்த சவாலை, இப்போது அமெரிக்கப் படைகளை ஒப்பீட்டளவில் தடையற்று பயன்படுத்துவதன் மூலமாக சமாளித்து விடலாம் என்ற முடிவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் வந்தது.


அழிக்கப்பட்ட வாகனங்களுடன் "மரண நெடுஞ்சாலை" என்றும் அழைக்கப்படும் நெடுஞ்சாலை 80, ஈராக்கிய படைகள் பாலைவனப் புயல் நடவடிக்கையின்போது குவைத்தில் இருந்து பின்வாங்கி தப்பி ஓடிய பாதை. [Credit: U.S. Air Force]

பாரசீக வளைகுடா விவகாரத்தில், அமெரிக்க இராணுவத்தைக் கொண்டு உலகின் மிக முக்கியமான எண்ணெய்-உற்பத்தி பிராந்தியத்தின் மீதான சவாலற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம், அது எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் ஆசிய ஏகாதிபத்திய போட்டி நாடுகளை அவற்றின் எரிசக்தி விநியோகத்தை வெட்டப் போவதாக அச்சுறுத்தி மிரட்டக்கூடிய ஒரு நிலையில் வாஷிங்டனை வைக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஜனாதிபதி ஜோர்ஜ் H.W. புஷ் பின்னர் அறிவித்ததைப் போல, வளைகுடாப் போரை நோக்கிய பயணத்தில், ஈராக் மீதான ஒரு தாக்குதலானது அமெரிக்காவுக்கு “மிக ஒத்திசைவான வர்த்தக உறவுகளுக்கு இட்டுச்செல்லத்தக்க ஊக்கத்தை” வழங்கும்.

இந்த அபிவிருத்தி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ICFI அதன் 1988 முன்னோக்குகள் தீர்மானத்தில் எச்சரித்திருந்தது:

அமெரிக்கா, அதன் பொருளாதார மேலாதிக்கத்தை தொலைத்திருந்தாலும், இராணுவரீதியாக மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடாக தொடர்ந்தும் இருக்கிறது, அத்துடன் உலக போலிஸ்காரரின் பாத்திரத்தையும் தனக்கு வரித்துக் கொள்கிறது. ஆயினும் 1945 இல், அமெரிக்காவின் நூற்றாண்டு என்பதாகச் சொல்லப்பட்டதன் தொடக்கத்தில் நிலவிய நிலைமைகள் மிகப்பெருமளவில் மாறிவிட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் அதன் வார்த்தையை முக்கிய முதலாளித்துவ நாடுகளில் “சட்டமாக” ஆக்கிய பொருளாதார மேலாதிக்கம் தொலைந்தமையானது அமெரிக்காவை முன்னெப்போதினும் அதிகமான அளவில் அதன் இராணுவ வலிமையின் மிருகத்தனமான பலத்தின் மீது சார்ந்திருக்கத் தள்ளுகிறது.[1]

1934 இல் ட்ரொட்ஸ்கி எழுதிய போரும் நான்காம் அகிலமும் இல் இருந்து மேற்கோள்காட்டி, ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனம் நிரூபணமாகவிருப்பதாக அறிவிக்கவும் அந்தத் தீர்மானம் சென்றது. “உலகம் பங்கிடப்பட்ட நிலையில் இருக்கிறதா? அது மறுபங்கீடு செய்யப்பட்டாக வேண்டும். ஜேர்மனிக்கு இது “ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும்” ஒரு பிரச்சினையாக இருந்தது. அமெரிக்காவுக்கு உலகையே ஒழுங்கமைத்தாக வேண்டியிருக்கிறது. மனிதகுலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புக்கு முகம்கொடுக்கும் நிலையை வரலாறு முன்கொண்டுவருகிறது.” இது இரண்டே ஆண்டுகளில் ஊர்ஜிதப்பட்டது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பான இந்த நிகழ்வுகளுக்கும் இப்போதைய உலக அரசியல் நிலைமைக்கும் இடையில் ஒரு நன்கறிந்த தொடர்ச்சி இருக்கிறது. பாரசீக வளைகுடா மீதான அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சண்டையானது ஈராக்கை விட மூன்றுமடங்கு அதிக மக்கள்தொகையும் நான்குமடங்கு அதிக நிலப்பரப்பும் கொண்ட நாடான ஈரானுடன் ஒரு புதிய மற்றும் இன்னும் பயங்கரமானதொரு போரை பற்றவைக்க அச்சுறுத்துகிறது. ஒரு இராணுவ மோதல் வெடிப்பு நேரம் மட்டுமே உறுதிப்படாத ஒன்றாய் இருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருகட்சி நிர்வாகங்களின் கீழும் அமெரிக்கா தொடர்ச்சியாகவும் தொடர்ந்து விரிந்து செல்கின்றதுமான போர்முனைப்பில் ஈடுபட்டதைக் கண்ணுற்று வந்திருக்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை கைப்பற்றுவதற்கும் அடிமைப்படுத்துவதற்குமான முனைப்பு என்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒருமனதான கொள்கையாக இருப்பதாகும். இதன் விளைவாக ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேரும் ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் ஏமன் எங்கிலும் நூறாயிரக்கணக்கிலானோரும் உயிரிழந்ததும் அடங்கும்.

இந்த பல்வேறு மோதல்களும் ஒரு மூன்றாம் உலகப் போராக உருமாற்றமடைவதற்கு அச்சுறுத்தும் நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. படைத்தலைவர்களின் தலைவராக பதவியேற்கவிருப்பவர், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு அணுஆயுத மோதலுக்கு தயாரிப்புகள் செய்வதுதான் இராணுவத்தின் முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று சமீபத்தில் திகிலூட்டும் விதத்தில் விவரித்தார். இதனிடையே Dr. Strangelove ஐ எல்லாம் விஞ்சக்கூடிய ஒரு கிறுக்குத்தனமாய் தோன்றக்கூடிய “கூட்டு கோட்பாடு” ஒன்றை பென்டகன் வெளியிட்டது. அது தெரிவிக்கிறது: “தீர்மானகரமான முடிவுகளுக்கும் மற்றும் மூலோபாய ஸ்திரநிலை மீட்சிகாண்பதற்கும் உரிய நிலைமைகளை அணு ஆயுதங்கள் உருவாக்க முடியும்”. குறிப்பாக, அணு ஆயுதங்களின் பயன்பாடு ஒரு யுத்தத்தின் வீச்சை அடிப்படையாக மாற்றி படைத்தளபதிகளை வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்குமாம்.

மூன்று தசாப்தகால இடைவிடாத போர்கள், ஒரு தொடர் படுதோல்விகளையே உருவாக்கியிருக்கிறது என்பதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றவாறாக, ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்தான “மூலோபாயப் போட்டி”க்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதிலும் ஆளும் வட்டாரங்களுக்குள் ஒரு கவலையான மனோநிலை நிலவுகிறது. அதேநேரத்தில், வாஷிங்டனுக்கும் அதன் முன்னாள் நேட்டோ கூட்டாளிகளுக்கும், குறிப்பாக அமெரிக்கா இரண்டு உலகப் போர்களில் எதிர்த்து சண்டையிட்டிருக்கின்ற ஜேர்மனிக்கும், இடையே முன்னெப்போதினும் கூர்மையான மோதல்கள் எழுந்து வருகின்றன.

உலகப் பொருளாதாரத்தின் பரஸ்பரசார்பு தன்மைக்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு தவிர்க்கவியலாமல் ஒரு புதிய உலகப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளின் கீழ், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பாக பிரகடனம் செய்யப்பட்ட “ஒற்றைத்துருவ தருணம்” முடிவுக்கு வந்துவிட்டதை பற்றி புலம்புகின்றதும், மற்றும் கடந்த காலத்தை ஒருவிதமான ஏக்கத்துடன் நினைவுகூருகின்றதுமான பல வருணனைகள் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்களால் உதிர்க்கப்பட்டு வருகின்றன.

“அமெரிக்க அதிகாரத்தின் சுய-அழிப்பு” என்ற தலைப்பில் CNN இன் பல-மில்லியன் அதிபதியும் அரைவேக்காட்டு போலி-புத்திஜீவியுமான ஃபரீட் சக்காரியா எழுதி Foreign Affairs இல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கருத்துக்கட்டுரையும் ஒன்று. அவர் எழுதுகிறார்:

“முதலாம் உலகப் போர் முடிந்தது முதலாக, அமெரிக்கா உலகை உருமாற்ற விரும்பி வந்திருக்கிறது. 1990களில், அது முன்னெப்போதினும் அதிக சாத்தியமானதாக தென்பட்டது. பூமிக்கோளமெங்கிலுமான நாடுகள் அமெரிக்க வழியில் நகர்ந்து கொண்டிருந்தன. வளைகுடாப் போரானது, சர்வதேச சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட ஒரு நிர்ணயத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டது என்ற விதத்தில், உலக ஒழுங்குக்கான ஒரு புதிய மைல்கல்லை அடையாளப்படுத்தியதாக காணப்பட்டது.”[2]

அமெரிக்கப் பாதை, உலக ஒழுங்கு, நிர்ணயங்கள் மற்றும் சர்வதேச சட்டம்: இந்த அடுக்குகள் ஒரு வெகுஜனப் படுகொலையை இப்படித்தான் இனிமையாக நினைவுகூருகின்றன.

“ஒற்றைத்துருவ தருணம்” என்ற கருத்தாக்கத்தை பிரபலப்படுத்திய அதி வலது-சாரி பத்தியாளரான சார்ல்ஸ் கிரவுத்தாமர் —இவர் Foreign Affairs இதழில் 1991 இல் அந்த தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்— என்ற மனிதருக்கும் சக்காரியா சிறப்பு அஞ்சலி செலுத்தினார். உலகெங்கிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க இராணுவ மூர்க்கத்தனத்தை தன்னிச்சையாக பயன்படுத்துகின்ற ஒரு மறைமுகமற்ற முன்னோக்கினை அவர் ஊக்குவித்தார்.

“இத்தகைய சமயங்களில் பாதுகாப்புக்கான நமது சிறந்த நம்பிக்கையானது .... அமெரிக்க வலிமை மற்றும் ஒரு ஒற்றைத்துருவ உலகத்தை தலைமைதாங்கி நடத்துவதற்கான விருப்பம், வெட்கப்படாமல் உலக ஒழுங்கிற்கான விதிகளை வகுப்பது மற்றும் அவற்றை அமுலாக்க தயாரிப்புடன் இருப்பது ஆகியவற்றில் தான் இருக்கிறது” என்று அவர் எழுதினார்.

அடுத்த பெரும் அமெரிக்கப் போருக்கான போலிக்காரணங்களை வழங்குமளவு அவர் முன்சென்றார்: “பேரழிவு ஆயுதங்களை பரப்பும் மற்றும் பயன்படுத்தும் அரசுகளை எதிர்கொள்வதற்கு, அவற்றை அவ்வாறு நடந்துகொள்ளாதபடி செய்வதற்கு மற்றும், அவசியமானால் அவற்றை நிராயுதபாணியாக்குவதற்கு வேறெந்த மாற்றுவழியும் இல்லை. அதைச் செய்வதற்கு அமெரிக்காவை தவிர்த்து வேறெவரும் இல்லை.”

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஒற்றைத்துருவ தருணத்தை தக்கவைத்துக் கொள்ள இயலாததாக நிரூபணமாகுமாயின் அது “வெளிநாட்டுக் காரணங்களினால் இருக்காது. ... மாறாக தேங்கிய உற்பத்தித் திறன், வழமையாக வேலைசெய்யும் முறைகள் வீழ்ச்சி காண்பது, சமூகநல உதவி பெறும் தேவை அதிகரித்துச் செல்வது மற்றும் சுற்றுசூழலியல் ஆடம்பரங்களை நோக்கிய புதிய விருப்பங்கள் ஆகிய உள்நாட்டுக் காரணங்களினாலேயே அமையும்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார். “பாதுகாப்பு செலவினங்கள் வீழ்ச்சி கண்ட நிலையில், உள்நாட்டு கோரிக்கைகளுக்கான செலவினங்கள் கிட்டத்தட்ட இருமடங்காக ஆகியிருக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார். எல்லாவற்றுக்கும் மேல், “செலவு செய்யாமல் மேலும் உயர்ந்த வாழ்க்கைத்தரங்களை எட்டுவதற்கான அமெரிக்காவின் தணிக்கவியலாத தாகத்தை” அவர் குற்றம்சாட்டினார்.

அதுவும், 1981 PATCO வேலைநிறுத்த உடைப்பை ஒட்டி தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களின் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் அவர் இவ்வாறு கூறுகிறார். அவரின் செய்தி தெளிவாக இருக்கிறது: வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரானது உள்நாட்டில் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதுடன் இணைந்தே நடாத்தப்படவேண்டும்.

புஷ்ஷுமே கூட, வளைகுடாப் போருக்கு முன்வந்த சமயத்தில், ஒப்பீட்டளவில் தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டிற்கு எதிராய், அமெரிக்காவின் இராணுவ வலிமை கட்டவிழ்த்து விடப்படுவது ஒரு “புதிய உலக ஒழுங்கை” தொடங்கி வைக்கவிருப்பதாக பிரகடனப்படுத்தினார்.

இந்த “புதிய உலக ஒழுங்கு” இல் என்ன இருக்கும் என்பது ஒருபோதும் விளக்கப்படவில்லை. பழைய உலக ஒழுங்கு முறிந்து போய் விட்டிருந்தது, முதலில், அமெரிக்க இராணுவ வன்முறையின் ஒரு வெடிப்புத்தான் அதனைப் பதிலீடு செய்யவேண்டும் என்ற ஒரேயொரு விடயம் மட்டும் தான் தெளிவாய் இருந்தது.

மேலெழுந்தவாரியான முதலாளித்துவ புத்திஜீவிகளால் “வரலாற்றின் முடிவு” என்றும் “முதலாளித்துவத்தின் வெற்றி” என்றும் கொண்டாடப்பட்ட கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பேரழிவுகரமான முறிவானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பழைய ஒழுங்கின் ஒரு முக்கியமான முட்டுக்காலை அகற்றி விட்டிருந்தது. மேலும், ஸ்ராலினிச தன்னிறைவுப் பொருளாதாரங்களை மரணகரமாக பலவீனப்படுத்திய முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகிய அதே சக்திகள் ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ ஒழுங்கையும் ஆழமான நெருக்கடிக்குள் இட்டுச் சென்றது.


யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்

 

எமது இயக்கம் இதனைத் தெளிவாக புரிந்திருந்தது. ஸ்ராலினிசத்தின் பொறிவு மற்றும் பாரசீக வளைகுடாவிலான போர் நெருக்கடி ஆகியவற்றை நோக்கிய எங்களது நிலைப்பாடு, ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சியால் முற்றிலும் விரக்தி நிலையில் விடப்பட்டிருந்த குட்டி-முதலாளித்துவ இடதுகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாய் இருந்தது. அவர்களின் இந்த அணுகுமுறைக்கு காரணம், தொழிலாள வர்க்கத்திற்கு முன்நிறுத்திய அபாயத்தைக் கொண்டு அல்ல, மாறாக அவை தங்கியிருக்கும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக சேவை செய்து வந்ததுமான அதிகாரத்துவ எந்திரம் மறைந்து விட்டிருந்ததாலாகும். “நூற்றாண்டின் ஒரு புதிய நள்ளிரவு” ஐ பிரகடனம் செய்து, அவர்கள் சோசலிசத்திற்கான எந்தவொரு பாசாங்கையும் அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான எந்தவொரு நடிப்பையும் கூட கைதுறந்தனர்.

நிகழவிருந்த வளைகுடாப் போரை நோக்கிய அனைத்துலகக் குழுவின் நிலைப்பாடு வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான டேவிட் நோர்த் 1990 ஆகஸ்ட் 30 அன்று கட்சியின் ஒரு சிறப்பு காங்கிரசுக்கு வழங்கிய அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற போரானது, ஒரு வறுமைப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட நாட்டிற்கு எதிராக ஒரு ஏகாதிபத்திய கொள்ளைக்கார நாடு சுமத்தும் போராக இருக்கிறது ... மத்திய ஆசியாவின் மிக முக்கியமான எண்ணெய் வளங்களின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகின்ற, அதன் அடிப்படையில், உலக ஏகாதிபத்திய விவகாரங்களில் தனது நிலையை வலுப்படுத்துகின்ற நோக்கத்துடனான ஒரு கொள்ளைப் போராக அது இருக்கிறது.

ஈராக்கிய துருப்புகள் குவைத்தை ஆக்கிரமித்து ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலும், அமெரிக்கா சவுதி அரேபியாவிற்குள் துருப்புகளையும் பாரசீக வளைகுடாவில் போர்க்கப்பல்களையும் அனுப்பிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழும் அந்த அறிக்கை இவ்வாறு கூறியது. அதே நேரத்தில், கொள்ளையில் பங்குபெற விரும்பிய பெரிய மற்றும் சிறிய ஏகாதிபத்திய சக்திகளது முழு ஆதரவுடன், மற்றும் மிக முக்கியமாக, கோர்பச்சேவ் தலைமையிலான மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன், போருக்கு ஒப்புதலளிக்கப்படுவதற்கான தீர்மானங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா அழுத்தம்கொடுத்துக் கொண்டிருந்தது.

வளைகுடாவிலான போர் நெருக்கடியானது, உலகத்தை ஒரு புதிய ஏகாதிபத்திய பங்குபோடலுக்கான தொடக்கத்தை குறித்ததாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் முடிவு என்பது காலனித்துவ காலத்திற்குப் பிந்தைய சகாப்தத்தின் முடிவையும் குறிப்பதாக அர்த்தமளிக்கிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமானது, “சோசலிசத்தின் தோல்வி” குறித்து அது பிரகடனம் செய்கின்ற வேளையில், இன்னும் வார்த்தைகளில் வந்திருக்கவில்லை என்றாலும் கூட, செயலில், சுதந்திரத்தின் ‘தோல்வி’யையும் சேர்த்தே பிரகடனம் செய்கிறது.

பாரசீக வளைகுடாவில் பாரிய போருக்கான தயாரிப்பு “சிறிய-குட்டி” குவைத்தின் மீது ஈராக் ஆக்கிரமித்ததற்கான ஒரு அவசியமான எதிர்வினையாக இருந்ததாக புஷ் நிர்வாகம் கூறியதை அந்த அறிக்கை நிராகரித்தது. மாறாக, இந்த ஆக்கிரமிப்பானது, “கடந்த மூன்று அமெரிக்க அரசாங்கங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்பட்டு வந்திருக்கும் மூலோபாயத் திட்டங்களை அமலாக்குவதற்கான  வெகுநாள்-காத்திருந்த ஒரு போலிக்காரணத்தினை மட்டுமே வழங்கியிருக்கிறது.”

உண்மையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர், ”கார்ட்டர் சித்தாந்தம்” என்று சொல்லப்படுவதான ஒன்றை 1980 ஜனவரியில் பிரகடனம் செய்தார். அது தெரிவித்தது:

பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ஒரு வெளிச்சக்தி செய்யக்கூடிய முயற்சி அமெரிக்காவின் இன்றியமையாத நலன்கள் மீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என்பதுடன், அத்தகையதொரு தாக்குதல் இராணுவப் பலம் உள்ளிட அவசியமான எந்த வழிவகையின் மூலமாகவும் எதிர்க்கப்படும்.

“மேற்கத்திய நாடுகள் மிதமிஞ்சிய அளவில் மத்திய கிழக்கிடம் இருந்தான முக்கியமான எண்ணெய் விநியோகத்தை நம்பியிருப்பதன்” அடிப்படையில் இந்த மிரட்டலை அது நியாயப்படுத்தியது. கார்ட்டருக்கு அடுத்துவந்தவரான ரொனால்ட் ரீகன், ஸ்திரத்தன்மைக்கான உள்முகமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் இந்த முக்கியமான எண்ணெய் நலன்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்று சூளுரைக்கின்ற, “ரீகன் தொடர்ச்சியை” அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க அரசாங்கம் பாரசீக வளைகுடாவிலான அதன் இராணுவத் தலையீட்டுக்கான போலிக்காரணத்தினை திட்டமிட்டு உருவாக்கியது. ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையிலான பதட்டங்கள், சதாம் ஹுசைனின் ஈராக் ஆட்சிக்கு அமெரிக்கா கணிசமான உதவி வழங்கியிருந்த ஈராக் ஈரானுக்கும் இடையிலான போர் முடிந்தது முதலாக வளர்ந்து வந்திருந்தன. குவைத் எண்ணெய் விலைகளைக் குறைத்தமையும் கடன் திருப்பிச்செலுத்தங்களுக்கான அதன் கோரிக்கையும் போரினால் நிலைகுலைந்திருந்த ஈராக் பொருளாதாரத்தை மேலதிகமாகப் பலவீனப்படுத்தியது, அதேவேளையில் இருநாடுகளுக்குமான எல்லையில் அமைந்திருக்கும் ஈராக்கின் ருமாலியா எண்ணெய் வயலில் குவைத் ஆழமான சாய்வு அகழ்வு மேற்கொண்டதாக பாக்தாத் கூறியது.

ஈராக்கிற்கான அமெரிக்க தூதரான அப்ரில் கிளாஸ்பி (April Glaspie) அமெரிக்காவின் நட்பும் அனுதாபமும் இருப்பதாக சதாம் ஹுசைனுக்கு உறுதியளிப்பதற்கு 1990 ஜூலை 25 அன்றான ஒரு கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார், “குவைத்துடனான உங்கள் எல்லைப் பிரச்சினை போன்ற அரபு-அரபு மோதல்களில்” அமெரிக்காவுக்கு எந்த அபிப்ராயமும் இல்லை என்பதாக அவரிடம் கூறினார்.

வலை விரிக்கப்பட்டாகி விட்டது, சதாம் ஹுசைன், ஈராக்கில் பெருகிவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி குறித்த இயலாமையான நிலையால் உந்தப்பட்டு, வேகமாக அந்த வலைக்குள் சென்று விழுந்தார்.

விடுதலை மற்றும் ஜனநாயகத்தின் பேரினால் நடத்தப்பட்ட ஒவ்வொரு அமெரிக்க ஏகாதிபத்தியப் போரையும் போலவே, வளைகுடாப் போரும் மோசடிகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அமெரிக்கா மிகச் சமீபத்தில்தான் ஒரு கூட்டாளியாக வென்றெடுத்திருந்த சதாம் ஹுசைனை, அடோல்ஃப் ஹிட்லருக்கு சமானமானவராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொடூரமானவராய் காட்டும் முறை அடுத்து வந்த ஒவ்வொரு அமெரிக்கப் போரின் சமயத்திலும் ஒரு வழக்கமான அம்சமாக ஆகவிருந்தது. சொல்லப் போனால், இது, வளைகுடாப் போருக்கான ஒரு ஒத்திகையைப் போல, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தின் முன்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது. பனாமா படையெடுப்புக்கான தயாரிப்பில், அமெரிக்க வெளியுறவுத்துறை, மனுவேல் நோரிகா சம்பந்தப்பட்டிருந்த போதைமருந்து வர்த்தகத்தை (Manuel Noriega — நீண்டகாலம் CIA இன் ஒரு சொத்தாக இருந்தவர்) போலந்தின் மீதான ஹிட்லரின் படையெடுப்புடன் ஒப்பிட்டது.

அமெரிக்க மக்களின் கருத்தை வளைகுடாப் போரை ஆதரிப்பதை நோக்கி திருப்புவதற்காக ஒரு பாரிய விளம்பரப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. 15 வயது சிறுமி ஒருத்தி நாடாளுமன்றத்திடம், ஆயுதமேந்திய ஈராக்கிய துருப்புகள் ஒரு மருத்துவமனையில் நுழைந்து இன்குபேட்டர்களை (குறைபிரசவக் குழந்தை வளர் எந்திரம்) திருடியதையும், குழந்தைகளை தரையில் வீசிக் கொன்றதையும் கண்டதாக கண்ணீருடன் நினைவுகூர்ந்து அளித்த ஒரு இழிபுகழ்பெற்ற சாட்சியமும் இதில் அடங்கும். இந்தக் கதை ஒரு முழுமையான கட்டுக்கதை என்பது பின்னாளில் தான் வெளிவந்தது. ஈராக் படையெடுப்பின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ, அந்த சிறுமி குவைத்தில் இருந்திருக்கவேயில்லை. அவர் வாஷிங்டனுக்கான குவைத் தூதரின் மகளும், அரச குடும்பத்து உறுப்பினருமாவார், ஒரு முக்கிய அமெரிக்க பொதுத் தொடர்பு நிறுவனத்தால் எழுதப்பட்ட ஒரு வசனத்தை வாசிப்பதற்காக அவள் அனுப்பப்பட்டிருந்தாள்.

இறுதியாக புஷ், சவுதி அரேபியாவின் எல்லையில் 120,000 துருப்புகளை ஈராக் குவித்திருப்பதால் ஒரு உடனடியான அச்சுறுத்தல் முன்நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறி இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தினார். ஆனால் அதன்பின் வந்த செயற்கைக்கோள் படங்கள் குவைத்-சவுதி எல்லையில் பாலைவன மணலைத் தவிர அங்கே வேறொன்றும் இல்லாததை வெளிப்படுத்தின.

சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்ததை நோக்கிய எங்களது நிலைப்பாட்டைக் குறித்த தெளிவுபடுத்தல் 1990 இல் வேர்க்கர்ஸ் லீக்கின் சிறப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிக்கையின் ஒரு மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அனைத்துலகக் குழுவிற்குள்ளிருந்து வந்த பதிலிறுப்புகளில், பிரிட்டிஷ் பிரிவு, அதன் செய்தித்தாளில் வெளியிட்ட ஒரு ஆரம்பகட்டக் கட்டுரையில், இந்த நடவடிக்கையை ஒரு “மூர்க்கத்தன நடவடிக்கை” என்று கூறி கண்டனம் செய்ததும் அடங்கியிருந்தது. மறுபக்கத்தில், ஆஸ்திரேலியப் பிரிவுக்குள்ளிருந்து, “அரபுப் புரட்சியின் பூர்த்தியடையாத தேசிய மற்றும் ஜனநாயகக் கடமைகளை” முன்னெடுப்பதிலான ஒரு “சிறிய முன்நோக்கிய அடி” ஆக குவைத்தின் இணைப்பை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதான ஒரு ஆலோசனையும் எழுந்தது.

ஈராக்கின் மூர்க்கத்தனத்தை கண்டனம் செய்வதற்கு நமக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை என்பதை அந்த அறிக்கை தெளிவாக்கியது. ஆக்கிரமிப்புக்கு முன்வந்த காலத்தில் ஈராக்கிற்கு எதிராக குவைத்தும் சவுதி அரேபியாவும் நடத்திய பொருளாதார போரை கணக்கில் கொண்டு பார்க்கையில், யார் முதலில் அதைத் தொடக்கியது என்பது நமது கவலையாக இருக்க முடியாது. மேலும், அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுப்பதென்பது, அரேபிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு உகந்த வழியாக எண்ணி, தெற்கு ஈராக்கின் பாஸ்ரா மாகாணத்தில் இருந்து துண்டாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஷேக்ஆட்சியான குவைத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாக இருக்கும். மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளால் வரையப்பட்டிருந்த அனைத்து எல்லைக் கோடுகளது நிலையுமே கிட்டத்தட்ட இதுதான்.

அதேநேரத்தில், குவைத் இணைக்கப்படுவதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பதாக ஆஸ்திரேலியப் பிரிவின் ஒரு உறுப்பினரிடம் இருந்தான ஆலோசனைக்கான பதிலில், அந்த அறிக்கை திட்டவட்டமாக இவ்வாறு கூறியது:

ஹூசைனது ஆக்கிரமிப்புக்கு எந்தவொரு முற்போக்கான பாத்திரத்தையும் கற்பிப்பதென்பது ICFI ஐ ஒரு தவறான பாதையில் தள்ளிவிடும் என்பதுடன், உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை WRP காட்டிக்கொடுத்தமைக்கு எதிரான நமது கூட்டுப் போராட்டத்தில், 1985 முதலாக நாம் எட்டியிருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் தேட்டங்கள் அனைத்தையும் பலவீனப்படுத்தி விடும்.

இது, WRP நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை கைவிட்டமைக்கும் குறிப்பாக பல்வேறு அரபு ஆட்சிகளுடனான அதன் சந்தர்ப்பவாத உறவுகள், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை ஏதேனும் ஒரு முதலாளித்துவ தேசியவாத தலைவரின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு நிலைப்பாடாக கூறப்பட்டதற்கு திட்டமிட்டபடி அடிபணியச் செய்தமைக்கும் எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆக்கிரமிப்பை மேற்கொண்ட ஆட்சியின் வர்க்கத் தன்மை மற்றும் நலன்கள் குறித்த ஒரு தெளிவான ஆய்வு இல்லாமல், குவைத் மீதான ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு சற்று முற்போக்கான பாத்திரத்தை ஒருவர் கொடுத்துவிட முடியாது என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஈராக்கில் சதாம் ஹூசைனின் விடயத்தில், இந்த ஆக்கிரமிப்பு “அரபுப் புரட்சியின் தேசிய மற்றும் ஜனநாயகக் கடமைகளை பூர்த்தி” செய்வதற்காய் அன்றி, மாறாக ஈராக்கிய முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் ஒரு கூடுதல் சாதகமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு முதலாளித்துவ ஆட்சியால் நடத்தப்பட்டதாகும்.

இவ்வாறாக, ICFI, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சதாம் ஹூசைனின் ஆட்சி மற்றும் கொள்கைகளுக்கு அதன் எதிர்ப்பைக் காட்டிய போதிலும், ஒரு ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனித்துவ நாடாக ஈராக்கை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாதுகாத்தது. அமெரிக்கா மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இரண்டின் தொழிலாள வர்க்கமும் சுயாதீனமாக புரட்சிகரமாக அணிதிரட்டப்படுவதன் மூலம் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப்பட முடியும் என்று அது வலியுறுத்தியது.

அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது:

அரபு வெகுஜனங்களின் பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கு அவசியமாயிருப்பது, வெறுமனே “ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டு நிலப்பிராந்தியங்களை” அகற்றுவது மட்டுமல்ல, மாறாக மத்திய கிழக்கு முழுமையிலும் ஒட்டுமொத்த முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையும் அகற்றப்படுவது அவசியமாயுள்ளது. நாம் எல்லைக்கோடுகள் மாற்றப்படுவதை அல்ல, மாறாக அவை அகற்றப்படுவதை எதிர்நோக்குகிறோம். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் மூலமாக மட்டுமே அது சாதிக்கப்பட முடியும்.

அமெரிக்கா வளைகுடாப் போரை 1991 ஜனவரி 16 அன்று தொடக்கியது. பாலைவனப் புயல் நடவடிக்கை (Operation Desert Storm) என்று பெயரிட்டுக்கொண்ட அது, இராணுவ வரலாற்றின் மிகத் தீவிரமான வான்வழி குண்டுவீச்சுக்களில் ஒன்றையே பிரதானமாகக் கொண்டிருந்தது. வெறும் 42 நாட்களில் ஈராக்கில் 88 ஆயிரம் டன்கள் வெடிமருந்துகள் வீசப்பட்டிருந்தன. இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் ஜேர்மனியின் மீது வீசப்பட்ட மொத்த வெடிகுண்டு டன்களில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும். ஈராக் மீதான குண்டுவீச்சில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 135,000 ஆக மதிப்பிடப்பட்டது. ஈராக்கின் கட்டாய சேவைக்கு சேர்க்கப்பட்ட இராணுவத்தின் மிகப்பெரும் பகுதி அழிக்கப்பட்டது, அப்படையினர்கள் வானிலிருந்து எரிக்கப்பட்டனர் அல்லது அவர்களது அகழிகளிலேயே உயிருடன் புதைக்கப்பட்டனர். அதுதவிர, மேலும் நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள், நாட்டின் உள்கட்டமைப்பு திட்டமிட்டு அழிக்கப்பட்டதன் விளைவாக உயிரிழந்தனர்.

மரண நெடுஞ்சாலை (Highway of Death) என்று அழைக்கப்பட்டதில், அமெரிக்கா, குவைத்தில் இருந்து படைகளை திரும்பப் பெறக் கோரிய ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்குவதாக அறிவித்த ஹூசைன் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், குவைத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த தற்காப்பற்ற ஈராக்கிய துருப்புகள் மற்றும் சாதாரண மக்களடங்கிய மைல்-நீள வாகன வரிசைகள் மீது அலைபோன்ற குண்டுவீச்சினை நடத்தியது.

இந்தப் போர்க் குற்றத்திற்கான பதிலிறுப்பில் நாம் கூறியவாறாக:

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் என்பது இருபதாம் நூற்றாண்டின் மிகப் படுபயங்கர குற்றங்களில் ஒன்றாகும், வருங்காலத் தலைமுறையினர் அவமானத்துடன் திரும்பிப் பார்க்கப்போகும் ஒரு படுகொலையாகும். ஜனநாயக அமெரிக்கா என்றழைக்கப்படுவதன் ஆளும் வர்க்கமானது நாஜிக்களைப் போன்றதொரு பாரிய படுகொலையைச் செய்யும் அதே திறம்படைத்திருக்கிறது என்பதை அது எடுத்துக்காட்டியிருக்கிறது.[4]

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வளைகுடாப் போருக்கு அளித்த பதிலிறுப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது:

வெகுகாலம் தமக்குள்ளேயே கழுத்தறுப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் உலகப் பாத்திரம் குறித்த ஒரு வேலைசெய்யும் கருத்தொற்றுமையை சீரமைப்பதற்கு இப்போது உலகளவில் பிரச்சனைக்குரிய பாதை தெளிவாகி விட்டிருக்க வேண்டும். கொள்கையை தீர்மானிப்பதில் உலகளவில் மிகவும் பிளவுபட்ட பிரச்சினைகளில் சில இப்போது கணக்குமுடிக்கப்பட்டு விட்டதாகத் தென்படுகிறது. படைவலிமை என்பது அரசியலின் ஒரு நியாயபூர்வமான கருவியாகிவிட்டது; அது பலனளிக்கிறது. உயரடுக்கினருக்கே கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி என்னவென்றால் இப்போது தொடங்கி அமெரிக்கா தலைமை தாங்க முடியும், ஊளையிடுவதை நிறுத்துங்கள், கூடுதல் துணிச்சலுடன் சிந்தியுங்கள் என்பதாகும்.[5]

அமெரிக்க நிதி மூலதனத்தின் ஊதுகுழலின் மூலமான இந்தத் தலையங்கம், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திற்குள் நிலவுகின்ற நோய்பீடித்த வெற்றிக்களியாட்டவாதத்தின் ஒரு துல்லிய பிரதிபலிப்பு என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

அனைத்துலகக் குழுவின் 11வது நிறைபேரவை (Plenum) 1991 மார்ச் 5 அன்று, வளைகுடாப் போர் முடிந்து ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், நடைபெற்றது. அதன் ஆரம்ப அறிக்கை தெரிவித்தது:

அமெரிக்காவின் நீடித்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து எழுகின்ற பிரச்சினைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது படைவலிமை மூலமாக தீர்க்க முயலும் என்ற அறிவிப்பை அமெரிக்க முதலாளித்துவம் வழங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரச்சினைகளான, அதன் தொழிற்துறை அடித்தளம் சிதைந்தமை, அதன் வெளிநாட்டுச் சந்தைகள் இழப்பு, பாரிய வர்த்தகப் பற்றாக்குறைகள் மற்றும் நிதிநிலைப் பற்றாக்குறைகள், அதன் வங்கி அமைப்புமுறையின் உருக்குலைவு, சமூகக் கேடுகளின் அபாயகரமான அதிகரிப்பு ஆகிய அனைத்திற்கும் கண்டிருக்கக் கூடிய ஒரு பதிலாக முதலாளித்துவ வர்க்கம் காண்பது: படைவலிமை!

இந்த அறிக்கை டூரிங்கிற்கு-மறுப்பு இல் இருந்து மிகப் பொருத்தமான பத்தியை மேற்கோளிடுகிறது; 113 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்த அதில், ஏங்கெல்ஸ், வரலாற்றில் படைவலிமை தான் தீர்மானகரமான கூறாக இருந்ததாக டூரிங் கூறியதற்கு ஒரு மார்க்சிச பதிலைக் கொடுத்தார்:

...அதன் சொந்த உற்பத்தி சக்திகள் அதன் கட்டுப்பாட்டைத் தாண்டி வளர்ந்து சென்றிருக்கின்றன, இயற்கையின் விதியால் அவசியமாக்கப்பட்டதைப் போல, அவை ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூகத்தையும் அழிவை அல்லது புரட்சியை நோக்கி துரத்திக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தினர் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் “பொருளாதார சூழலை” இறுதியான நொருங்கலில் இருந்து காப்பாற்றும் பொருட்டு, இப்போது படைவலிமைக்கு விண்ணப்பம் செய்வார்களேயானால், அவர்களும் திருவாளர் டூரிங்கின் அதே அவநம்பிக்கையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்: “அரசியல் நிலைமைகளே பொருளாதார சூழலுக்கான தீர்மானகரமான காரணமாய் இருக்கின்றன” என்பதான அவநம்பிக்கை; அவர்களும் திருவாளர் டூரிங் போலவே, “பிரதான”, “நேரடி அரசியல் சக்தி”யைப் பயன்படுத்துவதன் மூலமாக, அவர்கள் “இரண்டாம் நிலை உண்மைகளை”, பொருளாதார சூழ்நிலை மற்றும் அதன் தவிர்க்கவியலாத அபிவிருத்தியை மறுவடிவமைக்கலாம்; ஆகவே நீராவி இயந்திரம் மற்றும் அதனால் இயக்கப்படுகின்ற நவீன எந்திரங்கள், இன்றைய நாளின் உலக வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் கடன் அபிவிருத்திகள் ஆகியவற்றின் மூலமான பொருளாதார அபிவிருத்திகளை குருப் சுடுகலன்கள் மற்றும் மவுசர் துப்பாக்கிகள் [19 ஆம் நூற்றாண்டின் ஜேர்மன் ஆயுதங்கள்] கொண்டு இல்லாது செய்து விடலாம் என்று கற்பனை செய்து கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.[6]

நீராவி இயந்திரத்தின் இடத்தில் கணினிமயமாக்கத்தையும் குருப் சுடுகலன்கள் மற்றும் மவுசர் துப்பாக்கிகளின் (Krupp guns and Mausers) இடத்தில் நவீன தானியங்கி வெடிகுண்டுகள் மற்றும் தொலைதூரகட்டுப்பாட்டு ஏவுகணைகளையும் பிரதியிட்டால் இந்த அறிக்கையானது வளைகுடாப் போரையொட்டி அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய வெற்றிக்களியாட்ட வெறித்தனங்களுக்கு ஒரு பொருத்தமான மறுப்பாக திகழ்கிறது.

ஈராக்கிற்கு எதிரான ஒரு பெரும் போருக்கு வாஷிங்டன் பகிரங்க தயாரிப்புகள் செய்தமைக்கான பதிலிறுப்பில், வேர்க்கர்ஸ் லீக் போர் குறித்து மக்களின் ஒரு கருத்துவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தது. இந்த ஜனநாயகக் கோரிக்கையை முன்னெடுத்ததன் மூலம், கட்சி ஒரு முக்கியமான தந்திரோபாய முன்முயற்சியை மேற்கொண்டது. போருக்கான பரவலான எதிர்ப்பானது நிலவும் அரசியல் அமைப்புக்குள்ளாக எந்த வெளிப்பாட்டையும் காட்டமுடியாதிருந்த நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக புரட்சிகரத் தோற்கடிப்புவாத முன்னோக்கை ஸ்தூலமான நடைமுறைகளாக மாற்றுவதே அதன் நோக்கமாய் இருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் போருக்கு ஆதரவான கிட்டத்தட்ட ஏகமனதான வாக்குகளை அளித்தன. AFL-CIO வும் அதன் பங்கிற்கு அமெரிக்க அரசாங்கத்தை ஆதரித்ததோடு நடக்கவிருந்த படுகொலைகள் குறித்து ஒரு வார்த்தையும் கூட கூற மறுத்துவிட்டது.

இந்தக் கோரிக்கையை முன்னெடுக்கும் முடிவானது, அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு முக்கியமான வரலாற்று முன்னுதாரணமான, லுட்லோ திருத்தம் (Ludlow Amendment) என்று கூறப்பட்ட ஒன்று குறித்து 1937-38 இல் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக (SWP) நடைபெற்ற விவாதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இது அமெரிக்க அரசாங்கத்தின் எந்தவொரு போர் அறிவிப்பும் அதற்கு முன் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலமாக முதலில் அமெரிக்க மக்களால் வாக்களிக்கப்பட்டிருப்பதை அவசியமாக்கும் வகையில் அமெரிக்க அரசியல்சட்டத்தில் ஒரு திருத்தத்திற்கு அழைப்பு விடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லூயிஸ் லுட்லோ ஆல் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவாகும். மக்கள் வாக்கெடுப்புக்கான இந்த அழைப்பு, ரூஸ்வெல்ட் நிர்வாகத்தை அடிமைத்தனமாக ஆதரித்துக் கொண்டிருந்த ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் ஆவேசமாக எதிர்க்கப்பட்டது என்றபோதிலும், அதிகமான அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றது. அந்த சமயத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் அமெரிக்க மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் அதற்கு ஆதரவாய் இருந்ததைக் காட்டின.

இது தொழிலாள வர்க்கத்தில் ஜனநாயக மற்றும் அமைதிவாத பிரமைகளை ஊக்குவிக்கும் என்ற காரணத்தின் அடிப்படையில், SWP ஆரம்பத்தில் இந்த யோசனைக்கு எந்த ஆதரவும் வழங்குவதற்கு எதிராக வாக்களித்தது. ட்ரொட்ஸ்கி இந்த நிலைப்பாட்டை விமர்சனம் செய்தார், மக்கள் வாக்கெடுப்பு ஒன்றிற்கு ஆதரவாக கட்சியால் மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு பிரச்சாரம், வரவிருக்கும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான ஒரு நெம்புகோலை வழங்கும் என்று அவர் வாதிட்டார்.

SWP இன் தலைமைக்குள்ளாக 1938 மார்ச்சில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், ட்ரொட்ஸ்கி, கருத்துக்கணிப்பு கோரிக்கையை நோக்கிய அவரது அணுகுமுறையை விளக்கினார். ஒரு கருத்துவாக்கெடுப்பு போரைத் தடுத்து நிறுத்திவிடப் போவதில்லை என்ற SWP இன் வாதத்திற்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, சோசலிசப் புரட்சி மட்டுமே போருக்கு முடிவு கட்ட முடியும் என்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார், ஆனால் கட்சி முதலாளித்துவ ஜனநாயகத்திலான பிரமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடுகின்ற அதேவேளையில், ஜனநாயகக் கோரிக்கைகள் பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அரசியல்ரீதியாக விழிப்படையச் செய்வதற்கும் அவர்களை போராட்டத்திற்குள் ஈர்ப்பதற்கும் சேவைசெய்யக் கூடிய மட்டத்திற்கு அத்தகைய கோரிக்கைகளை அது நிராகரிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். கருத்துக்கணிப்பு கோரிக்கைக்கான மக்கள் ஆதரவானது, ஏகாதிபத்தியப் போருக்கு பரந்த மக்கள் கொண்டிருந்த குரோதத்தையும், அத்துடன் அரசாங்கத்தின் மீதும் நாடாளுமன்றத்தில் இருந்த அவர்களது பிரதிநிதிகளாக கூறப்பட்டவர்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த அதிகரித்த அவநம்பிக்கையையும் பிரதிபலித்தது என்ற விதத்தில், ஒரு முற்போக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது.

SWP அதன் நிலைப்பாட்டை மாற்றியது, போர் குறித்த கருத்துக்கணிப்புக்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தில் கட்சி தீவிரமாகத் தலையிட அழைப்புவிடுத்த அதேநேரத்தில், அதன் முதலாளித்துவ சீர்திருத்தவாத ஆதரவாளர்களால் ஊக்குவிக்கப்பட்ட அமைதிவாத மற்றும் ஜனநாயகப் பிரமைகளையும் எதிர்த்துப் போராடியது. அதேநேரத்தில், போராட்டத்தை கருத்துக்கணிப்பு கோரிக்கையைத் தாண்டி தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைந்த வெகுஜனப் போராட்டங்களாக நீட்சி செய்வதற்கும், போருக்கு எதிரான அதன் சொந்த புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் அது போராடவிருந்தது.

கருத்துவாக்கெடுப்பு கோரிக்கை இடைமருவு வேலைத்திட்டத்திலும் இடம்பெற்றது, இந்த வேலைத்திட்டம் இவ்வாறு முன்கணித்திருந்தது:

கருத்துவாக்கெடுப்புக்கான இயக்கம் எத்தனை பரவலாக ஆகிறதோ, அத்தனை விரைவாக முதலாளித்துவ அமைதிவாதிகள் அதிலிருந்து அகன்று விடுவார்கள்; கூடுதல் முழுமையாக கம்யூனிச அகிலத்தின் காட்டிக்கொடுப்பாளர்கள் கீழறுக்கப்படுவார்கள்; ஏகாதிபத்தியவாதிகள் மீதான அவநம்பிக்கை கூடுதல் கூர்மையானதாக ஆகும்.[7]

வேர்க்கர்ஸ் லீக்கின் இந்த கருத்துவாக்கெடுப்பு முன்முயற்சியானது லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையில் இருந்த இரண்டு தோழர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, இந்த கோரிக்கையை “கற்பனாவாத” மற்றும் “பயனற்ற” கோரிக்கை என்று நிராகரித்த, அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நனவை அபிவிருத்தி செய்வதற்கும் போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சுயாதீனமான சமூக சக்தியாக அதன் தலையீட்டுக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் எந்த கோரிக்கையையும் முன்னெடுக்கின்ற அல்லது எந்த நடைமுறையையும் மேற்கொள்கின்ற அவசியத்தையும் நிராகரிக்கின்ற, ஒரு குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அந்த எதிர்ப்பு அமைந்திருந்தது. மாறாக “முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் பொருளாதார உருக்குலைவுக்கும், போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச் செல்கிறது” என்பதையும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுத்தாக வேண்டும் என்பதையும் தொழிலாள வர்க்கத்திற்கு கற்பிப்பதே இப்போதைய கடமை என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆயினும், வர்க்கப் போராட்டத்தில் புரட்சிகரக் கட்சியின் நடைமுறைத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டு, அத்தகையதொரு முடிவுக்கு பரந்துபட்ட தொழிலாளர்கள் எங்ஙனம் வந்துசேருவார்கள் என்பதற்கான எந்த யோசனையையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

மேலும் கோரிக்கைக்கான எதிர்ப்பாளர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு புஷ்ஷினால் அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவுக்கு முன்னால் போரை நிறுத்துவது சாத்தியமில்லாதது என்றும், எவ்வாறாயினும் ஒரு மக்கள் கருத்துவாக்கெடுப்பை நடத்துவதற்கு அமெரிக்க அரசியல்சட்டத்தில் எந்த ஷரத்தும் இல்லை என்றும் வாதிட்டனர்.

இந்த வாதங்களுக்கு வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு வழங்கிய ஒரு ஆரம்ப பதில் குறிப்பிட்டது, “குட்டி-முதலாளித்துவ தீவிரவாதம் வாய்வீச்சையும் ஆவேசப்பேச்சையும் ஜனநாயக குறுஞ்சிந்தனை வாதத்தையும் (philistinism) எளிதாக ஒன்றுகலக்கிறது”. புஷ்ஷின் காலக்கெடு மற்றும் அரசியல்சட்டம் குறித்த அவர்களது கேள்விக்கான பதிலில், அது மேலும் சேர்த்துக்கொண்டது, “ஜனவரி அல்லது அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதும், எது “அரசியல்சட்டரீதியானது” எது அவ்வாறல்லாதது என்பதும் வர்க்க சக்திகளது உறவிலேயே அதிகளவில் சார்ந்திருக்கின்றது. ட்ரொட்ஸ்கி கூறுவதைப் போல ‘போராட்டமே முடிவுசெய்யும்’.”[8]

“குறுங்குழுவாத” என்ற வார்த்தை நமது இயக்கத்தின் அங்கத்தினர்களுக்கு நன்கறியப்பட்ட வார்த்தையாகும், கோட்பாடுகளை நாம் பாதுகாத்து நிற்பதற்காகவும் தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிசத்திற்கும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் கீழ்ப்படியச் செய்யும் அரசியலுக்கு நமது சமரசமற்ற குரோதத்திற்காகவும் நமது கட்சிக்கு எதிராக பப்லோவாதிகளாலும் மற்றும் பிற சந்தர்ப்பவாதிகளாலும் சுமத்தப்பட்டதொரு அடைமொழியாக அது இருந்தது.

ஆயினும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில், வெகுஜனங்களை நோக்கிய ஒரு பாதையைக் காண்பதற்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகத் தலைமைகளால் திணிக்கப்பட்டிருந்த தனிமைப்படலை வெல்வதற்கும் இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளை கடுமையாக எதிர்த்த போக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தசமயத்தில், குறுங்குழுவாதத்திற்கு எதிரான போராட்டம் வகித்த பாத்திரம் சிறிதல்ல. இதுவே 1934 இல் பிரெஞ்சு திருப்பம் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளான நுழைவு தொடர்பாக அமெரிக்காவில் அது பிரயோகித்தது ஆகிய சமயத்தில் நடந்தது. ட்ரொட்ஸ்கியால் முன்மொழியப்பட்டிருந்த இந்த தந்திரோபாயம், தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலின் ஒரு விளைவாகவும், ஸ்ராலினிசத்தின் மீதான நம்பிக்கையிழப்பின் விளைவாகவும் வளர்ந்து கொண்டிருந்த சோசலிஸ்ட் கட்சிகளுக்குள் தலையீடு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்தக் கட்சிகளின் தலைமைகளது வலது-சாரி குணநலனை அம்பலப்படுத்துவதன் மூலமாக மிகச் சிறந்த கூறுகளை, குறிப்பாக இளைஞர்களை வென்றெடுக்கின்ற விதத்திலும், ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளை வெகுஜனப் போராட்டங்களுக்குள் ஈடுபடுத்துகின்ற விதத்திலுமாய் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் விடயத்தில், அவர்கள் சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர்களையும் தொழிலாளர்களின் முக்கியமான பிரிவுகளையும் வென்றெடுத்து, சோசலிச தொழிலாளர் கட்சி உருவாக்கப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்க அவர்களால் இயன்றது.

கருத்துவாக்கெடுப்பு பிரச்சாரத்திற்கு எதிரான குறுங்குழுவாத எதிர்ப்பு கட்சிக்குள்ளாக எந்த ஆதரவையும் பெறத் தவறியது என்றபோதிலும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை நாங்கள் குறைத்துமதிப்பிடவில்லை. வேர்க்கர்ஸ் லீக்கின் 1990 டிசம்பர் 31 கூட்டம் ஒன்றில் டேவிட் நோர்த் கூறியவாறாக:

இதில் ஐயத்திற்கு இடமின்றி கூறுவேன். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த தோழர்களின் அரசியல் விமர்சனங்களுக்கு சிறு ஆதரவோ அல்லது நம்பகத்தன்மையோ கட்சி வழங்குவதாக இருந்தால், அது வெகுவிரைவில் கட்சியின் அழிவு என்றே அர்த்தமளிக்கக் கூடியதாகும். அவர்களது விமர்சனங்கள் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ஒரு பதிலிறுப்பைக் காணுவதாக இருந்தால், அது அனைத்துலக இயக்கத்தின் அழிவுக்கு இட்டுச்செல்லும்.[9]

கருத்துவாக்கெடுப்பு கோரிக்கையானது பிரிட்டிஷ் WRP இன் இருகன்னைகளான ஹீலியை பின்பற்றியவர்கள் மற்றும் சுலோட்டர், பண்டாவுடன் சென்ற எஞ்சியிருந்தவர்களாலும் கண்டனம் செய்யப்பட்டது.

கருத்துவாக்கெடுப்பு கோரிக்கையை முன்னெடுத்ததன் மூலமாக, நாங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தகவமைத்துக் கொண்டிருந்தோம் என்பதும் “புரட்சிகரத் தோற்கடிப்புவாத” முன்னோக்கை கைவிட்டுக் கொண்டிருந்தோம் என்பதும் அவர்களது வாதமாக இருந்தது.

இது, 1983 இல் கண்ட ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அதே கூட்டணியை திரும்பவும் கொண்டுவந்தது. பின்னர், அதிகமான அளவில் WRP பப்லோவாதத்தை நோக்கித் திரும்பியதன் மீது வேர்க்கர்ஸ் லீக்கினால் முன்னெடுக்கப்பட்ட விமர்சனங்களை ஒடுக்கும் முயற்சியில், சுலோட்டர், புல்லட்டின் (வேர்க்கர்ஸ் லீக்கின் அச்சமய செய்தித்தாள்) இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்படுவதற்கு அது வெளிப்பட அழைப்பு விடுக்கத் தவறியது என்ற காரணத்தால், கிரேனடா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து வெளிவந்திருந்த ஒரு கட்டுரையின் மீது சிடுமூஞ்சித்தனமான கண்டனத்தை வெளியிட்டார். அவ்வாறு செய்யத்தவறியதாக கூறப்பட்ட, அவர் முன்வைத்த இதனை ”‘தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்’ மீதான மிகை அழுத்தம்” என்று அவர் விமர்சனம் செய்த ஒன்றுடன் முடிச்சுப் போட்டார்.

கியூபாவை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களது ஒரு சிறு குழுவைத் தாண்டி வேறெங்கிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்ளாத நிலையில் அமெரிக்கத் துருப்புகள் ஏற்கனவே தீவைக் கைப்பற்றி விட்டிருந்ததன் பின்னர் இராணுவத் தோல்விக்கு ஒரு அழைப்பு விடுப்பதென்பது அபத்தமானதாக இருந்தது. இன்னும் முக்கியமாக, புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தில் இருந்து பிரிப்பது ஆழ்ந்த பிற்போக்குத்தனமானதாகும்.

டேவிட் நோர்த் 11வது நிறைபேரவைக்கு அவர் அளித்த அறிக்கையில், புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் அர்த்தத்தை தெளிவுபடுத்துகின்றதான விடயத்தில் வளைகுடாப் போரை நோக்கிய கட்சியின் அணுகுமுறையில் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டிருந்த வெகுமுக்கிய படிப்பினைகளையும் விளக்கினார்.

சதாம் ஹுசைன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க அழைப்பு விடுக்கின்ற ஏதோவொரு வகை அரசியல் பார்வையாளர்கள் என்பதான கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக, போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதற்காகப் போராடுகிறோம். போரில் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்படுவதைப் பற்றி நாங்கள் பேசும்போது, வர்க்கப் போராட்டம் என்ற கருவியின் மூலமாக தோற்கடிக்கப்படுவதைக் குறித்தே நாங்கள் பேசுகிறோம். ….

ட்ரொட்ஸ்கி கூறுவதைப் போல, “ஆளும் வர்க்கம் சொந்த நாட்டில் தோற்கடிக்கப்படுவதென்பது குறைந்த தீமை” என்பதன் அர்த்தம்: அது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலின் மூலமாக எட்டப்படுகின்றபோதே குறைந்த தீமை.

அவர் இரண்டாம் உலகப் போரின் உதாரணத்தை முன்வைத்தார், அமெரிக்கப் படைகள் ஹிட்லரால் தோற்கடிக்கப்படுவது குறைந்த தீமை என்றும் நாஜிக்களின் வெற்றி ஒரு விரும்பத்தகுந்த விளைமுடிவாக இருக்கும் என்றும் ஒரு பொதுவான அர்த்தத்தில் மார்க்சிசத்தின் கேலிக்கூத்தாகவும் முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகவும் அமையும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆயினும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெற்றிகரமான புரட்சியின் மூலமாகக் கொண்டுவரப்படும் மட்டத்திற்கு, அது உலகப் புரட்சியின் அபிவிருத்திக்கும் பாசிசத்துடனான கணக்கு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தினால் தீர்க்கப்படுவதற்குமான அடித்தளத்தை அமைத்துத் தரக்கூடிய ஒரு விரும்பத்தகுந்த விளைமுடிவைக் குறிப்பதாக இருக்கும்.

மேலும், வளைகுடாப் போரின் உள்ளடக்கத்திற்குள், கடைசி ஈராக்கியர் இருக்கும் வரை அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து நிற்கும் நிலைப்பாட்டில் இருந்து புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்திற்கு அழைப்பு விடுப்பது அர்த்தமற்றதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் இருக்கும். மத்திய கிழக்கிலான வெகுஜனங்கள், அமெரிக்காவினதும் மற்றும் அதனையும் கடந்து தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக அணிதிரட்டப்படாத பட்சத்தில், அமெரிக்காவின் இராணுவ வெற்றியானது கிட்டத்தட்ட உறுதி என்றவகையில் இராணுவ பலத்தின் சமநிலையானது மிகவும் சமனற்றதாக இருந்தது. மிக அடிப்படையாக, தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அடிப்படையில் போருக்கு எதிராய் போராடுவதற்கு ஒரு முழுமையான அலட்சியம் மற்றும் குரோதத்தை அது காட்டியது. பாட்டாளி வர்க்கமல்லாத சக்திகளால் நடத்தப்படுகின்ற ஏதோவொரு வடிவத்திலான “ஆயுதமேந்திய போராட்டம்”, சர்வதேச அளவில் குறிப்பாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலுக்கான பிரதியீடாக இருந்தது என்ற பப்லோவாத முன்னோக்குடன் முழுக்க பிணைந்ததாக அது இருந்தது.

ஏகாதிபத்தியப் போருக்கும் காலனியாதிக்கத்திற்கும் எதிராக பேர்லின் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதானது வளைகுடாப் போர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “ஒற்றைத்துருவ தருணம்”, முதலாளித்துவத்தின் மீட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவற்றுக்கு ICFI அளித்த மிகத் தீர்மானகரமான பதிலிறுப்பாக அமைந்தது.


போருக்கும் காலனியாதிக்கத்திற்கும் எதிரான ICFI மாநாடு, பேர்லின், 1991

மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் அதன் துண்டுப்பிரசுரமும், விஞ்ஞாபனமும் 18 மொழிகளில் விநியோகிக்கப்பட்ட நிலையில், இது நிச்சயமாக, அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக ஊக்கமான மற்றும் வெற்றிகரமான முன்முயற்சிகளில் ஒன்றாய் அமைந்தது.

பாரசீக வளைகுடாப் போரை, போருக்கு எதிரான போராட்டத்தில் புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் நெடிய வரலாற்றின் உள்ளடக்கத்தில் உறுதியாக இருத்துகின்ற ஒரு அசாதாரணமான ஆவணமாக 1991 மே 1 அன்று விடுக்கப்பட்டதான அறிக்கை இருக்கிறது.

 “சமூக ஜனநாயகக் கட்சியினர், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பிற பிரதிநிதிகளால் காட்டிக்கொடுக்கப்பட்ட சோசலிச சர்வதேசியவாதத்தின் மாபெரும் பாரம்பரியங்களுக்கு புத்துயிரூட்டுவதே” இந்த மாநாட்டின் நோக்கம் என்பதை ஆரம்பத்திலேயே அது கூறி விடுகிறது.

வளைகுடாப் போரானது, போருக்கான எதிர்ப்பை திட்டமிட்டு ஒடுக்கியதும் முதலாளித்துவ அரசின் தொங்குதசைகளாக சேவை செய்வதற்கு அதிகமாய் வேறெதுவுமற்றதுமான தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பாரம்பரிய கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் முழுமையான திவால்நிலையை அம்பலப்படுத்துவதற்கு சேவைசெய்தது என்பதே அதன் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. போருக்கு எதிரான ஒரு போராட்டம் நடப்பதாக இருந்தால், அது எமது சர்வதேசக் கட்சியால் மட்டுமே தலைமை கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பதே அதன் பொருளாக இருந்தது.

போரை ஆதரிப்பதில் ஸ்ராலினிசத்தால் வகிக்கப்பட்ட ஒதுக்கிவிடமுடியாத பாத்திரத்தின் மீது இந்த அறிக்கை அவசியமான அழுத்தத்தை கொடுக்கின்றது. அது, “சோவியத் அதிகாரத்துவமானது உலக அரசியலில் ஒருவகையான ‘ஏகாதிபத்திய-எதிர்ப்பு’ சக்தியை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதான பழைய கட்டுக்கதையில் எஞ்சியிருந்த மிச்சொச்சத்தையும் இறுதியாக தகர்த்தெறிந்திருக்கிறது” என்று அது கூறியது.

ஏகாதிபத்திய வன்முறையின் புதிய வெடிப்பின் நிலையில், தொழிலாள வர்க்கமானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் எழுச்சியின் சமயத்தில் முகம்கொடுத்த மாபெரும் வரலாற்று மற்றும் அரசியல் கடமைகள் அனைத்துக்கும் முகம்கொடுத்து நின்றது என்பதாக கருதுவதற்கு வலிமையான சாத்தியக்கூறுகளை இது கொடுக்கிறது.

முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இட்டுச்சென்ற முரண்பாடுகளான சமூக உற்பத்திக்கும் தனியார் சொத்துடமைக்கும் இடையிலானதும் மற்றும் உற்பத்தியின் உலகளாவிய தன்மைக்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகள் இன்னும் ஒரு பெரிய பிரளயகரமான உலகளாவிய மோதலை உருவாக்க அச்சுறுத்தியது. முந்தைய உலகப் போருக்கு முன்வந்த காலத்தில் போல சந்தைகள், தாதுவளங்கள் மற்றும் மலிவு உழைப்பு ஆகியவற்றுக்கான சண்டையானது —இதுவே போர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் தற்காத்துக் கொள்ள முடியாத நாடுகளில் காலனி அடிமைத்தனத்திற்கும் இட்டுச்சென்றது— ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலேயும் மோதலுக்கு பாதை வகுத்துக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கும் இடையிலான பிரிக்கவியலாத பிணைப்பை அந்த ஆவணம் ஸ்தாபிக்கிறது. இந்த உறவுக்கான மூலத்தை அது 1889 இல் இரண்டாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை, மற்றும் 1912 இல் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட வேண்டும் என்று அழைக்கின்ற மற்றும் ஒரு போரானது புரட்சிகரப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்ற பாஸல் அறிக்கையை அது நிறைவேற்றியமை ஆகியவற்றில் இருந்து அது கண்டறிகின்றது. ஆயினும், இரண்டாம் அகிலத்திற்குள் சந்தர்ப்பவாதத்தின் இடைவிடாத வளர்ச்சியானது, அதன் முக்கிய பிரிவுகள் 1914 இல் போர் வெடித்த சமயத்தில் தத்தமது சொந்த “தந்தைநாடுகளுக்கு” ஆதரவாகச் சாய்வதற்கும், தத்தமது நாட்டு அரசாங்கங்களுக்கு போர் ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கும் இட்டுச்சென்றது.

அந்தப் போர், முதலாளித்துவ நெருக்கடி மேலோங்கி இருந்ததும் ரஷ்யாவில் வெற்றிகரமான 1917 அக்டோபர் புரட்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்டதும் முதலாளித்துவ ஒழுங்கின் உயிர்பிழைப்பையே கேள்விக்குள்ளாக்கியதுமான மூன்று தசாப்த கால முதலாளித்துவ சமநிலைகுலைந்த ஒரு காலகட்டத்திற்கு கட்டியம் கூறியது.

ஆயினும், ரஷ்யாவின் போல்ஷிவிக்குகளுக்கு இணைகூறத்தக்க புரட்சிகரக் கட்சிகள் இல்லாமையானது —குறிப்பாக ஐரோப்பாவில்— வரிசையான புரட்சிகரப் போராட்டங்களை தோற்கடிக்க முதலாளித்துவ வர்க்கத்தை அனுமதித்தது. என்றாலும், 1914 இல் தகர்க்கப்பட்டிருந்ததை பிரதியிட ஒரு புதிய சமநிலையை அவர்களால் உருவாக்க முடியாதிருந்தது.

சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினின் தலைமையில் அதிகாரத்துவத்தின் எழுச்சி, மற்றும் கம்யூனிச அகிலமானது ஸ்ராலினிச “தனியொரு நாட்டில் சோசலிசம்” தத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்துடனான மாஸ்கோவின் சூழ்ச்சிகளுக்குமாய் கீழ்ப்படியச் செய்யப்பட்டு படுபரிதாபமாக சீரழியச் செய்யப்பட்டமை ஆகியவை வரிசையான பேரழிவுகரமான தோல்விகளுக்கு, எல்லாவற்றையும் விட ஜேர்மனியில், இட்டுச்சென்றது. ஒரு துப்பாக்கி தோட்டாவும் சுடப்படாமல் 1933 இல் நாஜிக்கள் அதிகாரத்துக்கு வந்தமையானது ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரத் தன்மையை அம்பலப்படுத்தியது, இது ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு இட்டுச்சென்றது.

முதலாளித்துவ வர்க்கம் முதலாம் உலகப் போர் முடிந்த பின்னர் சாதிக்க முடியாத ஒரு புதிய சமநிலையை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சாதிக்க முடிந்ததென்றால், அதற்கு அடிப்படையாக இருந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு மேலாதிக்க சக்தியாக இருந்தது மட்டுமல்ல, மாறாக ஸ்ராலினிசத்தின் தவிர்க்கமுடியாத பாத்திரமும் ஆகும் என்பதை அந்த ஆவணம் ஸ்தாபிக்கிறது. போருக்குப் பின்னரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை, குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் இல் அது எதிர்த்தது மற்றும் அவற்றுக்கு குழிபறித்தது. கிழக்கு ஐரோப்பாவில் இடைத்தடை அரசுகள் (buffer states) என்பதாகச் சொல்லப்பட்டவற்றை அது ஸ்தாபித்தமை, தொழிலாள வர்க்கத்தையும் சோசலிசத்திற்கான எந்த உண்மையான போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு மட்டும் சேவை செய்யவில்லை, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஐரோப்பிய ஸ்திரமற்ற நிலைக்கு மூலகாரணமாக இருந்து வந்திருந்த ஒரு உடைந்துபோக்கூடிய பிராந்தியத்தை அமைதிப்படுத்துவதற்கும் கூட சேவைசெய்தது.

எவ்வாறெனினும், இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஸ்தாபிக்கப்பட்ட சமநிலையானது அதன் சொந்த முரண்பாடுகளால் சிக்கலடைந்திருந்தது என்பதை அந்த ஆவணம் தெளிவாக்குகிறது. உலகச் சந்தையை அது புதுப்பித்தமை மற்றும் ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் முதலாளித்துவத்தை மீளக்கட்டியெழுப்பியமை ஆகியவை அமெரிக்க மேலாதிக்கத்தின் படிப்படியான வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன, அமெரிக்க பற்றாக்குறைகள் பெருகுவதற்கும் இட்டுச் சென்றன, அது 1985க்குள்ளாக அமெரிக்காவை ஒரு கடன்கார நாடாக மாற்றி விட்டிருந்தது.

அமெரிக்காவிலான நெருக்கடிக்குத் திரும்பும் அந்த அறிக்கை வரைந்து காட்டும் சித்திரம் இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறது:

முக்கியமான தனியொரு சமூகநலச் சட்டமும் கூட இரண்டுக்கும் மேற்பட்ட தசாப்தங்களில் [இப்போது நாம் அதை ஐந்து தசாப்தங்கள் என்று சொல்லலாம்] நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. பழைய சமூகநலத் திட்டங்களில் எஞ்சியிருந்ததையும் பாரிய நிதிநிலை வெட்டுக்கள் அழித்து விட்டிருக்கின்றன. குற்றங்களது புள்ளிவிவரங்கள் சமூக உறவுகளின் கேடான நிலையில் மிக வெளிப்பட்ட அறிகுறிகள் மட்டுமே. துரிதமாக பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையின் மத்தியில், அத்துடன் வேலைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் கூட, சரிந்து செல்லும் ஊதியங்களும், கல்வி, வீட்டுவசதி மற்றும் மருத்துவப் பராமரிப்பின் நிலையும் துயரகரமான நிலைக்கு சற்றும் குறைந்ததாயில்லை.

மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். அட்டைப்பெட்டிகளில் உறைந்து இறந்த வீடிழந்த மக்கள், மருத்துவக் காப்பீடு இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட புற்றுநோயாளிகள் மற்றும் வேலைவாய்ப்பில்லாமல் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் தற்கொலை செய்து கொள்வது என சமூக நெருக்கடியின் தாக்கத்தால் அழிக்கப்பட்ட வாழ்க்கைகளது கண்களை உறுத்தும் “படுபயங்கரக் கதைகள்” சிலவற்றை அன்றாடம் செய்தியாக்காமல் வெகுஜன ஊடகங்களாலும் கூட தவிர்க்க முடிவதில்லை.[10]

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை நோக்கி உணரக்கூடியளவு முன்னேறியமை ஆகியவை தொடர்பில், அறிக்கையானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமநிலையை கீழறுத்த அதே அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானவை தான் அவற்றின் மூல காரணமாய் இருந்தன என்பதை அது நிறுவுகிறது. அந்த ஆட்சிகளின் தேசியப் பொருளாதார அபிவிருத்தியில் தன்னிறைவு வேலைத்திட்டங்களின் காரணத்தால் தான் துல்லியமாய் அவை மிகப் பலவீனமானவையாக நிரூபணமாயின. அவற்றின் நெருக்கடியும் மறைவும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் பிற்போக்குத்தனமான மற்றும் மார்க்சிச-விரோத வேலைத்திட்டத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இடைவிடாத போராட்டத்தின் சரியானதன்மைக்கு சக்திவாய்ந்த நிரூபணத்தைக் குறித்தது.

ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் மீளெழுச்சிக்கு முகம்கொடுத்து நின்ற ஒடுக்கப்பட்ட மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் நிலைமைகளையும் அந்த ஆவணம் அம்பலப்படுத்துகிறது. வெகுஜனங்களுக்கு எந்த நீடித்த சமூக தேட்டங்களையும் கொண்டுவராததோடு ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மேலாதிக்கத்தையும் பாதுகாத்து வைத்திருந்த பொதுவான அரசியல் சுதந்திரம் எனும் கட்டுக்கதையையும் அது அம்பலப்படுத்தியது.

மாஸ்கோவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பனிப்போரைப் பயன்படுத்தி, காலனியாதிக்கத்திற்கு பிந்தைய சில ஆட்சிகள் ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெரும் சலுகைகளை கறந்து கொள்ள முடிந்தது என்ற அதேவேளையில், கோர்பச்சேவின் கீழான சோவியத் அதிகாரத்துவம், மூன்றாம் உலகம் என்று அழைக்கப்பட்டனவற்றில் இருந்த அதன் சார்பு நாடுகளைக் கைவிட்டமையானது ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்திற்கு இருந்த அனைத்து கடிவாளங்களையும் அகற்றி விட்டிருந்தது.

அதற்கான பிரதிபலிப்பாக, முதலாளித்துவ தேசியவாதிகள் அனைவரும் வலது நோக்கி கூர்மையாக சாய்ந்தனர், ஏகாதிபத்தியத்துடன் தகவமைத்துக் கொள்ள முனைந்தனர். இது சதாம் ஹுசைனது சக பாத்திச ஆட்சியான சிரியாவிலுள்ள ஹபீஸ் அல்-அசாத் உள்ளிட்ட பல்வேறு ஆட்சிகளையும் ஈராக்குடன் போருக்குச் சென்ற கூட்டணியில் இணைவதற்கு இட்டுச்சென்றது.

புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கிய ஒரு தீர்மானகரமான முன்னோக்கிய அடியை தயாரிப்பு செய்வதற்காக பேர்லின் மாநாடு அழைக்கப்பட்டிருந்தது என அறிக்கை வலியுறுத்தியது.

அது பின்வரும் தீர்க்கமான புள்ளியை முன்நிறுத்தியது:

நான்காம் அகிலத்தின் மாபெரும் வரலாற்று சாத்தியத்திறனானது, அதன் வேலைத்திட்டம் உலகப் பொருளாதார அபிவிருத்தியின் உள்முக தர்க்கத்திற்கு ஏற்ப அமைந்ததாக இருப்பதுடன் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்றுப் பாத்திரத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என்ற உண்மையில் புறநிலையாக வேரூன்றியிருக்கிறது. ஆயினும், அதன் வேலைத்திட்டத்தின் வெற்றியானது புறநிலை பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளின் தன்னியல்பான அபிவிருத்தியின் ஒரு விளைவாகவோ அல்லது வெகுஜனங்கள் உள்ளுணர்வுரீதியாக தமது பழைய தலைமைகளுடன் கொண்டிருக்கும் வெறுப்பின் ஒரு விளைவாகவோ தானாகவே அடையப்பட்டு விட முடியாது. புரட்சிகர வேலைத்திட்டம் போராடி வெற்றிகாணப்பட வேண்டியதாகும்.[11]

புற நிலைமைகளிலான மாற்றங்கள் எவ்வாறு ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக நடத்தப்பட்ட ஒரு நெடிய போராட்டத்துடன் சங்கமித்து பேர்லின் மாநாட்டிற்கு கொண்டுவந்திருந்தது என்பதை தோழர் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கை ஒரு வரலாற்று நிலைப்பாட்டில் இருந்து விளக்கியது. 2019 SEP கோடைப் பள்ளியின் முதல் விரிவுரையில் விவாதிக்கப்பட்ட அதே கட்டங்கள் மற்றும் காலகட்டங்களில் பெரும்பாலானவற்றையே அது திறனாய்வு செய்தது.

மாநாட்டின் முக்கியத்துவத்தை சுருங்க விவரித்த அந்த அறிக்கை கூறியது:

ஒரு பரந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு கன்னையாக இன்று நாம் இங்கு சந்திக்கவில்லை. இன்று இந்த அறையில் இருப்பவர்கள் நான்காம் அகிலத்தின் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிசத்தின் உத்தியோகபூர்வமான பிரதிநிதிகளாவர். இப்போது பப்லோவாதிகளுடன் தீர்மானகரமாய் கணக்கு தீர்க்க அனைத்துலகக் குழுவுக்கு சாத்தியமாயுள்ளது. கனன் 38 ஆண்டுகளுக்கு முன்பு செய்ய முயன்றதும், செய்யப்பட வேண்டும் என சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்ததுமான ஒன்றை நாங்கள் செய்திருக்கிறோம், அதாவது பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை நான்காம் அகிலத்தில் இருந்து களைந்திருக்கிறோம்.[12]

எந்த நிலைமைகளின் கீழ் பேர்லினில் மாநாடு கூட்டப்பட்டிருந்தது என்பதை, 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டபோது நிலவிய நிலைமைகளுக்கு அது எதிர்நிறுத்திப் பார்த்தது. அந்த ஸ்தாபக காங்கிரஸ் கூட்டப்படுவதற்கு முந்தைய 12 மாத காலத்தில், அதன் முன்னணி நபர்களான ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ், அவரது அரசியல் செயலரான எர்வின் வூல்ஃப் மற்றும் நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமெண்ட் அனைவரும் ஸ்ராலினிச இரகசிய போலிசான GPU ஆல் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கிளெமெண்ட் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது அவரது உடையில் இருந்து காங்கிரசில் வழங்கப்பட இருந்த ஆரம்ப அறிக்கை ஆவணம் களவாடப்பட்டதால் காங்கிரசுக்கு ஆரம்ப அறிக்கை இருக்கவில்லை.

இந்தப் படுகொலைகள், சோவியத் ஒன்றியத்தில் புரட்சிகரத் தொழிலாளர்கள், சோசலிச புத்திஜீவிகள் மற்றும் 1917 அக்டோபர் புரட்சியில் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகித்த போல்ஷிவிக் தலைவர்கள் ஆகியோர் அனைவருக்கும் எதிராய் நடாத்தப்பட்டு வந்த அரசியல் படுகொலைப் பிரச்சாரத்துடன் விலக்கவியலாமல் பிணைந்திருந்தன.

நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள்ளாக, மனிதகுலம் இன்னுமொரு உலகப் போருக்குள் மூழ்கடிக்கப்பட இருந்தது, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, அதன் முதன்மைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு GPU படுகொலையாளரின் கரங்களால் கொலை செய்யப்படவிருந்தார். போரின் சமயத்திலும் நான்காம் அகிலத்தின் தோழர்கள் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பாசிஸ்டுகள் அத்துடன் ஜனநாயக ஏகாதிபத்தியவாதிகள் என்பதாகக் கூறிக் கொண்டவர்களின் கூட்டான மற்றும் மரணகரமான ஒடுக்குமுறைக்கு இலக்காக்கப்பட்டனர், அமெரிக்க பிரிவின் தலைவர்கள் தேசத் துரோக வழக்குகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

நான்காம் அகிலம் இரண்டாம் உலகப் போரில் உயிர்தப்பிய அதேவேளையில், அந்த அறிக்கை கூறுவதைப் போல:

...பாசிஸ்டுகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் “ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகள் எதைச் சாதிக்க முயன்று தோற்றனரோ —நான்காம் அகிலத்தின் அழிப்பு— அதை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் கிரெம்ளினுக்கும் இடையிலான அரசியல் ஏற்பாட்டின் அடிப்படையில் உலக முதலாளித்துவத்தில் ஏற்படுத்தப்பட்ட மறுஸ்திரப்படலுக்கான ஒரு பதிலிறுப்பில் எழுந்த ஒரு சந்தர்ப்பவாத போக்கு கிட்டத்தட்ட சாதிக்க நெருங்கி விட்டிருந்தது. யூகோஸ்லாவியாவில் டீட்டோவின் கீழான நிகழ்வுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சொத்துறவுகள் தேசியமயமாக்கப்பட்டமை ஆகியவற்றில் இருந்து மிஷேல் பப்லோவும் அவரது நெருங்கிய சகாவான ஏர்னெஸ்ட் மண்டேலும், ட்ரொட்ஸ்கி உணரத் தவறிய ஒரு புரட்சிகர சாத்தியத்திறனை ஸ்ராலினிசம் தக்கவைத்திருந்ததான ஒரு முடிவுக்கு வந்தனர்.[13]

ஸ்ராலினிச அதிகாரத்துவங்களும் அவற்றுடன் தொடர்புடைய கட்சிகளும், ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியவாறாக, தொழிலாளர் இயக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் பிரதான முகமைகளாக இருப்பதற்குப் பதிலாக, அவை சோசலிசத்தின் வெற்றிக்குத் தேவையான உத்வேகத்தை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்தன என்றும் அவர்கள் கூறினர்.

பப்லோவாதத்தின் எழுச்சியின் காலகட்டத்தின்போது மரபுவழி ட்ரொட்ஸ்கிசம் (orthodox Trotskyism) முகம்கொடுத்த சாதகமற்ற நிலைமைகளை விளக்குகையில், தோழர் நோர்த் இவ்வாறு அழுத்தமாகத் தெரிவித்தார்:

இறுதி ஆய்வில், பப்லோவாதிகளின் செல்வாக்கானது, ஸ்ராலினிச அமைப்புகளிடமும் மற்றும் போருக்குப் பிந்தைய ஒழுங்கின் தனித்துவமான குணாதியங்களின் காரணமாக குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் போலியாக தீவிர ஏகாதிபத்திய-எதிர்ப்பு  நிலைப்பாட்டை காட்டிக்கொள்வதன் அடிப்படையில் வெகுஜனங்கள் மீது செல்வாக்கை பராமரிக்க கூடியதாக இருந்த குட்டி-முதலாளித்துவ சக்திகளிடமும் எஞ்சியிருந்த அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான புரட்சிகரத் தலைமை அபிவிருத்தி காண்பதை தடுக்கும் பொருட்டு இந்த சக்திகளை ஊக்குவித்தனர், அவர்களுடன் இணைந்து செயற்பட்டனர்.[14]

அதேநேரத்தில், 1985 உடைவுக்குக் கீழே மிக சக்திவாய்ந்த சக்திகள் இருந்தன என்பதையும் அத்துடன் மரபுவழி ட்ரொட்ஸ்கிசமானது, “பாதி-சட்டபூர்வமான போக்கு” என அது விவரிக்கப்படுகின்ற நிலையில் இருந்து நான்காம் அகிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மறுஉறுதிப்படுத்தும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

வேர்க்கர்ஸ் லீக் WRP உடனான கருத்துபேதங்களை முதன்முதலில் எழுப்பிய 1982 இல் இருந்து 1985 வரையான காலகட்டத்தை “மலைப்பூட்டும் வகையில் மிகக்குறுகிய காலகட்டம்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு இவ்வாறு அறிவிக்கிறது:

முந்தைய சந்தர்ப்பவாதத்தின் மேலாதிக்கத்திற்கு எவ்வாறு ஆழமான புறநிலை வேர்கள் இருந்தனவோ, அதைப்போலவே நான்காம் அகிலத்திற்குள்ளான உறவுகளின் மாற்றமும் உலக நிலைமைகளுக்குள்ளான மாற்றங்களின் ஒரு பிரதிபலிப்பாக இருந்தது. அனைத்துலகக் குழுவிற்குள்ளான 1982-85 போராட்டமானது, போலந்திலான நிகழ்வுகளுக்குப் பின்னரும் 1985 மார்ச்சில் கோர்பச்சேவ் பதவிக்கு வருவதற்கு முன்னரான காலத்திலும் சோவியத் அதிகாரத்துவத்தினுள்ளான நெருக்கடியுடன் கிட்டத்தட்ட ஏககாலத்தில் நடந்தது. [15]

நாம் ஏற்கனவே விபரித்ததைப் போல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் மாற்றங்கண்ட உறவுகள், வெறுமனே மாபெரும் புறநிலை மாற்றங்களின் செயலற்ற ஒரு பிரதிபலிப்பு மட்டுமல்ல. அவற்றுக்காக தயாரிக்கப்பட்டிருந்தது போராடப்பட்டிருந்தது. வேர்க்கர்ஸ் லீக் மற்றும் இலங்கையின் RCL ஒரு பக்கமும், மறுபக்கத்தில் WRP இவற்றுக்கு இடையில் விரிந்து சென்ற பிளவானது ஒரு தசாப்த காலத்தில் எதிரெதிர் அரசியல், தத்துவார்த்த, இன்னும் சொல்லப் போனால், வர்க்க நோக்குநிலைகளும் கூட அபிவிருத்தி கண்டிருந்ததை வெளிப்படுத்தியது. புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலானதே அடிப்படை பிரிப்புக்கோடாய் இருந்தது.

பேர்லின் மாநாட்டிற்கு வழங்கிய நிறைவு அறிக்கையில், டேவிட் நோர்த் விளக்கினார்:

தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதினும் பெரிய போராட்டங்களால் குணாதிசயப்படுத்தப்படும் ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து செல்லும் இயக்கத்திற்கு மார்க்சிச நனவைக் கொண்டுசெல்வதும், தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படைகளை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் பிரிவுகளுக்குள் ஒழுங்கமைப்பதும் நமது பணியாகும்...

தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான போர்க்குணத்தை மார்க்சிச நனவாக நாம் உருமாற்றியாக வேண்டும். அதனைச் செய்வதற்கான அரசியல் வலிமை நம்மிடம் இருக்கிறது, நமது சொந்த இயக்கத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்களுடன் நாம் தீர்மானகரமாய் கணக்குத் தீர்த்திருக்கிறோம் என்பதே அதற்கான துல்லிய காரணமாகும். இந்தப் போராட்டத்தின் பெறுபேற்றினால் தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை கொடுப்பதற்கான நமது உரிமையை நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.[16]

நான்கு வருடங்களுக்குப் பின்னர் கழகங்களை கட்சிகளாக உருமாற்றுவது என அனைத்துலகக் குழுவிற்குள்ளாக எடுக்கப்பட்ட முடிவிற்கு —இது வேறொரு விரிவுரையின் பேசுபொருளாக வரும்— இந்த மாநாடு அடித்தளங்களை அமைத்துத் தந்தது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களது வக்காலத்துவாதிகளின் திரும்பபெறமுடியாத மதிப்பிழப்பானது, நமது சர்வதேசக் கட்சிக்குக் கொண்டிருந்த அடிப்படையான வரலாற்றுத் தாக்கங்களை அந்த அறிக்கை அடையாளம் கண்டது:

பேர்லின் மாநாடு நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. முழு உலகிலும் நன்மதிப்பைப் பெற்ற ஒரேயொரு உலக ட்ரொட்ஸ்கிச அமைப்பாக அனைத்துலகக் குழு இன்று திகழ்கிறது. அனைத்துலகக் குழு நான்காம் அகிலத்திற்குள்ளான ஒரு குறிப்பிட்ட போக்காக இனி இல்லை, உள்ளபடியே அதுதான் நான்காம் அகிலமாகவே இருக்கிறது. இந்த மாநாடு தொடங்கி, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வேலைகளுக்கான தலைமைப் பொறுப்பை அனைத்துலகக் குழுவே ஏற்று நடத்தவிருக்கிறது.[17]

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் பாரசீக வளைகுடாப் போர் ஆகியவற்றுடன் சேர்த்து, பேர்லின் மாநாட்டின் மத்தியில் கட்டவிழ்ந்து கொண்டிருந்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாக இருந்த இன்னொரு முக்கிய உலக அபிவிருத்தியாக இருந்தது யூகோஸ்லாவியாவின் உடைவு ஆகும்.

மாநாட்டின் அறிக்கை பின்வருமாறு கூறியது:

பால்கன்களிலான இன்றைய நிகழ்வுகள் குறித்த செய்திகளை வாசிக்கும்போது அவை 1930 இல் அல்லது இன்னும் 1910 இல் எழுதப்பட்டவற்றைப் போல இருக்கின்றன. சேர்பியர்கள், குரோஷியர்கள், சுலோவேனியர்கள் மற்றும் பொஸ்னிய முஸ்லீம்கள் இடையிலான மோதல்கள் குறித்த, மாசிடோனியர்களின் தேசிய அடையாளத்தின் வரையறை மீதான சண்டைகள் குறித்த செய்திகளால் சர்வதேச ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. [18]

இந்த மோதல்கள் ஏகாதிபத்திய சக்திகளால் கையாளப்பட்டு கொண்டும் மற்றும் சுரண்டப்பட்டுக் கொண்டும் இருந்த அதேநேரத்தில் முதலாளித்துவமானது சமூக சமத்துவமின்மையின் மீதான மக்கள் கோபத்தை தேசிய மற்றும் இன மோதல் என்னும் முட்டுச்சந்திற்குள்ளாக திருப்பிவிடுவதற்கு முனைந்து கொண்டிருந்தது என்பதை அந்த அறிக்கை எச்சரித்தது.

வகுப்புவாத வன்முறைக்காக, குட்டி-முதலாளித்துவ பிற்போக்கு வாய்வீச்சாளர்களால் ஆர்ப்பாட்டம் செய்ய முடிந்ததென்றால், ”தேசியவாதத்தின் புத்திஜீவித மற்றும் தார்மீக சக்தியின் காரணத்தினால் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரியமான அமைப்புகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான எந்த வழியையும் முன்வைக்காமல் சரணாகதியடைந்ததினால் விடப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் காரணத்தினாலேயே ஆகும்.”

1991 மே 1 அன்று மாநாட்டுக்கு அழைப்புவிட்ட காலத்திற்கும், நவம்பர் 16 அன்று அது கூடிய காலத்திற்கும் இடையிலான நிகழ்வுகள் மிகத் துரிதமாக நகர்ந்தன, குரோஷியா மற்றும் சுலோவேனியா இரண்டு நாடுகளும் அந்த ஆண்டு ஜூன் 25 அன்று தமது சுதந்திரத்தை பிரகடனம் செய்தன. மாசிடோனியாவும் வெகுவிரைவில் அதனைச் செய்தது, பொஸ்னியா-ஹேர்ஸகோவினா குடியரசு சண்டையிட்டும் இனரீதியான பிராந்தியங்களாக துண்டுதுண்டாக உடையத் தொடங்கியது. ஆயுதமோதல்கள், குறிப்பாக கடற்கரை நகரமான டுப்ரோவ்னிக்கை (Dubrovnik) சூழ்ந்து வெடித்தன.


அமெரிக்க இராணுவ டாங்கி ஜனவரி 1996, டுப்ரேவ் அருகே ஒரு பொஸ்னிய சேர்பிய பதுங்கு குழியை இடிக்கிறது

 

கொடிய இனப் பேரினவாதம் மற்றும் தேசியப் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஆளும் கம்யூனிஸ்டுகள் லீக்கின் அதிகாரத்துவத்தினரால் தலைமைகொடுக்கப்பட்டது. ஒருபக்கத்தில், முதலாளித்துவ மீட்சியின் பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) திணிக்கப்பட்டிருந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன வேலைநிறுத்தங்களது ஒரு அலையை நடத்தியிருந்த யூகோஸ்லாவிய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் அவர்கள் முனைந்தனர். மறுபக்கத்தில், ஏகாதிபத்திய முகவர்களாக செயல்படும் முதலாளித்துவத்தினரின் ஒரு புதிய ஆளும் வர்க்கமாக, ஏகாதிபத்தியத்துடன் தமது சொந்த சுதந்திரமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்காக இனரீதியான அரசுகளை உண்டாக்குவதை நோக்கி அவர்கள் செலுத்தப்பட்டனர்.

தோழர் நோர்த், மாநாட்டிற்கு அவர் அளித்த அறிக்கையில், ஆட்சியின் தன்மை பற்றிய அக்கறையின்றி குரோஷியாவின் சுய-நிர்ணயத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஆலோசனையளித்த பப்லோவாத தலைவர் ஏர்னெஸ்ட் மண்டேல் கைக்கொண்ட அணுகுமுறையை சுட்டிக்காட்டினார். மேலும் மண்டேல், குரோஷிய பேரினவாதத்திற்கு கண்ணை மூடிக் கொண்ட அதேநேரத்தில் சேர்பிய பேரினவாதத்தை கண்டனம் செய்து நேரடி ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

மறு-இணைவுக்குப் பின்னர் ஐரோப்பாவில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதன் பகுதியாக குரோஷிய மற்றும் சுலோவேனிய சுதந்திரத்தை ஆதரித்துக் கொண்டிருந்த ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டுடன் இந்த நிலைப்பாடு நேர்த்தியாக பொருந்திக் கொண்டது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தை மீறி, 1914 மற்றும் 1941 இன் அதன் குற்றக் காட்சிகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

பேர்லின் மாநாடு “கிழக்கு ஐரோப்பாவினதும் சோவியத் ஒன்றியத்தினதும் தொழிலாள வர்க்கத்தை பாதுகார்” என்ற தலைப்பிலான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அது பின்வருமாறு தெரிவித்தது:

எங்கெங்கிலும் போட்டி முதலாளித்துவக் கும்பல்கள் தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் கிளறி விட்டுக் கொண்டிருக்கின்றன, தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராய் ஒருவரை தூண்டிவிட்டு பழைய மற்றும் புதிய ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான எந்த ஒரு எழுச்சியையும் முன்கூட்டியே இல்லாது செய்து விடும்பொருட்டே இவ்வாறு செய்யப்படுகிறது. இந்தக் கொள்கைகளது விளைவே யூகோஸ்லாவியாவின் இரத்தக்களரியாகும். இந்தப் போருக்கும் தேசங்களின் சுய-நிர்ணய உரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சேர்பிய மற்றும் குரோஷிய தேசியவாதிகள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டி, கிடைப்பதில் ஒரு மிகப்பெரும் பகுதியை தமதாக்கிக்கொள்வதற்கு மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.[19]

தேசியப் பிரச்சினையும் “சுய-நிர்ணய” சுலோகமும் போலவே யூகோஸ்லாவியாவின் வரலாறு மற்றும் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஆகியவை ஒரு முழுப் பள்ளியில் படிக்கப்படக் கூடிய விடயமாகும். அது இந்த விரிவுரைக்குள் எட்டப்பட முடியாது என்பது தெளிவு.


அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் பொஸ்னியாவின் ருஷ்லாவில் அமெரிக்க துருப்புக்களுக்கு உரையாற்றுகிறார்

 

தேசியப் பிரச்சினை பற்றிய ICFI இன் முன்னோக்கின் அபிவிருத்தியானது, அரசியல் ஆதரவு கொடுக்கப்பட வேண்டிய “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” தலைவர்கள் என்று குறிப்பிட்டு பல்வேறு முதலாளித்துவ தேசியவாதத் தலைவர்களையும் WRP ஊக்குவித்தமைக்கு எதிராக 1982க்கும் 1985க்கும் இடையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்தே உண்மையில் பெறப்பட்டது. இவ்வாறாக பப்லோவாதக் கண்ணோட்டத்திற்கும் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடனான கோட்பாடற்ற கூட்டணிகளுக்குத் திரும்பியதற்கும் எதிராய், வேர்க்கர்ஸ் லீக் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும், ஒடுக்கப்பட்ட நாடுகளில் புரட்சியின் ஜனநாயகக் கடமைகளை அடைவதற்கான ஒரே வழிவகையாக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான விதத்தில் புரட்சிகரமாக அணிதிரட்டுவதன் அவசியத்தையும் பாதுகாத்தது.

தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் எந்த பிரதிநிதிகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதற்கு இயல்பாகவே திறனற்றிருந்ததை சுட்டிக்காட்டிய 1988 ICFI முன்னோக்குகள் தீர்மானத்தில் இந்த பகுப்பாய்வு ஆழப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையிலான முன்னோக்குகள் மற்றும் தமிழ் தேசியவாத விடுதலைப் புலிகள் அமைப்பை நோக்கிய கட்சியின் அணுகுமுறை —இவை வேறொரு விரிவுரையில் விரிவான பேசுபொருளாக வரவிருக்கிறது— ஆகியவற்றிலான வெகுமுக்கிய விவாதங்களில் அது மேலும் ஸ்தூலமாக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் யூகோஸ்லாவியாவின் உடைவும் மட்டுமல்ல, மிக அடிப்படையாக, முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் அபிவிருத்தியும் சேர்ந்து, ஏகாதிபத்தியத்துடனும் நாடுகடந்த மூலதனத்துடனும் மிக அனுகூலமான உறவுகளை ஸ்தாபிப்பதில் போட்டி முதலாளித்துவக் கன்னைகளின் நலன்களை முன்னெடுப்பதற்காக, இருக்கும் அரசுகளில் இருந்து —காலனியாதிக்கத்திற்கு எதிரான முந்தைய தேசியப் போராட்டங்களில் இருந்து எழுந்த அரசுகள் உள்ளிட— பிரிய முனையும் ஒரு புதிய வகை தேசிய இயக்கத்திற்கு வழிவகுத்தது.

இதுவே யூகோஸ்லாவியா விடயத்தில் முழு உண்மையாக இருந்தது, இருக்கும் கூட்டமைப்பை உடைப்பதற்கான முதல் உந்துதலானது, அங்கே நாட்டின் வசதியான பிராந்தியங்களான சுலோவேனியா மற்றும் குரோஷியாவில் இருந்து வந்தது, அங்கிருந்த உள்ளூர் ஆளும் உயரடுக்கினர் வறிய குடியரசுகளில் இருந்து உடைத்துக் கொண்டு ஐரோப்பிய அரசாங்கங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுடன் தமது சொந்த சுதந்திரமான உறவுகளை ஸ்தாபிப்பதன் மூலமாக தங்கள் நிலை மேலும் மேம்படும் என்பதாய் கணக்குப் போட்டனர்.

இதேபோன்ற சிந்தனைகள் தான் வரிசையாக பல தேசியப் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கமளித்து வந்திருக்கிறது, ஐரோப்பாவில் இத்தாலியில் வலது-சாரி வடக்கு லீக் மற்றும் ஸ்பெயினில் கட்டலான் தேசியவாதம் ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்த புதிய தேசியவாதமானது இந்தியாவிலும் சீனாவிலும் போன்ற, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் பலதரப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக புதிய அரசுகளை உருவாக்குகின்ற முற்போக்கான பணியை முன்வைத்த முந்தைய தேசிய இயக்கங்களில் இருந்து முற்றிலும் முரண்பட்டதாய் இருந்தது. இப்பணி தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் எட்டப்பட முடியாது என்பது தெளிவுபட நிரூபணமானது. இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுந்த தேசியவாத இயக்கங்களோ இருக்கின்ற அரசுகளை ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இன, மத மற்றும் மொழி வழியில் உடைப்பதற்கு முனைந்தன.

பப்லோவாதிகள் “சுய-நிர்ணயத்துக்கான உரிமை” என்ற சுலோகத்தைப் பிடித்துக் கொண்டு லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மேற்கோள்களை அவற்றின் வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து அவற்றின் முழுமையான புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கிற்கு முற்றிலும் எதிரான நோக்கங்களுக்காக பயன்படுத்தி இந்த புதிய தேசியவாத இயக்கங்களை பாதுகாத்தனர் மற்றும் ஊக்குவித்தனர்.

ஆர்மீனிய சமூக ஜனநாயகக் கட்சியினர் விடுத்த ஒரு அறிக்கைக்கு பதில் எழுதிய லெனின், அறிவித்தார்:

ஒவ்வொரு தேசியத்தின் சுய-நிர்ணயத்துக்கான உரிமையை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை எளிமையாக உணர்த்துவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாகிய நாம், வன்முறை மூலமாகவோ அல்லது அநீதியாகவோ வெளியிலிருந்து செல்வாக்கு செலுத்துவதற்கான எந்த முயற்சியையும் எப்போதும் மற்றும் நிபந்தனையில்லாமல் எதிர்த்து நிற்க வேண்டும் என்பது மட்டுமேயாகும். நமது இந்த எதிர்மறை கடமையை (வன்முறைக்கு எதிராக போராடுவது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வது) எல்லா நேரங்களிலும் செய்கின்ற அதேவேளையில், நாம் நமது தரப்பில் இருந்து, மக்கள் அல்லது தேசங்களின் சுய-நிர்ணயத்தைக் காட்டிலும் ஒவ்வொரு தேசியத்திலும் உள்ள பாட்டாளி-வர்க்கத்தின் சுயநிர்ணயத்தையே நமது அக்கறையாகக் கொள்வோம் ... தேசிய தன்னாட்சிக் கோரிக்கைக்கான ஆதரவைப் பொறுத்தவரையில், அது எந்த வழியிலும் பாட்டாளி வர்க்க வேலைத்திட்டத்தின் ஒரு நிரந்தரமான மற்றும் கட்டிப்போடும் பகுதியாக ஆகாது. தனித்தனியான மற்றும் விதிவிலக்கான விடயங்களில் மட்டுமே இந்த ஆதரவு அதற்கு அவசியமாகலாம்...[20]

“நமது இந்த எதிர்மறை கடமை” என்று லெனின் கூறியதன் அர்த்தம் என்ன? கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பும் கூட சோசலிஸ்டுகள் தேசியப் பிரிவினையை நேர்மறையாக அறிவுறுத்தவில்லை என்று அவர் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் தேசிய சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கோ அல்லது அவர்களை இருக்கும் முதலாளித்துவ தேசிய அரசு கட்டமைப்புகளுக்குள்ளாக பலவந்தமாக பிடித்து வைத்திருப்பதற்கோவான எந்த முயற்சிக்கும் சமரசமற்ற எதிரிகளாக அவர்கள் இருப்பார்கள். போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக இருக்கின்ற தேசிய செல்வாக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கும் தாமதப்பட்ட முதலாளித்துவ ஆட்சிகளது குணாதிசயமாய் இருந்த இன மற்றும் மொழித் தடைகளை உடைத்தெறிவதற்குமான ஒரு வழிவகையாக சுய-நிர்ணயத்துக்கான உரிமையை —தேசியப் பிரிவினையை பரிந்துரைப்பதை காட்டிலும்— அவர்கள் பாதுகாத்தனர். “தேசங்களின் சிறைச்சாலை” என்று அறியப்பட்ட ரஷ்யாவில், இது ஒட்டுமொத்த ஜாரிச சாம்ராஜ்யம் முழுமையிலும் ஒரு ஐக்கியப்பட்ட வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்கு, மகா ரஷ்ய பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுகின்ற வடிவத்தை எடுத்தது.

லெனின் அவரது ‘தேசிய சுய-நிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமை’ என்ற ஆய்வில், சுய-நிர்ணய “பிரச்சினையில் ஒரு ஸ்தூலமான வரலாற்றுப் பகுப்பாய்வை” கோரினார். அது ஒருவகையான அருவமான மற்றும் சர்வவியாபகத்தன்மை பெற்ற சுலோகமல்ல என்பதையும், அது குறிப்பிட்ட நாடுகளின் வரலாற்று அபிவிருத்திக் கட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1914 இல் எழுதுகையில், லெனின் உலகை மூன்று வகைகளாகப் பிரித்தார். முதலாவது வகையான, ஐரோப்பாவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், 1871க்கு முன்பாகவே முற்போக்கு முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் பாத்திரம் முடிவுக்கு வந்து விட்டதாக அவர் கூறினார். இரண்டாவது வகையைச் சேர்ந்த, கிழக்கு ஐரோப்பா, பால்கன்கள் மற்றும் ரஷ்யாவிலும் கூட, முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் 20 ஆம் நூற்றாண்டின் விடியலில் தான் எழுந்திருந்தன. மனிதகுலத்தின் மிகப்பெரும்பான்மையினரைக் கொண்ட சீனா, இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகளில், முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் இன்னும் “ஆரம்பிக்கப்பட்டும் கூட இருக்கவில்லை”.

மேலும், லெனின் தேசிய இயக்கங்களுக்கான புறநிலை உந்துசக்தியை தேசிய அரசுகளின் உருவாக்கம், பிராந்தியங்களின் அரசியல் ஐக்கியம் மற்றும் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவது ஆகியவற்றுடன் பிணைந்திருந்த முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் இருந்து வரையறை செய்தார்.


விளாடிமிர் லெனின்

தேசிய சுய-நிர்ணய சுலோகத்தை மறுஆய்வு செய்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் லெனின் போன்ற அதே வரலாற்று-சடவாத அணுகுமுறையை மேற்கொண்டது, அது பழைய சூத்திரங்களை மனப்பாடமாய் ஒப்புவிக்காமல் மாறாக ஒரு ஸ்தூலமான வரலாற்று பகுப்பாய்வை மேற்கொண்டது.

தேசிய சுய-நிர்ணயம் பொருந்தக்கூடியதாக லெனின் கூறியிருந்த இரண்டு வகைநாடுகளும் —கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா மற்றும் பால்கன்கள் மற்றும் காலனித்துவ உலகம்— 1914க்குப் பிந்தைய காலத்தில், ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சி மற்றும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனியாதிக்கமய அகற்றம், மற்றும் 1949 சீனப் புரட்சி ஆகியவை உள்ளிட தீவிரமான புரட்சிகரக் கொந்தளிப்புகள் ஊடாகக் கடந்து வந்திருந்தன.

புதிய இன-தேசிய பிரிவினைவாத இயக்கங்கள், லெனின் குறிப்பிட்ட “முதலாளித்துவ-தேசியவாத தேசிய இயக்கங்கள்” ஆக இல்லை. கிழக்கு ஐரோப்பா, பால்கன்கள் மற்றும் ரஷ்யாவில், அவை முதலாளித்துவ மீட்சி நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக எழுந்திருந்தன, அவர்களே முதலாளித்துவவாதிகளாக மாறியிருந்த அதிகாரத்துவவாதிகள் வன்முறை மற்றும் இனச் சுத்திகரிப்பு மூலமாக தமது பிராந்தியங்களை வளைத்தெடுக்க முனைந்தனர். முன்னாள் காலனித்துவ நாடுகளில், முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஆட்சியில், ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரத்தை அடையத் தவறியதன் உபவிளைபொருளை அவை பிரதிநிதித்துவம் செய்தன.  

இந்த நிலைமைகளின் கீழ், “சுய-நிர்ணயத்திற்கான உரிமை”யானது லெனினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தாக்கங்களில் இருந்து மிக வேறுபட்ட ஏதோவொன்றைக் குறிப்பதாக அர்த்தமளிக்கும் நிலைக்கு வந்திருந்தது. இந்த உரிமைக்கு லெனின் மற்றும் போல்ஷிவிக்குகளால் கொடுக்கப்பட்ட “எதிர்மறை” தன்மையானது, ஏகாதிபத்திய சக்திகளின் உதாரணத்தை பின்பற்றி இன மற்றும் மதவாத தனித்துவவாதத்தின் அடிப்படையிலான தேசிய பிரிவினைவாதத்தின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் முற்போக்கு அபிவிருத்தியாகக் கூறி ஊக்குவிக்கின்ற பப்லோவாதிகள் மற்றும் போலி-இடதுகளால் முற்றிலுமாய் தூக்கிவீசப்பட்டிருந்தது.

இந்த புதிய தேசியவாத இயக்கங்கள், வெளிப்படையாக லெனின் விவரித்தவாறு ஒரு தேசியப் பிராந்தியத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் உள்நாட்டுச் சந்தையை கைப்பற்றுவதற்குமாய் தேசிய அரசுகளை உருவாக்குகின்ற நிகழ்ச்சிப்போக்கில் ஈடுபடவில்லை. மாறாக அவை இருக்கின்ற அரசுகளைத் துண்டாடுவதற்காய் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு உள்நாட்டுச் சந்தையை உருவாக்குவதற்குப் பதிலாக, உள்ளூர் முதலாளித்துவக் கூட்டங்களது நலன்களுக்காக ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபிப்பதே அவற்றின் நோக்கமாய் இருக்கிறது.

உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பின் இந்த சகாப்தத்தில், புதிய தேசிய அரசுகளை உருவாக்குவதன் மூலமாக மனிதகுல விடுதலை முன்னெடுக்கப்பட முடியும் என்ற கருத்தாக்கத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிராகரித்தது. உலகின் மக்களை இன, மொழி மற்றும் மத ரீதியாகத் துண்டாடுகின்ற வேலைத்திட்டம் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய பாதையாகும். இந்த அபிவிருத்திகளுக்கு எதிராக, தேசிய எல்லைகளைக் கடந்து, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தை அது முன்னெடுத்தது.

முடிவாக: சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் வளைகுடாப் போரின் தொடக்கம் இவற்றுடனான 1990 மற்றும் 1991 இன் “ஒற்றைத்துருவ தருணம்” என்பதாக கூறப்பட்டதானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தையும் மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமநிலையின் உருக்குலைவைக் குறித்து நின்றது. அது இடைவிடாத போர், ஏகாதிபத்தியங்கள் இடையிலான போட்டிகளது வளர்ச்சி, மற்றும் தவிர்க்கவியலாமல், வர்க்கப் போராட்டத்திலான ஒரு உலகளாவிய வளர்ச்சி மற்றும் சோசலிசப் புரட்சி ஆகியவற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கத்தை சமிக்கையளித்தது.

மிகப்பெரும் நிகழ்வுகளுக்கான பதிலிறுப்பு மற்றும் 1985 உடைவையொட்டி முன்னெடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தெளிவூட்டுவதற்கான போராட்டம் ஆகியவை, இந்த இயக்கம் மட்டுமே நான்காம் அகிலம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை மறுக்கவியலாத வண்ணம் ஸ்தாபித்துள்ளன. தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்த தீவிரமான கடமைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்பத் தயாரிப்புடன் இருக்கும் ஒரேயொரு இயக்கமும் அது மட்டுமே என்பதையும் அது ஸ்தாபித்துள்ளது.

தீவிரமான மாற்றங்களின் காலகட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ஆவணங்கள், இப்போது, லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னோக்கி பார்க்கப்பட்டவாறான உலக சோசலிசப் புரட்சிக்கான வெகுஜனக் கட்சியாக ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், உலக அளவிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு மீளெழுச்சிக்கு நாம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், நம் முன்னே உள்ள வேலைகளுக்கான இன்றியமையாத தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களை வழங்குகின்றன.

Footnotes:

[1] The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, Perspectives Resolution of the International Committee of the Fourth International, (Detroit: Labor Publications, 1988), p. 66.

[2] Fareed Zakaria, “The Self-Destruction of American Power,” Foreign Affairs, Vol. 98, No. 4, (July/August 2019)

[3] Charles Krauthammer, “The Unipolar Moment,” Foreign Affairs, Vol. 70, No. 1, (1990/1991), pp. 23–33

[4] The Bulletin, March 1, 1991, “Bush is Guilty of Mass Murder”

[5] Cited in Desert Slaughter, The Imperialist War Against Iraq, (Detroit: Labor Publications, 1991), p. 232.

[6] Karl Marx Frederick Engels, Collected Works, Vol. 25, p. 153.

[7] The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International, The Transitional Program, (New York: Labor Publications, 1981), p. 20.

[8] Workers League Internal Bulletin, Vol. 4, No. 15, p. 31.

[9] Workers League Internal Bulletin, Vol. 5, No. 1, p. 2.

[10] Oppose Imperialist War & Colonialism, Manifesto of the International Committee of the Fourth International, (Detroit: Labor Publications, 1991), p. 12.

[11] Ibid., p. 24.

[12] The Fourth International, Vol. 19, No. 1, Fall-Winter 1992, p. 11.

[13] Ibid., p. 7.

[14] Ibid., p. 9.

[15] Ibid., p. 10

[16] Ibid., p. 14

[17] Ibid., p. 13.

[18] Oppose Imperialist War & Colonialism, p. 16.

[19] The Fourth International, Vol. 19, No. 1, p. 38.

[20] On the Manifesto of the Armenian Social Democrats, Iskra, No. 33, Feb. 1, 1903, Lenin, Collected Works, Vol. 6, pp. 326–329.