ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The World Capitalist Crisis and the Tasks of the Fourth International: An analysis of the ICFI Perspectives resolution of 1988

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்: 1988 ஆண்டு ICFI முன்னோக்குகள் தீர்மானம் குறித்த ஒரு பகுப்பாய்வு

By Andre Damon
20 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியில் ஒரு முன்னணி உறுப்பினருமான ஆண்ட்ரே டேமன் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 23 அன்று வழங்கியதாகும்.

1988 இல் வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசில் அளித்த தனது ஆரம்ப அறிக்கையில், டேவிட் நோர்த் பின்வருமாறு குறிப்பிட்டார்:

... மார்க்சிஸ்டுகளுக்கு, வேலைத்திட்டமானது புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தில் வேரூன்றியுள்ள உலக வரலாற்று அனுபவங்களின் ஒரு ஆழமான உட்கிரகிப்பில் இருந்து தோன்றுகிறது. “நிகழ்காலம்” எதில் இருந்து எழுந்ததோ அந்த நிகழ்ச்சிப்போக்கை வெளிக்காட்டுகின்ற கடந்த காலத்தின் மீதான ஒரு விமர்சனத்தின் ஊடாகவே கட்சியின் வேலைத்திட்டம் உருப்பெற முடியும். அதன் வரலாற்று வேர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின், “நிகழ்காலம்” என்பது நெய்த இழைகள் இல்லாத, ஆழம் இல்லாத மற்றும் உண்மை இல்லாத வெறும் ஒரு அலங்கார முகப்பாக மட்டுமே இருக்கிறது.[1]

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தத்துவார்த்த வேலைகள் அத்தனையிலும் போலவே —அவை எவ்வளவு தான் அன்றாட வேலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதாக தோன்றினாலும்— நாம் ஈடுபட்டுள்ள ஆய்வு வேலையானது மிகவும் நடைமுறை இலக்குகளை நோக்கமாய் கொண்டதாகும். ICFI இன் வரலாறு குறித்த நமது திறனாய்வில் நாம், சமகால யதார்த்தத்தை பரிசீலிப்பதற்கும் அறிகை செய்வதற்குமான, தொழிலாள வர்க்கத்தை நோக்கி நம்மை நோக்குநிலை அமைத்துக் கொள்வதற்கான, மற்றும் சமூகத்தின் சோசலிச உருமாற்றத்தில் அதன் தலைமையேற்புக்கு போராடுவதற்கான பகுப்பாய்வுக் கருவிகளை நாம் கடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த காலத்தின் படிப்பினைகளைப் பெறுவது என்பதேயும் நிகழ்காலத்தின் வேலைக்கான ஒரு பங்களிப்பே. ஹேகல் அவரது மெய்யியலின் வரலாறு என்ற நூலில், மனித சிந்தனையின் அபிவிருத்தி குறித்து முன்வைத்ததை பதின்மூன்றாவது தேசிய காங்கிரஸ் மேற்கோளிட்டது:

நமது சகாப்தத்தின் மற்றும் ஒவ்வொரு சகாப்தத்தின் செயல்பாடு இதுதான்: ஏற்கனவே இருக்கின்ற அறிவை உட்கிரகிப்பது, அதனை சொந்தமாக்கிக் கொள்வது, அவ்வாறு செய்கையில் அதனை மேலதிகமாக அபிவிருத்தி செய்து மற்றும் ஒரு உயரிய மட்டத்திற்கு அதனை மேலுயர்த்துவது. அதனை நாம் உள்ளீர்த்துக்கொள்வதன் மூலமாக அதனை முன்பிருந்ததில் இருந்து வேறுபட்ட ஏதோவொன்றாக நாம் ஆக்குகிறோம். நாம் உள்ளீர்த்துக் கொண்டதில் உருமாற்றம் கண்ட ஏற்கனவே இருந்த புத்திஜீவித உலகம் ஒன்று இருக்கும். இந்த முன்னிபந்தனையானது, மெய்யியல் அத்தியாவசியமாக அது எதிலிருந்து எழுந்ததோ அந்த முந்தைய மெய்யியலுடன் தொடர்புபட்டே எழ முடியும் என்ற உண்மையைச் சார்ந்ததாய் இருக்கிறது. வரலாற்றின் பாதை, நமக்கு அந்நியமான விடயங்கள் எவ்வாறாகப்போகின்றன என்பதை காட்டவில்லை, மாறாக நாமும் நமது சொந்த அறிவும் எவ்வாறாகப்போகின்றன என்பதையே காட்டுகின்றது.[2].

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கடந்த காலம் குறித்த ஒரு விமர்சனபூர்வ மதிப்பீடு என்பது, ஒரு செயலற்ற பிரதிபலிப்பு நடவடிக்கையாக இருப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், அதுவேயும் புரட்சிகர நடைமுறையின் ஒரு உட்கூறாக இருக்கிறது.

அதுவே பல வழிகளிலும் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக தேசிய சந்தர்ப்பவாதத்தை தோற்கடிப்பதற்கான தெளிவுபடுத்தும் அழைப்பாகவும், பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிச அபிவிருத்தியும் என்ற நூலில் பிரசுரிக்கப்பட்டதுமான கீழ்க்காணும் வரிகள் வழங்கும் அர்த்தமாகும்:

கூட்டாக ஒரு தலைமை இந்த வரலாற்றின் முழுமையையும் உட்கிரகித்துக் கொள்ள முடியாது போனால், தொழிலாள வர்க்கத்திற்கான அதன் புரட்சிகர பொறுப்புகளை அதனால் நிறைவேற்ற இயலாது... இவ்வாறாக ட்ரொட்ஸ்கிச அபிவிருத்தியானது, வர்க்கப் போராட்டத்தின் புதிய அனுபவங்களை, நமது இயக்கத்தின் முழு வரலாற்றில் இருந்து தேற்றம் செய்யப்பட்ட அறிவுடன் பொருத்திப் பார்ப்பதன் மூலமாக முன்செல்கிறது.[3]

வேர்க்கர்ஸ் லீக், 1988 ஆகஸ்டில் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட தொடக்க அறிக்கையில், WRP உடனான உடைவுக்குப் பிந்தைய கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்தை திரும்பிப் பார்த்தது, டேவிட் நோர்த் “1985 இன் நமது சொந்த அக்டோபர் புரட்சி” என்று அழைத்ததற்கு கவனம் ஈர்த்தது. நாங்கள் எழுதினோம்:

1985 இன் நமது சொந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ஒரு மிகப்பெரும் மாற்றம் நடந்தேறியிருக்கிறது. [4]

முதல் பார்வையில், இப்படியான ஒரு ஒப்பீடு கிட்டத்தட்ட அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றக் கூடும். அக்டோபர் புரட்சி என்பது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மாபெரும் நிகழ்வு. நேரடியாக ஒரு சில நூறுபேர், அல்லது, அதிகம் போனால், ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கக் கூடியதான ஒரு நிகழ்வை, உயிர்வாழ்ந்த கிட்டத்தட்ட பத்து பில்லியன் மக்களில் ஒவ்வொருவரது வாழ்க்கையின் வடிவத்தையும் தீர்மானித்ததாக இருந்த ஒரு வரலாற்று நிகழ்வுடன் நம்மால் எவ்வாறு ஒப்பிட முடியும்?

ஆயினும் இந்த ஒப்பீடானது ஒரு மிகைப்படுத்தல் அல்ல. இந்த உடைவானது, ஆற்றல், பரந்த அளவு மற்றும் உந்துசக்தி ஆகியவற்றில் 1890கள் மற்றும் 1917 இல் மார்க்சிச தத்துவம் கண்ட அபிவிருத்தியுடன் ஒப்பிடத்தக்கதாகவும், ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குள் சுருக்கப்பட்ட, மார்க்சிசத்தின் ஒரு தத்துவார்த்த மறுமலர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியது.

1988 ஏப்ரல் 1-2 அன்று, வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழுவின் நிறைபேரவையானது, “அனைத்துலகக் குழுவில் இருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றவும், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றில் காலூன்றியதாக இருக்கும் வேலைத்திட்டத்திற்கு உலகக் கட்சி மற்றும் அதன் பிரிவுகளுக்குள்ளாக அதற்குரிய தகுதியான இடத்தை மீட்சி செய்யவுமான ஒரு முறைப்படியான போராட்டத்தை நாம் தொடங்கினோம்” என்பதே “இந்த உடைவின் அத்தியாவசியமான முக்கியத்துவமாகும்” என்று குறிப்பிட்டது. [5]

”ஒரு அடிப்படையான அர்த்தத்தில்... ஓடுகாலிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாம் வென்றிருந்தோம்” என்று 1988 ஜனவரி 3 அன்று வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு குறிப்பிட்டது:

நமது போராட்டத்தின் மூலமாக சந்தர்ப்பவாதிகளின் ஒரு முழுமையான வலதுசாரி கும்பலை நாம் வெளியேற்றி விட்டிருந்தோம், நமது ட்ரொட்ஸ்கிச அடித்தளங்களை மறுஉருக்கொடுத்து மீள்ஸ்தாபகம் செய்திருந்தோம், அத்துடன் கட்சியின் தத்துவார்த்த மட்டத்தில் ஒரு பெரும் அபிவிருத்தியை செய்திருந்தோம். நான்காம் அகிலம் என்ற எமது தத்துவார்த்த ஏட்டின் ஐந்து பிரதிகளில் பிரதிபலித்தவை ட்ரொட்ஸ்கியின் நாட்களுக்குப் பிந்தைய காலத்தில் மார்க்சிசத்தின் மாபெரும் அபிவிருத்தியாக இருந்திருக்கின்றன.[6]

வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரஸ் அறிவித்தது:

உடைவின் இரண்டாம்பட்ச அம்சங்கள் மற்றும் அதில் பங்குபெற்ற உடனடி சூழல்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், மிஞ்சுவது குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதிகளுக்கும் இடையிலான ஒரு பிளவே ஆகும்.

...உலகளவில் தொழிலாளர் இயக்கத்தின் இன்றைய நெருக்கடியானது, மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய-சீர்திருத்தவாத முன்னோக்குகள் அனைத்தின் முற்றுமுதலான திவால்நிலையையே குறிக்கிறது. [7]

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேசிய சந்தர்ப்பவாதத்தின் பிரதிநிதிகளுடனான உடைவானது தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) ஆல் நிராகரிக்கப்பட்டிருந்த மற்றும் கைவிடப்பட்டிருந்த ஒரு சர்வதேசிய வேலைத்திட்டத்தின் கருத்தாக்கத்தின் தெளிவுபடுத்தலுக்கு மேடை அமைத்துத் தந்தது.

WRP ஆனது “தொழிலாள வர்க்கத்தில் மத்தியில் கட்சியின் போராட்டங்களை உட்செலுத்துவதிலும் வழிநடத்துவதிலும், வேலைத்திட்டம் தான் அடிப்படையானது என்ற கருத்தாக்கத்தின் மீது தொடர்ச்சியானதொரு தாக்குதலை நடத்தியது... வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த அந்த கருத்தாக்கத்திற்கு எதிராய் அவர்கள், வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை தூக்கிவீசிவிட்டு அதன் மேலே, ஒரு முற்றிலும் மேம்போக்கான மற்றும் வரலாற்றுவழியல்லாத விதத்தில், வழிமுறை பற்றிய பிரச்சினையை இருத்தினர்.” [8]


டேவிட் நோர்த்

1988 வேர்க்கர்ஸ் லீக்கின் கோடை முகாமில் வைக்கப்பட்ட தொடக்க அறிக்கை தெரிவித்தது:

1971 ஆகஸ்டு 15 அன்று நிக்சனால் அறிவிக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் முன்னோக்குகள் மீதான முறைப்படியான வேலைகள் முடிவுக்கு வந்தன... அந்த நெருக்கடியின் மேலதிக அபிவிருத்தி குறித்த பகுப்பாய்வு, ஆகஸ்டு 15 அன்று பிரெட்டன் வூட்ஸ் முறை பொறிந்தது குறித்த சம்பிரதாயமான குறிப்புகளைக் கொண்டு பிரதியிடப்பட்டது. பொறிவை எதிர்பார்த்திருப்பதைத் தவிர வேறொன்றும் உண்மையிலேயே அவசியமாயிருக்கவில்லை என்றானது. இந்த அதிக மேலெழுந்தவாரியான முன்னோக்கு ஒரு திட்டமாக சீரழிந்தது, அதன்படி டாலருக்கும் தங்கத்திற்கு இடையிலான பரிமாற்றம் செய்யும் நிலை முடிவுக்கு வந்ததில் இருந்து எழுந்த பொருளாதார நெருக்கடியானது புரட்சிகர சூழ்நிலைகளை, எல்லாவற்றுக்கும் முதலில் பிரிட்டனில், தூண்டும் என்ற முடிவுற்கு வந்தனர். WRP இன் அதிகரித்த தேசியவாத நோக்குநிலையினை நியாயப்படுத்துவதாக இது ஆனது. [9]

1970களின் ஆரம்பம் தொடங்கி, WRP, ஒரு சர்வதேச முன்னோக்கை முறைப்படி சூத்திரப்படுத்துவதன் மூலமான சரியான அரசியல் நிலைப்பாட்டுக்கான போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாய், “பிரச்சாரவாதத்திற்கு எதிரான போராட்டம்”, “தோல்வியடையாத தொழிலாள வர்க்கம்” மற்றும் ”நடைமுறையில்  பயிலுதல்” ஆகிய ஒன்றுடனொன்று தொடர்புடைய ஒரு சித்தாந்த வரிசையை தழுவிக் கொள்ளத் தொடங்கியது.

“ஹீலியைப் பொறுத்தவரை”, டேவிட் நோர்த் 1988 ஜூன் 14 அன்று விஜே டயஸுக்கு எழுதினார், “தோல்வியடையாத தொழிலாள வர்க்கம் என்பது ஒட்டுமொத்த போருக்குப் பிந்தைய காலகட்டத்தைக் குறிக்க அவர் பயன்படுத்திய ஒரு குறியீடாக இருந்தது.” அவர் மேலும் கூறினார், “சாரத்தில், இந்த குறியீடானது தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் குறித்த எந்த ஸ்தூலமான பகுப்பாய்வையும் தடுத்தது.” [10]

”பிரச்சாரவாதத்திற்கு எதிரான போராட்டம்” 1972 இல் அனைத்துலகக் குழுவின் பெயரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும், இது OCI (Organisation Communiste Internationaliste) இல் இருந்தான உடைவைப் பாதுகாத்து கிளீஃவ் சுலோட்டரால் எழுதப்பட்டிருந்தது. “கருத்துவாத சிந்தனை முறைகளுக்கு எதிரான போராட்டம் அவசியமாயிருந்தது, அது வேலைத்திட்டம் மற்றும் கொள்கையுடனான உடன்பாட்டு பற்றிய பிரச்சினைகளையும் தாண்டி ஆழமாய் சென்றிருந்தது.” “ட்ரொட்ஸ்கிச இயக்கம் தனிமைப்படலின் ஒரு நெடிய காலகட்டத்தின் வழியே கடந்து வந்ததில், பிரச்சாரவாதமானது தவிர்க்கவியலாமல் ஒரு உறுதியான பிடியைப் பெற்று விட்டிருந்தது” என்று அது புகாரிட்டது.

இந்த ஆவணம் குறித்த கருத்தில், 1988 ஏப்ரல் 1 அன்று வேர்க்கர்ஸ் லீக் நிறைபேரவைக்கு அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையானது, குறிப்பிட்டது:

இந்த அறிக்கை அடுத்த தசாப்தத்தின் போது திரும்பத் திரும்ப முன்நிறுத்தப்படவிருந்த ஒரு விடயப்போக்கை அறிமுகப்படுத்தியது: அதாவது பிரச்சாரவாதத்திற்கும் அவர்கள் “கருத்துவாத சிந்தனை முறைகள்” என்று அழைத்த ஒன்றுக்கும் எதிரான போராட்டம் தான் IC இன் அத்தியாவசியமான கடமையே தவிர, ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டுக்கான போராட்டம் அல்ல; இந்த கருத்துவாத சிந்தனை முறைகள் -அவற்றின் உள்ளடக்கம் ஒருபோதும் வரையறை செய்யப்படவில்லை- என்று சொல்லப்பட்டனவற்றுக்கு எதிரான போராட்டமே “வேலைத்திட்டம் மற்றும் கொள்கை விடயத்திலான உடன்பாட்டை” காட்டிலும் மிக முக்கியமானவை.[11]

சுலோட்டரின் IC அறிக்கை இவ்வாறு தொடர்ந்தது:

பொதுவான பிரச்சாரத்திற்கான உடன்பாடானது, வார்த்தையளவில் மார்க்சிசத்தின் தத்துவார்த்த எல்லைகளை ஓரளவிற்கு ஒப்புக்கொள்கின்ற போதிலும் கூட, தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான ஐக்கியத்தின் மீதான உண்மையான புரிதலுக்கான ஒரு தடையரணாகவே சேவைசெய்தது. பிரச்சாரத்தின் இருப்பை முன்னர் நியாயப்படுத்தியிருந்ததும், அத்துடன் ஒரு உண்மையான புரட்சிகர நடைமுறையை வழிநடத்துவதற்கு ஒருபோதும் அழைக்கப்பட்டிராததுமான அதே தத்துவம், இப்போது மாற்றத்திற்கு இடையூறு செய்வதற்கும், வர்க்கப் போராட்டத்தின் வாழும் இயக்கத்தைக் குறித்த புரிதலுக்கு இடையூறு செய்வதற்குமான பொதுவான உடன்பாட்டிற்கான ஒரு திரையை இப்போது வழங்கியது. [12]

இதற்கு, வேர்க்கர்ஸ் லீக் நிறைபேரவைக்கு அளிக்கப்பட்ட அறிக்கை இவ்வாறு பதிலளித்தது:

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தத்துவத்தின் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்ததே பிரச்சாரத்தின் இருப்பை நியாயப்படுத்துவது தான் என்று நம்புவதற்கு நாங்கள் இட்டுச் செல்லப்பட்டோம். ஆக, அனுமானிக்கக் கூடிய விதத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில் அல்லது இருக்கும் ஏதோவொரு வெகுஜன இயக்கங்களில் இணைவதன் மூலமாக கைகளை அழுக்காக்கவும் மற்றும் உண்மையான புரட்சிகரப் போராட்டங்களில் பங்கேற்கின்ற மிக சோம்பேறித்தனம் கொண்டவர்களாகவும் விருப்பமற்றவர்களாகவும் இருக்கும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய புத்திஜீவிகளது ஒரு பிம்பம் எங்களுக்கு கிடைத்தது.

அறிக்கை தொடர்ந்தது:

சுலோட்டரால் எழுதப்பட்டிருந்த இந்த பொருள்விளக்கத்தின்படி, நான்காம் அகிலத்திற்குள்ளான நெருக்கடியானது வேலைத்திட்டத்திலான சந்தர்ப்பவாத திருத்தங்களது விளைபொருளல்ல, மாறாக “உண்மையான புரட்சிகர நடைமுறை”யை எதிர்த்து “வாழும் இயக்கத்தின்” மீதான ஒரு புரிதலைத் தடுத்த பிரச்சாரவாதத்தின் ஒரு விளைபொருள் ஆகும்.

உண்மையில் WRP, கிட்டத்தட்ட, "வறட்டுக்கொள்கைகள்” தான் நான்காம் அகிலத்தை “உண்மையான வெகுஜனப் போராட்டங்களின்” தலைமையை ஏற்பதில் இருந்து தடுத்துக் கொண்டிருந்தன என்று அறிவித்த மிஷேல் பப்லோ பயன்படுத்திய அதே மொழியையே பயன்படுத்திக் கொண்டிருந்தது.

சர்வதேச வேலைத்திட்ட கருத்தாக்கத்தின் மீதான இந்த கூர்மையான தாக்குதலை ICFI இன் எட்டாவது உலக காங்கிரசின் 1979 ஜூன் அறிக்கை தீவிரப்படுத்தியது. பெருமளவில் பண்டாவால் எழுதப்பட்டிருந்த இந்த அறிக்கை, அறிவித்தது:

வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திகள் மீது பிரச்சாரவாத பெயரட்டைகளை ஒட்டி, அதன் மூலமாக, அதன் சாரத்திலிருந்து எந்தவித உண்மையான பிரித்தெடுப்பையும் மழுங்கடிப்பவர்கள் மற்றும் தடுப்பவர்களாக இல்லாமல், மாறாக அபிவிருத்திகாணும் புரட்சிகர யதார்த்தம் என்ன கோருகிறது என்பதில் ஒரு போராடும் உணர்ச்சிமிக்க விழிப்புணர்வை அபிவிருத்தி செய்யக் கூடியவர்களாக காரியாளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணத்தின் மீதான கருத்தில், வேர்க்கர்ஸ் லீக் மத்திய குழு நிறைபேரவை அறிக்கை கூறியது:

ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொழிலாள-வர்க்க இயக்கத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற அரசியல் போக்குகளின் வர்க்கத் தன்மை குறித்த ஒரு தத்துவார்த்த பகுப்பாய்வைச் செய்வது தவறாகச் சொல்லப்பட்டது... உண்மையில் நீங்கள், அரசியல் போக்குகள் குறித்த இத்தகையதொரு பகுப்பாய்வினை, மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றுரீதியாக-அபிவிருத்தி செய்யப்பட்ட அறிவின் அடிப்படையிலும் உலக இயக்கத்தின் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம்பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலும் செய்தீர்கள் என்பதான கருத்தாக்கத்தை WRP தலைவர்கள் எதிர்த்தனர். [13]


மைக் பண்டா

கடந்த காலத்தில் மார்க்சிச கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இருந்ததன் விளைவுதான், SWP ஐ FBI கையகப்படுத்தியது என்று அறிவிக்குமளவுக்கு பண்டா சென்றார். SWP, “இறுதியில் மார்க்சிசத்தை ஒரு அறிவுத் தத்துவமாக இருந்ததில் இருந்து வரலாற்று உண்மைகளையும் வேலைத்திட்ட கோரிக்கைகளையும் சம்பிரதாயமாகவும் வறட்டுத்தனமாகவும் உச்சாடனம் செய்வதாக உருமாற்றி விட்டிருந்தது” என்றார் அவர்.

”புரட்சிகர நடைமுறை”யானது, “வரலாற்று உண்மைகளை”யும் “வேலைத்திட்ட கோரிக்கைகளை”யும் நிராகரிப்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே  இந்த பத்தியின் அர்த்தம். அப்படியானால் என்ன மிஞ்சியிருக்கும்? சந்தர்ப்பவாதமும், டேவிட் நோர்த் கூறியதைப் போல “சந்தர்ப்பங்களை மோப்பம் பிடிக்கின்ற” திறனும் தான் மிஞ்சியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தால்போல், அந்த WRP அறிக்கை இவ்வாறு முடிவுகூறியது, “கட்சியின் ஒவ்வொரு பிரிவுகளிலும் தேவைப்படுவது ‘சரியான’ சூத்திரங்களை திரும்பச் செய்வதல்ல, மாறாக வெகுஜனங்களின் வெடிப்பான சக்தியைக் கட்டவிழ்த்து விடக் கூடியதாக இருக்கின்ற ஒரு புரட்சிகர நடைமுறையே ஆகும்.”

ஆனால் அதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு சரியான வேலைத்திட்டமும், ஒரு சரியான பகுப்பாய்வும் மற்றும் ஒரு சரியான கொள்கையும் எல்லாம் தேவையில்லை, மாறாக “வெகுஜனங்களின் வெடிப்பான சக்தியை கட்டவிழ்த்து விடக் கூடியதாக” அகநிலையாக கருதி கொள்ளப்படுகின்ற எதனையும் ஏற்றுக் கொள்வதுதான் அவசியம் என்பதாகும். WRP இன் சீரழிவு தெளிவாக்குவது என்னவென்றால், ஒரு “சரியான” அரசியல் நிலைப்பாட்டுக்கான போராட்டத்தைக் கைவிடுவதன் மூலம், கட்சி அநேகமாக வெகுஜனங்களை அல்ல மாறாக நடுத்தர-வர்க்க பித்துபிடித்தவர்களது ஒரு கும்பலையே கட்டவிழ்த்து விடுகிறது.

ஆயினும், WRP அதன் சந்தர்ப்பவாத அரசியல் நோக்குநிலையை ஆழப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளையில், அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ஒரு வேறுபட்ட போக்கு அபிவிருத்தி கண்டு கொண்டிருந்தது. வேர்க்கர்ஸ் லீக்கும், இலங்கையின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL), பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திலான அவர்களின் அனுபவத்தை கருவியாகக் கொண்டு, இந்த நோக்குநிலையுடன் மோதலுக்கு வரத் தொடங்கின. 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்கு SLL இன் பதிலிறுப்பு மீதான RCL இன் விமர்சனங்களுடன், இந்த முரண்பாடுகள் 1971 காலத்திலேயே எழுந்து விட்டிருந்தன.

அமெரிக்காவில், ட்ரொட்ஸ்கிச சர்வதேசியவாதத்தின் பாரம்பரியங்களில் வேர்க்கர்ஸ் லீக் நடைபோடுவதானது, டேவிட் நோர்த் அவரது உரையில் கூறியதைப் போல, “தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீர்க்கமான நோக்குநிலை”யில் தன்னை வெளிப்படுத்தியது. நோர்த் வலியுறுத்தினார்: “எதிர்கொண்ட அத்தனை சிரமங்களையும் மீறி, வேர்க்கர்ஸ் லீக் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்திலான நம்பிக்கையால் நிரம்பியிருந்தது. அங்கு தான் ‘கனனிசத்தின்’  இன் சிறந்த பாரம்பரியங்கள் வெளிப்பாடு கண்டிருந்தன.”

உடைவைத் தொடர்ந்து, டேவிட் நோர்த், வேலைத்திட்ட மற்றும் அரசியல் தெளிவுக்கான வேர்க்கர்ஸ் லீக்கின் முனைவை தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அதன் ஆழமான திருப்பத்துடன் தொடர்புபடுத்திக் காட்டினார்.

“1981-84 காலகட்டத்தில், தொழிற்சங்கங்கள், PATCO, Greyhound மற்றும் Phelps Dodge ஆகிய வேலைகளில் நான் அதிகம் ஈடுபட்டிருந்தேன்” என்று 1988 ஏப்ரல் 10 அரசியல் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். “இந்த தொழிற்சங்க வேலைகளில் அதிகமான முன்னேற்றங்களை நாம் கண்ட மட்டத்திற்கு, ஒரு சர்வதேச முன்னோக்கிற்கான அவசியத்தை நான் அதிகமாக உணர்ந்தேன். பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் புதுப்பிக்கப்படுவதற்கு நான் அழைப்புவிடுத்தேன். இந்தக் காலகட்டத்தில் தான், WRP உடனான எங்களது அரசியல் வேறுபாடுகளை நாங்கள் அபிவிருத்தி செய்தோம். எங்களது வேலைகள் முடமாக்கப்படுகின்றன என்றும் எங்களுக்கு ஒரு அரசியல் தெளிவுபடுத்தல் தேவையாக இருந்தது என்றும் நான் உணர்ந்தேன்.”[15]

தொழிலாள வர்க்கத்தை நோக்கிய வேர்க்கர்ஸ் லீக்கின் நோக்குநிலையில் இருந்து உயிர்த்துடிப்புடன் எழுந்த, ஒரு அரசியல் வேலைத்திட்டத்திற்கான இந்த போராட்டமானது, கட்சியின் 1978 வேலைத்திட்டமான, முதலாளித்துவத்தின் உலக பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும் என்ற அறிக்கையில் தன்னை வெளிப்படுத்தியது. அந்த ஆவணம் உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்த ஒரு தீவிரமான பகுப்பாய்வின் மூலமாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு மூலோபாயத்தில் வேரூன்ற முனைந்தது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வந்த தாக்குதலானது, —இதனை அது அசாதாரணமான தெளிவுடன் முன்கணித்திருந்தது— முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கட்டமைப்பிற்குள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உண்டாகியிருந்த நெருக்கடியின் விளைபொருள் என்று அது முன்வைத்தது. இந்த நோக்குநிலையானது, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், WRP எந்த நோக்குநிலைக்கு உறுதிப்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருந்ததோ அதனுடன் நேரடி மோதலான நோக்குநிலையில் வேர்க்கர்ஸ் லீக்கை இருத்தியது.

1981 இல், ஏகாதிபத்தியப் போர் அபாயத்தை நோக்கிய நமது அணுகுமுறையை வரையறை செய்யும் விதத்திலான அனைத்துலகக் குழுவின் சார்பான ஒரு அறிக்கைக்கு வரைவு ஒன்றை சுலோட்டர் உருவாக்கினார். போரின் அபாயத்தை “இரண்டு பெரும் வல்லரசுகளுக்கு” இடையிலான ஒரு மோதலாக ஆவணம் சித்தரித்திருந்ததை வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்தான பிரதிநிதிகள் விமர்சனம் செய்தனர். அதன்பின் டேவிட் நோர்த் 1987 கோடை முகாமுக்கு அவர் அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்:

ஒரு தொழிலாளர் அரசையும் ஏகாதிபத்திய அரசையும் இணையாக குணாம்சப்படுத்தும் இந்த வகையை நாம் ஒருபோதும் ஏற்றதில்லை. “பெரும் வல்லரசுகள்” என்பது வழக்கமான செய்தித்துறையின் பிரயோக வார்த்தைகளாக இருப்பவை, அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படையான வர்க்க முரண்பாடுகளை மறைக்கின்றதாக அவை இருக்கின்றன. [16]

வரைவை விமர்சனம் செய்து எழுதப்பட்ட கடிதம் அனைத்துலகக் குழுவிற்கு ஒரு உலக முன்னோக்கை அபிவிருத்தி செய்வதை நோக்கிய ஒரு முக்கியமான அடியெடுப்பாக இருந்தது. ஆயினும், திரும்பிப் பார்த்தால், அந்தக் கடிதமானது கணிசமான தொலைநோக்கு கொண்டிருந்ததையும், 2016 இல் வெளியான கால் நூற்றாண்டு காலப் போர் தொகுதியில் இடம்பெற்ற விடயங்களது கருப்பொருள்களை மேலுயர்த்திக் காட்டுவதாக இருந்ததையும் காணலாம்.

உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத பொருளாதார நெருக்கடியானது... 1917 அக்டோபர் புரட்சியின் காரணத்தினாலும் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா எங்கிலுமான பாரிய தேசிய விடுதலைப் போராட்டங்களின் காரணத்தினாலும் தொலைத்திருந்த உலக நிலையை மீட்சி செய்வதற்கும், என்னவிலை கொடுத்தேனும் இலத்தீன் அமெரிக்காவை அடிமைப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் முன்னிலையில், உலக ஏகாதிபத்தியம் ஒரு முயற்சியை செலுத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மையான அர்த்தத்தில் ஒரு உலகளாவிய போராக இருக்கும்: சோவியத் ஒன்றியம் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக ஒடுக்கும் தேசத்தினது ஒரு போராட்டமாகும். [17]

அந்தக் கடிதம் தொடர்ந்தது:

உலகத்தின் பிராந்தியரீதியான மறுபங்கீடு, ஏகாதிபத்தியத்திற்கு, இரண்டு காரணிகளால் தவிர்க்கமுடியாதபடி சிக்கலாக்கப்பட்டு இருந்திருக்கிறது:

1: சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, மற்றும் 1945க்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பா, போலந்து, கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லாவிக்கியா, பல்கேரியா, ரூமேனியா, யூகோஸ்லாவியா, அல்பானியா மற்றும் ஆசியாவின் பெரும் பகுதிகளில் (சீனா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா) முதலாளித்துவ வர்க்கம் தூக்கிவீசப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகள் நீடிக்கப்பட்டமை.

2. காலனித்துவ-எதிர்ப்புப் போராட்டங்கள் உலக ஏகாதிபத்தியத்திற்கான வரலாற்றுத் தோல்விகளைக் குறித்தன. சோவியத் ஒன்றியத்தை அழித்து, காலனியாதிக்க அடிமைத்தனத்தை மீட்சி செய்யாமல், அந்த அடிப்படையில் ஏகாதிபத்திய சுரண்டல் நலன்களின் பேரில் உலகை மறுபங்கீடு செய்யாமல் அது உயிர்பிழைக்க முடியாது...

உலகத்தை வன்முறையான வழியில் மறுபங்கீடு செய்யாமல் வேறு எந்த வழியிலும் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏகாதிபத்தியத்திற்கு வழி தெரியவில்லை. ஆனால் இந்த மறுபங்கீடு முந்தைய உலகப் போர்களில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவத்தை எடுக்கிறது. இது ஏகாதிபத்திய அரசுகள், ஒன்று மற்றொன்றின் காலனிகளைக் கைப்பற்றுவது குறித்த விடயமாக இல்லை, மாறாக தேசிய புரட்சிகர இயக்கங்களை அழிப்பது, ஏதேனும் ஒரு வடிவத்தில் காலனித்துவ அடிமைத்தனத்தை மீள்ஸ்தாபகம் செய்வது, மற்றும் தொழிலாளர்’ அரசுகளை-எல்லாவற்றுக்கும் மேலாக, சோவியத் ஒன்றியத்தை அழிப்பது ஆகியவற்றின் மூலமாக, “இழந்த நிலைகளை மீண்டும் பெறுவது” குறித்த விடயமாக இருக்கிறது. இதுவே ஏகாதிபத்திய கூட்டணிகள் அனைத்தினது அடிப்படையாக இருக்கிறது.

ஒரு ஏகாதிபத்தியப் போரின் மூலமான “கொள்ளை”யைப் பிரித்துக் கொள்வதற்கான குறிப்பான திட்டங்கள் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளால் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன: அமெரிக்கா பாரசீக வளைகுடாவைப் “பெற்றுக் கொள்வது”; அமெரிக்காவுடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்ற பிரான்ஸ் காங்கோ பிராந்தியங்கள் வழியாக வட ஆபிரிக்காவில் அதன் பழைய காலனித்துவ சாம்ராஜ்யத்தை “பெற்றுக் கொள்வது”...

சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் காலனிகள் உள்ளிட மொத்த உலகத்தையும் உலகளாவிய அளவில் மறுபங்கீடு செய்வதற்கு உலக ஏகாதிபத்தியம் முனைந்து கொண்டிருந்ததாக அந்தக் கடிதம் வாதிட்டது. திரும்பிப் பார்த்தால், கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்த அத்தியாவசிய நிகழ்ச்சிப்போக்கானது, சோவியத் ஒன்றியத்தை இராணுவரீதியாக கைப்பற்றுகிறதொரு வடிவத்தை எடுக்காமல், மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சிக்கு கதவு திறந்து விடுகிறதான வடிவத்தை எடுத்திருந்ததை நாம் காண்கிறோம். போரின் ஒரு பாரிய வெடிப்பின் மூலமாக உலகை நவ-காலனித்துவ முறையில் மறுபங்கீடு செய்வதானது, உண்மையில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு உடனடிப் பிந்தைய காலத்தில், 1991 இல் முதலாம் வளைகுடாப் போரின் தொடக்கத்துடன் நடந்தேறியது.

ஒரு உலகளாவிய வேலைத்திட்டத்திற்கான போராட்டமானது அடுத்துவந்த ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிசத்திற்காக அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலமாக தொடர்ந்தது. 1984 ஜனவரியில், டேவிட் நோர்த் தனது அக்கறையை வெளிப்படுத்தி பின்வருமாறு மைக்கல் பண்டாவுக்கு எழுதினார்:

அனைத்துலகக் குழுவானது கொஞ்சக் காலமாக அதன் நடைமுறையை வழிநடத்தக் கூடிய ஒரு தெளிவான மற்றும் அரசியல்ரீதியாக-ஐக்கியப்பட்ட ஒரு முன்னோக்கு இன்றி வேலை செய்து கொண்டிருப்பதாக நாங்கள் உணர்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முன்னோக்கிற்குப் பதிலாக, பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடன் கூட்டணிகள் உருவாக்குவதிலேயே பல ஆண்டுகளாக அனைத்துலகக் குழுவின் முக்கிய கவனம் இருந்து வந்திருக்கிறது. [18]

அந்தக் கடிதம் மேலும் எச்சரித்தது:

பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் எங்களது சொந்த அனுபவங்களைப் போன்று, தேசியப் பிரிவுகளுக்குள்ளான குறிப்பிட்ட சில அபிவிருத்திகள் எவ்வளவு தான் பெரும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தாலும், ஒரு விஞ்ஞானபூர்வமாக உருவாக்கப்பட்ட சர்வதேச முன்னோக்கினால் வழிநடத்தப்படாத பட்சத்தில் அத்தகைய வேலைகள் எந்த உண்மையான நன்மைகளையும் உருவாக்காது. வேர்க்கர்ஸ் லீக் தொழிலாள வர்க்கத்தை நோக்கி அதிகமாக திரும்பத் திரும்ப, வேலைகள் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நமது சர்வதேசத் தோழர்களுடனான நெருக்கமான கூட்டுழைப்புக்கான அவசியத்தை அதிகமாக நாங்கள் உணர்கிறோம்.

1984 பிப்ரவரியில், இந்த புள்ளிகளை விவாதிக்கும் நம்பிக்கையில் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்தான பிரதிநிதிகள் அனைத்துலகக் குழுவின் ஒரு கூட்டத்திற்கு சென்றனர். ஆனால் WRP தலைமையோ இந்த விமர்சனங்கள் திரும்பிப்பெறப்படா விட்டால் ஒரு உடனடியான உடைவு இருக்கும் என்று வேர்க்கர்ஸ் லீக்கை மிரட்டியது. பின்னர் டேவிட் நோர்த் கருத்திட்டவாறாக:

முதலாளித்துவ தேசியவாதிகளுடன், தொழிற்சங்க மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவங்களுடன் WRP இன் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் கூட்டணிகளும் சோவியத் அதிகாரத்துவத்துடனான அதன் திரைமறைவிலான நெருக்கமாதலும், அனைத்துலகக் குழுவிற்குள்ளான முன்னோக்குகளின் ஒரு விவாதத்தில் உயிர்பிழைத்திருக்க முடியாது. [19]

முன்னோக்குகளின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துலகக் குழுவின் ஏழாவது நிறைபேரவைக்கு அளிக்கப்பட்ட தொடக்க அறிக்கை இவ்வாறு தொடங்கியது:

1984 இல், முன்னோக்குகள் மீது கலந்துரையாட நாங்கள் ஹீலி, சுலோட்டர் மற்றும் பண்டாவைக் கேட்டோம். அந்த கலந்துரையாடலை சாத்தியமாக்குவதற்கு நமது இயக்கத்திற்குள்ளாக ஒரு மாபெரும் உடைவு உண்டாக வேண்டியிருந்தது. நமது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சர்வதேச முன்னோக்கை எடுத்துரைக்கும் முன்பாக, முதலில் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக இருந்த குட்டி-முதலாளித்துவ சக்திகளுடன் நாங்கள் தாட்சண்யமற்று முறித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதுவே உண்மையில் நடந்தேறியது.

அனைத்துலகக் குழுவிற்குள்ளாக அபிவிருத்தி கண்டு வரும் நெருக்கடியானது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் புதுப்பிக்கப்படுவதையும் நமது சர்வதேச முன்னோக்குகளின் அபிவிருத்தியையும் அவசியமாக்கியது என்று உடைவுக்கு முன்பாக வேர்க்கர்ஸ் லீக் வலியுறுத்தி வந்திருந்தது. இந்த விவாதத்தை WRP உடன் மேற்கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனென்றால் அவர்களது நோக்குநிலை தேசியவாத நோக்குநிலையாகி விட்டிருந்ததுடன், அனைத்துலகக் குழுவின் வேலைகள் பிரிட்டனில் அவர்களது வேலைக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு குட்டி-முதலாளித்துவ தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இதற்கு எதிரான போராட்டத்திலேயே, அனைத்துலகக் குழு பல ஆண்டுகள் தடுக்கப்பட்ட அந்த வேலையை, அதாவது நமது முன்னோக்குகளை அபிவிருத்தி செய்ய முடிந்தது. [20]

“சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் நமது சர்வதேச முன்னோக்கின் விரிவுபடுத்தலுக்கும் இடையில் ஒரு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது” என்று வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழுவின் நிறைபேரவைக்கு அளிக்கப்பட்ட தொடக்க அறிக்கை குறிப்பிட்டது:

எல்லாவற்றுக்கும் முதலில், ICFIக்குள்ளாக எஞ்சியிருந்த தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகவும் ஒரு நனவான போராட்டத்தை நடத்துவதும், அதேநேரத்தில், உலக முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை அபிவிருத்திக்கும் ICFI இன் நனவான வேலைத்திட்டத்திற்கும் இடையில் ஒரு உயிரோட்டமான தொடர்பை ஸ்தாபிப்பதும் அவசியமாக இருந்தது. ஒரு சர்வதேச முன்னோக்கிற்கும் வேலைத்திட்டத்திற்குமான இந்தப் போராட்டம் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உச்சப்புள்ளியாகும் என்பதை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும், ஏனென்றால் அனைத்து வடிவிலான சந்தர்ப்பவாதமுமே இறுதியாக தேசியவாத தகவமைவின் மிகத் திட்டவட்டமான வடிவங்களில் தான் வேரூன்றியிருக்கிறது. [21]

அந்த அறிக்கை தொடர்ந்தது:

கட்சியைக் கட்டியெழுப்புவதானது, ஒரு உண்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியை உருவாக்குவதானது, தொழிலாள வர்க்கத்தின் புறநிலை வரலாற்று நலன்களைப் பாதுகாப்பதன் அடிப்படையிலான ஒரு வேலைத்திட்டத்தை, விஞ்ஞானபூர்வமான விதத்தில், விட்டுக்கொடுக்காத தளர்ச்சியற்ற போராட்டத்தின் நிகழ்ச்சிப்போக்கின் ஊடாகவே முன்னேறுகிறது... அது வெறுமனே முன்னெப்போதினும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கூட்டுவது மட்டுமல்ல. அது, புறநிலை அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுத் தேவைகளுக்கு தகுதியானதாக தன்னை நிரூபணம் செய்யக் கூடிய ஒரு கருவியை உருக்கி வார்த்தெடுப்பதாகும். [22]

உடைவின் முழுமையான அனுபவத்தை ஊடுருவிப் பார்த்த நோர்த் இவ்வாறு முடிவுகூறினார்:

மார்க்சிச இயக்கத்திற்குள்ளாக சந்தர்ப்பவாதத்தின் வரலாற்று அபிவிருத்தியானது, சோசலிசத்தை அதன் சர்வதேச சாரத்தில் இருந்து பிரித்தெடுக்கின்ற வடிவத்தை திரும்பத் திரும்ப எடுத்து வந்திருக்கிறது. இரண்டாம் அகிலம் மற்றும் மூன்றாம் அகிலம் மட்டுமல்ல, நான்காம் அகிலத்தின் விடயத்திலும் இது உண்மையாக இருக்கிறது….

நோர்த் வலியுறுத்தினார், “சர்வதேசியவாதமே நான்காம் அகிலத்திற்குள்ளாக சந்தர்ப்பவாதத்தின் நாசகரமான தாக்கத்தை இறுதியாக வெல்வதற்கான போராட்டத்தின் மிகமுக்கிய சாரமாக இருந்திருக்கிறது.”

இந்தக் கோட்பாடே 1988 முன்னோக்குகள் தீர்மானத்தின் மிகமுக்கிய புள்ளியை உருவாக்குவதாக இருக்கிறது, அது 169 ஆம் புள்ளியில் அறிவிக்கிறது:

அரசியலில் புரட்சிகர சர்வதேசியவாதம் சந்தர்ப்பவாதத்திற்கு நேரெதிரானதாகும். சந்தர்ப்பவாதமானது, கொடுக்கப்பட்ட ஒரு தேசிய சூழலுக்குள் அது வடிவம் கொள்கின்ற வேளையில், ஏதேனும் ஒரு வடிவத்தில், அரசியல் வாழ்வின் யதார்த்தங்களாய் சொல்லப்படுவனவற்றுக்கு ஒரு திட்டவட்டமான தகவமைவை வெளிப்படுத்துகிறது... நான்காம் அகிலத்தின் பிரிவுகள் செயல்படுகின்ற நாடுகளில் தொழிலாளர்’ இயக்கத்திற்கு அவை ஆற்றக்கூடிய மையமான வரலாற்றுப் பங்களிப்பு என்னவெனில் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்குக்கான கூட்டான மற்றும் ஐக்கியப்பட்ட போராட்டமேயாகும். [23]


நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (1988)

WRP இலிருந்து வெளியேறிய எச்சசொச்சங்கள், இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்யும் அனைத்துலகக் குழுவின் முயற்சிகளுக்கும் குழப்பம் மற்றும் குரோதம் கலந்த ஒரு கலவையால் பதிலிறுப்பு செய்தனர். ஒரு உதாரணம் கூறுவதானால், ஷீலா டோரன்ஸ் இன் நியூஸ் லைன் பத்திரிகையில் எழுதிய ரே ஆத்தவ் வேர்க்கர்ஸ் லீக்கின் தேர்தல் களத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தின் மீதான வலியுறுத்தம் குறித்து குழப்பத்துடன் தலை சொறிந்தார். அவர் வேர்க்கர்ஸ் லீக்கின் பின்வரும் பத்தியை மேற்கோளிடுகிறார்: 

ஒரு உலகளாவிய மட்டத்தில் இயங்குகின்ற முதலாளிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், அமெரிக்கத் தொழிலாள வர்க்கமானது ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும், அத்துடன் தமது போராட்டங்களை ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள தமது வர்க்க சகோதரர்களது போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்தியாக வேண்டும். தொழிலாளர்களது நாடு, மொழி, மதம் அல்லது தோல் நிறம் எதுவாயிருந்தாலும், அவர்கள் ஒரேவிதமான கவலைகளையே பகிர்ந்து கொள்கிறார்கள், ஒரேவிதமான முதலாளித்துவ எதிரிக்கே முகம்கொடுக்கிறார்கள்.

இதற்கு, ஆத்தவ் பதிலளிக்கிறார்:

’மார்க்சிச’த்திற்கு நோர்த் இன் பங்களிப்பை சிறுமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் ’உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ என்று அறிவிக்கும்போதே மார்க்ஸ் 140 ஆண்டுகளுக்கும் முன்பாக இன்னும் சுருக்கமாக இந்தப் பிரச்சினையை பற்றி பேசி விட்டார்.

”இந்த தேர்தல் வேலைத்திட்டத்தின் கிட்டத்தட்ட மதம் போன்றதான தன்மையானது” ஆத்தவ் எழுதினார், “’அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தை வேர்க்கர்ஸ் லீக் கொண்டுவருகிறது’ என்பன போன்ற வசனங்கள் மூலமாக இது வெளிப்படுகிறது.”

இந்த வசனத்திற்கு முரணாய் ஆத்தவ் அறிவித்தார்: “உலகப் புரட்சியானது அதன் தேசிய பகுதிகளின் வழியாக மட்டுமே அபிவிருத்தி காண்கிறது.”

ஆத்தவின் கூற்றுகளுக்கு பதிலளித்த நோர்த் எழுதினார்:

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப கூறுவது மட்டுமே போதுமானதல்ல. முதலில், சர்வதேசியவாதத்தின் உள்ளடக்கமானது உலகப் பொருளாதாரத்தின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மீதான அதன் தாக்கம் குறித்த ஒரு ஆய்வில் இருந்து தேற்றம் செய்யப்பட வேண்டும், அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமான மார்க்சிசக் கருத்தாக்கங்கள் அனைத்தையும் போலவே, சர்வதேசியவாதக் கருத்தாக்கமும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை அபிவிருத்திக்கு இணங்கவே பரிணாமவளர்ச்சியடைந்திருக்கிறது.

இரண்டாம் அகிலத்தின் சகாப்தத்தில், சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியின் பொழுதில் மார்க்ஸ் முன்னெடுத்த சுலோகத்திற்கும் புதிய வெகுஜன தொழிலாள-வர்க்கக் கட்சிகள் உருப்பெற்ற முதலாளித்துவ அபிவிருத்தியின் குறிப்பிட்ட கட்டத்திற்கும் இடையில் வரலாற்றினால் தீர்மானிக்கப்பட்ட ஒரு உண்மையான பெரும் இடைவெளி இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில், தேசிய அரசின் கட்டமைப்புக்குள்ளாக, இளம் சமூக ஜனநாயகக் கட்சிகளது உடனடிக் கவனத்தை முழுக்க ஆக்கிரமித்திருந்ததும் அவற்றின் நடைமுறை வேலைகளது தன்மையை பெருமளவில் தீர்மானித்தவையாக இருந்ததுமான முற்போக்கான பணிகள் அப்போதும் இருந்தன...

... உலக சோசலிசப் புரட்சி என்பது வெறுமனே தேசியப் புரட்சிகளின் கூட்டு அல்ல. அது அவ்வளவு தான் என்றிருந்தால், உலக சோசலிசப் புரட்சி என்ற கருத்தாக்கமானது எந்த சிறப்பு முக்கியத்துவத்தையும் அரிதாகவே பெற்றிருக்க முடியும், ஒரு முழுமையடைந்த நிகழ்ச்சிப்போக்கை விவரிப்பதற்கு மட்டுமே அது பயன்பட்டிருக்கும். ஆனால் உலக சோசலிசப் புரட்சி என்பது அதனளவிலேயே ஒரு திட்டவட்டமான வரலாற்று சகாப்தமாகும், அது ஒரு தொடர் தனிமைப்பட்ட நிகழ்வுகள் அல்ல. அது ஒரு உலக சகாப்தம். இந்த உலக வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை ஆளும் விதிகளுக்கு இணங்க ‘தேசியப் பகுதிகள்’ அபிவிருத்திகாணும்.

உலகப் புரட்சி என்பது வெறுமனே தேசியப் புரட்சிகளின் கூட்டாக மட்டுமே இருக்கிறதென்றால், அப்போது சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சிக்கு என்ன அடிப்படை இருக்க முடியும்? உலக சோசலிசமானது வெறுமனே தொடர்பற்ற “தேசியப் போராட்டங்களின் வரிசை”யின் அடிப்படையிலோ, அல்லது தார்மீக ஒற்றுமை அல்லது அரசியல் அனுதாபத்தின் ஒரு ஸ்தூலமற்ற வடிவத்தின் மூலம் மட்டுமே தொடர்புடைய தேசியப் போராட்டங்களின் அடிப்படையிலோ அடையப்பட முடியும் என்றால் அப்போது ஒரு சர்வதேசியக் கட்சிக்கான தேவை அங்கே என்ன இருக்கிறது? சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் நனவுடன் ஒன்றுபட்ட மற்றும் ஐக்கியப்பட்ட போராட்டமாக மட்டுமே உலக சோசலிசப் புரட்சிக்காக போராடப்பட முடியும், அது அடையப்பட முடியும் என்ற உண்மையில் இருந்துதான் துல்லியமாக உலகக் கட்சிக்கான அவசியம் அங்கே பிறக்கிறது.

1987 ஜூலையில், ICFI இன் நான்காவது நிறைபேரவை உலக முதலாளித்துவத்தின் அத்தியாவசியக் கட்டமைப்புகளிலான மாற்றங்கள் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீதான அவற்றின் தாக்கம் குறித்த ஒரு கலந்துரையாடலுக்குத் தொடக்கமளித்தது. அந்த மாநாட்டில், டேவிட் நோர்த் கேட்டார்:

உலக சோசலிசப் புரட்சி அபிவிருத்தியை நாம் எவ்வாறு முன்னெதிர்பார்க்கிறோம்? தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய மேலெழுச்சிக்கும் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதுப்பிப்புக்குமான அடிப்படையை வழங்கப் போகின்ற நிகழ்ச்சிப்போக்குகளும் முரண்பாடுகளும் எவை?

இதற்கான பதில், “உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளின் பூகோளமயமாக்கலுடன் தொடர்புபட்ட உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தி”யில் காணத்தக்கதாகும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். சோசலிச சர்வதேசியவாதத்தின் முக்கியத்துவத்தையும் தவிர்க்கவியலாத அவசியத்தையும் இது ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தியிருந்தது.


2020 மாடலுக்கு முன், கடைசியாக ஜி.எம்.சி சியரா 2019 சிலோவில் தயாரிக்கப்பட்டது, ஆகஸ்ட் 9, 2019 [Credit: Gerardo Aldaco]

வேர்க்கர்ஸ் லீக்கின் 1987 கோடை முகாமுக்கு அளிக்கப்பட்ட ஆரம்ப அறிக்கை பின்வரும் இந்த கருப்பொருட்களை வெளிப்படுத்தியது:

புறநிலை அவசியமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே புரட்சிகள் நடந்தேற முடியும், அந்த அவசியத்தின் நனவான முகவர்களாக நாம் இருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நமது சொந்த வேலை, அனைத்துலகக் குழுவிற்குள்ளான போராட்டமானது, சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தில், உற்பத்தி சக்திகளுக்கும் சமூக உறவுகளுக்கும் இடையிலான மோதலினால் எடுக்கப்பட்ட புறநிலையாக-உருவாக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றாகும்.

தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஐக்கியத்தை நோக்கிய இந்த நோக்குநிலை, ட்ரம்பும் பானனும் பொருளாதார தேசியவாதத்திற்கும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் மிக பாசிச வடிவங்களுக்கும் இடையிலான தொடர்பை மறுக்கவியலாததாக ஆக்குவதற்கு முந்தைய ஒரு காலத்தில், முதலாளித்துவ-எதிர்ப்பை பூகோளமயமாக்கல்-எதிர்ப்புடன் சமானப்படுத்த விழைந்த குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட அரசியலின் சித்தாந்தவாதிகளுடன் எங்களை நேரடி மோதலில் கொண்டுவந்தது. எங்களது முன்னோக்குகள் தீர்மானம் எழுதப்பட்டுக் கொண்டிருந்த அதேசமயத்தில், “தேசத்தின் உயிரோட்டமான மறுஅரசியல்சட்டம்” தான் “புரட்சிகர ஜனநாயக” இயக்கத்தின் மிக உயர்ந்த கடமை என்று மூஃப் உம் லக்ளோ உம் கூறிக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் தெரியும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் கட்சி இன்று, பாஸ்கர் சங்காராவின் வார்த்தைகளில் சொல்வதானால், ”21 ஆம் நூற்றாண்டின் அமெரிக்கவாதத்தின்” ஒரு வடிவத்தை கட்டமைக்க அது முயன்று கொண்டிருப்பதாக, பிரகடனம் செய்கிறது.

முன்னோக்குகள் ஆவணம் குறித்து இலங்கையில் நடைபெற்ற விவாதம் குறித்து வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழுவிற்கு அறிக்கையளித்த டேவிட் நோர்த், இவ்வாறு நிறைவு செய்தார்:

பல்தேசிய பெருநிறுவனங்கள் மற்றும் நாடுகடந்த உற்பத்தியின் தீவிர அபிவிருத்தியில் உருவடிவம் பெற்றவாறாக, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உழைப்புப் பிரிவினையிலான இன்றைய அபிவிருத்தியானது, சர்வதேசியவாதத்திற்கு ஒரு முன்கண்டிராத சரியான தன்மையை வழங்குகிறது. இது, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பையும் ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் அவசியமாக்குகிறது. இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு இதைத்தவிர வேறெந்த அடிப்படையும் அங்கே இல்லை.”

ஏழாவது நிறைபேரவைக்கு அவர் அளித்த அறிக்கையிலும் அவர் இதே கருப்பொருளை தொடர்ந்து எடுத்துரைத்தார்:

தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம். இது ஒரு கோட்பாட்டுப் பிரச்சினை. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசத் தன்மை கண்ணுக்குப் புலப்படுவதற்கு முன்பே மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தை ஒரு உலக வரலாற்று வர்க்கமாக வரையறை செய்தார். பல நாடுகளில் அப்போது வரை அது தோன்றியும் இருக்கவில்லை. இப்போது இந்த உலக வரலாற்றுப் பாத்திரமானது உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான அபிவிருத்தியில் வேரூன்றியிருக்கிறது என்ற நிலையில், அது இனியும் ஒரு தத்துவார்த்தப் பிரச்சினையாக இல்லை. அது ஒரு நடைமுறை பிரச்சினையாக ஆகியிருக்கிறது. அதனால் தான் ஆவணத்தின் தொடக்கத்திலேயே நாங்கள் சொல்கிறோம், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது வடிவத்திலும் சர்வதேசியப்பட்டவை ஆகியிருக்கின்றன.

WRP இன் மேலாதிக்கத்தின் கீழ் அனைத்துலகக் குழுவின் திசை குறித்து விமர்சனம் செய்து, ஏழாவது நிறைபேரவைக்கான டேவிட் நோர்த்தின் அறிக்கை எச்சரித்தது:

தேசியவாத நிலைப்பாட்டிலும், ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் அடித்தளத்திலும் ஒரு விரிசல் விழுகின்றதொரு அபாயம் அனைத்துலகக் குழுவில் இருந்தது. நமது சர்வதேச மூலோபாயமானது, இரண்டாம் அகிலத்தின் பாணியில், ஒரு உத்தியோகபூர்வ அர்த்தத்தில் மட்டுமே பார்க்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அத்தகையதொரு அணுகுமுறையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது — மன்னிக்கக் கூடியதாக அல்ல, புரிந்து கொள்ளக் கூடியது. தேசிய பொருளாதாரங்களின் தனித்துவமான தன்மைகள் தீவிரமாக அடையாளம் காணப்பட்டிருந்தன. உலகப் பொருளாதாரம் ஏற்கனவே உருவாகி விட்டிருந்தது, என்றாலும் கூட இன்றுடன் ஒப்பிடுகையில் அது ஒரு சிறு கரு அளவிலேயே இருந்தது.

உடைவில் இருந்து வெளிவருகையில், உலகப் புரட்சியின் முக்கியத்துவத்திற்கு அது இணங்கியிருப்பதையும், ஒரு உலகளாவிய முன்னோக்கை எடுத்துரைப்பதையும் மறுஉறுதி செய்வது அனைத்துலகக் குழுவிற்கு அவசியமாக இருந்தது. ஆனால் இது, மத்திய குழுவின் நிறைபேரவைக்கான தொடக்க அறிக்கை கூறியது, “அனைத்துலகக் குழுவிற்குள்ளாக போராட்டத்தின் ஒரு புதிய மட்டத்தை உருவாக்கியது. நமது உலக வேலைத்திட்டத்தின் பிரதானத்தை அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் தெளிவுபடுத்துவதற்கான ஒரு மிகவும் முறைப்படியானதொரு போராட்டத்தை நடத்துகின்ற அவசியம் இந்த பகுப்பாய்வில் இருந்து எழுந்தது.” 

இந்த அபிவிருத்தியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, ஏனெனில் வேர்க்கர்ஸ் லீக் அதனளவில் ஒரு “வேறுபட்ட கட்சி”யாக எழுந்து விட்டிருந்தது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது:

கடந்த இரண்டு ஆண்டுகளில், தேசியவாதத்தின் அத்தனை சுவடுகளையும் வெளியேற்றுவதற்கும் அழிப்பதற்கும், இயக்கத்தின் மீதான பப்லோவாத பூச்சுக்களை அகற்றுவதற்கும், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் வழிமுறையில் சர்வதேச இயக்கத்தை புதுப்பிப்பதற்கும் மீள்கட்டியெழுப்புவதற்குமாய் போராடுவதற்கும் நாம் விழைந்து வந்திருக்கிறோம். அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட நெடிய போராட்டமானது இப்போது ஒரு வெகு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த மாற்றமானது, டேவிட் நோர்த் அழுத்தமாகத் தெரிவித்தார், கட்சியை…. குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்துடன் இணக்கமற்றதாக ஆக்குகிறது. அது ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும். எந்த அளவுக்கு அதிகமாக நாம் இந்த நனவைக் கட்டியெழுப்பி இந்த பொதுவான வேலைத்திட்டத்தின் மீது, இந்த பொதுவான கருத்தாக்கத்தின் மீது, சர்வதேச அளவில் இயக்கத்தை ஒன்றுபடுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜனக் கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.”

இந்தப் போராட்டமானது அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஒரு பொதுவான, சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் வெற்றிகரமான மறுநோக்குநிலை காண இட்டுச்சென்றது. அது நமது அரசியல் பகுப்பாய்வை ஆழப்படுத்தியது மற்றும் தீவிரப்படுத்தியது என்பதுடன், இறுதியில், 1988 வேலைத்திட்டத்திற்கேயும் கூட வலுவூட்டியது.

இறுதியாக, நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம் என்றால், அதன் காரணம் வேர்க்கர்ஸ் லீக்கும் ஒட்டுமொத்தமாக அனைத்துலகக் குழுவும் சர்வதேசியவாத முன்னோக்கினைத் தெரிவு செய்து, ஏழாவது நிறைபேரவையில், முன்னோக்குகள் தீர்மானத்தை ஏற்று வாக்களித்தமை தான்.

வேர்க்கர்ஸ் லீகின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசுக்கு டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கை தீர்மானத்தின் அத்தியாவசிய உள்ளடக்கத்தை சுருங்க முன்வைத்தது:

சாரத்தில், இந்த ஆவணமானது இரண்டு அடிப்படையான பரஸ்பர தொடர்புடைய புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளை கையாள்கிறது: உலக முதலாளித்துவ நெருக்கடி, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை நெருக்கடியின் அபிவிருத்தி, மற்றும் பாட்டாளி வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமைக்கான நெருக்கடி — அதற்குள்ளாக நான்காம் அகிலத்தின் வரலாற்று நெருக்கடியும் [24]

உற்பத்தியின் பூகோளமயமாக்கலை புரிந்து கொள்வதில் அது அளித்த பங்களிப்புகளுக்காகத்தான் பெரும்பாலும் அந்த ஆவணத்தை நாம் நினைவில் கொள்கிறோம், ஆயினும், 1960கள் மற்றும் 70களின் பரந்த சமூகப் போராட்டங்கள் அடிப்படையில் புரட்சிகரமானவை, அவை பப்லோவாதிகளால் திட்டமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டிருந்தன என்று அது சரியாக பகுப்பாய்வு செய்தது என்ற உண்மையும் அதேயளவுக்கு முக்கியமானதாகும்.

1960கள் மற்றும் 70களில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு குழிபறிப்பதில் பப்லோவாத அமைப்புகளின் பாத்திரம் குறித்த ஆவணத்தின் மதிப்பீட்டை வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரஸ் சுட்டிக்காட்டியது:

உலக முதலாளித்துவம் அதன் வரலாற்றிலான மாபெரும் புரட்சிகர நெருக்கடியை 1968க்கும் 1975க்கும் இடையிலான காலத்தில் கடந்து வந்திருந்தது; அதன் உயிர்பிழைப்பானது தொழிலாள வர்க்கத்திற்கு அதன் தலைமை செய்த காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே சாத்தியமானது; அதன்பின் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இந்தக் காட்டிக்கொடுப்புகளின் விளைபொருளேயாகும் என்பதையெல்லாம், ஒரு பெரும்போக்கான வடிவத்தில் என்றாலும் கூட, நாங்கள் நிறுவுகிறோம்.[25]

... பரந்த இலத்தீன் அமெரிக்க கடன் மற்றும் அதனால் விளைந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிராதரவு நிலை ஆகியவை வெறுமனே ஸ்தூலமற்ற பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளின் விளைபொருள் அல்ல. பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் சமூக வர்க்கங்களின் போராட்டத்தின் ஊடாகவே கடக்கின்றன. 1980களிலான இலத்தீன் அமெரிக்காவிலான நிலைமைகள் பொலிவிய, சிலி, மற்றும் அர்ஜென்டினா தொழிலாளர்களது தோல்விகளது நேரடி விளைபொருட்களாகும். [26]

எங்களது அணுகுமுறை, 1923 இல் ஜேர்மனி விடயத்தில் ட்ரொட்ஸ்கி கொண்டிருந்த அதே அணுகுமுறையாகும்: தொழிலாள வர்க்கத் தலைமையின் பலவீனங்களும் காட்டிக்கொடுப்புகளும் இல்லாதிருந்திருந்தால் ஐரோப்பாவின் பல பகுதிகளில் முதலாளித்துவம் தூக்கி வீசப்பட்டிருக்க முடியும். 60கள் மற்றும் 70களிலான புரட்சிகர அனுபவங்கள் 1923 இல் இருந்தனவற்றை விடவும் இன்னும் பெரியனவாக இருந்தன. முதலாளித்துவத்தின் உயிர்பிழைப்பானது மறுபடியும் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் துரோகத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கல்வியக பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக 1990களில், “பூகோளமயமாக்கலின் இரண்டு காலகட்டங்களை” சுட்டிக்காட்டியிருந்தனர், 1980கள் தொடங்கி நடந்த பூகோளமயமாக்கல் சகாப்தத்தை 1914 ஐ ஒட்டி வந்த ஒன்றுடன் ஒப்பிட்டிருந்தனர். இத்தகைய ஒப்பீடுகளை எமது மதிப்பீடு எப்போதோ செய்து விட்டிருந்தது. 1987 கோடைப் பள்ளிக்கு வழங்கப்பட்ட தொடக்க அறிக்கை குறிப்பிட்டது:

இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பின் கடந்திருக்கக் கூடிய 42 ஆண்டுகள், மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ அரசு அமைப்புமுறை உறுதிப்பட்டதை அர்த்தப்படுத்திய முதலாளித்துவ அபிவிருத்தியின் இறுதிக் காலகட்டத்துடன், அதாவது ஜேர்மன் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்கும் 1871 இல் பாரிஸ் கம்யூன் தோற்கடிக்கப்பட்டதற்கும் மற்றும் 1914 இல் முதலாம் உலகப் போர் வெடித்ததற்கும் இடையிலான 40 தனித்த ஆண்டுகள் குறிப்பிட்ட ஒற்றுமைகள் கொண்டிருக்கின்றன. [27]

ஆவணத்தின் முக்கிய பாகங்கள் ஆறு புள்ளிகளில் சுருங்க எடுத்துரைக்கப்பட்டிருந்தன:

முதலாவதாய், உலக சந்தையின் முன்கண்டிராத ஒருங்கிணைப்பும் உற்பத்தியின் சர்வதேசமயமாக்கமும்

தீர்மானத்தின் 117வது புள்ளி இவ்வாறு குறிப்பிட்டது:

... உலக சந்தையின் முன்கண்டிராதவொரு ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தியின் சர்வதேசமயமாக்கம். அமெரிக்கா உள்ளிட தேசியப் பொருளாதாரங்கள் அனைத்தின் மீதும் உலகப் பொருளாதாரம் செலுத்துகின்ற முற்றுமுதலான மற்றும் செயலூக்கமான மேலாதிக்கமானது நவீன வாழ்வின் ஒரு அடிப்படை உண்மையாக இருக்கிறது. மின்னணு ஐசிக்களின் (integrated circuit) கண்டுபிடிப்பு மற்றும் துல்லியமாக்கலுடன் தொடர்புடைய தொழில்நுட்பத்திலான முன்னேற்றங்கள் தகவல்தொடர்பில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன, அவை தமது பங்காக, உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிப்போக்கை துரிதப்படுத்தியிருக்கின்றன. ஆயினும் இந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகள், முதலாளித்துவத்திற்கு புதிய வரலாற்றுப் பாதைகளை திறப்பதெற்கெல்லாம் வெகுதூரத்தில், அவை உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான, மற்றும் சமூக உற்பத்திக்கும் தனியார் சொத்துடைமைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டினை, முன்கண்டிராத தீவிரப்பட்ட ஒரு மட்டத்திற்கு உயர்த்தியிருக்கின்றன.

அமெரிக்கா உலகின் பிரதான கடனளிப்பாளராக இருந்த நிலையில் இருந்து உலகின் மிகப்பெரும் கடனாளியாக உருமாற்றம் கண்டிருப்பதில் அடையாளம் காட்டப்படுகிறவாறாக, அது, சார்புரீதியாகவும் மற்றும் அறுதியாகவும் அதன் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தை இழந்திருக்கிறது. அங்கே தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களிலான நாசகரமான வீழ்ச்சியில் தன்னை வெளிப்படுத்துகின்றதாக இருக்கின்ற இந்த உருமாற்றமானது, அமெரிக்காவில் புரட்சிகர வர்க்க மோதலின் ஒரு காலகட்டத்தைத் திறந்து விடுகிறது...

ஜப்பான் மிகப்பெரும் சாத்தியவளம் கொண்ட தொழிற்துறை சக்தியாகவும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்க மூலதனத்தை சவால் செய்கின்ற மூலதனத்தின் மிகப்பெரும் ஏற்றுமதியாளராகவும் எழுந்து இவ்வாறாக ஏகாதிபத்திய-விரோத குரோதங்களின் ஒரு பிரம்மாண்ட தீவிரப்படலில் முன்னிலை வகிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், ஜப்பான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உயரச் சென்றது, அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவினதை விடவும் அதிகமானதாய் இருந்தது.

ஆசிய பசிபிக் பிராந்திய பொருளாதாரங்களின் அசாதாரணகரமான துரித அபிவிருத்தியானது பாரிய தொழிலாள வர்க்கங்களை உள்கொண்டுவந்திருக்கிறது, அவை நீண்டவாழ்வற்ற ஏற்றுமதிச் சந்தைகளை முழுக்க சார்ந்து தமது பொருளாதார நிலையைக் கொண்டிருக்கக் கூடிய சொந்தநாட்டு முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான புரட்சிகர மோதல்களுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புள்ளி 137 குறிப்பிடுகிறது:

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் முதலாளித்துவம் விரிவாக்கம் கண்டமையும் ஆசியாவில் பிரம்மாண்டமான உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டமையும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற லெனினின் வரையறைக்கு முரண்பாடானதல்ல. ஏகாதிபத்தியம் என்ற நூலில் லெனின் குறிப்பாக எச்சரித்தவாறாக, “இந்த சிதைவுப் போக்கானது முதலாளித்துவத்தின் துரித வளர்ச்சியை இல்லாது செய்து விடும் என்று நம்பினால் அது தவறாகி விடும். அவ்வாறு அது செய்வதில்லை.” அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசிய பசிபிக் நாடுகளை “பொருத்தும் தளங்களாக” (assembly platforms) பயன்படுத்தி வந்திருக்கிறது.

பின்தங்கிய நாடுகளின் படுபயங்கர வறுமைப்படலும் கையலாகாத தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் பலவண்ண “வளர்ச்சி” மூலோபாயங்களும் முற்றுமுதலாய் பொறிந்து போனதும் புரட்சிகர மோதல்களை உருவாக்கியாக வேண்டும்.

ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் அனைத்தும், குறிப்பாக சீனாவிலும் ரஷ்யாவிலும், சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கித் திரும்புவதானது, அதிகாரத்துவங்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் புரட்சிகர மோதலின் ஒரு காலகட்டத்தைத் திறந்து விடுகிறது.

பூகோள உற்பத்தியின் புதிய வடிவங்கள் உலகப் போரின் அபாயத்தை குறைக்கவில்லை, மாறாக தீவிரப்படுத்தின என்று தீர்மானத்தின் 14வது புள்ளி எச்சரித்தது:

முதலாளித்துவ உற்பத்திமுறையின் பூகோளமயமான தன்மையானது பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் குரோதங்களை மிகப்பெருமளவில் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்திக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ சொத்துடைமை முறை வரலாற்றுரீதியாக வேரூன்றியிருக்கிறதான தேசிய-அரசு வடிவத்திற்கும் இடையிலான சமரசப்படுத்தமுடியாத முரண்பாட்டை அது மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

1960கள் மற்றும் 70களின் பரந்த சமூகப் போராட்டங்கள் பப்லோவாதிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கின் திட்டமிட்ட உலகளாவிய தாக்குதலை தடுப்பதற்கான பாதையிலிருந்த தடைகள் யாவும் அகற்றப்பட்டிருந்தன என அது விளக்கியது:

1979-80 இல் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தினால் கையிலெடுக்கப்பட்ட கொள்கைகள், சர்வதேச அளவில் வர்க்க ஆட்சியின் முறைகளிலான ஒரு மாற்றத்தை அடையாளப்படுத்தியது. அதேகாலத்தில், 1979 மேயில் தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டமை தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைப்பது மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட சமூக நல அமைப்புமுறையை அழிப்பது ஆகிய நோக்கங்களுடனான ஒரு நீடித்த தாக்குதலின் தொடக்கத்தைக் குறித்தது. பிரான்சில், “சோசலிஸ்ட்” மித்திரோனின் அரசாங்கம், அதன் நான்கு ஸ்ராலினிச அமைச்சர்கள் சகிதமாய், தீவிரமயல்படல்வாதத்தின் ஒரு போலியான காட்சியை காட்டியதற்குப் பின்னர், ரீகனுடையதில் இருந்து பிரித்தறியக் கடினமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு விரைவில் திரும்பியது. ஜேர்மனியிலும், ஹெல்மூட் கோல் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்குப் பின்னர் இதேபோன்றதொரு அபிவிருத்தியே நடந்தது. ரீகனிச “கட்டுப்பாடுகள் விலக்கம்” (“deregulation”) இன் ஐரோப்பாவிலான தேற்றமானது, தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வெறிகொண்ட “தனியார்மயமாக்க” பிரச்சாரங்களாக இருந்து வந்திருக்கிறது. 1979க்கும் 1988க்கும் இடையில், போர்ச்சுகல் முதல் கிரீஸ் வரை, ஒவ்வொரு ஐரோப்பிய அரசாங்கமுமே, சமூக சீர்திருத்தவாதம் மற்றும் வர்க்க சமரசக் கொள்கைகளை மறுதலித்தன. தவிர, இந்த நிகழ்ச்சிப்போக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குள் மட்டுப்பட்டதாகவும் இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் ஹாக் இன் கீழும் நியூசிலாந்தில் லாங் இன் கீழும், சமூக ஜனநாயக அரசாங்கங்கள், தங்குதடையற்ற முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினால் எழுப்பப்பட்டிருந்த வரம்புபட்ட தடையரண்களையும் கூட உடைத்தெறிந்து கொண்டிருக்கின்றன.

உலக நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு ஸ்ராலினிஸ்டுகளும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளும் சரணடைந்த போதிலும், தீர்மானமானது, அந்தக் காலகட்டத்தை முதலாளித்துவத்தின் எழுச்சிக் காலகட்டமாக அல்லாமல், முதலாளித்துவ நெருக்கடியின் காலகட்டமாகவே குணாம்சப்படுத்தியது:

முதலாளித்துவ வர்க்கத்தின் பிரச்சாரவாதிகள் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் பட்டவர்த்தனமான நெருக்கடியை சாதகமாக எடுத்துக் கொண்டு, முதலாளித்துவத்தின் ஒரு புதிய பொற்காலத்தை பிரகடனம் செய்யத் தலைப்பட்டனர். ஆனால், வறுமையின் பிரம்மாண்டமான அதிகரிப்பிற்கு பின்னரும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தால் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கின் ஆழமடைந்து செல்கின்ற உலக நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாது இருந்து வருகிறது. உலகளவில் முதலாளித்துவம் முகம்கொடுக்கும் நெருக்கடி வரலாற்றுரீதியானதும் அமைப்புமுறைரீதியானதும் ஆகும், அது வெறும் சந்தர்ப்பவசத்தின் தன்மையை கொண்டதல்ல.

பூகோளமயமாக்கலின் அத்தியாவசியத்தின் போது உலகெங்குமான தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட காட்டிக்கொடுப்புகள் மீதான ஆவணத்தின் பகுப்பாய்வு, அதன்பின் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதற்கு நாங்கள் விடுத்த அழைப்பிற்கு தத்துவார்த்த அடித்தளங்களை அமைத்துத் தந்தது:

பல்வேறு தேசியளவிலான மற்றும் கண்ட அளவிலான முதலாளித்துவ கூட்டுகளிடையேயான ஆவேச போட்டியானது, அவசர அவசியமானதொரு விடயமாக, தொழிலாளர்களது அமைப்புகளை அரசு-நிதி மூலதனத்தின் உற்பத்தி பொறிமுறைகளுக்குள் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதை அவசியமாக்குகிறது. சுயாதீனமான, அல்லது இன்னும் பாதி-சுயாதீனமான, சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புகளுக்கு அங்கே எந்த இடமும் இல்லை. தொழிற்சங்கங்கள் தேசிய அரசின் நலன்களின் பேரில் பாட்டாளி வர்க்கத்தை தீவிரமாகச் சுரண்டும் கருவிகளாக நேரடியாக உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு தான், இருக்கும் அத்தனை தொழிலாளர் அதிகாரத்துவங்களின் அடிபணிதலுக்கான மூலகாரணம் அமைந்திருக்கிறது. சர்வதேச நெருக்கடிக்கு தேசியளவில் தீர்வுகள் காண்பதற்கான தேடலானது தவிர்க்கவியலாமல் ஒவ்வொரு தேசிய தொழிலாளர் இயக்கத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிற்சங்க கொள்கைகளுக்கு கீழ்ப்படிய இட்டுச் செல்கிறது. புரட்சிகர சர்வதேசியவாதத்தின் –இதன்மூலம் நாம் அர்த்தப்படுத்துவது விடுமுறை வாசகங்களை மேற்கோளிடுவதை அல்ல– அடிப்படையில் தவிர இந்த இக்கட்டில் இருந்து வெளிவர வேறு எந்த வழியும் இல்லை. ஒட்டுமொத்த உலகின் தொழிலாள வர்க்கத்தையும் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, “உலகளவில் ஒரு மையத்தை ஒரு உலக அரசியல் நோக்குநிலையைக் கொண்ட, புரட்சிகர நடவடிக்கைக்கான ஒரேயொரு சர்வதேச பாட்டாளி வர்க்க அமைப்பாக” ஐக்கியப்படுத்துவதே ட்ரொட்ஸ்கிச இயக்கம் முகம்கொடுக்கும் மிக உயரிய மூலோபாயக் கடமையாக இருக்கிறது.[28]

இந்த பகுப்பாய்வு குறித்து கருத்திடுகையில், டேவிட் நோர்த் இவ்வாறு நிறைவு செய்தார்: “தொழிலாளர் இயக்க நெருக்கடியின் உண்மையான உள்ளடக்கமாக இருப்பது மார்க்சிசத்தின் தோல்வி அல்ல, மாறாக சமூக சீர்திருத்தவாதத்தின் திவால்நிலையே ஆகும்.”

புள்ளி 13 பின்வரும் புள்ளிகளை அபிவிருத்தி செய்கிறது:

வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியமயமானது, ஆனால் உள்ளடக்கத்தில், அது ஒரு சர்வதேசியப் போராட்டம் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக வெகுகாலமாக இருந்து வருவதாகும். ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கருத்தில் கொள்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையைப் பெற்றாக வேண்டும். இவ்வாறாக, மூலதனத்தின் முன்கண்டிராத மட்டத்திலான சர்வதேச அளவிலான இயங்குநிலையானது வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தினது தேசியவாத வேலைத்திட்டங்கள் அத்தனையையும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற்போக்குத்தனமானவையாகவும் ஆக்கி விட்டிருக்கிறது.

துல்லியமாய் இந்த அபிவிருத்திகள் தான் ICFI இன் வளர்ச்சி அவசியமாய் பிணைந்திருந்த புறநிலை அடித்தளத்தை கொண்டிருந்தன. இந்த புள்ளியானது வேர்க்கர்ஸ் லீக்கின் பதின்மூன்றாவது தேசிய காங்கிரசுக்கு 1988 ஆகஸ்டில் டேவிட் நோர்த் அளித்த அறிக்கையில் அபிவிருத்தி செய்யப்பட்டது, வலியுறுத்தப்பட்டது:

பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்டமானது, புறநிலை பொருளாதாரப் போக்குகள் மற்றும் மார்க்சிஸ்டுகளின் அகநிலைரீதியான செல்வாக்கு ஆகியவற்றின் ஒன்றுபட்ட அழுத்தத்தின் கீழே, ஒரு சர்வதேச பயணப்பாதையில், தடுக்கவியலாத வண்ணம் அபிவிருத்தி காணும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் மேலும் மேலும் அதிகமாய் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறை செய்துகொள்ள விழையும்; இந்த உயிர்த்துடிப்புள்ள போக்கின் வெளிப்பாடாக அமைந்த கொள்கைகளைக் கொண்டிருக்கும் மார்க்சிச சர்வதேசியவாதிகள், இந்த நிகழ்ச்சிப்போக்கை வளர்த்தெடுப்பதுடன் அதற்கு நனவான வடிவமும் கொடுப்பார்கள்.

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் கட்சியின் ஒழுங்கமைப்பு ஆகிய இரண்டிலுமே, இந்த வேலைத்திட்டத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட அநேகமானவை, நிகழ்ந்தேறியிருக்கின்றன.

நாங்கள் முன்கணித்தோம், “வரப்போகும் காலத்தில் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட வடிவங்களை தொழிலாளர்கள் ஒழுங்கமைப்பது சாதாரண விடயமாக ஆகும். போராட்டங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளுடன், அதாவது, தேசிய எல்லைகளுக்கு வெளியிலான தொழிலாளர்களுடன் ஒருங்கிணைக்க விழையாமல் முதலாளித்துவத்திற்கு எதிரான பெரும் போராட்டங்களில் நுழைவதென்பது நம்பிக்கையற்ற வழக்கொழிந்த ஒன்றைப் போல பார்க்கப்படும். [29]

ஒன்றை கூறியாக வேண்டும்: ஆவணத்தில் அடையாளம் காணப்பட்ட அடிப்படைப் போக்குகள், அடுத்துவந்த காலகட்டத்தில் தொடர்ந்ததும் அபிவிருத்தி கண்டதும் மட்டுமல்ல, மாறாக தீவிரப்படவும் செய்தன.

1988 முன்னோக்குகள் ஆவணம் வெளியிடப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பொருளாதார அறிஞரான பிராங்கோ மிலனோவிக் வெளியிட்ட உலகளவிலான சமத்துவமின்மை (Global Inequality) என்ற தலைப்பிலான புத்தகம், உலகெங்கிலும் தொழிலாளர்களின் சமூக நிலைமை ஒன்றாக ஆவதைக் குறிப்பிட்டது, உலகம், ”வர்க்கமே” “இருக்கும் இடத்தைக் காட்டிலும் மேலாதிக்கம் செலுத்துகின்ற பிளவாக” இருக்கின்ற ஒன்றாக ஆகிக் கொண்டிருந்ததான உண்மையை சுட்டிக்காட்டியது. இந்தப் பகுப்பாய்வானது, அனைத்துலகக் குழு கூறிய விடயங்களில், பொதுவாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் பிரகடனங்களைப் போலவே, தாமதமானது மற்றும் மதிப்பில் குறைந்ததே, என்றபோதும் 1988 தீர்மானத்தில் அடையாளம் கூறப்பட்ட நிகழ்ச்சிப்போக்குகள் அதிகரித்தளவில் மறுக்கவியலாத எதார்த்தமாயிருப்பதை அது பிரதிபலித்தது.


ஹொரைசன் லைன்ஸ் இன்க் நிறுவனத்திலிருந்து ஒரு கொள்கலன் கப்பல் பிப்ரவரி 13, 2008 புதன்கிழமை, டகோமா, வாஷில் உள்ள டகோமா துறைமுகத்தில் பொருட்களை இறக்குகிறது. (AP Photo/Ted S. Warren)

உண்மையில், உலகெங்கிலும், தொழிலாளர்கள் தங்களது போராட்டங்களை சர்வதேச வரிசையில் ஒருங்கிணைக்கத் தொடங்குகின்றனர். 2018 டிசம்பரில் டெட்ராய்ட்டில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் WSWS Autoworkers Newsletter கூட்டம் ஒன்றில், “உலகின் பல்வேறு பகுதிகளிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க WSWS வேலை செய்யுமா?” என்பது தான் முதல் கேள்வியாக எங்களிடம் கேட்கப்பட்டது என்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில், தொழில்நுட்பத்தின் உருமாற்றும் விளைவு, உலக வர்த்தகம், அல்லது தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய ஒருங்கிணைப்பு என அனைத்துலகக் குழு அதன் பகுப்பாய்வில் அடையாளம் கண்ட கூறுகள் அத்தனையையுமே மேலும் தீவிரப்படவே செய்திருக்கின்றன.

இறுதியாக, பூகோளமயமாக்கலின் முடிவாக சொல்லப்படுவது குறித்தும் இணையத்தின் பிளவுபடல் குறித்தும் ஊடகங்களில் நிறையச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவும் கூட, மேற்கூறிய ஆவணத்தில் அடையாளம் காணப்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் ஒரு வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. இப்போது நிலைமுறிவடைந்து கொண்டிருப்பது மூரின் விதி (Moore’s law) அல்ல, மாறாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ட்ரொட்ஸ்கியால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் கூறப்பட்டதன், மற்றும் உடைவுக்குப் பிந்தைய காலத்தில் மறுஊர்ஜிதம் செய்யப்பட்டதன் வழியில், உற்பத்தி சாதனங்களுக்கு எதிராய் கிளர்கின்ற முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையே நிலைமுறிந்து கொண்டிருக்கிறது.

இப்போது அதன் அரும்புநிலை வடிவில் தன்னை வெளிப்படுத்தத் தொடங்குகின்ற வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய ஒருங்கிணைப்பானது, அனைத்துலகக் குழுவில் அதன் மிக உடனடியான வெளிப்பாட்டைக் கண்டது. 1988 இல் டெட்ராயிட் அங்கத்தவர் கூட்டத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டவாறாக:

கடந்த ஆண்டில் ICFI இன் பிரிவுகள் தமது நடைமுறை வேலைகளை அன்றாட அடிப்படையில் கூட்டுவேலையாக ஒருங்கிணைத்திருக்கின்றன. வேர்க்கர்ஸ் லீக்கும் SLLம் வாரத்திற்கு இருமுறையேனும் கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள கணினி மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன — இது செய்தித்தாள் வெளியீடு மற்றும் அரசியல் வேலைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பை நோக்கிய ஒரு அடியெடுப்பாகும். சீனாவிலான நிகழ்வுகள் தொடர்பான அனைத்துலகக் குழுவின் அறிக்கையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் நாங்கள் ஒரேசமயத்தில் வெளியிடுவதற்கு முடிந்தது, அத்துடன் ஜேர்மனியின் BSA மற்றும் பிரித்தானியாவின் ICP உடனான கணினிவழி தொடர்புகளையும் நாங்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறோம். நடைமுறை வேலையின் மற்ற பகுதிகளும் நெருங்கிய சர்வதேச ஒத்துழைப்பு அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த சர்வதேச அளவிலான நடைமுறை வேலைகளது முக்கியத்துவம் குறைத்து மதிப்பிட்டு விடப்படக்கூடாது. இந்த சர்வதேச ஒத்துழைப்பின் தொடுஎல்லையும் ஒவ்வொரு பிரிவின் நடைமுறை வேலைகளது கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தின் மீதுமான அதன் நேரடித் தாக்கமும் ICFI மற்றும் அதன் பிரிவுகளது தன்மையை ஆழமாகவும் சாதகமாகவும் மாற்றியிருக்கிறது. அப்பிரிவுகள் எந்த அரசியல்ரீதியான அல்லது நடைமுறைரீதியான அர்த்தமுள்ள விதத்திலும் சுயாதீனமான அலகுகளாக இருப்பதில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தின் அடித்தளத்தின் மீது உருவாகிய, உறவுகளின் ஒரு சிக்கலான வலைப்பின்னல் ICFIக்குள்ளாக எழுந்திருக்கிறது, அது அத்தனை பிரிவுகளையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது. அதாவது, ICFI இன் பிரிவுகள் தனியொரு அரசியல் அலகின் பரஸ்பர இணைப்பு கொண்ட மற்றும் பரஸ்பர சார்பு கொண்ட பாகங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த உறவிலான எந்த உடைவும் சம்பந்தப்பட்ட பிரிவில் நாசகரமான விளைவுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுமே இப்போது, சித்தாந்தரீதியிலும் சரி நடைமுறைரீதியிலும் சரி, தனது இருப்புக்கு இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டுவேலையை சார்ந்ததாக ஆகியிருக்கின்றன.

1989 ஜூலை 10 அன்று லிண்டா டெனன்பாம் க்கு டேவிட் நோர்த் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார், “அரசியல் பிற்போக்குத்தனங்களின் காலகட்டத்தின் போது தான் (1907-1917 மற்றும் அதன்பின் 1923-1940) ட்ரொட்ஸ்கி அப்போது பிற்போக்குத்தனத்தின் மிகவும் கொடூரமான காலகட்டத்தில் புரட்சிகர முன்னோக்கின் அபிவிருத்திக்காக துல்லியமாக போராடிக் கொண்டிருந்தார். இதன் போதுதான்  புரட்சிகரத் தத்துவத்தின் அபிவிருத்திக்கு தனது மிக ஆழமான பங்களிப்புகளை செய்தார்.

அடிப்படையில் அதே நிகழ்ச்சிப்போக்கைத்தான் இங்கே நாங்கள் விவரித்துக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். நாம் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கும் காலகட்டம் பிற்போக்குத்தனத்தின் ஒரு காலகட்டம். ஆனால் அந்தக் காலகட்டத்திற்குள் ஆழமான முற்போக்கு நீரோட்டங்களும் போக்குகளும் இருந்தன. அந்த முற்போக்கான போக்குகள் தான் 1985க்குப் பின்னர் ICFIக்குள்ளாக மார்க்சிசத்தின் தத்துவார்த்த மறுமலர்ச்சியில் வெளிப்பாடு கண்டன.

Footnotes:

[1] David North, “Workers League Thirteenth National Congress Report,” Fourth International, July–December 1988, p. 41.

[2] History of Philosophy, pp. 2–3.

[3] David North, Leon Trotsky and the Development of Marxism, (Detroit, 1985), p. 5; 17-18.

[4] op. cit., Fourth International, July–December 1988, p. 33.

[5] David North, “April 1 Workers League Central Committee Plenum Political Report,” Workers League Internal Bulletin, May 1988, p. 47.

[6] ibid., Workers League Internal Bulletin, May 1988, p. 3.

[7] op. cit., Fourth International, July–December 1988, p. 48.

[8] David North, “April 1 Workers League Central Committee Plenum Political Report,” Workers League Internal Bulletin, May 1988, p. 44.

[9] David North, “Political Report on the Perspectives of the International Committee of the Fourth International,” Fourth International, January–March 1988, p. 67.

[10] David North, “June 14, 1988 Letter from David North to Wije Dias,” Political Chronology of the International Committee of the Fourth International 1982–1991, p. 44.

[11] David North, “April 1 Workers League Central Committee Plenum Political Report,” Workers League Internal Bulletin, May 1988, p. 48.

[12] “Statement by the International Committee (Majority), March 1, 1972,” Trotskyism vs. Revisionism, Volume 6, p. 83.

[13] David North, “April 1 Workers League Central Committee Plenum Political Report,” Workers League Internal Bulletin, May 1988, p. 49.

[14] David North, “August 4 Opening Report to SEP 2019 Summer School.”

[15] David North, “April 10 Workers League Political Committee Meeting,” Workers League Internal Bulletin, May 1988, p. 87.

[16] op. cit., Fourth International, January–March 1988, p. 67.

[17] David North, “November 4, 1981 letter to Mike Banda.”

[18] David North, “Letter from David North to Mike Banda–January 23, 1984,” The ICFI Defends Trotskyism, p. 35.

[19] op. cit., Fourth International, January–March 1988, p. 67.

[20] David North, “Seventh Plenum of the International Committee of the Fourth International.”

[21] David North, “April 1 Workers League Central Committee Plenum Political Report,” Workers League Internal Bulletin, May 1988, p. 56.

[22] ibid., p. 52.

[23] International Committee of the Fourth International, “The World Capitalist Crisis and the Tasks of the Fourth International,” p. 70.

[24] op. cit., Fourth International, July–December 1988, p. 33.

[25] ibid., p. 33

[26] ibid., p. 35.

[27] op. cit., Fourth International, January–March 1988, p. 71.

[28] op. cit., Fourth International, July–December 1988, p. 38.

[29] op. cit., Fourth International, January–March 1988, p. 82.